Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர்களை கலைஞர் ஏமாற்றி விட்டாரா? கலைஞரின் முயற்சிகளால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் தற்போது எழுந்த ஆதரவு அலை, அதனால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மைகளையும் எற்படுத்தாமலேயே - கலைஞர் தனது கட்சியினரின் பதவி விலகல் முடிவை விலக்கிக் கொண்டதால் - வீணாகப் போய் விட்டது என்றும், கலைஞர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டதாகவும், ஒரு பதிவில் வெளியான கட்டுரையை எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்.

அந்தக் கட்டுரைக்கு பதில் அளிக்க வேண்டும் என விரும்புகிறேன், நான் பதிவுலகிற்குப் புதியவன் என்பதால் பதிவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஒருவருடைய பதிவிர்ற்கு நாகரீகமான முறையில் பதில் கூறுவது தவறில்லை என்றே நினைக்கிறேன்,

அதற்கு முன்னர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் சமீபத்திய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

தற்போது ஈழத்தில் நடைபெற்றுவரும் போரினால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டு உடனடிப் பாதிப்புகள்,

இலங்கை இராணுவம் அப்பாவிப் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசுவதால் ஏதும் அறியாத அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்களில் சிக்கி தங்கள் உயிரையும், உடல் உறுப்புகளையும் , உடமைகளையும் இழந்து வரும் அவல நிலை .

தமிழர் பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து தடைப் பட்டுள்ளதால் தமிழர்களுக்கு தேவையான உணவும், மருந்துப் பொருட்களும் கிடைக்கவில்லை

இலங்கை ராணுவத்தின் விமானத் தாக்குதல்களுக்கு அஞ்சி காடுகளில் குடியேறியுள்ள மக்கள் உண்ண உணவு கூட இன்றி தவித்து வரும் நிலை.

இப்படிப்பட்ட சூழல்தான் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று கூடி நடத்திய,

இலங்கைத் தமிழர்ஆதரவு அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானங்கள்

இலங்கைத் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிடாவிட்டாலும், இலங்கையில் அடுத்த இரு வார காலத்திற்குள் போரை நிறுத்த இந்திய மத்திய அரசு முன்வராவிட்டாலும் தமிழக எம்.பி.க்கள் அனைவரும்

(40) பதவி விலக நேரிடும்.

இலங்கை அயல்நாடென்ற வகையில் இந்திய அரசு அந்நாட்டுக்கு ஆயுத உதவிகளை வழங்கிவருகிறது. ஆனால் அந்த ஆயுத உதவி அங்கு வாழும் தமிழ் மக்களுக்கெதிராக இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தவும், தமிழ் மக்களை அழிக்கவுமே பயன்படுகிறது. எனவே இத்தகைய இராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்தி அங்கு இடம்பெறும் தமிழினப்

படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்.

போரை நிறுத்தி, இந்தப் போரால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக தங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பவும் அவர்களுக்கான உணவு, உறையுள், மருந்துப்பொருட்களை வழங்குவதுடன் மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பிவிடப்படாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஏற்றவாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும்.

இவைதான் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும்.

இந்தியா தனது அண்டை நாடான இலங்கையின் மீது எந்த அளவிற்கு அதிகாரம் செலுத்த முடியும்.இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தானோ அல்லது அமெரிக்காவோ தலையிட்டால் அதை எந்த அளவிற்கு நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்திய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் செய்யக் கூடியவை,

அப்பாவித் தமிழ் இனத்தின் மீதான, இலங்கை ராணுவத்தின் திட்டமிட்ட தாக்குதல்களை இந்தியா தடுக்க வேண்டும்,

போரால் பாதிக்கப் படும் இலங்கைத் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், அப்பாவி தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்த நிறுத்தக் குரல் கொடுக்க முடியும் ,

இலங்கை அரசுக்கு தமிழர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என்றார் எடுத்துக் கூறி போரை நிறுத்த அறிவுரை கூற முடியும் ,

அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்களைத் தடுக்க இலங்கையின் மீது சர்வதேச நிர்பந்தங்களை உண்டாக்க முடியும்.

இந்திய அரசு இலங்கைக்கு எந்த ராணுவ உதவியும் செய்யாமல் இருக்கலாம்.

இதைத்தானே இந்திய அரசு செய்ய முடியும், இல்லை என்றால் இலங்கையின் மீது படையெடுத்து சென்று அந்த நாட்டைத் தாக்கி , இலங்கையை இரண்டாகப் பிரித்து விட முடியுமா என்ன?

சென்ற முறை அப்படி இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படை இலங்கைக்கு சென்ற பொது இலங்கையில் இந்திய ராணுவத்திற்கு எப்படிப் பட்ட பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை யாரும் அவ்வளவு விரைவில் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழக முதல்வரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஒட்டி மத்திய அரசு எடுத்த உடனடி நடவடிக்கை பற்றி ,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 16-10-2008 அன்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில்,

"இலங்கையில் நிலவும் சூழ்நிலை இந்தியாவில் உள்ள எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. தாங்கள் உருவாக்காத சூழ்நிலையின் பிடியில் அப்பாவி மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை நினைத்துத் தான் நாங்கள் குறிப்பாகக் கவலைப்படுகிறோம்.

அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்க வேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையை திரும்ப கொண்டு வர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது.

பேச்சு வார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இத்தகைய தீர்வு தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்துத் தரப்பினரின் உணர்வு களையும் பூர்த்தி செய்வதாக அமையும்.

இந்த இலக்கை அடையவும், அப்பாவி மக்களின் கஷ்டங்களை தணிக்கவும் இந்தியா, தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எல்லா முயற்சிகளையும் எடுக்கும். இது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் இலங்கை அரசின் கவ னத்தை இந்திய அரசு ஈர்த்து வருகிறது."

இந்த அறிக்கைக்கு என்ன பொருள் என்று எண்ணிப் பாருங்கள். இந்த அறிக்கையைத் தொடர்ந்து இலங்கை அரசின் சார்பில் பதில் நடவடிக்கையாக,

இந்தியா வந்த இலங்கை அதிபரின் சிறப்புத் தூதுவர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,

'இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஜனாதிபதி ராஜபக்ஷ நேரடியாக ஈடுபடுவார் எனவும் இந்தியா வழங்கும் 800 மொற்றித் தொன் உணவுப் பொருள்களை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தமிழக மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச் சூடுகள் தவிர்க்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது" . என்று கூறியுள்ளனர்.

ராணுவ உதவிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் தங்களுக்கு எப்போதுமே உதவுவதாகவும், இந்திய ராணுவ உதவிகள் அவசியமில்லை என்றும் இலங்கை ராணுவத்தினர் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளனர்.

முன்னேற்றமான இந்த நிகழ்வுகளை தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் வரவேற்று உள்ளன.இந்த உறுதி மொழிகள் செயல் வடிவம் பெற்று பிரச்சினை தீரும் வரை இந்திய மத்திய அரசின் முயற்சிகள் தொடர வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தீரும் வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இதே உத்வேகத்துடன் போராட வேண்டும்..........

எனக்கு அனுப்பப்பட்ட அந்தக் கட்டுரைக்கான எனது பதில் ,

இதோ அந்தக் கட்டுரை , (ஒரே ஒரு இடத்தில் மட்டும் நாகரீகம் கருதி ஒரு வார்த்தையை மறைத்துள்ளேன்)

\\சமீபத்தில் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்த எழுச்சிகளை பரபரப்பான கைதுக்களால் அடங்கி திக்குமுக்காடிப் போய்விட்டது. கலைஞரின் வாய்ச் சவாடலும், போலிக் கண்ணீரும் ஓட்டுப் பொறுக்கிகளின் மனிதாபிமானத்தை மீண்டும் நிறுபீத்திருக்கும்

வேளையில் மீண்டும் மற்றொரு அரசியல் நாடகம் அரங்கேறுகின்றது.\\

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியவர்கள் மட்டுமே கைது செய்யப் பட்டனர், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பெசியதகாக யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்களும் சென்ற ஜெயலலிதா ஆட்சி போல கடுமையான சட்டங்களில் கைது செய்யப்பட வில்லை.

\\தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி, "ஈழத்தில் வேதனையால் விழி நீர்பெருக்கி வாடிக் கொண்டிருக்கும் சகோர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் இயன்றதை வழங்கி உதவிடுவிர்" என நிதி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்.

"இலங்கைத் தமிழர் நிவாரணை நிதி முதல்வர் கலைஞர் பத்து இலட்சம் ரூபாய் வழங்கினார்" என்ற விளம்பரங்கள் வேறு. "....." யை தூக்கி

ஈழத்தமிழர்கள் மீது வீசியடிக்கும் திமீர்தனம் தான் இது. கொடை வள்ளல் 10 - இலட்சத்தில் ஈழத் தமிழர்களின் ஒருவேளை சாப்பாட்டுக்கு தராதரத்தை நிர்ணயிக்கிறார்.\\

இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அஞ்சி தலை மறைவாகக் காட்டில் இருக்கும் மக்களுக்கு உணவும், மருந்தும் கிடைக்கவில்லை , அவற்றை உடனே கிடைக்க செய்ய வேண்டும் என்பதே பலரின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

குண்டுகளில் இருந்து தப்பும் மக்கள், பசியில் உயிரை விட்டு விடாமல் தடுப்பதான் உடனடித் தேவை அல்லவா?

\\ "டேய் ஈழத்து பரதேசி, எப்படியிருந்தாலும் சாகத்தான் போகிறாய். சாவதற்கு முன் அரை வயிறாவது சாப்பிட்டு விட்டு செத்து போ" என்று சொல்வது போல் உள்ளது கலைஞரின் வசூல் வேட்டை! ஈழ மக்கள் இவற்றையா உங்களிடம் கேட்டார்கள்..? \\

ராணுவ தாக்குதல்கள் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்படக் கூடாது என்று இந்தியா கேட்டுக் கொண்டதையும், அதற்கு இலங்கை அரசின் பதில் நடவடிக்கைகளையும் எனது பதிவில் படியுங்கள்.

\\ கையாலாகாத்தனத்துக்கு நன்கொடை, வசூல் என சின்னப்பிள்ளைத்தனமாக வேளைகளில் இறங்கியிருக்கிறார் கலைஞர். எப்படியோ கொண்டுச் சென்றிருக்க வேண்டிய மக்களின் எழுச்சியை அடக்கி மட்டந்தட்டியிருக்கிறார். \\

கலைஞர் செய்வது கையாலாகாத் தனம் என்று நீங்கள் கருதினால், நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் ,

கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சித் தொண்டர்களும் இலங்கையை நோக்கிப் படையெடுத்து செல்ல வேண்டுமா?

ஒரு ஜனநாயக நாடு தனது சக்திக்கு உட்பட்டு அண்டை நாட்டின் அப்பாவி மக்களைக் காக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அதை செய்யுமாறு இந்திய அரசை வலியுறுத்திய கலைஞர் அதில் வெற்றியும் பெற்று விட்டார்.

\\ சென்னைக்கு வந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜியின், "அரசியல் நெறி தர்மங்களின் வார்த்தைகளில்" கலைஞக்கு வேண்டுமானால் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் தமிழக மக்களிடமும் அதே நம்பிக்கை வரும் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள். \\

அமைச்சரையும் நம்பவில்லை, முதல்வரையும் நம்பவில்லை என்றால் என்னதான் செய்ய முடியும்.

\\ இந்நிலையிலேயே ஈழத் தமிழர்களுக்காக நிவாரண நிதியாம். சுனாமியில் சேகரித்த நிதிகள் என்ன கதிக்கு ஆளாகியது என்று கலைஞருக்கு தெரியாததா? \\

சுனாமி நிதி வசூலிக்கப்பட்ட போது கலைஞர் முதல்வர் இல்லை.

\\ நிவாரண நிதியை எப்படி ஈழத்தில் தமிழர்களிடம் கொண்டுப் போய்ச் சேர்ப்பார்? சனங்கள் குண்டுக் பயந்து காட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து பொட்டல் வெளியிலும், காடுகளிலும் கிடக்கின்றனர். எப்படி இவர்களுக்கு உதவிகள் சென்றடையும்? யார் இதை அவதிப்பட்ட மக்களுக்கு வழங்குவது? \\

பதிவுகள் வெளியிடும் முன்னர் அதைப் பற்றிய அனைத்துத் தரப்பு செய்திகளையும் அறிந்து பின்னர் வெளியிட்டால் நல்லது என நினைக்கிறேன்.

இலங்கை அமைச்சர் அளித்த உறுதி மொழி " இந்தியா வழங்கும் 800 மொற்றித் தொன் உணவுப் பொருள்களை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

\\ 1. குண்டுத்தாக்குதலை நிறுத்தாமல் இருக்கும்போது அங்கு உதவிப் பொருட்களை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்? \\

அப்பாவித் தமிழர் மீதான குண்டுத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது, அதை ஏற்று இலங்கையும் ஒப்புக் கொண்டு உள்ளது.

\\ 2. சில மாதங்கட்கு முன்னர் திரு.பழ. நெடுமாறன், மருத்துவப் பொருட்களை அனுப்பிட, வசூலித்து வைத்த பின்னர் கேட்டபோது மறுக்கப்பட்டதே. ஏன்? இப்போது எங்கிருந்து வழி பிறந்தது? \\

இப்போது அவற்றை அனுப்ப வழி பிறந்து விட்டது என்பது தமிழக கட்சிகளின் முயற்சியால் கிடைத்த வெற்றிதானே.

\\இலங்கைத் தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா? அவர்கள் கையால் தமிழ் மக்கள் வாங்கிச் சாப்பிடுவார்களா?

சர்ச்சைக்கு உட்படாத சமூகத் தலைவர்கள் நேரில் சென்று உணவு உதவி வழங்கிட சிறிலங்கா அரசும் இந்திய அரசும் மறுப்பது ஏன்? \\

இலங்கை அமைச்சர் அளித்த உறுதி மொழி " இந்தியா வழங்கும் 800 மொற்றித் தொன் உணவுப் பொருள்களை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்" .

\\எல்லாவற்றிற்கும் மேலாக குண்டு போட்டுக் கொல்லப்படுவது நிறுத்தப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக ராஐபக்ச பிரகடனம் செய்துவிட்ட பிறகு நீங்க்ள கருணையுடன் அனுப்பும் பாலும், பருப்பும், பாகும், சைவ - அசைவ விருந்தாக அமைந்தாலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சாகத்தானே வேண்டும்.\\

அப்பாவி மக்களின் மீது எந்தத் தாக்குதலும் நடைபெறாது என்று அவர்கள் உறுதி அளித்துள்ளதை தயவு செய்து நினைல் கொள்ளுங்கள்.

இலங்கை அதிபர் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசுவது நிறுத்தப்பட மாட்டது என்று ஒருபோதும் கூறவில்லை.

\\ ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தும் விமானத்தாக்குதல்களை நிறுத்துவதற்கு என்ன செய்திருக்கிறீர்கள். அதை தடுப்பதற்காக என்ன செய்யப் போகிறீர்கள்?

\\

ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது எந்த தாக்குதலும் நடைபெறாது என்று இலங்கை அரசு இந்திய அரசுக்கு உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் அதை மீறாமல் கண்கைக்க வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்.

\\இதுவே உலகத் தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது இன்று!

கலைஞரே, முடிவாக தீர்மானம் செய்து கொள்ளுங்கள்!

மத்திய அரசைக் காப்பாற்றப் போகிறீர்களா? ஈழத்

தமிழர்களை காப்பாற்றப் போகிறீர்களா? \\

கலைஞர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தற்போது ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், தனக்கும் ஓரளவே திருப்தி அளிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் இதற்காக அவர் ஜெயலலிதா கூறுவது போல திமுகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகி, அந்தப் பதவிகளை ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?

அப்படி செய்தால் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னாவாகும் என்பதைக் கொஞ்சம் சிந்தியுங்கள்............

http://news.yahoo.com/s/oneworld/20081020/...580761224518952

http://www.presstv.ir/detail.aspx?id=73333...ionid=351020406

http://us.oneworld.net/article/358076-sri-...tamil-civilians

http://ipsnews.net/news.asp?idnews=44355

http://www.tamilcanadian.com/news/tamil/in...ews&id=2973

http://www.globaltamilnews.com/tamil_news....=1545&cat=2

http://www.globaltamilnews.com/tamil_news....=1555&cat=2

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புஷ்பாவிஜி,

கட்டுரையும் நீங்கள் கொடுத்த பதிலும் கலந்திருப்பதால் இரணடு முறை வாசித்தால் தான் புரிகிறது. இருக்கட்டும். இந்தப் பகுதியில் கருணாநிதியைப் பற்றி ஏதாவது புகழ்ச்சியில்லாமல் எழுதினாலும் உடனே வெட்டி விடுவார்கள். அதற்காக நான் எனது கருத்தைச் சொல்லாமல் விடவும் போவதில்லை. அடிப்படையில் நடந்தது ஒரு அரசியல் நாடகம் மட்டுமே என கருணநிதி பற்றித் தெரிந்த எல்லோரும் சொல்கிறார்கள். நானும் நம்புகிறேன். அரசியல் சாரா தமிழர் நல அமைப்புகள் உத்வேகம் பெறும் போதெல்லாம் தானும் பொங்கியெழுவது போலக் காட்டி சூழலைச் "சமநிலைப் படுத்தும்" வேலையைத் தான் கருணாநிதி செய்து வருகிறார். அதுவே இப்போதும் நடந்து வருகிறது. இது நீண்ட காலப் போக்கில் ஈழத் தமிழருக்கு எந்த நன்மையும் தராது. மேலும் குறுகிய கால அடிப்படையில் இது ஈழத் தமிழருக்கான தமிழ் நாட்டு ஆதரவில் பெரிய பின்னடைவைத் தான் தந்திருக்கிறது.தமிழ் நாடு உச்ச நிலை ஆதரவைக் காட்டி விட்டு அடங்கி விட்டது என்ற ஆறுதலில் இலங்கை தனது இன அழிப்பில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆறுதலை இலங்கைக்குக் கொடுத்தது பிரணாப் முகர்ஜியோ வேறெந்த வட இந்திய அரசியல் தலைவரோ அல்ல. எங்கள் தமிழினத் தலைவர் கருணாநிதியே தான். இல்லையென்று யாராவது நிரூபித்தால் நான் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

.அமெரிக்காவும் பாகிஸ்தானும் சீனாவும் ஏற்கனவே இராணுவ உதவிகள் மூலம் தலையிட்டு விட்டன என்பதே உண்மை. ஆனால் எங்களுக்குத் தேவை எங்கள் பக்க நியாயத்தைக் கேட்கக் கூடிய ஒரு சக்தி. இலங்கையின் தமிழின அழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் பற்றி அறிக்கையோடு மட்டுமே நிற்காமல் சில பொருளாதாரத் தடைகளையாவது விதித்த நாடுகள் எவையென்று கொஞ்சம் பட்டியலிட்டுப் பாருங்கள். இந்தியாவோ எந்த ஆசியா சக்தியோ அந்தப் பட்டியலில் வராது. மாறாக நெதர்லாந்து இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த மனித உரிமை தொடர்பான கண்டனத் தீர்மானம் இந்தியாவின் தலையீட்டினால் நிறைவேறாமல் போனது தான் உண்மையாக நடந்தது.

ஆக மொத்தத்தில், தமிழர் நலன் பற்றிச் செவிமடுக்கும் சக்தி இந்தியா இல்லை என்பது தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது. இதை விட்டு விட்டு, மேற்கு நாட்டான் வேண்டாம் ஆசிய வல்லரசு தான் எமது ஓரே நம்பிக்கை என்று கண்ணை மூடிக் கொண்டு நாம் பாரத விசுவாசம் பேசுவது இன்னும் ஒரு ஐம்பது வருஷம் எங்கள் துன்பங்களை நீட்டிக்க வேண்டுமானால் உதவும்.அதுவா எங்கள் தேவை? இது தான் இந்தியவிடம் இருந்து கிடைக்கக் கூடியது என்று கற்று எவ்வளவு காலமாயிற்று இப்போது? இது பற்றி விவாதம் எதிர் விவாதம் செய்வதை விடுத்து, மௌனமாக விலகிக் கொண்டு எங்கள் துன்பங்களை மேற்கு நாடுகளில் பிரபல்யப் படுத்த முடியுமா என்று தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவையோ இ.யூ வையோ நம்புவது போலக் காட்டினால் இந்தியா கோபித்துக் கொள்ளும் என்பார்கள் சிலர். அவர்களிடம் ஒரு கேள்வி: இந்தியா கோபிக்காமல் இருந்து எங்களுக்கு என்ன கொட்டியது இங்கே?

Edited by Justin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.