Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திண்டுவிட்டுச் சாகட்டும் தமிழினம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிக்குச் சோறு கொடு

இலங்கை வான்படைக்குக் குண்டு கொடு

திண்டுவிட்டுச் சாகட்டும் தமிழினம்

எண்டந்தப் பாவி சொன்னான்

முண்டப் பேதைகளாய்

இன்னும் முடங்கிக் கிடப்பாரோ

தமிழர் தமிழகத்தில் இல்லை

முண்டு பிடித்துத் தொடர்வாரோ

தம்போரை

பார்ப்பனியம் பணிவதில்லை

அது பணியவைத்து ஆழ்வதுவே

என்றந்தப்பாவி சொன்னான்

இன்னமும் பொறுத்திடுமோ

தமிழிதை

இந்து மகாசதியும்

பெளத்த மதவெறியும்

இணைந்து நின்று தமிழைக்

கொல்வமெனச் சொல்கிறதே

இன்னும் என்ன தூக்கம்

என்னருமைத் தமிழகமே

நீ பொங்கியெழுந்தாலன்றி

மழையில் நனைந்ததிலே

பயனுண்டோ எண்ணிப்பார்.

27.10.2008.

Edited by paradesi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதேசி!

நீங்கள் எந்த நாட்டவர் எண்டு எனக்குத் தெரியாது. நீங்கள் உபயோகித்த சில சொற்களின் அர்த்தங்கள் ஆபாசம் மிகுந்தவை. கவனித்தில எடுத்து மாத்துங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங் இந்துவா?? அல்லது பார்ப்பானியா... சைட் கைப்பில் நன்றாக நஞ்சைத் தூவுகின்றீர்கள்... நாங்கள் இது கண்டும் அமைதியாக இருப்பது எம் மண் மீது கொண்ட பாசத்தால் மட்டும் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்,

உங்களுக்கு நான் சில பெயர்களை மட்டும் ஞாபகப்படுத்துகிறேன். மிகுதியை நீங்கள் மட்டும் விளங்கிக்கொள்ளுங்கள்

- எம்.கே நாராயணன்

- சிவசங்்கர் மேனன்

- பிரணாப் முகர்ஜி

- ராம்

-ஜெயலலிதா

- சோ. இராமசரமி

- சுப்பிரமணியசுவாமி.....

இவ்வாறு பட்டடியல் நீண்டு கொண்டே போகும்.

மன்மோகன் சிங்கைப் பொறுத்வரையிலும் அவர் பாவம். தான் சீக்கியர் என்பதை யாரும் "கண்டு கொள்ளக்்கூடாதென்பதற்காாக" தன்னை ஒரு தீவிர இந்தியனாகக் காட்டவேண்டி மேற்குறிப்பிடப்பட்டர்களின் ஆலோசனைக்கு அடங்கிப்போகிறார் அவ்வளவுதான்.

உண்மையை உண்மையாய்க் காணக் கற்றுக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதேசி!

நீங்கள் எந்த நாட்டவர் எண்டு எனக்குத் தெரியாது. நீங்கள் உபயோகித்த சில சொற்களின் அர்த்தங்கள் ஆபாசம் மிகுந்தவை. கவனித்தில எடுத்து மாத்துங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சரியாகச் சொன்னீர்கள் பரதேசி. இன்று தமிழகத்திலோ அல்லது மத்திய அரசிலோ தமிழீழத்துக்கு எதிராகக் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது மேற்சொன்ன பட்டியலில் உள்ள நபர்கள்தான் என்பதை சிலர் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மன் மோகன் சிங் இந்துவா என்று அப்பாவித்தனமாகக் கேட்கும் சிலருக்கு அவர் ஆட்டுவிக்கப்படும் பொம்மை என்பது தெரியாமல்ப் போனது விந்தையில்லை.

கருணாநிதி ஈழத்தமிழர் சார்பாகக் கதைக்கத் தொடங்கியபோது இந்து ராம் எனும் நச்சுப் பாம்பு "மாலினி பார்த்தசாரதி" எனும் பெண்பாம்பினூடாகக் கட்டுரை வரைந்ததும், சோ ஜெயலலிதாவுக்கு தலையணை மந்திரம் ஓதியதும், நாராயணனும் முகர்Jஇயும் சண்டித்தனம் பேசியதும் இந்த அப்பாவிகளுக்குத் தெரியவில்லை.

இந்த அப்பவிகளிடத்தில் கேள்வி ஒன்று கேட்க வேண்டும்?! மாலினியின் கட்டுரை பற்றியும், ஜெயலலிதாவின் புலிகளை அழித்து வெற்றிபெற வேண்டும் என்ற பேச்சுக்கள் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று !

அதற்குப் பதில் இல்லை. சிலவேளை அவர்கள் யாருமே பிராமணர்கள் இல்லை என்று சொன்னாலும் சொல்லுவார்கள் !!!!!

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் எழுச்சி தொடங்கியவுடனேயே யார் யாரெல்லாம் தமிழருக்கு எதிராகக் கதைத்தார்கள் என்று பார்த்தால் இந்த அப்பாவிகளுக்கு சிலவேளை விளங்கினாலும் விளங்கும். அப்படிக் கதைத்தவர்கள் இந்தப் பட்டியலிருந்தவர்கள் மட்டுமேயன்றி வேறு எவருமில்லையென்பதை இந்த அப்பாவிகள் நன்கே அறிந்திருந்தும் ஒன்றுமே நடவாதது போல இருக்கிறார்கள்.

எழுச்சியை முன்னின்று நடத்தியவர்கள் திராவிடப் பாரம்பரியத்தில் வந்த மானமுள்ள தமிழர்கள் தான் என்பதை இந்த அப்பாவிகள் ஒருபோதுமே பார்க்கவோ, ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை !

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மனதிற்கு ஆறுதலளிக்கிறது உங்கள் வார்த்தைகள்.

ஆராய்ந்து, நுண்ணிப் பார்க்கும்போது நமதறிவிற்கு அகப்படும் விடயங்கள் தெளிவான பார்வை எமக்கு விட்டுச் செல்கின்றன.

உணர்விற்கும், அறிவிற்குமான பெறுமான வித்தியாசங்களைக் கண்டடைந்து தேவையான இடத்தில் அவற்றை உபயோகிக்கத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருத்திற்கு மிகவும் நன்றி.

பார்பனிய விசுவாசத்தை காட்டவும் வேண்டும் அதே நேரத்தில் தமிழ் தேசிய முகமூடி போடவும் வேண்டும் என்றால் மிக கடினம் தான். சிவசேனாவையும், ஆர்.எஸ்.எஸ் சையும் ஆதரித்துக் கொண்டே புலிகளையும் ஆதரிப்பதாக இவர்கள் போடும் வேடம் தற்போது தமிழகத்தில் /இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளால் வெளிப்பட்டு விடும் என அஞ்சுகின்றனர்.

தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர் எவரும் பார்ப்பனியத்தை எற்றுக் கொள்ள முடியாது

பார்பனியத்தை ஆதரிப்பவர் எவரும் தமிழ் தேசியத்தை எற்றுக் கொள்ளமுடியாது

இரண்டும் ஒன்றை ஒன்றுடன் கருத்தியல் ரீதியிலும், சமூக கலாச்சார ரீதியிலும் முரண் படுவன.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். இவர்கள் எல்லாம் இந்து அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் மூத்த உறுப்பினர்கள். ஏன் காதில் பூச் செருகுகின்றீர்கள். நாங்கள் ஒன்றும் கண்ணை மூடிக் கொண்டு உங்களிடம் கதை கேட்கவில்லை.

தூயவன்,

உங்களுக்கு நான் சில பெயர்களை மட்டும் ஞாபகப்படுத்துகிறேன். மிகுதியை நீங்கள் மட்டும் விளங்கிக்கொள்ளுங்கள்

- எம்.கே நாராயணன்

- சிவசங்்கர் மேனன்

- பிரணாப் முகர்ஜி

- ராம்

-ஜெயலலிதா

- சோ. இராமசரமி

- சுப்பிரமணியசுவாமி.....

இவ்வாறு பட்டடியல் நீண்டு கொண்டே போகும்.

மன்மோகன் சிங்கைப் பொறுத்வரையிலும் அவர் பாவம். தான் சீக்கியர் என்பதை யாரும் "கண்டு கொள்ளக்்கூடாதென்பதற்காாக" தன்னை ஒரு தீவிர இந்தியனாகக் காட்டவேண்டி மேற்குறிப்பிடப்பட்டர்களின் ஆலோசனைக்கு அடங்கிப்போகிறார் அவ்வளவுதான்.

உண்மையை உண்மையாய்க் காணக் கற்றுக்கொள்வோம்.

ஏன் இதில் பிரதமர் மன்மோகன் சிங் சீக்கியர்,சோனியா மற்றும் ராகுல் ஆகிய காங்கிரஸ் கட்சியை வழிநடத்துபவர்கள் கிறிஸ்தவர்கள், அத்தோடு பாதுகாப்பு அமை;சசராக உள்ள அந்தோனி கிறிஸ்தவர் என்பதனால அவர்களை இப்பட்டியலில் இணைக்காமல் விட்டீர்கள்.

சீனா உதவுகின்றதற்காக கம்னூசியத்தை ஏன் நீங்கள் ஒரு பிடி பிடிப்பதில்லை. அல்லது, பாகிஸ்தானுக்காக, அமெரிக்காவிற்காக இஸ்லாமிய, கிறிஸ்தவத்தை ஒரு பிடி பிடிப்பதில்லை.

உங்களு;ககு உள்ள பிரச்சனை. ஈழப்போராட்டத்தை வைத்து, இந்து மதம் மீது குற்றம் சாட்டிப் பிழைப்பை ஓட்டலாம் என்ற எண்ணம் தான்.

இங்கே, சோவோ, ஜெயலலிதாவோ, சுப்பிரமணிய சுவாமியோ இன்றய ஆட்சியில் செல்லாக்காசுகள். அவர்கள் எதிர்க்கின்றார்கள் என்பதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டிட முடியாது. அதிலும் ராம் மாக்கிச வாதியாவார்.

ஒரு காலத்தில் பிஜேபி ஆட்சியில் இருந்தது, 3ம் அணி ஆட்சியில் இருந்தது, ஆனால் இவர்கள் தராத தொந்தரவை மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சி தான் அன்றில் இருந்து நமக்குத் தந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு வேறு பிரச்சனைகள் தான் காரணம்.

ஈழத்தில் தமிழனத்து ரோகிகள் எல்லோரும் பார்ப்பானியாக இல்லாதவர்களே. அவர்களையும் சாதி போட்டுத் திட்ட முடீயுமா உங்களால்...

பார்பனிய விசுவாசத்தை காட்டவும் வேண்டும் அதே நேரத்தில் தமிழ் தேசிய முகமூடி போடவும் வேண்டும் என்றால் மிக கடினம் தான். சிவசேனாவையும், ஆர்.எஸ்.எஸ் சையும் ஆதரித்துக் கொண்டே புலிகளையும் ஆதரிப்பதாக இவர்கள் போடும் வேடம் தற்போது தமிழகத்தில் /இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளால் வெளிப்பட்டு விடும் என அஞ்சுகின்றனர்.

தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர் எவரும் பார்ப்பனியத்தை எற்றுக் கொள்ள முடியாது

பார்பனியத்தை ஆதரிப்பவர் எவரும் தமிழ் தேசியத்தை எற்றுக் கொள்ளமுடியாது

இரண்டும் ஒன்றை ஒன்றுடன் கருத்தியல் ரீதியிலும், சமூக கலாச்சார ரீதியிலும் முரண் படுவன.

இவர்கள் என்று, யாரைச் சொல்கின்றீர்கள்? சிவசேனாவும், ஆர்எஸ்எஸ்சும் எப்போதாவது ஈழப்போராட்டத்தை எதிர்த்துக் கதைத்துள்ளனவா?. ஒன்றுமே தெரியாமல் கதைக்கக் கூடாது. தமிழ்நாட்டில் , இந்தியாவில் வந்துள்ள ஆதரவு என்பது கன்னட ஆதரவால் வந்ததல்ல. அது தமிழன் என்ற உணர்வால் வந்ததே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி பார்பனர்கள் எங்கள் பாசக்காரர்கள்.

எல்லாரும் ஏற்றுக்கொள்ளுங்கோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே,

இந்திய ஜனநாயகம் ஒரு பார்ப்பனிய ஜனநாயகம்.

இந்திய அரசியலமைப்பு முறை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இன்று பயனளிக்கிறது. அதிகாரத்தை தம் வசப்படுத்திக்கொண்டு அனைத்து மாநிலங்களுக்குமான எல்லா அதிகாத்தையும் தன்னுள் பிடித்திவைத்திருக்கும் இந்திய அரசியலமைப்பு ஐரோப்பிய யூனியனுக்கான அரசியலமைப்பைப் பின்பற்றிப் புதிதாக வரையப்படல் வேண்டும்.

ஆகக்குறைந்த ஒரு மாநிலம் மறுக்கும் பட்சத்தில் இந்திய சட்டம் எதுவும் நிறைவேறாதபடி அரசியலமைப்பு உருவாக்கப்படல்வேண்டும். மாநிலங்களுக்கான "வீட்டோ" அதிகாரம் இந்திய அரசியலமைப்பில் இருந்திருந்தால் இன்னறு நாசிகளைப்போன்று இந்தியப்பார்ப்பனியம் செயற்பட்டிருக்காது. அப்பாவிகளைக் கொல்வதற்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்திருக்காது.

மனுதர்மத்தை வாசித்து விட்டுத்தான் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுக்க முடிவெடுத்தது என்று எண்ண எனக்குத் தோன்றுகிறது.

இவையெல்லாவற்றிற்குமான பதில் தமிழ்நாட்டிலிருந்துதான் வரவேண்டும். தமிழகத் தமிழர்களின் கைகளில் இன்று 21ம் நூற்றாண்டின் தமிழ் புரட்சியின் திறவுகோல்கள் தரப்பட்டிருக்கின்றன். அவற்றை அவர்கள் எவ்வாறு பாவிக்கப்போகிறார்கள் எனபதிலிருந்துதான் நாளைய வரலாறு எவ்வாறு தமிழர்களுக்கு அமையப்போகிறது என்பதை கணிப்பிடலாம்.

இல்லாவிட்டால் தமிழ் நாட்டிலும் ஒருநாள் தமிழன் தண்ணியின்றிச் சாகவேண்டிவரும் என்பதுதான் உண்மை.

இந்தப்பொறுப்பு தமிழ் நாட்டாரின் கைகளில்தானுண்டு. சோம்பேறித் தனத்தால் புரட்சியை எதிர்ப்பவர்கள் காலந்தாழ்த்தி வருந்தவேண்டிவரும் எனபது மறுக்க முடியாத உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியலமைப்பை வகுத்த பௌத்தரான அம்பேத்காரிடம் தான் இது பற்றிக் கேட்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தூயவரே",

பரதேசி பின்வருமாறு உங்களுக்குப் பதில் கூறுகிறான்:

அம்பேத்கார் தன்காலத்தில் தன்னால் ஆற்றக்கூடிய அதியுச்ச முயற்சியை ஆற்றி முடித்துவிட்டார்்். அவர்பற்றி கதைப்பதற்கு எங்களுக்கு ஒரு அருகதையும் இல்லை. காரணம், அவருக்குப் பின் நாமெல்லாம் (உங்களைப்பற்றிக் கூறவில்லை) அடிமைகளாகிவிட்டோம். யாருக்கு அடிடைகளாகிவிட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

21ம் நூற்றாண்டின் இந்தியா மாநிலங்களுக்கான போதியளவு சுயாட்சியை வழங்கவேண்டும்.

மத்திய அரசின் சர்வாதிகார வெளிநாட்டுக்கொள்கைத் திட்டமிடல், தீர்மானமெடுத்தல் போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறேன்.

இதற்கும் அம்பேத்காருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அவர் தொடங்கி வைத்ததை நாம் தொடரவில்லைஎன்பது எமது தவறுமட்டுமே.

இந்திய அரசியற் சாசனம் கட்டாயமாக மாற்றங்காணப்படவேண்டிய ஒன்று மட்டுமல்லாது, தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தித் தமிழ்நாட்டின் எல்லைகளும் விஸ்தரிக்கப்படவேண்டும என்பது மிக முக்கியமான விடயமாகும். இல்லாத நிலையில், தமிழ் நாடும் ஆயுதம்தாங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்படக்கூடிய வாய்ப்புகள் உணடென்பதைக் காலம் உணர்த்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

paradesi Posted இன்று, 06:46 PM

இந்திய அரசியற் சாசனம் கட்டாயமாக மாற்றங்காணப்படவேண்டிய ஒன்று மட்டுமல்லாது, தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தித் தமிழ்நாட்டின் எல்லைகளும் விஸ்தரிக்கப்படவேண்டும என்பது மிக முக்கியமான விடயமாகும். இல்லாத நிலையில், தமிழ் நாடும் ஆயுதம்தாங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்படக்கூடிய வாய்ப்புகள் உணடென்பதைக் காலம் உணர்த்துகிறது

:D:D

பரதேசி இந்த வரியை படித்தால் சிரிப்புத்தான் வருகிறது நாலு மனுசனுகள் தங்கள் நாக்கால நாலு வார்தை சுதந்திரமாக பேசமுடியல பேசினால் நாட்டின் இறைமைக்கு கேடு விளைவித்தானாம் என்று உள்ளே போடும் போது ஆயுதம் ஏந்தி போராட போகிறாங்களோ? இதை நீங்கள் எங்கிருந்து எழுதுறீங்கள் பார்த்து உங்களையும் உள்ளே போட போறாங்கள்

தமிழ் நாட்டினர் வழங்கும் மின்சாரம் வேண்டும் ஆனால் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள் அடுத்த மாநில காரனுகள் இப்படியிருக்குது நிலமை ஆனால் மத்திய அரசோ பொம்மையாக இருக்கிறது அதையே ஆட்டமுடியவில்லை அதுக்குள்ள ஆயுதமே இன்றைக்கு மத்திய அரசோ கலைஞரின் தயவால் தான் இருக்கிறது ஆனால் தமிழ் நாட்டின் தண்ணி பிரச்சினை தீர்ந்த பாடில்லை இப்படியிருக்குது நிலமை

நீங்கள் சொல்வது போல் அப்படி ஒரு நிலமை வந்தாலும் வெறும் ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் தான் மேலும் உருவ பொம்மைகளும் எரிப்பார்கள் :D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மேனன், நாராயணன் வந்தாலும் போனாலும் இந்தியாவின் கொள்கை மாற வாய்ப்பில்லை. காரணம் இலங்கையின் பெரும்பான்மை அதிகாரம் இருப்பது சிங்களவனிடம். அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவனுக்கே இந்தியாவின் ஆதரவு.

தமிழர் பலம் மீண்டும் நிலைநிறுத்தப்படும் வரை தற்போதுள்ள நிலைதான். அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தமிழர் தரப்பிடம் வர‌ வேண்டும். அதுவரை குடுக்கிற சோத்த திண்டிட்டு பங்கருக்குள்ள ஓடி ஒளிய வேண்டியதுதான். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

்உலகத் தமிழர்கள் அனைவரும் உண்மையாக ஒரு மனத்துடன் ஒன்றிணைந்து இரவு பகலெனவிலாது போராட்டம் தொடுத்தால் அனைத்தும் சாத்தியம்.

ஈழத் தமிழர்களின் பெயரால் ஈழதமிழர்களுக்காக தமிழக இரத்த உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட மொத்தத்தொகைப் பணமும் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.

இந்திய மத்திய அரசுக்கு வழங்கும் வரிப்பணத்தில் தமிழர்களைக் கொல்பவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறதென்றால், அதை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட நிதி ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுபவர்களிடம் கொடுக்கப்படல் வேண்டும்.

அவர்கள் விடுதலைப் புலிகளே என்பதை இன்று உலகம் முழுவதும் அறியும்.

என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.