Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் படையினருக்கு அதிக சேதங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன

Featured Replies

படையினருக்கு அதிக சேதங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் 57ஆவது மற்றும் 58 ஆவது டிவிசன்களால் வன்னேரி, நாச்சிக்குடா, அக்கராயன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுகள் முறியடிக்கப்பட்டதில் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. 30 படையினரின் சடலங்களையும் ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றிய சம்பவம் அவர்களுக்குப் பெரும் உளவியல் உற்சாகமாக அமைந்திருக்கும்.

இந்தத் தாக்குதல்களில் 56 படையினர் கொல்லப்பட்டு 120 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றதாக படைத்தரப்புடன் நெருங்கிய தரப்புகள் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் புலிகள் தரப்பு இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருந்தது.

இதற்குப் பின்னர் படையினர் இந்தக் களமுனைகளில் பாரிய நகர்வு முயற்சிகளில் ஈடுபடாமல் முடங்கிப் போயிருந்தனர். அடுத்தடுத்த கட்டங்களும் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் வேகம் உக்கிரமானதாக அமைந்தால், அது படையினருக்கு உளவியல் ரீதியாகச் சோர்வை ஏற்படுத்தி நகர்வுகளின் நோக்கத்தைச் சிதைத்துவிடும் என்று படைத்தரப்பு கருதியிருந்தது. இதனால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் களமுனையில் அமைதி நிலவியது.

மீண்டும் இந்த முன்னரங்க நெடுங்கோட்டில் கடந்தவாரம் சண்டைகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.

அக்கராயன் நோக்கி மேற்கொள்ளப்பட்ட நகர்வில் பாரிய இழப்புக்களைச் சந்தித்த படைத்தரப்பு இம்முறை புதிய உத்தியொன்றைக் கையாண்டது.

புலிகளின் எதிர்ப்பு அதிகமாக உள்ள அக்கராயன் நோக்கி நகராமல் அதற்கு கிழக்காக உள்ள திருமுறிகண்டி அக்கராயன் வீதியின் முதலாம், இரண்டாம் கட்டைப் பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியது. இது ஏ9 வீதிக்கு மிக நெருக்கமான பகுதியாகும்.

முதலாவது விசேட படைப்பிரிவைச் சேர்ந்த கொமாண்டோக்களும், லெப்.கேணல் சேனாரத் பண்டார தலைமையிலான 572 பிரிகேட்டைச் சேர்ந்த 3 பற்றாலியன்களுமாக மொத்தம் நான்கு பற்றாலியன்களைச் சேர்ந்த படையினர் இந்த நகர்வில் ஈடுபட்டனர்.

அக்கராயன் களமுனையில் புலிகளின் எதிர்ப்பு தீவிரமாக உள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மேலதிக விசேட படைப்பிரிவு கொமாண்டோக்களை அப்பகுதிக்கு நகர்த்துமாறு விசேட படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் நிர்மல் தர்மரத்னவுக்கு பணித்திருந்தார்.

அக்கராயனுக்கு கிளிநொச்சியில் இருந்து கிடை த்துவரும் விநியோகங்களைத் தடுப்பது, ஏ9 வீதியில் திருமுறிகண்டியைக் கைப்பற்றி போக்குவரத்தை தடை செய்வது ஆகிய நோக்கங்களைக் கொண்டே படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அக்கராயன் திருமுறிகண்டி வீதிக்குப் படையினர் இரகசியமாக முன்னேறிய போதும் புலிகள் தொடுத்த கடும் பதில் தாக்குதல்களால் அவர்களால் அங்கு நிலைகொள்ளமுடியாது போனது. இந்தத் தாக்குதலின் போது புலிகள் "சி.எஸ்.' எனப்படும் வாயு தாக்குதலை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

புலிகளின் வாயுத் தாக்குதலை அடுத்து பல படையினர் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.

இந்தச் சமரில் படையினர் தரப்பில் 22 பேர் கொல்லப்பட்டு 53 இற்கும் அதிகமானோர் காயமுற்றதாகப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் 4 படையினரின் சடலங்கள் 6 ஆர்.பி.ஜி.கள், 9 எல்.எம்.ஜி.கள், 20 ரீ56 துப்பாக்கிகள், 3 லோ எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் கைப்பற்றியதாகப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், விசேட படைப்பிரிவைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 10 படையினர் கொல்லப்பட்டு 24 பேர் காயமுற்றதாக இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெ?வித்தன.

இதன்பின்னர் கடந்த புதன்கிழமை காலை 9.30 மணி?தல் பிற்பகல் 1.30 மணிவரை படையினர் நாச்சிக்குடாவுக்கு வடக்குகிழக்காக 11கி.மீ தொலைவில் உள்ள கரம்பைக்குளம் நோக்கிய ஒரு நகர்வைச் செய்தனர். இதன்போது கரம்பைக்குளத்தின் ஒன்றரை கி.மீ நீளமான குளக்கட்டை கைப்பற்றியதாகப் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

58 ஆவது டிவிசன் துருப்புகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை தாம் முறியடித்து விட்டதாகப் புலிகள் தெரிவித்தனர்.

மறுநாளும் இதேபகுதியில் மோதல்கள் நீடித்தன. இரண்டு நாள் மோதல்களிலும் படையினர் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டு 39 பேர் காயமுற்றதாக படைத்தரப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதேவேளை புலிகள்தரப்பு தாம் 25 படையினரைக் கொன்று 85 பேரைக் காயப்படுத்தியதாகவும், 2 ஆர்.பி.ஜி.கள், ஒரு எல்.எம்.ஜி, 6 டீ56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், பெருமளவு வெடிபொருட்களையும், 2 படையினரின் சடலங்களையும் கைப்பற்றி யதாகவும் அறிவித்தனர்.

பிரிகேடியர் சவீந்திர டி சில்வா தலைமையிலான 58 ஆவது டிவிசனின் இந்த நகர்வு மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாச்சிக்குடாவைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் புலிகள் அமைத்திருக்கின்ற பலமான காப்பரண் வரிசையை உடைத்து உட்புக முடியாத நிலையில் பக்கவாட்டாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதாவது, வன்னேரி களமுனையில் ஏற்கெனவே முன்னேறும் முயற்சிகளில் தோல்வியுற்ற நிலையில் இப்போது கரம்பைக்குளம் பக்கமாக உள்நுழைந்து மணியர்குளம், பல்லவராயன்கட்டு, கிராஞ்சி பகுதிகளைக் கைப்பற்றி நாச்சிக்குடாவில் நிலை கொண்டிருக்கின்ற புலிகளுக்குப் பிடரி அடி கொடுக்க படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இதே உத்தியைத்தான் படைத்தரப்பு விடத்தல்தீவு, அடம்பன், இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் பகுதிகளில் கையாண்டிருந்தது. ஆனால், அப்போது புலிகளிடம் இருந்து வந்த எதிர்ப்புகளைவிட நாச்சிக்குடாவில் படைத்தரப்பு அதிக எதிர்ப்பை புலிகளிடம் இருந்து சந்திக்க வேண்டியிருப்பதுடன் இழப்புகளும் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன.

வன்னிவிளாங்குளம் கள?னையிலும் புலிகள் வாயுத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இது விஷ வாயு என்று முன்னர் சில தகவல் வெளியான போதும் அது சர்வதேச ரீதியில் கிளர்ச்சி தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் சி.எஸ். என்ற கண்ணீர் புகைக்குண்டுதான் என்பதை படைத்தரப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அத்துடன் புலிகளின் எத்தகைய விஷவாயுத் தாக்குதலையும் முறியடிக்கின்ற வகையில் படையினருக்கு விஷவாயு காப்பு முகமூடிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை விமானப்படையின் கிபிர், மிக்29, எப்7 போன்ற ஜெட் போர்விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதால் பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் பற்றிய செய்திகளுக்கு அரசதரப்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுவும் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் இடம், புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடம், பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியின் உயர்தொழில்நுட்ப கணினி மத்திய நிலையம், வான் பாதுகாப்பு பொறிமுறை, ஆயுத தளபாட உற்பத்தி நிலையம் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தப்ப ட்டதான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

கடந்த வருட இறுதிப் பகுதியில் இதுபோன்று தான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவி டத்தை விரைவில் அழித்து விடுவதாக சொல்லப்பட்டது. பின்னர் நடந்த ஒரு தாக்குதலில் அவர் காயமடைந்து விட்டதாகவும், இறந்திருக்கலாம் என்றும் பரவலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், பின்னர் அவை வெறும் பொய்கள் என்பதை புலிகளின் தலைவர் பிரபாகரன் பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் நிரூபித்தன. இப்போது மீண்டும் ஒரு உளவியல் போர் உத்தியாக பிரபாகரனின் மறைவிடத்தை கண்டறிந்துதான் தாக்குவதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த முப்பதாண்டுகளில் இத்தகைய கருத்துக்கள் எண்ணுக்கணக்கற்ற தடவைகள், எத்தனையோ பேரின் வாய்களில் இருந்து வந்திருக்கின்றன. புலிகளின் விமானங்கள் ஒரு அடி கூடப் பறக்க முடியாது என்று முன்னர் சொல்லப்பட்டது. அதன் பின்னர்தான் திருகோணமலையி லும் வவுனியாவிலும் புலிகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

வன்னிப் போர்க்களங்களில் போர் உக்கிரமடைந்திருக்கிறது. தொண்டர் நிறுவனங்கள் வெளியேறிய பின்னர் படைத்தரப்பின் தாக்குதல்கள் தீவிரம டைந்து வருகிறது. அதேவேளை புலிகளும் தற்போது மோசமான எதிர்த்தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருக் கின்றனர்.

இந்தப் போரில் வெல்லப் போகும் தரப்பு எது என்பதே முக்கிய கேள்வியாக உருவெடுத்து வருகிறது. ஏனெனில் இப் போரில் வெல்லப் போகும் தரப்புக்கு போரினால் கிடைக்கப் போகும் வெற்றியைவிட அரசியல் ரீதியாகக் கிடைக்கும் வெற்றியின் பரிமாணம் பெரியதாகவே இருக்கும் என்பதேயாகும்.

http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-34-04

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கி தலைப்பை மாற்றுங்கள். வன்னியில் மக்களும் போராளிகளும் பல நெருக்கடிகளில் மத்தியில் வாழ்ந்து கொண்டு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போராட்டக் களத்தை விட்டு ஓடி வந்து அசைலம் அடித்துவிட்டு.. சன் ரீவிக்கு முன்னாள் இருந்து ரசிக்கும் அசத்தப்போவது யாரு போன்ற நிலையல்ல வன்னிப் போர்க்கள நிலை. ஒவ்வொரு நிமிடமும் உயிர்ப்பலி கொடுத்து நடத்தப்படும் சுதந்திர வேள்வி அது.

எனவே தயவுசெய்து.. அதன் பெறுமதி உணர்ந்து செயற்படுங்கள்..! :o

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கி நடந்து கொண்டிருப்பது நாலாம் கட்ட ஈழப்போர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

செய்திகேற்ப தலைப்பை இட்டு இணையுங்கோ அசத்த போவது யாரு என்ன உது? ஏதாவது நிகழ்ச்சியா? :o:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.