Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஸ்வமடு-ஒட்டுசுட்டான் ஏ-10 வீதி யுத்த சூனியப் பிரதேசமாகப் பிரகடனம்

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு முதல் ஒட்டுசுட்டான் வரையிலான ஏ-10 வீதிப் பிரதேசம் யுத்த சூனியப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார்.

மன்னார் முதல் கிளிநொச்சி வரையில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் கிளிநொச்சிக்குக் கிழக்காக பரந்தன் - முல்லைத்தீவு வீதியான ஏ-10 வீதியிலுள்ள தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கே நகர்ந்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாகவே, இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு கருதி விஸ்மடு முதல் ஒட்டுசுட்டான் வரையிலான ஏ-10 வீதிப் பிரதேசத்தை யுத்த சூனியப் பிரதேசமாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி நகரை பாதுகாப்புப் படையினர் மேலும் அண்மித்திருப்பதாகவும், கிளிநொச்சியிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் படையினர் தற்போது நிலைகொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கிளிநொச்சி நகரிலிருந்து மூன்றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் அரசாங்கப் படைகள் நிலைகொண்டிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த பாதுகாப்புத் தரப்பினர் தற்போது படையினர் கிளிநொச்சியை நோக்கி மேலும் முன்னேறிச் சென்றிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் பல்வேறு தலைமையகக் கட்டடங்கள் மீது நடத்தப்பட்டுவரும் விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து கிளிநொச்சியில் எஞ்சியிருந்த பொதுமக்களும் தற்போது கிளிநொச்சியிலிருந்து கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்து வருவதாகத் தெரியவருகிறது.

புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் விமானப்படையினர் கிளிநொச்சியில் மேற்கொண்ட பல்வேறு தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைமைச் செயலகம், சமாதானச் செயலகம், காவல்துறை தலைமைச் செயலகம் உட்பட பல மையங்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

உணவுப்பொருள் விநியோகம்

இது இவ்விதமிருக்க, இடம்பெயர்ந்த மக்களுக்காக 51 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப் பொருள்களில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 22 லொறி உணவுப் பொருள்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த உணவுப் பொருள்கள் ஒரு வார காலத்துக்குப் போதுமானவை எனத் தெரிவித்த அவர், இவற்றைக் களஞ்சியப்படுத்தி மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 39 ஆயிரத்து 744 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 93 பேர் இடம்பெயர்ந்திருப்பதாகவும், அவர்களுக்கு வழங்குவதற்காக 307.2 மெற்றிக்தொன் உணவுப் பொருள்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இராணுவம் திடீரென யுத்த சூன்ய பிரதேசங்களை அறிவித்துள்ளது

[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 10:46.35 AM GMT +05:30 ]

வன்னியில் மக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பத்து சதுர கிலோமீற்றர் பரப்பை யுத்த சூனியப் பிரதேசமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒட்டுசுட்டான், விஸ்வமடு மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் இந்த யுத்த சூனியப் பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் எவ்விதத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படக் கூடாதென இராணுவம் அறிவித்துள்ளது. விஸ்வமடு, ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை புலிகளை மக்களிடம் இருந்து வடித்தெடுத்து அழிப்பதற்க்கான ஒரு யுக்தியே இது அத்தோடு உலக நாடுகளிடமும் சில மனிதநேயவாதிகளிடமும் நல்ல பெயர் ஒன்றையும் பெற்றுவிடலாம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

மக்களையும் விடுதலை புலிகளின் முக்கிய புள்ளிகளையும் ஒரு இடத்தில் குவித்து பின் பாரிய அளவில் விமான குண்டுதாக்குதல்களை நடத்த சிங்கள இனவாத அரசு பின்னும் சதிவலையே இது.

This is a trap installed by the Sinhala Fascist Regime of Sri Lanka!!!

Edited by vettri-vel

Sri Lanka army marches to edge of Tamil Tiger capital 04 Oct 2008 12:07:10 GMT

Source: Reuters

By C. Bryson Hull

COLOMBO, Oct 4 (Reuters) - Sri Lanka's military battled within 2 km (1 mile) of the separatist Tamil Tigers' headquarters town and allowed civilians to flee before a final siege, the army said on Saturday.

Battles raged just outside Kilinochchi, seat of the Tigers' quasi-government in the north of the Indian Ocean island, with Mi-24 attack helicopters rocketing a bunker line while ground troops fought insurgents, the military said.

"Troops are 2 km away from Kilinochchi town limits," military spokesman Brigadier Udaya Nanayakkara said. "People already have left Kilinochchi now so they are definitely east of the A9 road. That is why we have given them this safe passage."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.