Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னரங்க போர்முனையில் முகமூடிகள் அறிமுகம்- சுபத்ரா

Featured Replies

வன்னிப் போர் அரங்கில் கடந்த 15 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி முன்னேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 57 ஆவது டிவிசன் படையினர் திடீரென கண் எரிச்சல், உடல் அரிப்பு, மூச்சுத் திணறல், வாந்தி, குமட்டல் போன்ற உபாதைகளைத் திடீரென எதிர்கொண்டனர்.

சில படையினர் மயங்கியும் வீழ்ந்தனர்.

ஒரு புறத்தில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. புலிகளின் ஆட்டிலறி மற்றும் மோட்டார் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்க, அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட படையினர் வாகனம் மூலமும் ஹெலிகொப்டர் மூலமும் கொண்டு செல்லப்பட்டு அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அக்கராயன் களமுனையில் இருந்து 6 படையினரும், மறுநாள் காலை வன்னிவிளாங்குளம் களமுனையில் இருந்து 12 படையினரும் இவ்வாறு திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டனர். இவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் காணப்பட்டது.

அன்று இரவு நடந்த மோதலை அடுத்து 22 பேர் கொண்ட இராணுவ அணியொன்றுடனான தொடர்புகள் அற்றுப் போயின.

இவர்கள் புலிகளின் தாக்குதலில் சிக்கியிருக்கலாம் என்றே நம்பப்பட்ட போதும் மறுநாள் காலை அவர்கள் தமது படைப்பிரிவுடன் இணைந்து கொண்டனர். அவர்களும் அதேவகையான பாதிப்புக்குள்ளாகியிருந்தன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் புலிகள் அவ்வாறு பாவித்திருந்தால், இது தான் சான்ஸ் எண்டு இலங்கை அரசு போட்டோக்களைப் போட்டு உலகம் முழுக்க தம்பட்டம் அடித்திருக்கும் புலிகள் ஜெனீவா உடன்படிக்கைகளுக்கு எதிராக இரசாயன ஆயுதம் பாவிக்கிறார்கள் எண்டு.

உலக அங்கீகாரத்தை நோக்கி காத்திருக்கும் புலிகள் இப்படியான ஒரு காரியத்தை ஒரு போதும் செய்யப் போவதில்லை.

இது இலங்கை இராணுவம் எதிர் காலத்தில் தாங்கள் பாவிப்பதற்காக செய்த சூழ்ச்சி.

ஆய்வுகள் எண்ட பேரில் சுபத்திராவின் விளக்கெண்ணெய் தனமான ஆய்வுகள் எங்களுக்கு நாங்களே மண் அள்ளிப்போடுவதற்கு ஒப்பானது.

எரிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ள சிறிலங்கா வான்படை

வன்னிப்பெரு நிலப்பரப்பின் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடந்த இரண்டு மாதங்களாக சிறிலங்கா படை பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருகையில் சிறிலங்கா வான்படை புதிய வகை எரிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

கடந்த இரண்டு மாதங்களாக சிறிலங்கா படை நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்து வருகின்றது.

சிறிலங்கா படையினரின் முன்நகர்வுகள் மந்த நிலையை அடைந்து வருவதனைத் தொடர்ந்து அரசு புதிய வகையான திரவ எரிகுண்டுகளை வான்படையின் வானூர்திகள் மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் வீசத் தொடங்கியுள்ளது.

சிறிலங்கா வான்படை கடந்த வாரம் இத்தகைய குண்டுகளை கிளிநொச்சி மற்றும் அக்கராயன் களமுனைகளை அண்டிய பகுதிகளில் வீசியுள்ளது.

இக்குண்டுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

வானூர்தியில் இருந்து வீசப்படும் இக்குண்டுகள் தரையில் மோதி வெடித்ததும் பாரிய நெருப்புக்கோளங்களை உருவாக்குவதுடன் வெடிக்கும் சுற்றாடலில் இருந்து வாயுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது.

எனவேஇ அப்பகுதியில் வசிப்பவர்கள் மூச்சுத்திணறி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

நான்காவது ஈழப்போரில் சிறிலங்கா வான்படை பதுங்குகுழிகளை தகர்க்கும் கனரக குண்டுகளை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது எரிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

அக்கராயன் மற்றும் வவுனிக்குளம் பகுதிகளில் முன்நகர்வில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் சி.எஸ் எனப்படும் நச்சுவாயுவை பயன்படுத்தியதாக அரசு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்ட சில நாட்களில் எரிகுண்டுகளை வன்னிப்பெரு நிலப்பரப்பின் மீது வான்படை வீசத் தொடங்கியுள்ளதானது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றது.

நன்றி புதினம்

இவர்கள் தங்கள் வியாபாரத்துக்காக இப்படியான தவறான செய்திகளை கொடுக்கின்றார்கள். பரப்பிலும் இப்படியான செய்தி வந்திருக்கின்றது.

இவர்களிடம் ஒரு கேள்வி புலிகள் சி.எஸ் வாயுவை பாவித்ததாக வைத்துக்கோள்வோம். அவர்கள் அதை பாவிக்க தொடங்கினால் அதை பாவித்து முழு இராணுவத்தினரையும் வன்னியை விட்டு வெளியேற்றியிருக்க வேண்டுமல்லவா? 20,30 இராணுவத்தினரை வெளியேற்ற வாயு தாக்குதலை செய்வார்களா? இந்த செய்திகளை பரப்புபவர்கள் அரச கைக்கூலிகளாக இருக்கவேண்டும்.

புலம்பெயர்ந்த மக்கள் இயல்பானவர்கள். அவர்களை போராட்டத்தின்பால் நம்பிக்கையோடு வைத்திருக்க வெல்ல முடியும் எண்டு காட்ட எழுத வேணும்.

சிறீலங்காவின் பிரச்சாரத்தை முறையடிக்க புலிகள் தோற்கவில்லை பலமாக இருக்கிறார்கள் என்று சிங்களமக்களிற்கு அறிவிக்க எழுத வேணும்.

சர்வதேசம் புலிகள் பலமானவர்கள் என்று அறிந்து கொள்ள புலிகளின் திறமைகளை பார்த்து பயப்பட அங்கீகாரத்தை வழங்குவதற்கு எழுத வேணும்.

சிறீலங்கா அரசை அச்சுறுத்தி தீர்வுத்திட்டத்துக்கு இறங்கி கொண்டு வர எழுத வேணும்.

இதுகளுக்காகத்தான் புலிகளே இப்படியான எழுத்துக்களை வரவேற்று ஆதரிக்கிறார்கள். தேசிய தலமை இப்படியான எழுத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதை நிறுத்த முயற்சித்திருப்பார்கள் தானே? புலிகளால் முடியாதது என்று ஒண்டில்லை.

அருஸ் ரிசி போன்றவர்கள் எல்லாம் தாயகத்தில் மிகவும் வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர்கள். இதை புலம்பெயர்ந்த ஊடகங்களை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேணும்.

நாங்கள் எல்லாம் தீவிரமாய் செயல் ஆற்றும் போது அதுகளை திசைதிருப்புறது மாதிரி கட்டுரைகள் எழுதுற அருசும், ரிசியும் தான் இண்டைக்கு தமிழீழம் மலராமல் இருக்க முக்கிய காரணம் எண்டு நான் நினைக்கிறன்.....

எங்கட செயற்பாடுகளை பாத்து பின்னாலை வாற சனம் எல்லாம் உவர்கள் எழுதும் கருத்துக்களை பாத்து பேசாமல் இருந்துடூதுகள்....!! :)

யோவ் அவனவன் இந்தா நாளைக்கு விடிஞ்சா தமிழீழம் எண்டுறான் அதுக்குள் என்னiயா குழப்புறழியள் ! போதாக்குறைக்கு எங்கட 23 கூத்தமைப்புக்காரரும் ஐ.நா வில நாளைக்கு கொடியேற்ற விழாவுக்கு வேட்டியோட போய் நிக்கினம் இந்த நேரத்தில என்னiயா குழப்புறியள்.

இதுகளுக்காகத்தான் புலிகளே இப்படியான எழுத்துக்களை வரவேற்று ஆதரிக்கிறார்கள். தேசிய தலமை இப்படியான எழுத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதை நிறுத்த முயற்சித்திருப்பார்கள் தானே? புலிகளால் முடியாதது என்று ஒண்டில்லை.

வேடிக்கையாக எழுதுகிறீர்களா ?????

அவர் எழுதியதிலும் பார்க்க இது தான் புலிகளுக்கு இழுக்கானது

புலிகள் எதிர்க்கவில்லை என்றால் ஆதரிப்பதாக அர்ததமா ?

அவர்கள் ஏற்கனவே சொல்லி விட்டார்கள் எல்லாவற்றுக்கும் பதில்ளிப்பதென்றால் அதுவே தங்களது வேலையாகி விடும் என்று

அருஸ் தெய்வீகன் ரிசி மற்றும் தமிழ்நாதம் நடத்திற மாமா போன்றவர்கள்; தேசிய தலமையுடன் நேரடியாக தொடர்புகளை பேணுபவர்கள். அது மாத்திரமல்ல தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி உடனுக்குடன் கள நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப தேசிய தலைவரின் ஆசியுடன் அவரது தீர்க்க தரிசனமான திட்டமிடலுக்கு ஏற்ப சர்வதேசம், புலம்பெயர்ந்த தமிழர்கள், சிங்களவர்கள், சிறீலங்கா அரசு என்று பல தரப்பு நோக்கி பல்முனை பிரச்சார யுத்தத்தை மேற்கொள்கிறார்கள்.

இவர்கள் தான் புலிகளின் 5 ஆவது படையின் முன்னணிக் கட்டளைத்தளபதிகள் என்றால் மிகையாகாது.

புலிகள் இந்த 5 ஆவது படையணின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக நேரடியாக சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதன் அர்த்தம் அவர்கள் அதை எதிர்க்கிறார்கள் என்றோ அல்லது விரும்பவில்லை என்றோ அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அருஸ் தெய்வீகன் ரிசி மற்றும் தமிழ்நாதம் நடத்திற மாமா போன்றவர்கள்; தேசிய தலமையுடன் நேரடியாக தொடர்புகளை பேணுபவர்கள். அது மாத்திரமல்ல தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி உடனுக்குடன் கள நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப தேசிய தலைவரின் ஆசியுடன் அவரது தீர்க்க தரிசனமான திட்டமிடலுக்கு ஏற்ப சர்வதேசம், புலம்பெயர்ந்த தமிழர்கள், சிங்களவர்கள், சிறீலங்கா அரசு என்று பல தரப்பு நோக்கி பல்முனை பிரச்சார யுத்தத்தை மேற்கொள்கிறார்கள்.

இவர்கள் தான் புலிகளின் 5 ஆவது படையின் முன்னணிக் கட்டளைத்தளபதிகள் என்றால் மிகையாகாது.

புலிகள் இந்த 5 ஆவது படையணின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக நேரடியாக சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதன் அர்த்தம் அவர்கள் அதை எதிர்க்கிறார்கள் என்றோ அல்லது விரும்பவில்லை என்றோ அல்ல.

அவர்களை விட இவ்வளவு தகவல்கள் தெரிந்த குறுக்............அவர்கள்தான்

தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி உடனுக்குடன் கள நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப தேசிய தலைவரின் ஆசியுடன் அவரது தீர்க்க தரிசனமான திட்டமிடலுக்கு ஏற்ப சர்வதேசம்இ புலம்பெயர்ந்த தமிழர்கள்இ சிங்களவர்கள்இ சிறீலங்கா அரசு என்று பல தரப்பு நோக்கி பல்முனை பிரச்சார யுத்தத்தை மேற்கொள்கின்றார் என்பது எனது அசைக்கமுடியாத வாதம்...............???

  • கருத்துக்கள உறவுகள்

சேவல் கூவி உலகம் விடிவதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.