Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூசாரிகளை நோக்கி ஒரு அறைகூவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் போன்றவர்கள் கடவுள் இல்லையென்ற உண்மை நிலையை நிறுவ தமது செயற்பாடுகளைப் பயன்படுத்த வேண்டுவே தவிர.. இதற்கெல்லாம் அல்ல.. என ஒரு பட்சி சொன்னதை சொன்னேன்..

  • Replies 81
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் காவடி அவர்களே அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்று எனக்கு வழங்கிக் கெளரவித்த செங்கள்ளு சாத்திரி என்கிற பெயரை நீங்கள் பாவித்து என்னை அவமானப் படுத்தி விட்டீர்கள் எனவே துஸ்ட பவ :wub: சத்யாநாஸ் போனேதோ :unsure:

:lol::):unsure::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா சும்மா சண்டை பிடிச்சுக் கொண்டு....

இதில் பாருங்கோ, 0.17 விநாடிகளில்.... திராவிடக்குஞ்சுகள் ராமசாமிக்கு தீச்சட்டி எடுக்கினமாம்.

அதிலும் பாருங்கோ கருணாநிதிக்கு சமூகநீதிக்கான விருது. எந்தப் பல்கலைகழகத்தில் கற்று, டாக்குத்தர் பட்டம் பெற்றாரோ தெரியாது. ஆனால் தினகரன் பத்திரிகை கொழுத்தியதிலும், அதற்கு அவர் எடுத்த சட்டநடவடிக்கைகளுக்காகவும், நிச்சயம் சமூகநீதிக்கான விருது கொடுத்துத் தான் ஆகணும்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்களில் ஊறிக் கிடக்கும் மூடநம்பிக்கைகள் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் பிற்போக்கான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எந்த கருத்து முரண்பாடும் தேவையில்லை. ஆனால் ஈழ சமூகத்தில் அதற்காக பெரியாரைத் தூக்கிப் பிடிக்கத் தேவையில்லை.

இன்று தமிழகத்தில் பெரியார் சார்ந்த கட்சிகளும் கேவலம் கெட்ட அரசியல் கழிசடைக் கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.. இந்த நிலையில் பெரியார் என்றாலே இப்போ தமிழக அரசியல் கட்சிகளின் நினைவுதான் வருகிறது.

தவிரவும் ஈழ சமூகத்திற்கு அப்படியே பொருந்தாத விதத்தில்தான் பெரியாரின் பரப்புரைகள் அமைந்திருந்தன. மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில குடை பிடிக்க முடியாது என்று சொல்லுவார்கள். அது மாதிரித்தான்.

பெரியாரை நாங்கள் முன்னிறுத்துவது பெரியண்ணன்களின் பெரியண்ணன் மனப்பாங்கை மேலும் வளர்க்கும். நம் வழி தனி வழியல்லவா.

புரட்சிகளின் மூலம் தனிமனித விளம்பர யுக்தி தேடாத வகையில் நமது பரப்புரைகள் அமையட்டும். ஆனால் தமிழகத்தில் பெரியார் இப்பொழுது விளம்பர மொடலாகத்தான் பயன்படுகிறார்.

தமிழகத்தின் அரசியல் கலாசார வழி செல்வது நமது தனித்துவத்தை குலைக்கும் ஒரு செயல். நமக்கது தேவையற்றது.

பெரியாரைத் தவிர்த்து விட்டு

ஈழத்தின் சமூக புறச் சூழல்களுக்கேற்ப

ஈழத்தின் சமூகக் கட்டமைவுகளுக்கு ஏற்ப

பகுத்தறிவு சமூக விழிப்புணர்ச்சி முதலான பரப்புரைகளை மேற்கொள்ளுங்கள். இப்போதையதை விட அதிகளவானோரை அடைய முடியும்.

  • தொடங்கியவர்

தந்தை பெரியாரை நாம் முன்னிறுத்தி எமது போராட்டத்தை செய்வது இல்லை. எமது எதிர்தரப்பினர்தான் தேவையின்றி பெரியாரின் பெயரை இழுத்து விவாதத்தை திசை திருப்புவார்கள்.

பெரியார் மீது எமக்கு பற்று உண்டு. அவர் குறித்த வாசிப்பு எமக்கு உண்டு. இந்த நிலையில் அவர் பற்றிய தவறான அவதூறான கருத்துக்களை சிலர் சொல்கின்ற போது, அறிந்தவர்கள் என்ற வகையில் அதற்கான விளக்கத்தை நாம் கொடுக்கின்றோம். அவ்வளவுதான்.

வரலாற்றை உருவாக்கிய தலைவர்கள் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படக் கூடாது என்ற இயல்பான எண்ணம்தான் இதற்கு காரணம்.

மற்றயைபடி ஈழத் தமிழர்கள் மத்தியில் நாம் செய்யும் பரப்புரைக்கும் தந்தை பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தந்தை பெரியார் என்கின்ற ஒருவர் தோன்றியிராது விட்டாலும், நாம் இதை செய்திருப்போம்.

ஈழப் போராட்டம் உருவானதற்கு காரணம் சங்கிலியனோ, பண்டாரவன்னியனோ அல்ல. பேரினவாத அடக்குமுறைதான் அதற்கு காரணம்.

இனம் பற்றியும், மொழி பற்றியும், பண்பாடு பற்றியும் எமக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்ற போது, அவைகளை பிணைத்திருக்கும் சங்கிலிகளும் எமக்குத் தெரிகின்றன. ஆகவே அவற்றை எதிர்த்து நாம் போராடுகின்றோம்.

போராடுகின்ற போது உலகின் மற்ற நாடுகளில் இது போன்ற நடந்த போராட்டங்கள் பற்றி படிக்கின்றோம். தந்தை பெரியார் பற்றியும் அறிந்து கொள்கின்றோம். அவர் செய்த சாதனைகள் எண்ணி வியக்கின்றோம். மேலும் உத்வேகம் பெறுகின்றோம்.

இத்தனை இடர்களுக்கு மத்தியில் போராடுகின்ற விடுதலைப் புலிகளைப் பார்த்து எத்தனையோ விடுதலை இயக்கங்கள் உத்வேகம் பெற்றுப் போராடுகின்றன. அதற்காக அவர்கள் அந்த நாடுகளில் "பிரபாகரனை" பரப்புகிறார்கள் யாரும் சொல்வது இல்லை.

இதை சரியாக புரிந்து கொண்டாலே போதும்.

சபேசன் கூறியது மிகச் சரியானது.

இங்கே யாழ்க் களத்தில் எந்தத் தலைப்பிலும் பகுத்தறிவு மனித நேயம் சமூக நீதி என்று எழுதினாலும் அதற்கும் இராமசாமி நாத்தீகம் என்று எழுதுபவர்களே பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் ஒவ்வொரு கருதாடல்கலிலும் இழுப்பவர்கள்.இவர்களுக்குச் சொல்லப்படும் விடயம் முக்கியமல்ல எனெனில் இவை பற்றிய கருதியல் ரீதியான எதிர்வினை என்பது இவர்களால் ஆற்ற முடியாத ஒன்று.அதற்கு பதிலாக பெரியாரை கன்னடியன் இராமசாமி என்று அல்லது கருணானிதியை அவதூறு செய்துவிட்டால் சொல்லப்பட்ட கருதுக்கு எதிர்வினை ஆற்றி விட்டதாக நினைக்கிறார்கள்.

ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் ஒன்றாண சமூகப்பிரச்சினைகளும் இருக்கின்றன வேறு வேறானவையும் இருகின்றன.பூகோள ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் ஈழமும் தமிழ் நாடும் ஒரே பண்பாட்டுக் கலாச்சாரப் பிராந்தியங்களே.இந்து மதமும் பவுத்தமும் தென் இந்தியா வழியாகவே ஈழத்தை வந்தடைந்தன.ஆகவே இந்திய துணைக்கண்டத்தின் கலாச்சார பண்பாட்டு ஆளுமை என்பது எப்போதுமே ஈழத்தின் மேல் இருந்து கொண்டு தான் இருக்கும்.அதே நேரம் ஒரு தனித் தீவு என்னும் போது அதேற்கே உரிய தனித் தன்மைகளும் ஈழத்தில் இருக்கின்றன.

ஜேர்மனிரான கார்ல் மாக்சும் ருசியரான லெனினும் பொலிவியரானா சேயும் ஈழ விடுதலைப்போரில் செலுத்தும் தாக்கத்திப்போலவே பெரியாரும் திராவிட இயக்கமும் செலுத்தும் தாக்கம்.இந்தியாவில் இருந்து வந்த இந்து மதம் ஈழத்தில் செலுத்தும் தாக்கத்தைப் போலவே இவையும் தாக்கம் செலுத்துகின்றன.

இந்தக் கருதியல் ரீதியான் தாக்கத்தை வைத்துக்கொண்டு எவரும் பெரியார் தான் ஈழ விடுதலைப் போரை நாடாதுகிறார் என்று கூற முடியாது.மனிதனின் எல்லாப் போராட்டங்களுக்கும் இருக்கும் சமதர்மம் சமூக நீதி பெண் விடுதலை என இருக்கும் பொதுமை ஈழ விடுதலைப் போராட்டதுக்கும் இருக்கிறது.அதற்காக ஒரு போராட்டக் களத்தில் பாவிக்கப்பட்ட அதே போராட்ட முறைகள் ஈழத்தில் சரிப்பட்டு வராது.ஏனெனில் அடிப்படை முரண்பாடுகளும் சமூக உறவுகள் சமூக கட்டமைப்பு என்பவை மாறுபாடானவை.

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது சமதர்மத் தமீழீழம் என்பதை நோக்கியதாக இருப்பது.இதில் சமதர்மம் என்பது முக்கியமானது.இதில் சமூக நீதி பெண்களுக்கான சம உரிமை என எல்லாவும் வருகிறது.இது வரை உருவாக்கப்பட்ட தமீழச்சட்டங்களை அவதானிப்பவர்களுக்கு இது நன்கு புலப்படும்.

ஆகவே முன் ஒரு காலத்தில் வேறு ஒரு களத்தில் நடாத்தப்பட்ட பெரியாரின் திராவிட இயக்கத்தை எவரும் ஈழத்தில் பதியம் இட முயற்சிக்கவில்லை.மனித நேயம் உள்ள பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட ஒரு தமீழீழ தேசத்தை நோக்கியே ஈழ விடுதலைப் போரட்டம் செல்கிறது.பெரியாரின் இலக்கும் அதுவாகவே இருந்தது என்பதை பெரியாரை திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வரலாற்றை நுணுகிப் படித்தவர்கள் அறிவார்கள்.அவ்வாறு இல்லை என்றாலும் அது அவர் அவர் பார்வையைப் பொறுத்தது.திராவிட இயக்கம் இன்று அதன் இலக்கை இழந்து விட்டது.இவற்றில் இருந்தும் நாங்கள் எங்களுக்கான பாடங்களைப் பெறலாம்.

ஆகவே ஒரு விடயத்தைப் பற்றிக் கருதுக்களை எழுதும் போது கூடிய வரையில் அந்தத் தலைப்பை ஒட்டியதாக ஆக்கபூர்வமானதாக கருதுக்களை சிந்தித்து ஆரய்ந்து ஆதாரங்களுடன் எழுதினால் யாழ்களத்தில் ஆளாமாண கருத்தாடல்கலை நடாத்தலாம்.ஆனால் சிலருக்கு உடன் எதாவது எழுத வேண்டும் என்னும் நோக்கில் எழுதுவதால் அவை வெறும் அவதூறுகளாக மாறுகின்றன.

தயா,

ஈழத்தை சேர்ந்த பூசாரிகளை பார்ப்பனர்கள் என்று அழைக்க முடியாததன் காரணம் பற்றி அறியத் தந்திருக்கின்றேன்.

இவர்களை பிராமணர்கள் என்றும் அழைக்க முடியாது. பிரம்மம் என்பது மந்திரம் அல்ல. பிரம்மம் என்பது "மெய்ப்பொருள்" பற்றிய ஒரு தத்துவம் என்று சொல்வார்கள். அந்த மெய்ப்பொருளை தலையில் இருந்து பிறந்ததால் இவர்கள்அறிந்து கொண்டார்கள். அதனால் இவர்கள் பிராமணர்களாம். இவர்களை பிராமணர்கள் என்று அழைப்பதன் மூலம் நாம் இந்தப் "புருடாவை" ஏற்றுக் கொண்டவர்கள் ஆகி விடுவோம்.

நான் பிரம்மம் என்பது மந்திரம் எண்டு சொன்னதாக திரித்து இருக்கிறீர்கள்... அது தங்களது வழமையானதுதான் .. எனவே விட்டு விடலாம்...!!

பிராமணன் தான் அதாவது பிரம்மம் அறிந்தவர்தான் மந்திரங்களை கடவுளை நோக்கி சொல்ல தகுதியானவன் எனும் கருத்தை அவர்கள் கொண்டதால் பிரமம் அறிந்தவனே மந்திரம் கற்று கொள்கிறான்... அதனால் அவர்களின் அர்ச்சகர்கள் எல்லாம் பிராமணர்கள் ஆகிறார்கள்...

பிராமணனை பூசாரி என்பது மிகவும் பிழையானது....!!! அர்ச்சனை செய்பவனை அர்ச்சகர் எண்றும், பூசிப்பரை பூசகர் எண்றும், சவ அடக்கம் செய்ய முன் முறை செய்பவரை சீகண்டி எண்டு எல்லாம் தமிழர் முறைகளில் அழைப்பர்...

வட இந்தியாவில் இருந்து வந்து சமஸ்கிருத முறைகளில் அர்ச்சனை செய்தவர்களை தமிழர் ஐயர் எண்டு அழைக்கிறார்கள்... பிராமணர் என்பது இல்லை...

நீங்கள் போட்டிக்கு அழைப்பது பூசாரியா..?? ஐயரா...???

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.