"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94B வடக்கு மற்றும் மேற்கு இலங்கையின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண தீபகற்பத்தில், நாக மக்கள் பாம்பு வழிபாட்டாளர்களாக, இலங்கையின் நான்கு பழங்குடியின மக்களில் ஒருவராக, நாகதீபம் அல்லது நாகநாட்டை ஆண்டனர். தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கேரளப் பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வழங்குகின்றன. மணிமேகலை மற்றும் மகாவம்சம் மற்றும் ராமாயணத்தின் படி, நாகர்கள் [Nagas] இலங்கையில் இயக்கர் [யக்கா], இராட்சதர் [ரக்ஷ] மற்றும் தேவர் [Yakkha, Raksha and Deva] இடையே வாழ்ந்தனர் என்று கூறுகிறது. மேலும் வரலாற்று மற்றும் இலக்கிய ஆதாரங்கள், இலங்கையில் உள்ள நாகதீபா (நாக நாடு), அதாவது, இன்றைய யாழ்ப்பாண தீபகற்பம், மன்னார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாகர் மக்கள் மேலாதிக்க ஆட்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் கடல் பயணம், வர்த்தகம் மற்றும் பாம்பு வழிபாட்டிற்கு பெயர் பெற்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக இருந்தனர். அத்துடன், மணிமேகலை, மகாவம்சம், ராமாயணம் மற்றும் புராணங்கள் போன்ற வரலாற்று மற்றும் இலக்கிய ஆதாரங்கள், நாகதீபம் அவர்களின் தாயகம் மற்றும் இராச்சியம் என்பதைக் குறிக்கின்றன. பண்டைய தமிழ் சங்க இலக்கியங்கள் நாக ஆட்சியாளர்களை "நாக மன்னர்கள்" (நாகர் அரசர்கள்) என்று குறிப்பிடுகின்றன, அவர்கள் தென்னிந்தியாவின் தமிழ் இராச்சியங்களுடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர்.மற்ற பழங்குடி குழுக்கள் (இயக்கர்கள், இராட்சதர்கள் மற்றும் தேவர்கள்) இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தனர், ஆனால் நாகதீபத்தை ஆட்சி செய்யவில்லை என்பதே உண்மையாகும். உதாரணமாக, இயக்கர்கள் (யக்கர்) முக்கியமாக இலங்கையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்பட்டனர். அதேபோல, இந்து புராணங்களில் இராட்சதர்கள் (ராட்சதர்) ராவணனின் இராச்சியத்துடன் (லங்கா) தொடர்புடையவர்கள், இது மத்திய அல்லது தெற்கு பிராந்தியத்தில் இருந்திருக்கலாம்? தேவர்கள் (தேவர்) மிகவும் புராணக் கதைகள், பெரும்பாலும் ஆளும் பழங்குடியினருடன் அல்ல, ஆன்மீக அல்லது தெய்வீக மனிதர்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. இலங்கையில் நாக ஆட்சிக்கான சான்றுகள் எவை என்று பார்த்தால், மகாவம்சத்தில் இரண்டு நாக மன்னர்களான குலோதரன் மற்றும் மகோதரன் [Chulodara and Mahodara] இடையே ஏற்பட்ட ஒரு சர்ச்சையைத் தீர்க்க பகவான் புத்தர் நாகதீபத்திற்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிடுவதையும், மணிமேகலையில் (ஒரு தமிழ் காவியம்) நாக நாட்டை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகக் குறிப்பிடுவதும், இது மேலும் இலங்கையில் அவர்களின் இருப்பைக் காட்டுவதும், தொல்பொருள் ரீதியாக, நாகர்கள் கருப்பொருள் கொண்ட சிற்பங்கள், நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்ற தொல்பொருள் சான்றுகள், இலங்கையின் வடக்கில் நாகர்கள் குறிப்பிடத்தக்க இருப்பையும் செல்வாக்கையும் கொண்டிருந்தனர் என்ற கூற்றை ஆதரிப்பதையும் கூறலாம். அதுமட்டும் அல்ல, ராமாயணத்தின் படி, இந்திரஜித், நாக மன்னன் சேஷாவின் (ஆதி ஷேஷா) மகள் சுலோச்சனாவை மணந்தார் என்று கூறுகிறது. இந்த புராணக்கதை கிமு 500 முதல் கிமு 100 வரைக்குள் எழுதப்பட்டது என்று அறிய வருகிறது. இருப்பினும், சில அறிஞர்கள் அதன் வாய்வழி மரபுகள் மிகவும் முன்னதாகவே, ஒருவேளை கிமு 1500 அல்லது அதற்கு முந்தையதாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இது நாகர்களின் பழமையை எடுத்துக் கூறுகிறது. மேலும் வரலாற்றுப் பதிவுகளும் மகாவம்சம் போன்ற பௌத்த நாளேடுகளும், நாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பல மன்னர்கள் இராசரட்டை [அனுராதபுர] இராச்சியத்தை வெவ்வேறு காலங்களில் ஆட்சி செய்ததைக் குறிக்கின்றன. இது பண்டைய இலங்கையில் நாகர்களின் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் எடுத்துக் காட்டுகிறது. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரும் "பண்டைய சிலோன்" [H. Parker, a British historian and author of "Ancient Ceylon" ] ஆசிரியருமான எச். பார்க்கர், நாகாவை கேரள நாயர்களின் ஒரு கிளையாகக் கருதுகிறார். கலித்தொகை போன்ற ஆரம்பகால தமிழ் இலக்கியப் படைப்புகள், மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர் மற்றும் பரதவர் [Maravar, Eyinar, Oliar, Oviar, Aruvalur and Parathavar] போன்ற பல நாக பழங்குடியினர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் தமிழ் சங்க காலத்தில், பாண்டிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்து அங்கு வாழத் தொடங்கியதாகக் குறிப்பிடுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. நாக மக்கள் இலங்கையின் வடக்கு பகுதியை நாக நாடு (நாகர்நாடு) என்று அழைக்கப்பட்ட ஒரு செழிப்பான நாக அரசு உருவாக்கினர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது. இதற்கு வரலாற்று ஆதாரங்ககளாக, கி.மு 200 ஆண்டு தமிழ் பிரம்மி கல்வெட்டுகளில் நாக நகரம் (Naka Nakar) என்ற இடம் குறிப்பிடப்படுகிறது. இது இன்றைய கதிரமலை (கந்தரோடை, யாழ்ப்பாணம்) ஆக இருக்கலாம்? மேலும் கண்டி யாழ்ப்பாண நெடுஞ்சாலையில் இயக்கச்சி சந்தியில் இருந்து நேரே குறுக்காக 6கி மீ தூரத்தில் அமைந்துள்ள உடுத்துறை இயக்கர், நாகர் காலத்து தொண்மையை கொண்ட ஊர்களில் ஒன்றாக திகழ்கிறது. உடுத்துறையில் கி .பி 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, பழைய செம்பு தமிழி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவும் “நாக பூமி” (Naka Bumi) என்று கூறுகிறது. கிரேக்க பூகோளவியலாளர் தொலெமி அல்லது தாலமி (Ptolemy, 1ம் நூற்றாண்டு கி பி) தனது இலங்கைக்கான வரைபடத்தில் நாகதிபோய் (Nagadiboi) என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக, சிலப்பதிகாரம் (1ம் நூற்றாண்டு கி பி) மற்றும் மணிமேகலை (3ம் நூற்றாண்டு கி பி) ஆகிய நூல்கள் நாக நாடு பற்றி குறிப்பிடுகின்றன. இது சோழர், பாண்டியர், சேரர் இராச்சியங்களையும் விட செழிப்பான நாக அரசு என இங்கு கூறப்படுகிறது. மணிமேகலையில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மணிபல்லவத்தை [Manipallavam in the Jaffna Peninsula / நைனாதீவு?] ஆட்சி செய்த, நாக மன்னன் வலை வாணன் ( the great Naga king Valai Vanan) மற்றும் அவரது ராணி வாசமயிலை (queen Vasamayilai) பெருமையுடன் நாக நாட்டை, தமிழ் புத்த சமய வழிபாட்டில் [Tamil Buddhism] ஆட்சி செய்தனர் என்றும் இவர்களின் மகள் பில்லி வலை (princess Pilli Valai ), முதன்மைக் சோழர், அரசன் கிள்ளிவளவன் அல்லது கிள்ளி வளவன் உடன் தொடர்பு வைத்திருந்தார் [princess Pilli Valai had a liaison at the islet with the early Chola king Killivalavan; out of this union was the prince Tondai Eelam Thiraiyar born, who historians note was the early progenitor of the Pallava Dynasty] என்றும், இவர்களது மகன் தொண்டை ஈழம் திரையர் (Tondai Eelam Thiraiyar) தான் பல்லவர் வம்சத்தின் முன்னோராக விளங்கினார் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அத்துடன், தொலெமி அல்லது தாலமி (150 கி பி ) சோழ நாட்டில் (உரையூர்) சோர்னாகோஸ் (Sornagos) என்ற நாக அரசர் ஆட்சி செய்ததை பதிவு செய்துள்ளார் [Ptolemy (150 CE) recorded that a king named Sornagos, a Naga descendant, ruled from the early Chola capital Uraiyur.]. நாக நாட்டின் தலைநகரான கந்தரோடை (கதிரமலை), காவேரிப்பூம் பட்டினத்திற்கு ஒப்பிடப்பட்ட செழிப்பான நகரமாக இருந்தது என்றும் நாக நாட்டின் முக்கியமான பகுதிககளாக, மாந்தை (வடமேற்கு இலங்கை), திருகோணமலை (வடகிழக்கு இலங்கை), மகாவில்லாச்சி (மத்திய இலங்கை) இருந்தன எனவும் அறிய வருகிறது [Mantai (Northwest), Trincomalee (Northeast), and Mahavillachi (Central Sri Lanka)]. நாகர்கள் கடல் வர்த்தகத்திலும், வேளாண்மையிலும் சிறந்தவர்கள் என்பதுடன் மீனவர் சமூகத்தினராக, (Karaiyar tribe) தமிழ் நாட்டின் சோழ மண்டலக் கடற்கரை பகுதியிலும் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியிலும் [Coromandel Coast (Tamil Nadu) and Sri Lankan coasts] தொடக்கத்திலேயே குடியேறியவர்கள் ஆவார்கள். மாந்தை நகரில் உள்ள கேதீஸ்வரம் கோயில் நாகர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இதிலிருந்து நாகர்கள் இலங்கையில் மிகவும் சக்திவாய்ந்த குடி என்றும், அவர்கள் தமிழகத்துடனும், உலக வர்த்தகத்துடனும் உறவுபட்டிருந்தனர் என்பதும் தெரிய வருகிறது. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 95 தொடரும் / Will follow துளி/DROP: 2006 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94B https://www.facebook.com/groups/978753388866632/posts/33382691734712711/?
By
kandiah Thillaivinayagalingam · 15 minutes ago 15 min
Archived
This topic is now archived and is closed to further replies.