Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லெப். கேனல் தவம் குறும்படவிழா - முடிவுகள் அறிவிப்பு

Featured Replies

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு

20.10.08

ஊடகச் செய்தி

லெப் கேனல் தவம் குறும்படவிழா பிரான்சு

Festival de court-metrage 2008 France

லெப். கேணல் தவம் நினைவாக தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு நடாத்திய குறும்படவிழா 19.10.08 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.

லெப். கேணல் தவம் திருவுருவப்படத்துக்கான ஈகைச்சுடரை போட்டியின் தலைமை நடுவர் திரு. ஆதவன் அவர்கள் ஏற்றி வைக்க மலர் மாலையினை கலைபண்பாட்டுக் கழக பிரான்சின் செயற்பாட்டாளர் திரு.பரா அவர்களும் அணிவித்தார். புலம்பெயர்ந்து இலங்கை இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் கலைஞர்களின் குறும்படங்கள் கலந்து கொண்ட இவ்விழாவின் நடுவர்களாக திரு. மாணி. நாகேஸ், திரு. கி.பி. அரவிந்தன், திரு. ஆதவன் ஆகியோர் பணியாற்றினர்.

இறுதிச் சுற்றுக்கு தெரிவான 08 படங்கள் இவ்விழாவி;ல் திரையிடப்பட்டதுடன் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படங்களுக்கும் பங்கு பற்றலுக்கான தவம் குறும்படவிழா நினைவுப் பரிசுகள் (Prix de participation) வழங்கப்பட்டது. மேலும் படங்களில் பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக

சிறந்த நடிகர் - (Meilleur interprète masculin)- சதாபிரணவன் - (நீ இடைவெளி நான்);

சிறந்த நடிகை - (Meilleur interprète feminin) செல்வி. ஆர்த்தி - (வலி)

சிறந்த ஒளிப்பதிவு - (Meilleur cinematographe) செல்வன் டெசுபன் - (நீ இடைவெளி நான்)

சிறந்த படத்தொகுப்பு - (Meilleur monteur) தி.அ றொபோட் - (மீளுதல்)

சிறந்த இயக்குநர் - (Meilleur metteur en scene) தி.அ றொபோட் - (மீளுதல்);

சிறந்த இசை - (Meilleur compositeur) திரு. கண்ணன் - (அம்மா)

சிறந்த திரைக்கதை - (Meilleur scenario)செல்வன் சதாபிரணவன் - (நீ இடைவெளி நான்)

சிறப்புப்பரிசு - (Prix special du jury) செல்வன். கோகுலன் - (நல்லதேர் வீணை)

ஆகிய சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

தலைமை நடுவரின் உரையினையும் பாரட்டுதலைத் தொடர்ந்து இறுதியாக தவம் குறும்படவிழாவின் முதல் மூன்று படங்களுக்குமான பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

சிறந்த 3வது படமாக தீ.வி.பி. கண்ணன் (பிரான்சு)

சிறந்த 2வது படமாக நீ இடைவெளி நான் (பிரான்சு)

லெப் கேணல் தவம் குறும்படவிழா 2008 இன் சிறந்த படமாக தி.அ றொபோட் அவர்கள் இயக்கிய மீளுதல் (பிரான்சு) தெரிவு செய்யப்பட்டது.

வெற்றி பெற்ற படங்களுக்கு தவம் நினைவு விருதும் பணப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுக்களுக்கு மத்தியில் விழா சிறப்பாக நிறைவு பெற்றது

நன்றி

  • தொடங்கியவர்

இக் குறும்படப் போட்டியில் பங்கேற்ற அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக - இக்குறும்பட விழாவில் பங்கேற்று வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். குறும்படவிழா நடந்த (முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்ட) அன்றைய நாள் நான் பிரான்சில் நின்ற போதும் - நிகழ்வுக்கு வருகை தரமுடியாமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும் அனைத்துப் படைப்பாளிகளையும் யாழ் களமூடாக வாழ்த்துவதோடு - மிகவும் பெருமையடைகிறேன்.

தென்னிந்தியச் சினிமாக் குப்பைகளை பிரதியெடுத்து - இது தான் எம்மவர் சினிமா என்று அரைவேக்காட்டுத் தனமாக விளம்பரப் படுத்துபவர்களுக்கு மத்தியில் - சமூகப் பொறுப்புணர்வோடு - புலம்பெயர்ந்த வாழ்வியலை அடையாளப்படுத்த எடுக்கிற உங்களது முயற்சிகள் மனமகிழ வைக்கிறது. உங்கள் போன்ற இளைஞர்களின் படைப்புக்கள் தான் எங்களது சினிமா. எங்களுக்கான சினிமா. எங்களை அடையாளப்படுத்தும் சினிமா. இந்த முயற்சி மறுபடியும் உறங்கிப் போகாமல் - தொடர்ந்தும் உற்சாகத்தோடு செயற்படுங்கள். சினிமாத் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களைத் தேடிப் படிப்பதோடு - அனுபவ ரீதியாக கற்றுக்கொண்ட விடயங்களையும் அடுத்த அடுத்த உங்களது முயற்சிகளில் பயன்படுத்துங்கள். ஒளி - ஒலி அமைப்பில் மேலும் கவனம் செலுத்துங்கள். எங்களது சினிமா உங்களூடாக ( உங்களைப் போன்ற இளைஞர்கள் ஊடாக) தான் வளரும் - உருப்பெறும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. வெல்வோம்.

அனைத்து கலைஞர்களிற்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். . . இன்னும் இன்னும் எம் தேசத்தின் வலியையும் மக்களின் வேதனைகளையும் நீங்கள் வெளிக்கொணரவேண்டும். . . உலகில் எங்கெல்லாம் தமிழன் வாழ்கின்றானோ அந்தந்த மொழிகளில் எம்மவர் படைப்புகள் பிறக்க வேண்டும். அதுதான் நாம் எமது ஈழத்திற்கு விடியலிற்கு செய்யப்போகும் பக்கபலம். .

தகவலை இணைத்த இளைஞனிற்கு நன்றிகள். . .

  • கருத்துக்கள உறவுகள்

குறும்படப் போட்டியில் பங்கேற்ற அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தகவலை இணைத்த இளைஞனிற்கு நன்றிகள்.

இந்தக் குறும்படங்களை இணையத்தில் பார்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நடிகர் - (ஆநடைடநரச iவெநசிசèவந அயளஉரடin)- சதாபிரணவன்

நானும் இவரின் சிலபடங்களைப்பார்த்திருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.