Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுங்கவிதை ....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கை

அழகான வாழ்க்கையது கடவுளின் வரம்

அழகுற மாற்றுவது மானிடத்திறம்

துன்ப இன்பம் விதியின் திடம்

நம்பிக்கைதான் வாழ்க்கையின் பலம்

அன்பான மனைவி குழந்தை வாழ்க்கையில் சுகம்

ஆனால் பணமே தேடுவது மானிட மனம்

கடவுள்தான் வாழ்க்கையின் மூலம்

இதை மறந்தால் நாமெல்லாம் மடம்

காதல் பிரிவு

காயானது கனியாகும் வேளைதனில் கருவண்டு துளைத்தால் போல்

- என்மனது

ஏங்குகிறேன் உன் நினைவால் ஒருமுறை தான் பேசிவிடு

- - என்னோடு

நண்பர்களே உங்களிடம் இருக்கும் இப்படியான குறுங்கவிதைகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். :)

  • Replies 80
  • Views 8.8k
  • Created
  • Last Reply

அட அட பாவம் சுப்பண்ணை இவ்வளவு கெஞ்சிக்கேட்கிறாரே பேசிவிடுங்கோ... சுப்பண்ணை எனக்கொரு சந்தேகம்.. பேச சொல்லுற ஆள் இதை வாசிப்பாவோ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட பாவம் சுப்பண்ணை இவ்வளவு கெஞ்சிக்கேட்கிறாரே பேசிவிடுங்கோ... சுப்பண்ணை எனக்கொரு சந்தேகம்.. பேச சொல்லுற ஆள் இதை வாசிப்பாவோ :)

பிள்ளை வெண்ணிலா இது கவிதை மட்டும் தான் :( . உங்களிடமும் இப்படியான கவிதைகள் இருந்தால் இணையுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப்பு அண்ணை..............

சிறு கவிதை நன்றாக உள்ளது . அது சரி கரு வண்டு,..... ஏன் உள்ளே விட்டநீங்க

.சும்மா ,கற்பனை கவி ... தானே . சிறிது என்றாலும் முத்து போல இருக்கிறது .

நன்றிகள் .நிலாமதி

அழிவில்லாத உயிரும் இல்லை

அலைதொடாத கரையும் இல்லை

மொழியறியாத மனிதன் இல்லை

மூச்சுவிடாத பூவும் இல்லை

அன்பே உன்னை நினையாமல்

நானும் இங்கில்லை

தவழ்ந்து வந்த தடங்களை

நதி மறந்து போகலாம்

தொட்டுவிட் கரைகளை

அலைமறந்து போகலாம்

முட்டி முட்டி பால்குடித்தும் (கன்றுக்குட்டி)

முகம் மறந்து போகலாம் - அன்பே

தொட்டு சென்ற உன் ஸ்பரிசம்தான்

தூங்கும்போதும் மறக்க மறுக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரணீ..........

கவிதை சிறிது என்றாலும் நன்றாக இருக்கிறது ...

அழிவில்லாத உயிர் இல்லை ...............

பரணீ என்றும் தரணீ (பூமி ) ஆழ வாழ்த்துக்கள்

நட்புடன் நிலாமதி

இருந்தாலும் சுப்பண்ணை இது கொஞ்சம் ஓவர் மாதிரி தெரியுது இரண்டாவது கவி , மானிடத்தின் தத்துவங்கள் மரணிக்கும் மனிதனின் நிலைகெட்ட வாழ்வியலை எடுத்துரைக்கும் கவிக்கு இச்சிறியோனின் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுப்பு அண்ணை..............

சிறு கவிதை நன்றாக உள்ளது . அது சரி கரு வண்டு,..... ஏன் உள்ளே விட்டநீங்க

.சும்மா ,கற்பனை கவி ... தானே . சிறிது என்றாலும் முத்து போல இருக்கிறது .

நன்றிகள் .நிலாமதி

பிள்ள நிலாமதி எப்படி நலமே? நன்றி மோனே இது கற்பனை மட்டுமே. :wub:

அழிவில்லாத உயிரும் இல்லை

அலைதொடாத கரையும் இல்லை

மொழியறியாத மனிதன் இல்லை

மூச்சுவிடாத பூவும் இல்லை

அன்பே உன்னை நினையாமல்

நானும் இங்கில்லை

தவழ்ந்து வந்த தடங்களை

நதி மறந்து போகலாம்

தொட்டுவிட் கரைகளை

அலைமறந்து போகலாம்

முட்டி முட்டி பால்குடித்தும் (கன்றுக்குட்டி)

முகம் மறந்து போகலாம் - அன்பே

தொட்டு சென்ற உன் ஸ்பரிசம்தான்

தூங்கும்போதும் மறக்க மறுக்கின்றேன்

பரனி கவிதை நல்லா இருக்கு . மலரும் நினைவுகளா? :wub:

இருந்தாலும் சுப்பண்ணை இது கொஞ்சம் ஓவர் மாதிரி தெரியுது இரண்டாவது கவி , மானிடத்தின் தத்துவங்கள் மரணிக்கும் மனிதனின் நிலைகெட்ட வாழ்வியலை எடுத்துரைக்கும் கவிக்கு இச்சிறியோனின் பாராட்டுக்கள்.

எது மோனே ஓவராக தெரியுது :( . நன்றி மோனே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம்

பாவங்கள் பலவிதம் செய்கின்ற பலவிதம்

பாவங்கள் பலவிதம் செய்வோர் ஒவ்வொருவிதம்

பாவங்கள் பலவிதம் படுவோர் ஒருவிதம்

பாவங்கள் பலவிதம் அதில் நான் எவ்விதம்?

நம்பிக்கை

நம்பிக்கை ஒரு பேனா

கனவும் நனவும் எழுத்துருவில்

பேனா உடைந்தால் எழுத்துக்கள் எங்கே?

நம்பிக்கை உடைந்தால் நாமெல்லாம் எங்கே?

ஆண்களின் வாழ்க்கை

தாயின் வயிற்றில் கருவாய்

உலகின் பிடியில் மனிதனாய்

நாட்டின் வழியில் பிரஜையாய்

வீட்டின் கையில் தலைவனாய்

மனைவியின் கழுத்தில் தாலியாய்

பிள்ளையின் பையில் தந்தையாய்

நாளை நாம் எங்கோ?.......

அம்மா

பத்துமாதம் நீ சுமந்த போதும்

முட்டி முனகி வெளியே

எட்டி உதைத்து வந்தபோதும்

பாசம் வரவில்லை

விட்டு விலகி வந்து தினம்

கரைகின்றேன் உன் நினைவில்

அருகில் இருந்தபோது அறியாதது

விலகி வந்தபோது விண்ணளாவி நிற்கின்றது

அனைவருக்கும் நன்றிகள்.

நிலாமதி ஏன் நீங்களும் குறுங்கவிதையை விதைக்கலாமே ?

சுப்பண்ணை நினைவுகள்தானே வாழ்வின் சுகங்கள். . .

சித்தப்பு வந்துட்டனப்பு...(எப்படி சுகமே??) :wub: ..குறுங்கவிதை எல்லாம் இதயத்தில் உள்ள பெரும் கவலை எல்லாத்தையும் சொல்லுற மாதிரி இருக்கு..ஆனா மிகவும் நன்றாக இருக்குறது வாழ்த்துக்கள் சித்தப்பு.. :wub:

சரி எண்ட பங்கிற்கு நானும் ஒன்ன சொல்லட்டே...(அப்படி இப்படி தான் இருக்கும் கண்டுக்காதையுங்கோ என்ன).. :huh:

கையில் பாட புத்தகத்தை

எடுத்து புரட்டும் போது

அவளே என் பக்கங்கள்

ஆனால்..

இன்று..

அவளோ இன்னொருவன்

பக்கத்தில்.

என் பாட புத்தகமோ

என்னும் என் அதே

பக்கத்தில் தான்... :wub:

அப்ப நான் வரட்டா!!

அம்மா

பத்துமாதம் நீ சுமந்த போதும்

முட்டி முனகி வெளியே

எட்டி உதைத்து வந்தபோதும்

பாசம் வரவில்லை

விட்டு விலகி வந்து தினம்

கரைகின்றேன் உன் நினைவில்

அருகில் இருந்தபோது அறியாதது

விலகி வந்தபோது விண்ணளாவி நிற்கின்றது

மாஸ்டர் "அம்மா" எண்டு கவிதை எழுதி அழ வைத்திட்டியள் :wub: ...அழ வைத்ததிற்கு வாழ்த்து சொல்லுறதோ இல்லாட்டி கவிதைக்கு வாழ்த்து சொல்லுறதோ தெரியல.. <_<

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

அம்மா வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியாத பந்தம். . .

என் மகளைப் பார்க்கையில் என் தாயைப்பார்க்கின்றேன். உண்மைதான். . அன்று யாரோ சொன்னார்கள் அதை அனுபவிககும்போது ஆயிரம் இன்பங்கள். தாயின் அன்பிற்கு நிகர் யாருமிலர். . .

பிரிவு என்பது என்றைக்குமே இருக்ககூடாது.

தாயகத்தில் அவர் தவிக்க தாய் நினைவில் நான் துடிக்கின்றேன். .. .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தப்பு வந்துட்டனப்பு...(எப்படி சுகமே??) :D ..குறுங்கவிதை எல்லாம் இதயத்தில் உள்ள பெரும் கவலை எல்லாத்தையும் சொல்லுற மாதிரி இருக்கு..ஆனா மிகவும் நன்றாக இருக்குறது வாழ்த்துக்கள் சித்தப்பு.. :)

சரி எண்ட பங்கிற்கு நானும் ஒன்ன சொல்லட்டே...(அப்படி இப்படி தான் இருக்கும் கண்டுக்காதையுங்கோ என்ன).. <_<

கையில் பாட புத்தகத்தை

எடுத்து புரட்டும் போது

அவளே என் பக்கங்கள்

ஆனால்..

இன்று..

அவளோ இன்னொருவன்

பக்கத்தில்.

என் பாட புத்தகமோ

என்னும் என் அதே

பக்கத்தில் தான்... <_<

அப்ப நான் வரட்டா!!

மகனே நான் நலம் நீங்கள் எப்படியப்பு? நன்றி மகனே. மகனே உக்களுக்கும் என்ர நிலையோ <_< "அவள் வேறு ஒருவனுக்கு பக்கத்தில" என்று சொல்லுறிங்கள்" பரவாயில்லை வாங்கோ இரண்டு பேரும் சேர்ந்து ஒப்பாரி வைப்பம் :D . நீங்களும் உங்கட குட்டி கவிதைகளை போடுங்கோ மகனே

அம்மா

பத்துமாதம் நீ சுமந்த போதும்

முட்டி முனகி வெளியே

எட்டி உதைத்து வந்தபோதும்

பாசம் வரவில்லை

விட்டு விலகி வந்து தினம்

கரைகின்றேன் உன் நினைவில்

அருகில் இருந்தபோது அறியாதது

விலகி வந்தபோது விண்ணளாவி நிற்கின்றது

அனைவருக்கும் நன்றிகள்.

நிலாமதி ஏன் நீங்களும் குறுங்கவிதையை விதைக்கலாமே ?

சுப்பண்ணை நினைவுகள்தானே வாழ்வின் சுகங்கள். . .

பரனி உங்களுடைய அம்மா கவிதை மனதை வருடிச்சென்றது ,அழகான ஒரு கவிதை :D . இந்த உலகத்திலே எவ்வித ஏதிர்பார்ப்பும் இல்லாமல் எங்கள் மீது அன்பு செலுத்துவது அம்மா மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ.....நம்ம சுப்பண்ணை கவிதை கூட எழுதுவாரா?

உங்க கவிதை எல்லாம் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா

பத்துமாதம் நீ சுமந்த போதும்

முட்டி முனகி வெளியே

எட்டி உதைத்து வந்தபோதும்

பாசம் வரவில்லை

விட்டு விலகி வந்து தினம்

கரைகின்றேன் உன் நினைவில்

அருகில் இருந்தபோது அறியாதது

விலகி வந்தபோது விண்ணளாவி நிற்கின்றது

பரணியின் கவிதையில் கரைந்து போகிறேன் அம்மாவின் நினைப்பில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆஆ.....நம்ம சுப்பண்ணை கவிதை கூட எழுதுவாரா?

உங்க கவிதை எல்லாம் அழகு.

ஒ ஒ ஒ ஒ நான் கவிதைகூட எழுதுவேனே. <_< கொஞ்சம் கவிதை பூங்காட்டுப்பக்கமும் வந்து போங்க கறுப்பி.வரும்போது கவனம் பூங்காட்டில கனக்க பாம்புகள் எல்லாம் இருக்கு <_< . நன்றி கறுப்பி.

நன்றியுரைத்த உள்ளங்களிற்கு நன்றிகள்.

சுப்பணணை எங்கை இன்றைய குறுங்கவிதை. ..

அப்பாவைப்பற்றி கவிஞர் வசீகரனின் பாடல் கேட்டால் எம்மையறியாமலேயே அழுகை வரும். மிகமிக அருமையான ஓரு கவித்திறன். . .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றியுரைத்த உள்ளங்களிற்கு நன்றிகள்.

சுப்பணணை எங்கை இன்றைய குறுங்கவிதை. ..

அப்பாவைப்பற்றி கவிஞர் வசீகரனின் பாடல் கேட்டால் எம்மையறியாமலேயே அழுகை வரும். மிகமிக அருமையான ஓரு கவித்திறன். . .

பரனி நேரமின்மையால் தொடர்ந்து எழுத முடியவில்லை ஆனால் தொடர்ந்து எழுத முயற்சிப்பேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

மாவீரர்கள்

தமிழின வீரத்தின் அடையாளசின்னங்களே

தமிழனுக்காக மீளாத்துயில் கொண்டீரோ

முழங்குகிறது எம் படை உம் பெயர்சொல்லி

முடித்திடுவோம் உம் சபதம் எம் மனங்களில் ஏந்தி

வீரர்களே உங்களுக்கு நிகர் கண்டதில்லை இப் பூமியிலே

உங்கள் உடல் தான் கல்லறையிலே புகழ் வானளவிலே

ஈழத் தாய்களின் வயிற்றில் நீங்கள் மீண்டும் பிறப்பீர்கள்

அப்பொழுது நாங்கள் போராடுகிறோம் நீங்கள் ஓய்வெடுங்கள்

விடுதலைப்போர்

வாழ்க்கைப்போராட்டம் அதில் எம் இனத்துக்கு ஓர் போராட்டம்

டார்வினின் விதியில் விதிவிலக்கு யாரிங்கே

தலைவனின் வழியில் ஒன்றாக சேர்ந்திடுவீர்

எம் தலைகளை மீட்க போர் புரிந்திடுவீர்

புலிகளின் போர் படை திடம் கொண்ட மக்கள்படை

எம் படையை ஏதிர்த்தவர் யாரிங்கு உயிருடன்

போர் செய்வோம் எம் தாய்நாட்டினை மீட்கவே

வாருங்கள் தோழர்களே வாருங்கள் நாம் போர்செய்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒ ஒ ஒ ஒ நான் கவிதைகூட எழுதுவேனே. :lol: கொஞ்சம் கவிதை பூங்காட்டுப்பக்கமும் வந்து போங்க கறுப்பி.வரும்போது கவனம் பூங்காட்டில கனக்க பாம்புகள் எல்லாம் இருக்கு :wub: . நன்றி கறுப்பி.

பூங்காட்டில் உலா வருவேன் சுப்பண்ணை .

கறுப்பி மகுடி ஊதினால் பாம்பும் மயங்கிடும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூங்காட்டில் உலா வருவேன் சுப்பண்ணை .

கறுப்பி மகுடி ஊதினால் பாம்பும் மயங்கிடும் ^_^

கறுப்பி பாம்பு உங்களை கொத்திவிடும் என்று அப்படி சொல்லவில்லை உங்கள் காலில் பட்டு இறந்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி சொன்னேன். பாவம் இந்த பாம்புகளுக்கு சீறத்தான் தெரியும் கொத்தத் தெரியாது :o:)

சித்தப்பு...நான் படித்ததில பிடித்த ஒரு குறுங்கவிதையை இங்க இணைக்கிறன்.. :lol: (வித்தியாசமா இருந்துச்சு)..நீங்களும் வாசித்து பாருங்கோவன்..(யார் எழுதினது எண்டு தெரியாது).. :(

மறுபக்கம்..

முள்ளிள் ரோஜா

சேற்றில் தாமரை

சிற்பியில் முத்து

நல்லவை பிறக்க

அல்லவை தேவையா..?? :icon_mrgreen:

அறிவு..

பசு பால் தந்தது

மரம் கனி தந்தது

பறவை முட்டை தந்தது

வாங்கிய மனிதன்

பெயர் தந்தான்

அறிவில்லாத ஜிவன்கள்'.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தப்பு...நான் படித்ததில பிடித்த ஒரு குறுங்கவிதையை இங்க இணைக்கிறன்.. :D (வித்தியாசமா இருந்துச்சு)..நீங்களும் வாசித்து பாருங்கோவன்..(யார் எழுதினது எண்டு தெரியாது).. :D

மறுபக்கம்..

முள்ளிள் ரோஜா

சேற்றில் தாமரை

சிற்பியில் முத்து

நல்லவை பிறக்க

அல்லவை தேவையா..?? :icon_mrgreen:

அறிவு..

பசு பால் தந்தது

மரம் கனி தந்தது

பறவை முட்டை தந்தது

வாங்கிய மனிதன்

பெயர் தந்தான்

அறிவில்லாத ஜிவன்கள்'.. :(

அப்ப நான் வரட்டா!!

நல்ல கவிதைகள் மகனே . அதுசரி நீங்கள் கவிதை எழுதுவிங்களா :( ? கவிதைகளை ரசிப்பவனும் ஒரு கலைஞனே அப்ப நீங்களும் ஒரு கலைஞன்தான். நீங்கள் இட்டுள்ள முகக்குறிகளை பார்த்தால் கனக்க சந்தேகங்கள் இருக்குப்போல :lol: .

ஜம்முபேபி ; சந்தேகங்கள் வாழ்க்கையிலே இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே சந்தேகமா இருக்கக்கூடாது :(

நல்ல கவிதைகள் மகனே . அதுசரி நீங்கள் கவிதை எழுதுவிங்களா :) ? கவிதைகளை ரசிப்பவனும் ஒரு கலைஞனே அப்ப நீங்களும் ஒரு கலைஞன்தான். நீங்கள் இட்டுள்ள முகக்குறிகளை பார்த்தால் கனக்க சந்தேகங்கள் இருக்குப்போல :D .

ஜம்முபேபி ; சந்தேகங்கள் வாழ்க்கையிலே இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே சந்தேகமா இருக்கக்கூடாது :D

ஒ..அப்படியா சித்தப்பு :D ..நான் கோகுலத்தை விட்டு வெளியாள வந்து இருக்கும் போது மட்டும் எழுதுவன் அதை கவிதையாக எடுக்க வேண்டிய பொறுப்பு உங்களின்..அட "கலைஞனோ" அது எங்களின்ட குருவின்ட பழைய பேர் அல்லவா..!! :)

போக..போக ராதைகளை பத்தி எல்லாம் கவிதை வரைய தொடங்கவோ :) ...ஒம் எனக்கு பாடத்தில மட்டும் சந்தேகம் வராது மிச்ச எல்லாத்திலையும் சந்தேகம் வரும் பாருங்கோ.. :(

எனக்கே "பஞ்சா"..அப்பப்ப சந்தேகம் வரணும் சித்தப்பு ஏன் எண்டா இப்ப ராதைகள் எல்லாம் படு மோசம் அல்லோ..பிறகு நானும் நீங்களும் கோகுலத்தில இருக்கவே முடியாது பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ..அப்படியா சித்தப்பு :( ..நான் கோகுலத்தை விட்டு வெளியாள வந்து இருக்கும் போது மட்டும் எழுதுவன் அதை கவிதையாக எடுக்க வேண்டிய பொறுப்பு உங்களின்..அட "கலைஞனோ" அது எங்களின்ட குருவின்ட பழைய பேர் அல்லவா..!! :D

போக..போக ராதைகளை பத்தி எல்லாம் கவிதை வரைய தொடங்கவோ .ஒம் எனக்கு பாடத்தில மட்டும் சந்தேகம் வராது மிச்ச எல்லாத்திலையும் சந்தேகம் வரும் பாருங்கோ..

எனக்கே "பஞ்சா"..அப்பப்ப சந்தேகம் வரணும் சித்தப்பு ஏன் எண்டா இப்ப ராதைகள் எல்லாம் படு மோசம் அல்லோ..பிறகு நானும் நீங்களும் கோகுலத்தில இருக்கவே முடியாது பாருங்கோ

அப்ப நான் வரட்டா!!

எழுதுங்கோ எழுதுங்கோ ராதையை பற்றிதானே ? பாடத்தில சந்தேகம் வந்தால் இப்ப கெட்ட பையனென்றல்லோ சொல்லுறாங்கள் உங்களுக்கு பாடத்தில வராதபடியால் நீங்கள் நல்ல பிள்ளைதானே :D !

கோகுலத்தில இருக்கிற பாடு பெரிய பாடுமகனே வெண்ணையை திண்டு வளர்ந்த எங்களிட்ட பிட்சா கேட்டல் நாங்கள் எங்கே போறது :) ? அதுமட்டுமா எங்கட புல்லாங்குழலையுமல்லா கேட்கிறாங்கள். :):(

அதையும் அவங்களுக்கு குடுத்திட்டு நாங்கள் எப்படி சாப்பிடுறது (நாங்கள் புல்லாங்குழல் ஊதி பிச்சை எடுக்கிறனாங்களல்லோ :) )

எழுதுங்கோ எழுதுங்கோ ராதையை பற்றிதானே ? பாடத்தில சந்தேகம் வந்தால் இப்ப கெட்ட பையனென்றல்லோ சொல்லுறாங்கள் உங்களுக்கு பாடத்தில வராதபடியால் நீங்கள் நல்ல பிள்ளைதானே :( !

கோகுலத்தில இருக்கிற பாடு பெரிய பாடுமகனே வெண்ணையை திண்டு வளர்ந்த எங்களிட்ட பிட்சா கேட்டல் நாங்கள் எங்கே போறது :) ? அதுமட்டுமா எங்கட புல்லாங்குழலையுமல்லா கேட்கிறாங்கள். :):(

அதையும் அவங்களுக்கு குடுத்திட்டு நாங்கள் எப்படி சாப்பிடுறது (நாங்கள் புல்லாங்குழல் ஊதி பிச்சை எடுக்கிறனாங்களல்லோ :D )

ஓமோம்..ராதைகளை பற்றி தான் :D ..ஆனா ராதைகள் கோவிக்கமாட்டீனம் தானே எழுதினா சித்தப்பு..ஏதாவது கல்லு கில்லு வந்து விழுந்தா என்ன செய்யிறது..??..யாம் எப்பவுமே நல்ல பையன் தானே..இப்ப எனகொரு சந்தேகம் அது என்னவெண்டா.. :D

ராதைகளின் கூந்தல் நீளமாக இருந்தால் அழகா அல்லது குட்டையாக இருந்தால் அழகா.. :D (ஏசி போடாதையுங்கோ உதுவும் எண்ட சந்தேகம் தான் பாருங்கோ)..அது தானே நாங்களே வெண்ணேயை களவெடுத்து சாப்பிட்டனாங்க..இது என்னவெண்டா பிச்சை எடுத்தனான் ஜம்மு தட்டி பறித்தானாம் வலைஞன் மாமா எண்ட மாதிரி அல்லோ இருக்கு... :D

அட புல்லாங்குழல் கையில வைத்திருக்கிறதே அதற்கு தானே சித்தப்பு..(சரி..சரி அங்காலையும் சொல்லி போடாதையுங்கோ பிறகு கோகுலத்தின் மானம் என்ன ஆகிறது).. :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.