Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் 'அவாள்' கவிதையால் சலசலப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் 'அவாள்' கவிதையால் சலசலப்பு

புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008

சென்னை: முதல்வர் கருணாநிதி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து பூடகமாக எழுதியுள்ள கவிதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி தனது கவிதையில் சாடியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனைத்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் நேற்று அவர் வெளியிட்டுள்ள கவிதை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், அந்தக் கவிதையில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் குறித்து கருணாநிதி பூடகமாக சாடியுள்ளார். யார் அந்தத் தலைவர் என்பது யாருக்குமே புரியவில்லை. இதனால் இந்தக் கவிதை பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

முதல்வரின் அந்தக் கவிதை இதோ...

அரசியலில் பொதுவாழ்வில்; ஏன், தனி வாழ்வில் கூட;

அனைவரையும் நம்பிவிடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு!

அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன.....

அம்மவோ; காலைப்பிடிப்பது தான் என்ன? என்ன? என்ன?

அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது "வாய்ப்பு'' என்றதும்

"ஆத்துக்காராள்'' காட்டிய அன்பும் நன்றியும் கூட

ஆலாய்ப்பறந்துவிடும்; ஆவியாகி மறைந்து விடும்.

ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி, அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல;

"அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்;

அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப் பார்த்தேன்

அடிமரம் ஒட்டிய கிளையொன்றை!

அடடா-கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்

படிப்படியாய் அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து

படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக்கண்ட பின்பே

உணர்ந்து கொண்டேன்;

"அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை!

உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-

கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின்

நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!

இதுதான் முதல்வரின் கவிதை.

இந்தக் கவிதை முதல்வர் அவாள் என்று கூறியிருப்பது யாரை என்பதுதான் இப்போது யாருக்குமே புரியாத புதிராக மாறியுள்ளது. பலருடைய பெயர்களை இணைத்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்கு முதல்வரின் கவிதை தள்ளி விட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜனை சொல்கிறாரா (வரதராஜன் பிராமணர் என்பது பலருக்கும் தெரியாது) அல்லது தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதியை சொல்கிறாரா அல்லது தயாநிதி மாறனின் மனைவி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களை தாக்கியுள்ளாரா என்பது குறித்து பெரும் விவாதமே நடந்து வருகிறது.

சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் கருணாநிதியின் கவிதைதான் இன்று விவாதப் பொருளாகியுள்ளதாம். யாருடைய பெயரை இப்படி மறைமுகமாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் என்று டீயை விட படு சூடாக இருக்கிறதாம் விவாதம்.

ஆனால் முதல்வரின் கவிதையைப் படித்தால் அது ஒன்று திரிபாதியாக இருக்க வேண்டும் அல்லது வரதராஜனாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள். திரிபாதி சமீபத்தில் முதல்வரின் கோபத்திற்கு ஆளானார். அவருக்கு இணையாக புதிதாக உருவாக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் ஸ்ரீபதி நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல தமிழகத்தில் காங்கிரஸுக்கு அடுத்த எதிரி திமுகதான் என்று சமீபத்தில் இடதுசாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் கோபம் கொண்டு வரதராஜனைத்தான் முதல்வர் தனது கவிதையில் மறைமுகமாக சாடியிருப்பாரோ என்றும் அசை போடப்படுகிறது.

மொத்தத்தில் முதல்வரின் கவிதை அத்தனை பேரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு விட்டது என்பது மட்டும் நிச்சயம். முதல்வரே முன்வந்து விளக்கினால்தான் உண்டு.

thatstamil.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது ,அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல, கடும் விஷம் மொண்டு

இது எல்லாம் ஒரு கவிதை. இவர் எல்லாம் தமிழ் அறிஞர். இப்படியானவர்களைத் தமிழரின் தலைவர் என்பதால் தான் தமிழ் சிதைந்துள்ளது. வடமொழியும், ஆங்கிலமும் கலந்து எழுதும் தமிழ் அறிஞர்??

இவாள் பற்றி அவாள் பேச வெளிக்கிட்டால் நாறி விடும் கோபாலா!

இவாள் அவாளிடம் பஞ்சாங்கம் பார்த்து பிரம்ம முகூர்த்தத்தில் தான் தன் தொலைக்காட்சி சேவையையே தொடங்குவாராம்!

அது மட்டும் இல்லை அவாளிடம் தான் இவாள் தன் டிவியையே கொடுத்து இருக்கிறார்.

(கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத் எனப்படும் சரத்குமாரும் அவாள் தான் ஐயா!)

ஏன் இவாள் குடும்ப டாக்டரும் அவாள் தான்

மேலும் ஏன்? இவாள் பெங்களூரில் வைத்து அவாள் உடன் அடித்த கூத்துக்களால் தானே ஒரு கட்சியே இரண்டாக உடைந்தது!

ஒரு சான்ஸ் கேட்டு தொலைத்த சபலத்தால் தானே கட்சியே உடைந்து மொத்தம் 21 வருடங்கள் முதல்வராய் இருக்கும் சான்ஸே போனது!!

கோட்டைக்குள் ஓட்டை வைப்பவன் திருடன்! ஆனால் ஓட்டைக்குள் கோட்டை வைப்பவன் முட்டாள்!!

இவர் எல்லாம் சான்ஸ் பற்றி பேசவந்து விட்டார்

---------------------------------------------------------------------------------------><--------------------------------------------------------------------------------------------------

ஒரு பொறுப்பு வாய்ந்த முதல்வர் தனது ஆட்சிக்குட்பட்ட மானிலத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையே சிலேடையில் அவர்களின் சாதியை குறித்து, காழ்ப்புணர்வை கக்குவது அரசியல் அநாகரீகம் மட்டும் அல்ல, சாதி அரசியலில் நாட்டை எரித்து குளிர்காயும் குள்ளநரித்தனமும் கூட

---------------------------------------------------------------------------------------><--------------------------------------------------------------------------------------------------

இவர்கள் இருக்கும் வரையில் சாதிகளை ஒழிப்பதாவது, தமிழர்கள் ஒரு இனக்குழுமமாக செயற்படுவதாவது!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இந்த திரைக் கவிதை..............கொஞ்ச நாட்களுக்கு ஓடும் என்ன

.ஓடட்டும் பார்போம் இறுதியில் லாபமா அல்லது நட்டமா என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'அரிவாளை' சீண்டிவிட்ட 'அவாள்'

கூட்டணியை முறிக்கும்

கவிதைக் குத்து

நேருக்கு நேராக நெருப்பு கக்குகிற அதே வேகத்தில், பூடகமாகக் கவிதை எழுதி காரசாரம் பண்ணுவதும் கைவந்த கலைதான் முதல்வர் கருணாநிதிக்கு! அவருடைய கவிதைக் குத்து காரணமாகவே அரங்கேறிய பல அரசியல் திருப்பங்கள் உண்டு. அதில் லேட்டஸ்ட் - கடந்த .ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட 'முரசொலி'யில் 'நாய்கள் கூடச் சிரிக்குமய்யா!' என்ற தலைப்பில் பின்னியெடுத்த ஒரு கொட்டை எழுத்துக் கவிதை!

'காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன...

காலைப் பிடிப்பதுதான் என்ன?

அடிச்சது 'சான்ஸ்' என்றதும் 'ஆத்துக்காராள்' காட்டிய

அன்பும் நன்றியும்கூட

ஆலாய்ப் பறந்து விடும்;

அசைத்துப் பார்த்தேன்

அடிமரம் ஒட்டிய கிளையன்றை!

அடடா - கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்

படிப்படியாய் அளந்து போட்டது போல்

பாவி மனிதன் தலையிலிருந்து

படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக் கண்ட பின்பே

உணர்ந்து கொண்டேன்;

'அவாள்' நமக்கு எப்போதும் 'சவால்'தான் என்ற உண்மை!

நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள்கூட சிரிக்குமய்யா!'

- என்கின்றன அக்கவிதையின் சில வரிகள்! இடம் - பொருள் - ஏவல் புரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பினர், ''சந்தேகமேயில்லை... இது எங்கள் இயக்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், எம்.பி-யுமான

டி.கே.ரங்கராஜனை நோக்கி நடந் திருக்கும் தாக்குதல்தான். அவர்தான் இங்குள்ள

முக்கியமான பிராமண சமூகத்தவர். 'படிப்படியாக அளந்து போட்டது போல்' என்று கருணாநிதி 'பொடி' வைப்பதும் 'படியளந்த பெருமாள்' என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கராஜ கடவுளை மனதில் வைத்துத்தான்!

என்று குமுறத் தொடங்கியிருக்கிறது.

டி.கே.ரங்கராஜன் மீதான இந்த 'சாதிய' தாக்குதலை சகிக்க முடியாமல், 'கூட்டணி இனியும் கூடாது, தி.மு.க-வுடன்' என்று பொருமவும் தொடங்கியிருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள்.

இன்னொரு பக்கம் ஆற்காட்டாரும் பொதுவாக கம்யூனிஸ்ட்களைக் குறிவைத்து சரம் தொடுக்க... அவரைக் கண்டித்து கருணாநிதி அறிக்கை விட்டா லும், 'தொட்டிலை ஆட்டச் சொல்லி விட்டு, பேருக்கு பிள்ளையைக் கிள்ளுகிற நாடகம் இது' என்றும் டென்ஷனாகி யிருக்கிறார்கள்.

''அண்மையில் மீடியாவில் பேசும்போது தி.மு.க. பற்றி ரங்கராஜன் தெரிவித்த அனல் வீச்சு கருத்துகள்தான் கருணாநிதியின் கவிதைக் கோபத்துக்குக் காரணம்'' என்று சிலர் அர்த்தம் கொடுக்க... இன்னும் சிலரோ, ''தடியடி, துப்பாக்கிச் சூடு வரை போன ரெட்டணை கிராம போராட்டத்தைத் தூண்டிவிட்டதே ரங்கராஜன்தான் என்று நினைக்கிறார் கருணாநிதி! அதைத்தான் இப்படியெல்லாம் இலக்கிய தாக்குதலாக அரங்கேற்றுகிறார்'' என்றும் சொல்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை யில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர் களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி தரப்படவில்லை என பிரச்னை கிளம்ப, அது துப்பாக்கிச் சூடு வரை போனது. சம்பவங்கள் நடந்ததும் அந்தப் பகுதிக்கு முதலில் விசிட் அடித்ததென்னவோ ரங்கராஜன்தான்! தொழிலாளர்களின் சோகத்தை பகிர்ந்துகொண்ட அவர், அதை தேசிய அளவில் விவாதமாக்க முடிவெடுத்து, செயல்படத் தொடங்கினார். இதற்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவும் ஸ்பாட்டுக்குப் போக, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்த, அவரும் கம்யூனிஸ்ட்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 'சில அரசியல் தரகர்கள் நல்ல திட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். கலைஞர் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டு பண்ணுகிறார்கள்' என்றார் ஸ்டாலின். இதுபற்றியெல்லாம் தி.மு.க-வினர் சொல்லும்போது,

''எப்போதுமே கூட்டணித் தோழர்களை கவனத்துடன் கையாள் பவர் எங்கள் தலைவர். ரங்கராஜன் மீதான தனது வருத்தங்களை கவிதையாக்குவதற்கு முன்பு தலைவரே ரங்கராஜனிடம் போன் பேசினார். 'தோழமை உணர்வுடன் நாம் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும்போது, தேவையில்லாமல் பத்திரிகைகள் மூலமாக களத்தை சூடாக்குவது தர்மமா? நந்திகிராம் விவகாரத்தில் தி.மு.க. தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை. காரணம், பிரச்னைக் குள்ளான மார்க்சிஸ்ட் அரசு மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கிறது. அந்த அரசை உரசிப் பார்த்து அறிக்கை விடுவது, கூட்டணி தர்மமாகாது என்று நினைத்தது தி.மு.க.! ஆனால், ரெட்டணை விவகாரத்தைப் பெரிதாக்கி தி.மு.க-வுக்கு அவப்பெயர் உண்டாக்குவது என்ன நியாயம்? நானும் உங்களைப் போல எல்லாவற்றையும் பத்திரிகையிலேயே அறிவித்துத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த முடியாதா?' என்றெல்லாம் ரங்கராஜனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ரங்கராஜன் எடுத்தெறிந்தாற்போல் பதில் சொன்னதுதான் தலைவரின் கோபத்தைக் கிளறிவிட்டது'' என்கிறார்கள்.

போன் உரையாடலின்போது, 'நீங்கள் சர்வபலத்தோடு அரசாங்கம் நடத்துகிறீர்கள். ஆனால், எங்கள் தரப்பை நாங்கள் எங்கு போய் சொல்வது? பத்திரிகைகளில்தானே சொல்ல வேண்டியிருக்கிறது! எங்கள் கொள்கைகளைச் சொன்னால் அதில் தி.மு.க-வுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?' என்றுதான் ரங்கராஜன் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உரையாடலின் முடிவில், 'உங்கள் நிலைப்பாடுதான் என்ன? கூட்டணி குறித்து முடிவுதான் என்ன?' என்று கருணாநிதி கேட்டதாகவும், 'அதையும் நீங்கள் பத்திரிகைகளிலேயே பார்த்துக் கொள்ளலாம்?' என்று சொல்லி ரங்கராஜன் அந்த உரையாடலை முடித்ததாகவும்கூட சிலர் சொல்கிறார்கள்.

'காங்கிரஸயீடன் இருந்தால் தி.மு.க-வுடன் கூட்டு இல்லை' என்றுஇரண்டு கம்யூனிஸ்ட்களும் கூறிவரும் நிலையில்... அடுத் தது என்ன? இதை டி.கே.ரங்கராஜனிடமே கேட்டோம்.

''கலைஞர் எழுதியிருக்கும் கவிதை என்னைப் பற்றியதுதான் என்பது பலருடைய யூகம். அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த நிமிடம் வரையில் கலைஞருடன் நிஜமான நட்போடுதான் பழக ஆசைப்படுகிறேன். ரெட் டணைக்கு நான் சென்றது, நான் சார்ந்திருக்கும் இயக்கம் கொடுத்த பணி. இயக்கத்தின் கொள்கைகளைச் சொல்வதுதானே அதைச் சார்ந்த ஒரு தொண்டனுக்கு அழகு!'' என்றார் பிடிகொடுக்காமல்!''நீங்கள் முன்பொருமுறை கருணாநிதியை 'ஆயிரத்தில் ஒருவன்' என்று பாராட்டிப் பேசினீர்களாமே... அதைத்தான் கவிதையில் நினைவூட்டி, காரியம் முடிந்ததும் இப்போது தடம் மாறுவதாகக் கோபப் பட்டிருக்கிறாரா?'' என்றோம்.

''நான் கலைஞரை பல சமயங்களில் பலவாறாகப் புகழ்ந்தும் பாராட்டியும் பேசியிருக்கிறேன். இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமென்றால், எங்கள் மாநில செயலாளர் வரதராஜனைத் தொடர்பு கொள்ளுங்கள்'' என்றார் அவர்.

வரதராஜனை நாம் சந்தித்தோம்.

''இடதுசாரிகளை கடிந்து கொள்கிறோம் என்ற பெயரில் பொது மேடையில் ஆற்காட்டார் பேசியிருக்கும் விஷயங்கள் அபத்தம். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் நாங்கள் சீனாவுக்கு பரிந்து பேசுகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். சர்வதேச அணுசக்தி கழகத்தில் சீனா எடுத்திருக்கும் நிலைப்பாடு என்ன தெரியுமா? இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு ஆதரவான நிலைதான். ஆனால், நாங்கள் அதே ஒப்பந்தம் கூடாது என்கிறோம். அணுசக்தி ஒப்பந்தத்தை ஒரு மாநிலத்தின் மின்துறை அமைச்சரே சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதையெல்லாம்விட மதவாத கட்சியான

பி.ஜே.பி.க்கு நாங்கள் ஆதரவாக செயல்பட்டோம் என்று ஆற்காட்டார் கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது'' என்ற வரதராஜனிடம்...

''தமிழகத்தில் தி.மு.க-வுடன் கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளதா?'' என்றோம்.

''காங்கிரஸயீடனோ, பி.ஜே.பி-யுடனோ கூட்டணி வைத்திருக்கும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிகள் அணி வகுப்பில் காங்கிரஸில் தி.மு.க. நீடிக்கும்வரை எங்களோடு அது சேர முடியாது. சேதுகால்வாய் திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள், மீனவர் பிரச்னைக்காக போராடும் கட்சிகள் என எங்கள் கொள்கைகளுக்கு உடன்படும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்''

''சரி, 'முரசொலி' கவிதை உங்கள் கட்சியின் ரங்கராஜன் பற்றியதா?''

''அரசியல் ஞானம் உள்ளவர்களுக்கு அது ரங்கராஜனைப் பற்றியது என்றுதான் தோன்றுகிறது. எங்கள் தோழர்கள் எல்லோ ருமே அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. தன்னுடன் தோழமையாக இருக்கும் கட்சிகள் பற்றி எடுத்தேன்... கவிழ்த்தேன் என்று பேசுவதும், விமரிசிப்பதும் புதிதல்ல. பத்து தினங்களுக்கு முன்பு நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ரங்கராஜனும் கலைஞரோடு கலந்து கொண்ட போது தேசபக்தி மிகுந்த கட்சியாக மார்க்சிஸ்ட் அவருக்கு தெரிந்திருக்கிறது. ரங்கராஜனுக்கு கொடுக் கப்பட்ட எம்.பி. பதவியைத்தான் 'பிச்சை' என்று வர்ணிக்கிறது அந்த கவிதை. மத்திய அரசுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம். அதனால்தான் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தது. அதில் தி.மு.க-வும் இடம்பெற்றது. அந்தக் கட்சியினர் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதை நாங்கள் போட்ட பிச்சை என்று ஒருபோதும் சொன்னது கிடை யாது. சொல்லவும் மாட்டோம்.அப்படியெல்லாம் கீழ்த்தரமாக பேச நாங்கள் தயாரில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்தபோது நாங்கள் ஆதரவு கொடுத்தோமே... அதையும்கூட பிச்சை போட்டதாக நாங்கள் சொல்ல மாட்டோம்!

ரங்கராஜனை 'அவாள்' என்ற வார்த்தையால் சாதிரீதியாக கேலி செய்யும் குணம் கலைஞருக்கு இருக்கலாமா? முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து கவிதை எழுதலாமா? மாநிலமெங்கும் இருந்து எங்கள் தொண்டர்கள் இந்தக் கவிதையைச் சுட்டிக் காட்டி உணர்ச்சி மேலிட விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் இதுபோன்ற நிகழ்வுகள் யாரையும் அழிவுப் பாதைக்குத்தான் இட்டுச் செல்லும்!'' என்று சொல்லி முடித்தபோது, வரதராஜன் முகத்தில் அளவில்லாத இறுக்கம் படர்ந்திருந்தது!

விகடன்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் முதல்வரின் கவிதை அத்தனை பேரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு விட்டது என்பது மட்டும் நிச்சயம். முதல்வரே முன்வந்து விளக்கினால்தான் உண்டு.

அறழை பேர்ந்தால் இப்படித்தான் பிதற்றுவார்களோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறழை பேர்ந்தால் இப்படித்தான் பிதற்றுவார்களோ ?

சரியாக சொன்னிங்க சிறி.

வயது போன நேரத்தில ஏதாவது ஆன்மிகம் சம்பந்தமான ஏதாவது பணிகளிலையோ அல்லது இருக்கும் பணத்தில் சாப்பிட வழியில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உணவளித்துக்கொண்டோ அல்லது தனது பேரப்பிள்ளைகளை கொஞ்சிக்கொண்டோ வீட்ட இருக்கலாம் தானே அதைவிட்டுட்டு இளையவர்களுக்கு அரசியலில் முன்னுரிமை என்று சொல்லிட்டு தான் போய் முதல்வர் பதவியில இருக்கிறார் இந்த வயதிலையும் :rolleyes::rolleyes: .போகும் போது நன்மைதான் செய்யாவிட்டாலும் மற்றவனிண்ட வயித்தில அடிச்சு வயித்தெரிச்சலை வாங்காமல் போங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கலைஞரின் கவிதை அரசியல் அநாகரிகம்!"

கலைஞர் முரசொலியில் எழுதிய ஒரு கவிதை ஏற்கெனவே ஆடிக்கொண்டிருக்கும் இடதுசாரிகள், தி.மு.க உறவுக்கு இன்னொரு அதிர்வேட்டு வைத்திருக்கிறது. போதாக்குறைக்கு இந்தக் கவிதைக்குப் பின் இடதுசாரிகளைக் குறிவைத்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசிய பேச்சும் சிவப்பு சட்டைக்காரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 19-ம்தேதி காலையில் முரசொலி நாளிதழைப் பார்த்தவர்களுக்கு பெரும்அதிர்ச்சி. அதில் கலைஞர் எழுதிய `நாய்கள் கூடச் சிரிக்குமய்யா!' என்ற கவிதையில், `காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன? அம்மவோ; காலைப் பிடிப்பதுதான் என்ன? என்ன? என்ன? உச்சிமுதல் உள்ளங்கால் வரை கடும் விஷம் மொண்டு கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின் நன்றியில்லா உள்ளம்...? என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளில் கலைஞர் யாரையோ வாங்குவாங்கென்று வாங்கியிருந்தார். `யாரைப் பற்றி கலைஞர் இப்படி எழுதியிருக்கிறார்? ஒருவேளை அவராக இருக்குமோ? இவராக இருக்குமோ?' என்றெல்லாம் பலர் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தநிலையில், `அவர் யார்?' என்ற புதிர் சில மணிநேரங்களில் அவிழ்ந்து விட்டது. கலைஞர் அவரது கவிதையில் கனல் கக்கியிருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான டி.கே.ரங்கராஜனுக்கு எதிராகத்தான்.

கலைஞர் எதற்காக இந்த அளவுக்குக் கவிதையில் கொந்தளித்தார்...? அண்மைக்காலமாக சில மேடைகளில் தி.மு.க.வை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தாராம் டி.கே.ஆர்.

`கலைஞரின் சட்டமன்ற உரைகள்' நூல் வெளியீட்டு விழாவில் மேடையைவிட்டு இறங்கிவரும்போது ஏதோ கிண்டலடித்தாராம்.

இரட்டணையில் விவசாயக் கூலிப் பிரச்னையில் அரசு மீது இவர் வைத்த கடும் விமர்சனம், ஒரு வார இதழில் வெளியான இவருடைய பேட்டி... இவற்றையெல்லாம் விட முக்கியமாக, மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதில் இவர் நடத்துவதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தை எல்லாமும் இணைந்துதான் இந்தக் கவிதை அர்ச்சனைக்கு வழி வகுத்துவிட்டது என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி நாம் டி.கே.ரங்கராஜனைத் தொடர்பு கொண்டு அவரிடம் பேச முயன்றோம். அவரோ, "நான் இதைப் பற்றி எதுவும் பேச முடியாது. எங்கள் மாநிலச் செயலாளரிடம் பேசுங்கள்'' என்று சொல்லிவிட, நாம் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனை பி.ஆர் நினைவகத்தில் சந்தித்துப் பேசினோம்.

கலைஞர் அவரது கவிதையில், `கொடிய பூச்சி, கொட்டும் தேள்கூட்டம்' என்றும், `அவாள் நமக்கு எப்போதும் சவால்தான்' என்றெல்லாம் ஆவேசமாக எழுதிய வரிகள், உங்கள் கட்சி எம்.பி.யான டி.கே.ரங்கராஜனைக் குறிவைத்துத்தான்' என அரசியல் வட்டாராங்களில் பலத்த பேச்சு அடிபடுகிறதே? என்ற கேள்வியுடன் ஆரம்பித்தோம்.

"கட்சிகளுக்குள் கருத்து பேதம், முரண்பாடு வருவது இயல்புதான். அதை ஜனநாயகவழியில் தீர்த்துக் கொள்ளும் அணுகுமுறை தற்போது தி.மு.க.வில் இல்லை என்றே சொல்ல வேண்டும். தோழர் ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினர் ஆனதைப் பற்றி கலைஞரின் கவிதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறது. 96 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றிருக்கக்கூடிய தி.மு.க ஆட்சியமைத்ததற்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். மத்தியில்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மார்க்சிஸ்ட், இடதுசாரிகள் ஆதரவோடுதான் நான்கு ஆண்டு ஆட்சி நடத்தியது. இவற்றில் அமைச்சர் பதவியை தி.மு.க பெற்றிருக்கிறது. அதை `மார்க்சிஸ்ட்டுகள், இடதுசாரிகள் போட்ட பிச்சை' என்று நாங்கள் சொல்லவில்லை. கட்சிகளின் வலுவுக்குத் தக்கவாறு பதவிகளைப் பகிர்ந்து கொள்கிறோம். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் தோழர் டி.கே.ரங்கராஜனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும்.

சமீபத்தில் இடதுசாரிகளுக்கும், தி.மு.க.வுக்கும் ஏற்பட்ட அரசியல் முரண்பாட்டை நேரடியாகச் சந்திப்பதற்குப் பதிலாக மறைமுகமாக அவதூறு செய்யும் அந்தக் கவிதை, அரசியல் ரீதியாக சரியானதல்ல. அதேபோல 20-ம்தேதி மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசிய பேச்சும் அத்தகைய தொனியில்தான் இருக்கிறது.

ஆற்காடு வீராசாமி அவரது பேச்சில், `பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்தது பெரும் குற்றம். இடதுசாரிகள் காணாமல் போய்விடுவார்கள்' என்றெல்லாம் பேசியிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் (இடதுசாரிகள்) கொடுத்த ஆதரவின் விளைவாக காங்கிரஸ் அரசு `குறைந்தபட்ச செயல்திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்றார்கள். இன்று இதை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி நிற்கிறார்கள். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தம் இல்லை.

எனவே எங்கள் மீது தி.மு.க. சொல்லும் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது. நாங்கள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்திருக்கிறோம். இதில் இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி, தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபுநாயுடு, கர்நாடகாவின் தேவகவுடா கட்சி உள்பட பத்து கட்சிகளை இணைத்திருக்கிறோம். பல்வேறு கட்சிகளை மூன்றாவது அணிக்குக் கொண்டு வரும் எங்கள் முயற்சி வெற்றி பெறும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் அணி மகத்தான வெற்றி பெறும். நாங்கள் காணாமல் போய் விடுவோம் என்று ஆற்காடு வீராசாமி கூறுவது பகல் கனவு.''

மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, மத்திய அரசிடம் பேசிய கலைஞர், `இடதுசாரிகளிடமிருந்து நாம் நீண்ட தூரம் விலகிப் போய்விடக்கூடாது' என நிலைமையை உணர்ந்து பேசினார். ஆனால், மாநிலத்தில் இடதுசாரிகள் கூட்டணியை உடைக்கும் வண்ணம் தி.மு.க தலைமை செயல்படும் அளவுக்கு இப்போது என்ன நடந்துவிட்டது?

``தி.மு.க.வைப் பொறுத்தவரை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இன்றைய அரசியல் நிலையில் அவர்கள் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு `அணுசக்தி ஒப்பந்தம் ஆபத்தான நிலையில் இருக்கிறது' என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கலைஞர் கடிதமே எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் எங்கள் கைகளிலும் இருக்கிறது. இன்று ஏதோ ஒரு நிலையில் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்ததை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களோடு அவர்களுக்கு உறவில்லை என்று சொன்னதற்குப் பிறகு பதறிப்போய், `மத்தியில் எடுக்கும் முடிவுக்கு தமிழக காங்கிரஸார் எப்படி பொறுப்பாக முடியும்?' என்று அவர் சம்பந்தம் இல்லாமல் விளக்கமளித்திருக்கிறார்.

அமெரிக்க ஒப்பந்தத்திற்கு தமிழக காங்கிரஸின் ஓட்டும் துணைபோகிறது. ஆகவே, தமிழ்நாடு நிலை தனி, வட மாநில நிலை தனி என்று பேசி கலைஞர் தன்னுடைய நிலையைத் தானே தாழ்த்திக் கொள்கிறார். இதை அவரிடமும் நாங்கள் சொன்னோம். `இத்தகைய நிலையில் இருந்து விடுபடுங்கள். மூன்றாவது அணிக்கு வாருங்கள்' என்றோம். இப்போது சி.பி.ஐ, சி.பி.எம், ஃபார்வர்டு பிளாக் தமிழ்நாட்டில் புயலெனெப் பிரசாரத்தை நடத்தி வருகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கவிதையின் மூலமும், ஆற்காடு வீராசாமி மூலமும் பதிலளிப்பது அந்தக் கட்சிக்குப் பலன் தராது. தி.மு.கவில் உள்ள உறுப்பினர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்த அனுபவம் கடந்த காலத்திலும் எங்களுக்கு உண்டு. கலைஞர் அரசியல் அனுபவம் பெற்றவர். நெளிவு சுழிவாக அரசியல் பணியாற்றுவதில் தெளிவு பெற்றவர் என்ற பார்வை எங்களுக்கு உண்டு. ஆனால், சில சமயங்களில் அரசியலில் கோபதாபங்களுக்கும் அவர் ஆட்படுகிறார் என்பதுதான் உண்மை. `தோழர் சங்கரய்யா செயலாளராக இருக்கும் வரை மார்க்சிஸ்ட்டோடு உறவு வைக்க மாட்டேன்' என்றார் கலைஞர். இதன்பிறகு மார்க்சிஸ்ட்டோடு விழுந்து விழுந்து உறவு வைத்தார். அவருக்கு எவ்வாறான கோபம் வரும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு ஜாதியரீதியான உணர்வோடு செயல்படும் போக்கும் கலைஞரிடம் இருக்கிறது. `அவாள்', `இவாள்' என்ற கோஷத்தோடு அரசியலை அணுகுவது, `அவாளில்' அரசியலில் உயர்ந்து இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட்டுகள், சோசலிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள் என்று பிரித்துப் பார்ப்பதும் ஆபத்தான போக்கு. இந்தப் போக்கைத்தான் தி.மு.க. அவ்வப்போது எடுக்கிறது. தொகுதி உடன்பாடு என்பது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தைக் கணக்கிட்டு, ஒரு கட்சியின் வாக்கை இன்னொரு கட்சிக்கு கொடுப்பது, பெரிய கட்சியின் வாக்குகளை சிறிய கட்சிகளுக்குக் கொடுப்பது என்பதுதான். அதுதான் தொகுதி உடன்பாட்டின் தாத்பரியம். அதைவிடுத்து `நான் போட்டேன் பிச்சை' என்று சொல்வது அரசியலில் அநாகரிகமானது.''

தி.மு.க. தலைமையின் இந்த அணுகுமுறை கூட்டணி முறிவுக்கு அச்சாரம் போட்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

``பொதுவாக கூட்டணிகள் ஏற்படுவதும், பிரிந்து செல்வதும் ஜனநாயகத்திற்குத் தேவையானதுதான். கொள்கை முரண்பாடு வரும்போது பிரிந்து செல்கிறோம். பிரியும்போதும் ஜனநாயகத்தன்மையோடு பிரிய வேண்டும். கருத்துக்களை கருத்துக்களாகப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக அவதூறுகளைச் சொல்வது என்பது தி.மு.க.வின் பாணியாக இருக்கிறது. இது சரியானது அல்ல. ஜனநாயகத்தில் இது செல்லு படியாகாது. இந்தக் கூட்டணி தொடர்வது சாத்தியமில்லை. காங்கிரஸ், பி.ஜே.பி.யோடு சேரும் கட்சிகளோடும் எங்களுக்கு உறவில்லை. கூட்டணி அல்லது தொகுதி உடன்பாட்டில் இருந்து விலகுவது என்பது இயற்கையான ஒன்று. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம்.''

``கலைஞருக்குக் கைவந்த கலை''

கலைஞரின் `நாய்கள் கூட சிரிக்குமய்யா' கவிதை குறித்து சில அரசியல் கட்சித் தலைவர்களிடம் கருத்துக் கேட்டோம்.

ம.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்: `` `அவாள்' கவிதையில் கலைஞர் குறிவைத்திருப்பது, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனை. தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தகுதியினால் கலைஞர், முதல்வர் ஆகவில்லை. பொறுப்புக்கு வந்தபின்பு, இப்படி அநாகரிகமாக விமர்சனம் செய்து தன்னுடைய முதல்வர் பதவியைச் சிறுமைப்படுத்தியிருக்கிறார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.