Jump to content

தெரியுமா எனக்கும் வலிக்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

பரந்து விரிந்து கடல்,கரை கழுவிச் செல்லும் அலைகள்,வளைந்து நெளிந்த தென்னைகள்,இருந்த தென்னைகளுல் ஓங்கி நேராய் வழர்ந்த தென்னைகள் அதிகம்.கவிட்டு வைத்த படகுகள்,என்னதான் கடலோடு நீந்தி வந்தாலும் கவிட்ட பின்னே மணல் ஒட்டித்தான் கிடந்தது.தொடை தெரிய மடித்து கட்டிய சாரம்.தோளில் ஒரு தும்புத்துவாய்.ஏதொ மகாறாஜா தோரணையில் நடை.

அந்தோனிபிள்ளையார் படகுகளூடு மணலில் கால் புதைய புதைய நடக்கையில் சிப்பியும், ஊரியும் ஈரபாதத்தை உறுத்தினாலும், உரத்துப்போன பாதத்தோலை ஊடறுக்க முடியாது மண்ணுல் புதையுண்டு கொண்டிருந்தன.

சின்னையன் இப்பத்தான் கொண்டுவந்தது,ஒரு பொரியல் ஒரு குழம்பு வைச்சால் போதும்.2 முட்டையையும் அவிச்சு விடு.மணி ஆறாகுது,தம்பிமார் வரப்போறங்கள், மினக்கெடாமல் சமையலை முடி என்ன, நிக்கிலசை விட்டு சுந்தரதின்ர கடையில அரிசியை வாங்கு,மறக்காம கணக்கு கொப்பியை கொடுத்து விடு,பழைய கடனை வாறகிழமைக்குள்ள முடிக்கிறதாக சொல்ல சொல்லு..வாற பிள்ளைகள் வயிறாற சாப்பிட வேணும்....என்ன சொன்னது கேட்டதே ...?மனைவி இராசத்துக்கு கேட்டிருக்கும்..,பதிலேதும் சொல்லாமல் நிண்டவரை விளித்து கொண்டே மனுசன் கிணத்தடிக்கு போட்டார்.

அது ஒரு இறாத்தல் பாணளவுதான் இருக்கும்.பெரியம்மாவிட மகன் சவுதியால் கொண்டு வந்து தந்தது,காட்டி பெருமையடிப்பான் நிக்லசு.3 பற்றியும் புதுசென்றால் புது மனைவியாய் சிரிக்கும்.ஒரு திங்கள் கழிந்தால்,கந்தையம்மானின் மீன் லொறி தூரத்தில வரும் போது கேட்க்கும் சத்தமாய் இழுக்கும் அந்த றேடியோ. என்றாலும் அதுதான் முழுக்குடும்பத்தினதும் அரும்பெரும் சொத்து.

இரவு BBC க்கு மட்டும் அந்தோனியாரின் காதில் சினுங்கினாலும், நிக்கிலசு சாபிட்டால் சமையலறை திட்டு சுமக்கும்,விழையாடினால் முற்றத்து பூவரச மரம் சுமக்கும் அந்த றேடியோவை.தாயிடம் மன்றாடி மூன்று மாசமாக காசு சேர்த்து பற்றி வாங்கிறதுதான் நிக்கிலசு சாதனை.

டேய் தம்பி உதுல சுந்தரண்ண கடையில ரண்டு கிலோ அரிசி வாங்கி ஓடிவாட என்று மாத கணக்கு புத்தகத்தை நீட்டிய தாயிடம்,அந்த மனிசன் பழைய கடனை கேட்டு திட்டும். நீங்கள் போட்டு வாங்கோ.எனக்கேலது.வாறகிழமைக்க

ுள்ள கணக்கடைக்கலாம் என்று சொல்லப்பு,அச்சாபிள்ளையெல்லே.

..உனக்கு றேடியோவை திருத்தி தரோனும் அவ்வளவு தானே...அண்ணமார் இண்டைக்கு வரேக்க குடுத்து விடுவம், கட்டாயம் திருத்தித் தருவாங்கள்,இப்ப ஓடி போட்டு வாப்பு.. நேரம் போகுது....உண்மையாக திருத்தி தருவினமோ கேட்ட மகனுக்கு கண்களால் சத்தியம் செய்தாள் தாய்.

தம்பிமார் வடிவா சாப்பிடுங்கோ. குமணன் அந்த முட்டையையும் சேர்த்து சாப்பிடப்பு பார்த்துப் பார்த்து கவனித்தார் அந்தோனியார்.தம்பி அங்க எத்தனை பேர் நிக்கினமோ தெரியாது ,இதிலை ஒரு நாலு பாசல் தான் கிடக்கு, கொண்டு போய் குடுங்கோ என்ன...,இராசம் கொண்டுவந்து வைத்த பாசலை நன்றி பார்வையால் தழுவிவைத்தான் குமணன்.ஒரு கையில ரேடியோவை பிடிச்சுக் கொண்டு, மறுகையால் பூவரசம் மரத்தை அணத்தபடி பம்பரமாக சுற்றி கொண்டிருந்த நிக்கிலசு, எல்லோரும் சாபிட்டு வெளியே வரவும் தானும் வந்து சேர்ந்து கொண்டான்.

அப்ப இனி எப்ப இந்த பக்கமோ தெரியாது...இழுத்தார் அந்தோனியார்.. உங்கட சாப்பாட்டை ருசி பார்க்கவேனும் இங்கால வரத்தானே வேணும், என்று சிரித்துக்கொண்டே குமணன், என்னடா தம்பி படிகிறதில்லையே...ரேடியோவும் கையுமாக நிக்கிற...ஈன்னு பால்லு தெரிய சிரித்தாலும் ரேடியோவைப் பற்றி கதைக்கச் சொல்லி தாயிடம் கென்சின நிக்கிலசு கண்கள்.அதையெல்லாம் கவனிக்காதவளாக, சொல்லுங்கோ தம்பி நல்லாச் சொல்லுங்கோ படிக்கிறதும் இல்லை ஒரே விழையாட்டும் கூத்துந் தான் ...

தம்பி டேய் எப்பவும் விழையாடலாம் ,பாட்டு கேட்கலாம்..இப்ப ஒழுங்காப் படி, புத்தி சொன்னவனிடம், நான் றேடியோ கேட்கிறதில்லை, அது பழுதாப் போச்சு என்றான் நறுக்கென.என்ன பழுதாப் போச்சோ,சரி இங்க தா, நாங்கள் திருத்தி கொண்டுவந்து தாறம் என்ன,துப்பாக்கியின்பட்டியை தோளில் கொழுவிக்கொண்ட்டே மறு கையால் றேடியோவை வாங்கி கொண்டான் குமணன்.எப்ப வருவியல் வெடுக்கென கேட்டான் நிக்கிலசு தகப்பனின் கோபப் பார்வையையும் கவனிக்காதவனாக... நாளைண்டைக்கு இந்த பக்கம் வருவம் அப்ப கொண்டு வந்து தாறம்,தகரப்படலையை திறந்து கொண்டே பதில் சொன்னான் குமணன்.

மண் ஒழுங்கையின் இரு முனையையும் அவதானித்து விட்டு, அப்ப நாங்கள் வெளிகிடுறம்..மெத்த பெரும் உபகாரம் செயிறியல்.இதுக்கெல்லாம் நாங்கள் என்ன கைமாறு செய்யபோறமோ ... ....சரி புனிதன் இந்த பாசல் பையை முன்னுக்கு கொழுவிக்கொண்டு சைக்கிளை எடு. ஐயா நாங்கள் வாறம்,அம்ம அடுத்தமுறை வரேக்க எல்லாரும் ஒண்டா இருந்து தான் சாபிடோனும் என்ன ...தம்பி டேய் உன்ற றேடியோவோடைதான் முற்றத்தை மிதிப்போம் இல்லையெண்டால் படலையோட போடுவம்...என்று சிரித்து கொண்டே சைக்கிளை மிதித்தான் புனிதன்.சைக்கிள் மண் ஒழுங்கையில் தடம் பதித்து விரைந்தாலும் துப்பாக்கி முனைகள் மட்டும் மண் பார்த்து முதுகில் தொங்கிக் கொண்டிருந்தன.

அவங்கள் பாவம் ,தங்கட வேலைகளுக்குள்ளையும் இவன் கேட்டுப் போட்டானே என்று றேடியோவை வாங்கிக் கொண்டு போறாங்கள்.கண்டறியாத பிள்ளை வழர்த்து வைச்சிருக்கிற....சினந்து கொண்டே தோள் துண்டை உதறி கொடியில போட்டுவிட்டு திண்ணையிலை இருக்கவும், பட பட படவென வெடிச் சத்தங்கள் அதிரவும் சரியாக இருந்தது....

நிக்கிலசு ஓடிப் போய் தாயை கட்டிப் பிடித்துக் கொண்டான்.அந்தோனியார் முகத்தில் பல திகில் ரேகைகள்...,என்னப்பா...கேட்ட மனைவிக்கு பதில் சொல்லாமலே வேலியால் எட்டி பார்த்தார்.பக்கத்து வீட்டு பொன்னம்பலத்தார் அரக்க பரக்க ஓடி வருவது தெரிந்தது.என்னடாப்ப சத்தம்..கோவில் மதகடியில ஆமிக்காரங்கள் பதுங்கி கிடந்து ரண்டு இயக்கப் பொடியங்களை சுட்டுப் போட்டாங்களாம்...மூச்சிரைக்க சொல்லி கொண்டே மனுசன் ஓடிப்போனார்..

என்ர அந்தோனியாரே..... இறுகிப்போனார் அந்தோனியார் !! முற்றத்து மணல் ஒரு ஈழத் தாயின் கண்ணீர் துளிகளை குடித்துக் கொன்டிருந்தது.... தாயின் மடியில் தலை புதைத்து கதறிகொண்டிருந்தான் நிக்கிலசு... தனது றேடியோவுக்காக......!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்கிலியன் உங்கள் ஆக்கம் படித்து எனக்கும் வலிக்கிறது தெரியுமா? மிகவும் நல்ல எழுத்தோட்டம்

பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சங்கிலியன் .........

எனக்கும் வலிக்கிறது...நல்ல கதை உண்மை சம்பவமா ?

சில. எழுத்து பிழைகள் . திருத்தி வாசித்து ,பயன் பெற்றேன் .

நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாசித்து கருத்தெழுதிய காவலூர் கண்மணிக்கு மிகுந்த நன்றிகள்.

நிலாமதி

இன்னுந்தான் எழுத்துப் பிழைகளை தவிர்க்க முடியவில்லை .வேலைகளுக்கு நடுவே கிடைக்கும் ஓய்வு நேரத்துக்குள் எழுதிவிடுகிறேன்.அது மட்டுந்தான் பிழைகளுக்கு காரணம் என்றில்லை. மன்னிக்கவும்.கவனயீனத்தை குறைத்துக்கொள்கிறேன்.

சில பிழைகளை திருத்திவிட்டுள்ளேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

Posted

ம்ம்..சங்கிலியன் அண்ணா கதையை வாசிக்க எனக்கும் வலிக்கிறது :lol: ..கதையை நகர்த்திய விதம் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் <_< ...எத்தனையோ வேலை பளுக்களின் மத்தியிலும் அந்த அண்ணாமார்கள் "றேடியோவை" கொண்டு சென்றது ம்ம்ம்... :lol:

உண்மை சம்பவமா அண்ணா..??..தொடர்ந்தும் உங்கள் கதைகளை வாசிக்கும் ஆவலில். :o

அப்ப நான் வரட்டா!!

Posted

எனக்கும் கூட வலிக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

[ஃஉஒடெ நமெ='Jஅமுன' டடெ='Jஉல் 12 2008, 02:35 PM' பொச்ட்='427261']

[cஒலொர்="#0000FF"]ம்ம்..சங்கிலியன் அண்ணா கதையை வாசிக்க எனக்கும் வலிக்கிறது :) ..கதையை நகர்த்திய விதம் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் :நுப்: ...எத்தனையோ வேலை பளுக்களின் மத்தியிலும் அந்த அண்ணாமார்கள் "றேடியோவை" கொண்டு சென்றது ம்ம்ம்... :(

ஜமுனா வாழ்த்துகளுக்கு நன்றி.... ஆனால்....வேலை பளுக்களுக்கிடையில் றேடியோவை கொண்டு போகவைத்தது ....? என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்திப்போட்டீங்கள்...சொல்

Posted

நெஞ்சத்தொட்டு சென்றது மட்டுமன்றி கண்களும் ஈரமாகின.

நல்லாக எழுதி இருக்கிறீங்க.

இறுதியில் நிக்லஸும் கதறினான்.... தனது ரேடியோவுக்காக என முடித்த விதம் அருமை,.

Posted
ஜமுனா வாழ்த்துகளுக்கு நன்றி.... ஆனால்....வேலை பளுக்களுக்கிடையில் றேடியோவை கொண்டு போகவைத்தது ....? என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்திப்போட்டீங்கள்...சொல்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாழ்த்துகளுக்கு நன்றி வெண்ணிலா...

ஓ அப்படியா ஜமுனா...?

ம்ம்...என்னால் முடிந்ததை எழுதுகிறேன்...அதை கதையென்று அங்கிகரித்தீர்களென்றால் சந்தோசப்படலாம்....இல்லை குறைகளை சுட்டிகாட்டினால் திருத்திகொண்டு, நானும் ஓர் கதாசிரியனாக வர முயற்செய்வேன்.வாசித்த,கருத்த

ுகள் பகிர்ந்த்த உறவுகள் அனைவருக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.