Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

Featured Replies

தமிழின் தற்போதைய வரிவடிவம்(script) மற்ற எந்த இந்திய மொழிகளையும் விட எளிமையானது. அதிகம் நேர்க்கோடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாத கூட்டெழுத்துக்கள் கொண்ட எழுத்து முறை ஒரு மொழியை எளிமையாக்குகிறது. இந்தக் கூறுகளை ரோமன் வரிவடிவங்களில் காணலாம். ஒரு மொழியின் எதிர்காலம் வெறும் காகிதத்தில் எழுதப்படுவது, அச்சிடப்படுவது என்பதிலிருந்து, வாழ்க்கைக்காக பன்மொழியும் கற்கவேண்டிய மாணவர்களும் எழுத, வாசிக்க எளிதாக இருத்தல் என்ற நிகழ்கால, இயந்திரத்தால் வாசித்துணரப்படுதல் என்ற எதிர்கால, (தூரத்திலில்லை, மிக சமீபத்தில்தான் உள்ளது) தேவைகளுக்கு ஈடு கொடுப்பதில் உள்ளது. வரிவடிவத்தின் எளிமை இத்தகைய வளர்ச்சிக்கு ஒரு மொழியைத் தயாராக்குகிறது.

ஓஹோ, இன்னொரு பெரியாரெழுத்து சமாசாரம் பேச வந்துவிட்டாரா இந்த ஆள்? என்று ஒரேயடியாக ஓடிப் போக வேண்டாம். மொழி என்பது அதன் எழுத்தல்ல. எழுத்து நாம் அணியும் ஆடையைப் போன்றதே. மொழியின் ஒலிவடிவம் தான் உள்ளே இருக்கும் உடல். உடலிலே உறையும் உயிர், மனதிலே ஓடும் சிந்தனை ஆகியவற்றை வேர்ச்சொற்களுக்கும் இலக்கணக்கூறுகளுக்கும் ஒப்பிடலாம்.

நாம் நம் ஆடையின் பாணியைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதைப் போல நம் தமிழ் மொழியே நூற்றாண்டுகளாக எப்படி தன் ஆடையை மாற்றிக்கொண்டுள்ளது என்று கீழே உள்ள படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

alpha_evolution1.jpg

alpha_evolution2.jpg

பழங்காலத்தில் படிப்படியாக தொடர்ந்து நிகழ்ந்த மாற்றங்கள், அரசு, அதிகாரம், கல்விமுறை ஆகியவை ஒரு கட்டுக்குள் வந்தபின் ஆட்சியதிகாரம் உள்ளவர்களாலேயே செய்யமுடியும் என்று ஆகிவிட்டது. இப்படியான ஒரு ஆடை மாற்றம் கடைசியாக நடந்தது 1978-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள் நள்ளிரவில் பிறப்பித்த ஆணையால் நடந்தது.

அந்த ஆணையால் மாற்றியமைக்கப்பட்ட எழுத்துமுறையால் தமிழ் மாணவர்களுக்கும், அச்சுக் கோர்ப்பவர்களுக்கும், தட்டச்சு செய்பவர்களுக்கும் சிரமம் குறைந்தது. அவற்றின் முந்தைய வடிவங்களும், மாற்றியமைக்கப்பட்ட வடிவங்களும் கீழே:

first_reform.gif

தமிழில் 247 எழுத்துக்கள் (கிரந்தம் தவிர்த்து) என்பது நமக்குத்தெரியும், யோசித்துப் பாருங்கள், இந்த ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தனி வரிவடிவம் இருக்குமானால் கணினி விசைப் பலகையில் (ரோமன் வழியில் அல்லாமல்) உள்ளிட ஒரு விசைப்பலகை எவ்வளவு பெரிதாய் இருக்கவேண்டும்? நல்லவேளையாக அப்படியில்லை. உயிர்மெய் எழுத்துக்கள் பெரும்பாலும் கூட்டெழுத்துக்களாக இருப்பதால், 247க்குப் பதிலாக 100க்கும் குறைவான தனித்தனி வரிவடிவங்களாலேயே குறிக்க முடிந்தது. இருந்தாலும் 26+26=52 மட்டுமே உள்ள ஆங்கிலத்தோடெல்லாம் போட்டியிட இது இன்னும் எளிமைப்படுத்த முடிந்தால் நல்லதுதானே.

எப்படி எளிமைப்படுத்த முடியும்?

உயிர் 12-ம் மெய் 18-ம் ஆயுதம் ஒன்றும்தான் அடிப்படை வடிவங்கள். மற்றவை எல்லாமே இவற்றிலிருந்து வந்தவையே. ஆங்கிலம் போல உயிரையும் மெய்யையும் தனித்தனியே எழுதாமல், நாம் மெய்யெழுத்துடன் கீற்றுகள்(glyphs) சேர்த்து உயிர்மெய்யாக்கி எழுதுகிறோம். இப்படியாக, தேவைப்படும் தனித்தனி வடிவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிகிறது. இந்தக் கீற்றுகள் எவை?

glyphs.jpg

மெய்யெழுத்துடன் கீற்றுகள் சேர்க்கும்போது ஒரு சில உயிர்மெய்யழுத்துக்கள் மட்டும் அவற்றின் மெய்யெழுத்தின் முன்பிருந்த வடிவம் சிதைக்கப்பட்டே கீற்றுகளை ஏற்றுக்கொண்டன. முதல் படத்தில் பழைய வடிவங்களாகக் கொடுக்கப்பட்ட மெய்யெழுத்தைப் பார்த்தால் நான் சொல்வது புலப்படும். ஆகவே வரிவடிவங்களைக் குறைக்கவும் வேண்டும், ஆனால் கீற்றுகளைக் கொண்டு அமைந்த நம் மொழியின் சிறப்பும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஏதுவாக அந்த 1978 சீர்திருத்தம் அமைந்தது.

ஆனாலும் இன்னும் ஒரு 24 எழுத்துக்கள், இந்த முன்னேற்றத்துக்கு மாறாக இருக்கின்றன. அவைதான் உகர, ஊகார மெய்யெழுத்துக்கள். இன்னும் இவற்றில் பலவும் வெறுமனே கீற்றுகளைச் செர்த்துக்கொள்ளாமல் தன் மூல மெய்யெழுத்தைச் சிதைத்தே எழுதப்படுகின்றன. கீழே பார்க்கலாம்:

ukarams.jpg

தமிழின் 247-36=215 எழுத்துக்களுக்கும் 12 உயிர், +1 ஆய்தம், +18 மெய் (புள்ளியில்லாத வடிவம்) + 10 குறியீடுகள் ஆக வெறும் 41 வடிவங்களில் அடக்கிவிட முடிகிறபோது, இந்த 36 உயிர்மெய் எழுத்துக்களுக்காக ஒரு 36 தனி வடிவங்களை வீணாக்குவது தவிர்க்கப்பட வேண்டியதே. அதாவது கிட்டத்தட்ட பாதி வடிவங்கள் இந்த இரு குழுக்களுக்கே செலவாகின்றன.

இவற்றையும் இரு கீற்றுகள் கொண்டு குறிக்கமுடிந்தால், மொத்தம் 41+2=43 வடிவங்களில் 247-ஐயும் குறிக்கமுடியும். இதனால் விளையும் பயன்கள்:

ஆங்கிலப் படிப்பு வாழ்க்கைக்கு அவசியமாகிப் போன காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இரண்டாம் மொழியாகவாவது நம் பிள்ளைகள் பிழையறத் தமிழ் கற்றாலே அடுத்த தலைமுறைக்கும் தமிழ் முன்னெடுத்துச் செல்லப்படும். ஏற்கனவே எக்கச்சக்கமாக சுமை ஏற்றிவிட்ட கல்வியமைப்பில் இயன்ற அளவு மொழியை எளிமைப்படுத்தல் குழந்தைகளின் ஆர்வத்தை ஈடுபாட்டை அதிகரிக்கும். 12, 7 வயதுக் குழந்தைகளின் தந்தையாக நான் இதை அனுபவத்தில் உணர்ந்தே இருக்கிறேன்.

வரிவடிவ எழுத்துணரி(OCR-Optical Character Recognition) போன்ற நுட்பங்கள் பிழையின்றி அச்சில்/கையெழுத்தில் உள்ளதை வாசிப்பது எத்தனைக்கெத்தனை தனிவடிவங்கள் குறைவோ, எத்தனைக்கெத்தனை கூட்டெழுத்துக்களை ஒன்றுக்கொன்று ஒட்டாத எழுத்துக்கூறுகள் கொண்டு அமைக்கமுடிகிறதோ, அத்தனை எளிது, பிழையற்று அமைக்கக்கூடியது. இன்று அச்சிடும் கணினி நாளை நம் எழுத்தை வாசிக்கவும் போகிறது, அதற்கு நாம் நம் மொழியைத் தயார் செய்யவேண்டாமா?

எனவே உகர ஊகார கூட்டெழுத்துக்களின் தற்போதைய வடிவத்தை சீர்திருத்தி, அவற்றுக்கும் தனிக் கீற்றுகள் கொண்டு அமைத்து நம் மொழியைக் கையாளுவதை எளிமைப்படுத்துவோம். இது சம்பந்தமாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அமைத்த தமிழ்வளர்ச்சி மன்றம் என்ற உயர்மட்டக்குழு ஏற்கனவே தன் ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறது. அந்த அறிக்கையின்மேல் இன்னும் அரசு அறிவிப்பு வராமல் இருக்கிறது. பலரும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வலியுறுத்துவதன் மூலம் நல்ல முடிவைத் தமிழக அரசு விரைவில் எடுக்க ஆவன செய்வோம்.

--------------------------------------------------------------------------------

சமீபத்தில் மறைந்த, தமிழ்வளச்சிக்கழகம் அமைப்பின் செயலாளர், இந்த சீர்திருத்தங்களை வலியுறுத்தியவர், டாக்டர் கொடுமுடி சண்முகன் அவர்கள் நினைவாக, எழுதப்பட்டது.

இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களும் படங்களும் மேற்சொன்ன டாக்டர் கொடுமுடி சண்முகன் அவர்களின் கட்டுரையிலிருந்தும், யுனிவர்சிட்டி அஃப் டெக்சாஸ், டிபார்ட்மென்ட் அஃப் ஆசியன் ஸ்டடீஸ்-ஐச் சேர்ந்த பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தயாரித்த தமிழ் கற்போருக்குக்கான கையேட்டிலிருந்தும் நன்றியுடன் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

எழுதிய நாள்: 27 மார்ச், 2005

நன்றி - காசி

  • தொடங்கியவர்

இந்தப் பொருளில் அமைந்த அவரின் தமிழ் இணையம் 2003 கட்டுரையின் பிடிஎஃப் வடிவம் இங்கே.

http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf

தமிழ் கற்போருக்குக்கான கையேடு

http://link.lanic.utexas.edu/asnic/radhakr...lscripttoc.html

  • 1 year later...

தமிழ் எழுத்துக்களின் வடிவம் எவ்வாறு காலத்துக்கு காலம் மாறியியுள்ளதினை ஆறியக்கூடியதாக உள்ளது. தெரியாத விடயத்தினை இணைத்த மதனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துக்கள் 'அ,ஆ' வடிவங்கள் முன்பு வேறு வடிவங்களாக இருந்ததா?. எனக்கு ஒரு சந்தேகம், பழையகாலத்துக் கல்வெட்டுக்களின் படங்களினை அகழ்வாரச்சி செய்பவர்கள் வெளியிட்டு இருந்தார்கள். அதில் 'அ','ஆ' இப்பொழுது உள்ளமாதிரித்தான் இருந்தது என நினைக்கிறேன். அல்லது நான் பிழையாகப்பார்த்திட்டேனோ? :? :? :?

  • கருத்துக்கள உறவுகள்

நாம் நம் ஆடையின் பாணியைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதைப் போல

மதன் எழுதியது

நம்மவர் கடவுளையே மாற்றி கொண்டு இருக்கிறார்கள் உதாரணம்

மதமற்றுமிருந்தவன்,காவல் தெய்வங்கள்,வைதீகம்,பெளத்தம்(

புத்தன் நீங்கள் மனித சாமிமாரைப்பற்றி நிறைய அறிந்து வைத்து இருக்கிறியள் போல இருக்கிறது. மனித சாமியாராகுவதற்கு எங்கபோய் விண்ணப்பப்படிவம் எடுக்க வேணும் என்று ஒருக்கா சொல்லுவீங்களா? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணப்பம் ஒன்று தேவையில்லை சில தகுதிகள் தேவை அவையாவன குடும்பி,கையடக்க தொலைபேசி,தமிழ் மொழி தெரியாமல் இருக்க வேண்டும்,அந்நிய மொழியில்(இந்திய மொழிகளில்) அரைகுறையாக பஜனை பாடவேண்டும்,மற்றும் சில வித்தைகள்,

மு.கு :

வெளிநாடுகளில் பக்த கூட்டங்களை சேர்க்க வேண்டும்,மற்றும் வெளிநாடு செல்ல கடவு சீட்டு

நன்றி புத்தன் அவர்களே. வியாபாரம் சூடு பிடித்தால் உங்களையும் சேர்த்துக்கொள்வது பற்றி சிந்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ராசா எனக்கு சிட்னியில் கிளையை தந்து போடு ராசா நான் நல்லா கிந்தியில் நல்லா பஜனை பாடுவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.