Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் தமிழ் மொழி!

Featured Replies

உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள். முன்பெல்லாம் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடாக தமிழகத்தை அடுத்து இலங்கையையும், மலேசியா சிங்கப்பூரையுமே நாம் உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது உலகின் எல்லா மூலைகளிலும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வெவ்வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை. இப்படி புலம்பெயர்ந்து செல்லும் போது, இருக்கின்ற நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

இது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே. ஆகினும் தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து விடாமல் தங்களது அடுத்த சந்ததியினருக்கும் இம்மொழியின் பயன்பாடு இருக்க வேண்டும் என்பதில் பல முயற்சிகள் எடுத்து வருவதைக் காணமுடிகின்றது; இது பாராட்டப்படக் கூடிய ஒரு விஷயம்.

ஒரு மொழி என்பது வளர்ச்சியடையக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும். புழக்கத்தில் இருக்கின்ற ஒரு மொழிதான வளர்ச்சி காண்கின்ற ஒரு மொழியாக, பல்லாண்டுகள் இருக்க முடியும். தொழில்நுட்பம் துரிதமாக வளர்ச்சி கண்டுவருகின்ற இவ்வேளையில் நாளுக்கு நாள் பல புதிய தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அறிவியல் தமிழ், கணினித் தமிழ் போன்ற கருத்துக்கள் வரவேற்கப்பட்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க பல புதிய சொற்கள் பிறந்துகொண்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி பல்வேறு காரணங்களினாலும் பல புதிய சொற்கள் தமிழ் மொழியில் புகுத்தப்படுகின்ற நிலையைக் காணமுடிகின்றது. பெரும்பாலும் இவை பேச்சு மொழி என்று முத்திரை குத்தப்பட்டு ஆராய்ச்சி நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் விடப்பட்டு விடுகின்றன.

மொழியில், குறிப்பாக தமிழ் மொழியில் பிற மொழிக் கலப்பு என்ற பிரச்சனைகள் நெடுங்காலமாகவே இருக்கின்ற ஒன்று. காலங்காலமாக பல்வேறு இனத்தவரின், மொழியினரின் தொடர்பும் கலப்பும் ஏற்பட்டதன் விளைவாக இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சொற்களில் பல பிறமொழிச்சொற்கள் கலந்திருப்பதை மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலை இன்றைக்கும் தொடர்கின்றது; அதுவும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் பல அன்னிய மொழிச் சொற்களின் 'தமிழ் படுத்தப்பட்ட' தமிழ் சொற்களைக் கேட்க முடிகின்றது. மலேசிய தமிழர்கள் பேசும் போது மலாய் சொற்களின் தாக்கங்கள் சேர்ந்திருப்பதை நன்றாக உணரமுடியும். அதேபோல ஜெர்மனியில் வாழ்கின்ற தமிழர்கள் பேசும் போது தமிழோடு கலந்த தமிழ் படுத்தப்பட்ட ஜெர்மானிய வார்த்தைகளையும் காணமுடியும்.

அந்த வகையில், இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியில் உள்ள வேறுபாடுகளையும் மறந்து விட முடியாது. பொதுவாக தமிழகத்தில் பேசப்படுகின்ற தமிழ் வார்த்தைகளிலிருந்து இலங்கைத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் வித்தியாசப்படுகின்றது.

உதாரணமாக இந்த வாக்கியம்.[பேச்சு மொழி]

1. நான் கடைக்குப் போனேன். - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

கடைக்குப் போனேன் நான். - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

2. எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் தங்கியிருப்பீர்கள்? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் நிற்பீர்கள்? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

3. நீ அகிலாவிடம் பேசினாயா? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

நீ அகிலாவிடம் கதைச்சியா? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

இப்படி பலப் பல வித்தியாசங்களை இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் காணமுடிகின்றது.

இலங்கைத் தமிழ் நண்பர்களோடு உறையாடும் போது நான் கவனித்த மேலும் சில சொற்களின் பட்டியல்:

இலங்கைத் தமிழ் - விளக்கம்

-----------------------------------

புதினம் - செய்தி

கொழுவுதல் - மாட்டிவைத்தல் அல்லது இணைத்தல்

சத்தி - வாந்தி

தலையிடி - தலைவலி

அரியண்டம் - பிரச்சனை

மச்சாள் - மாமனின் மகள், தம்பியின் மனைவி

தேசிக்காய் - எலுமிச்சை

மச்சம் - இறைச்சி வகைகள்

துவாய் - துண்டு

நொடி - விடுகதை

பொழுதுபட - மாலை

அவா - அவர்கள்

கெலில் - ஆசை

கெதியா - அவசரமாக, சீக்கிரமாக

ஆறுதலா - மெதுவாக

நித்திரை - தூக்கம்

கிட - படு

இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்

வந்தவ - வந்திருக்கின்றனர்

சீவிக்கலாம் - வாழலாம்

கிட்டடியிலே - அண்மையில், சில நாட்களுக்கு முன்னர்

கண்டுட்டன் - பார்த்துட்டேன்

தமையன் - அண்ணன்

நாரி - முதுகு

திறமா - நன்றாக

காவிக் கொண்டு - தூக்கிக் கொண்டு

காணும் - போதும்

காணாது - பத்தாது

மேலே உள்ள சொற்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் அன்றாட உபயோகத்தில் இருக்கின்ற சொற்கள்தாம். இவற்றில் பல சொற்களை நாம் பொதுவாக அறிந்திருந்தாலும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் பல சொற்கள் கேட்பதற்குப் புதிய சொற்களாகத் தோன்றினாலும், நன்கு ஆராய்ந்து பழைய தமிழ் இலக்கிய நூற்களை வாசிக்கும் போது அங்கு கிடைக்கக் கூடிய சொற்களாகவே இவை இருக்கின்றன. இந்தப் பழம் சொற்கள் தமிழகம், மற்றும் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் வழக்கத்தில் இல்லாமலேயே போய்விட்டன என்பது மறுக்கப்பட முடியாத ஒரு உண்மை.

சுபாஷினி, ஜெர்மனி

நன்றி - இசங்கம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் வளர வேண்டுமானால் அதை ஆட்சிமொழியாகவும், செயற்பாட்டு மொழியாகவும் மாற்ற வேண்டும். பொருளாதாரத்தை நோக்கிய இன்றைய உலகில், தமிழில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்காவிட்டால், வேலைவாய்ப்புக்கிடைக்கின்ற மொழியைத் தான் மக்கள் தேடுவார்கள். இது தவிர்க்கமுடியாத ஒன்று.

இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், தமிழக அரசு, வேலைவாய்ப்புக்களில் தமிழை கட்டாயப்படுத்த வேண்டும். தமிழ்க் கல்வி முடித்தவர்களே தமிழக அரசு, மற்றம் தனியார் தொழில்களில் முன்னுரிமை பெறமுடியும் போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும்

வெறுமனே தமிழ்வாழ்க என்று கூச்சல் போடுவதால் அது வளரப் போவதில்லை

தவிர, தமிழுக்கு ஒழுங்கான அகராதி ஏதுமில்லை. அதை முதலில் உருவாக்க ஏதாவது பல்கலைக்கழகம் முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும், கொய்யாபழத்தையும்

திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோரிக்ஷாவில் தப்பி ஓடியபோது, தகவல் அறிந்து போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாகியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின"

சாவி - போர்த்துகீசியம்

பிரோ - பிரெஞ்சு

துட்டு - டச்சு

கோணி - இந்தி

பாப்பாளி - மலாய்

சப்போட்டா - இசுப்பானியம்

கொய்யா - பிரேசிலியன்

சுமார் - பெர்சியன்

வயது - சமற்கிருதம்

கில்லாடி - மராத்தி

ஆட்டோ - கிரேக்கம்

ரிக்ஷா - சப்பானியம்

தகவல் - அரபி

போலீஸ் - இலத்தீன்

ஏட்டு - ஆங்கிலம்

துப்பாக்கி - துருக்கி

தோட்டா - உருது

( கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழனா தமிங்கிலனா' என்ற நூலில் மேற்கண்ட மொழிக்கலப்பு சுட்டிக்காட்டப்படுள்ளது )

தமிழில் நடைமுறைக்கேற்றவாறு இலகுவான புதுச் சொற்கள் உருவாகும் வரை இந்தத் தவுறுகள் தொடரத் தான் செய்யும். இதுபற்றி ஆளாளுக்கு விமர்சனம் செய்வதை விட, தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலுமுள்ள தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்க முன் வர வேண்டும். இன்று ஆங்கில மொழி எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் வந்ததிற்கு முதற் காரணம். அடிக்கடி புதுச் சொற்கள் அறிமுகப்படுத்தப்படுவது தான். நாம் இன்றும் தொல்காப்பியர் காலத்தில் தான் நிற்கின்றோம். அதைவிட ஒவ்வொரு நாட்டிலுள்ள தமிழர்களும் ஒவ்வொரு விதமான பாவனைச் சொற்களைப் பாவிக்கினறோம்.

அதனால் பேச்சு வழக்கு வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படைத் தமிழ் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக கற்பிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

இலங்கைத் தமிழ் - விளக்கம்

-----------------------------------

அரியண்டம் - பிரச்சனை

மச்சம் - இறைச்சி வகைகள்

வந்தவ - வந்திருக்கின்றனர்

அரியண்டம் - அருவருப்பு

மச்சம் - அசைவ உணவுவகை

வந்தவ/வந்தவை - வந்திருந்தனர்

  • தொடங்கியவர்

அரியண்டம் - அருவருப்பு

மச்சம் - அசைவ உணவுவகை

வந்தவ/வந்தவை - வந்திருந்தனர்

இரண்டு அர்த்தத்தையும் தரும் அருவி.

"என்னப்பா உன்னோட பெரிய அரியண்டமாக் கிடக்கு"

"ஐயோ அந்த அரியண்டத்தை நினைச்சால் இப்பவும் எனக்கு சத்தி வருது".

உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள். முன்பெல்லாம் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடாக தமிழகத்தை அடுத்து இலங்கையையும், மலேசியா சிங்கப்பூரையுமே நாம் உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது உலகின் எல்லா மூலைகளிலும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வெவ்வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை. இப்படி புலம்பெயர்ந்து செல்லும் போது, இருக்கின்ற நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

இது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே. ஆகினும் தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து விடாமல் தங்களது அடுத்த சந்ததியினருக்கும் இம்மொழியின் பயன்பாடு இருக்க வேண்டும் என்பதில் பல முயற்சிகள் எடுத்து வருவதைக் காணமுடிகின்றது; இது பாராட்டப்படக் கூடிய ஒரு விஷயம்.

ஒரு மொழி என்பது வளர்ச்சியடையக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும். புழக்கத்தில் இருக்கின்ற ஒரு மொழிதான வளர்ச்சி காண்கின்ற ஒரு மொழியாக, பல்லாண்டுகள் இருக்க முடியும். தொழில்நுட்பம் துரிதமாக வளர்ச்சி கண்டுவருகின்ற இவ்வேளையில் நாளுக்கு நாள் பல புதிய தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அறிவியல் தமிழ், கணினித் தமிழ் போன்ற கருத்துக்கள் வரவேற்கப்பட்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க பல புதிய சொற்கள் பிறந்துகொண்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி பல்வேறு காரணங்களினாலும் பல புதிய சொற்கள் தமிழ் மொழியில் புகுத்தப்படுகின்ற நிலையைக் காணமுடிகின்றது. பெரும்பாலும் இவை பேச்சு மொழி என்று முத்திரை குத்தப்பட்டு ஆராய்ச்சி நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் விடப்பட்டு விடுகின்றன.

மொழியில், குறிப்பாக தமிழ் மொழியில் பிற மொழிக் கலப்பு என்ற பிரச்சனைகள் நெடுங்காலமாகவே இருக்கின்ற ஒன்று. காலங்காலமாக பல்வேறு இனத்தவரின், மொழியினரின் தொடர்பும் கலப்பும் ஏற்பட்டதன் விளைவாக இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சொற்களில் பல பிறமொழிச்சொற்கள் கலந்திருப்பதை மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலை இன்றைக்கும் தொடர்கின்றது; அதுவும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் பல அன்னிய மொழிச் சொற்களின் 'தமிழ் படுத்தப்பட்ட' தமிழ் சொற்களைக் கேட்க முடிகின்றது. மலேசிய தமிழர்கள் பேசும் போது மலாய் சொற்களின் தாக்கங்கள் சேர்ந்திருப்பதை நன்றாக உணரமுடியும். அதேபோல ஜெர்மனியில் வாழ்கின்ற தமிழர்கள் பேசும் போது தமிழோடு கலந்த தமிழ் படுத்தப்பட்ட ஜெர்மானிய வார்த்தைகளையும் காணமுடியும்.

அந்த வகையில், இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியில் உள்ள வேறுபாடுகளையும் மறந்து விட முடியாது. பொதுவாக தமிழகத்தில் பேசப்படுகின்ற தமிழ் வார்த்தைகளிலிருந்து இலங்கைத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் வித்தியாசப்படுகின்றது.

உதாரணமாக இந்த வாக்கியம்.[பேச்சு மொழி]

1. நான் கடைக்குப் போனேன். - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

கடைக்குப் போனேன் நான். - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

2. எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் தங்கியிருப்பீர்கள்? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் நிற்பீர்கள்? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

3. நீ அகிலாவிடம் பேசினாயா? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

நீ அகிலாவிடம் கதைச்சியா? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

இப்படி பலப் பல வித்தியாசங்களை இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் காணமுடிகின்றது.

இலங்கைத் தமிழ் நண்பர்களோடு உறையாடும் போது நான் கவனித்த மேலும் சில சொற்களின் பட்டியல்:

இலங்கைத் தமிழ் - விளக்கம்

-----------------------------------

புதினம் - செய்தி

கொழுவுதல் - மாட்டிவைத்தல் அல்லது இணைத்தல்

சத்தி - வாந்தி

தலையிடி - தலைவலி

அரியண்டம் - பிரச்சனை

மச்சாள் - மாமனின் மகள், தம்பியின் மனைவி

தேசிக்காய் - எலுமிச்சை

மச்சம் - இறைச்சி வகைகள்

துவாய் - துண்டு

நொடி - விடுகதை

பொழுதுபட - மாலை

அவா - அவர்கள்

கெலில் - ஆசை

கெதியா - அவசரமாக, சீக்கிரமாக

ஆறுதலா - மெதுவாக

நித்திரை - தூக்கம்

கிட - படு

இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்

வந்தவ - வந்திருக்கின்றனர்

சீவிக்கலாம் - வாழலாம்

கிட்டடியிலே - அண்மையில், சில நாட்களுக்கு முன்னர்

கண்டுட்டன் - பார்த்துட்டேன்

தமையன் - அண்ணன்

நாரி - முதுகு

திறமா - நன்றாக

காவிக் கொண்டு - தூக்கிக் கொண்டு

காணும் - போதும்

காணாது - பத்தாது

மேலே உள்ள சொற்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் அன்றாட உபயோகத்தில் இருக்கின்ற சொற்கள்தாம். இவற்றில் பல சொற்களை நாம் பொதுவாக அறிந்திருந்தாலும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் பல சொற்கள் கேட்பதற்குப் புதிய சொற்களாகத் தோன்றினாலும், நன்கு ஆராய்ந்து பழைய தமிழ் இலக்கிய நூற்களை வாசிக்கும் போது அங்கு கிடைக்கக் கூடிய சொற்களாகவே இவை இருக்கின்றன. இந்தப் பழம் சொற்கள் தமிழகம், மற்றும் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் வழக்கத்தில் இல்லாமலேயே போய்விட்டன என்பது மறுக்கப்பட முடியாத ஒரு உண்மை.

சுபாஷினி, ஜெர்மனி

நன்றி - இசங்கம்.கொம்

நல்ல கட்டுரை முழுமையாக இனைத்ததுக்கு நன்றி.................

இரண்டு அர்த்தத்தையும் தரும் அருவி.

"என்னப்பா உன்னோட பெரிய அரியண்டமாக் கிடக்கு"

"ஐயோ அந்த அரியண்டத்தை நினைச்சால் இப்பவும் எனக்கு சத்தி வருது".

இன்னுமா சத்தி எடுக்கவில்லை :lol: நானும் மகனுக்கு சொல்லி வைச்சேன் இந்த வருடம் உனக்கு ஒரு மச்சாள் அல்லது மச்சான் வருவார்கள் என்று ஆனால் இங்கை? சீ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா எல்லோரும் தமிழை என்னமாதிரி அறிந்து வைத்துள்ளீர்கள். உங்கள் தமிழ் பற்றை நினைத்துப்பார்க்க புல்லரிக்குதப்பா...

வாழ்க தமிழ்,

  • கருத்துக்கள உறவுகள்

முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...

முசுப்பாத்தி...

இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:

நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.

'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.

'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.

2.கசங்குதல்.

3.களைத்தல்.

4.ஊக்கங் குன்றுதல்.

5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.

2.வருந்துதல்.

3.மெலிதல்.

4.அழிதல்.

5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary)

முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.

சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.

http://vasanthanin.blogspot.com/2005/05/blog-post_16.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.