Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தமிழர் எழுச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள மறவர்களே!

புலமெங்கும் தமிழர் எழுவதுகண்டு மகிழ்ந்தோர்

கனடாவில் தமிழர் தூங்குவது கண்டு வெகுண்டனர்.

அவர்களுக்கு ஒரு இனிப்பான சங்கதி.

நாளை தொடக்கம் ஒருவாரத்துக்கு

கனடா இளையோர் அமைப்பு முன்னெடுக்கும்

ஈழத்தமிழர் ஆதரவுக் குரலுடன்

எல்லோர் குரலும் சேர்ந்து

ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ்முழக்கம்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும் வாசகி நீங்கள் நித்திரை தூங்கீட்டு எழம்பி வந்திருக்கிறீங்க போல!

கடந்த ஒரு மாத காலமாக கனடாவில் தொடர்து முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டங்கள், தாயக மக்களுக்கான உதவி செய்யும் முகமாக பல்வேறு தரப்பினரும் இணைந்து நடாத்தும் நிகழ்வுகள் என்பவற்றை நீங்கள் அறியவில்லை போல!

எனினும் தமிழ் இளையோர் அமைப்பின் நெறிப்படுத்தலில் முன்னேடுக்கப்படும் AWARENESS WEEK முன்மாதிரியான நிகழ்வாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்நிகழ்வுகளில் நீங்களும் பங்கு கொண்டு எம் தமிழர் அவலத்தை உலகுக்கு சொல்லுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகளே!

உறங்காத இரவுகளின் நெருங்கிய உறவு நான். கனடாவில் நடந்த நடந்துகொண்டிருக்கிற கவனயீர்ப்புப் போராட்டங்கள் இங்கே இருக்கும் உறவுகள் சிலரின் கவனத்தை ஈர்க்கவில்லை. தாயக விடுதலைக்கு தமது பங்களிப்பை நல்க இயலாத நிலையில் அந்த நெஞ்சுகள் விம்மி இருக்கும். அவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் இந்தப் பதிவு.

பறவைகளே!

உறங்காத இரவுகளின் நெருங்கிய உறவு நான். கனடாவில் நடந்த நடந்துகொண்டிருக்கிற கவனயீர்ப்புப் போராட்டங்கள் இங்கே இருக்கும் உறவுகள் சிலரின் கவனத்தை ஈர்க்கவில்லை. தாயக விடுதலைக்கு தமது பங்களிப்பை நல்க இயலாத நிலையில் அந்த நெஞ்சுகள் விம்மி இருக்கும். அவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் இந்தப் பதிவு.

நீங்களும் வேலை மெனக்கட்டு, இந்தப் பதிவைப் போட்டிருக்கிறீங்கள். ஆனால் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், போராட்டம் முடிஞ்சவுடனை ஆயிரம் குறை சொல்லமட்டும் ஓடோடி வருவினம். இதுதான் இங்குள்ள நிலைமை. இவர்களெல்லோரும் நாலு சுவத்துக்குள்ள இருந்து வியாக்கியானம் கதைக்கத்தான் சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் வேலை மெனக்கட்டு, இந்தப் பதிவைப் போட்டிருக்கிறீங்கள். ஆனால் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், போராட்டம் முடிஞ்சவுடனை ஆயிரம் குறை சொல்லமட்டும் ஓடோடி வருவினம். இதுதான் இங்குள்ள நிலைமை. இவர்களெல்லோரும் நாலு சுவத்துக்குள்ள இருந்து வியாக்கியானம் கதைக்கத்தான் சரி.

ஆட்களை அடையாளம் காண இந்தப்பகிர்வு உதவுதே தமிழச்சி! அந்த முறையில் எனக்கு சந்தோசமே.

வா..சகி மாமி..மி..!!. :)

கனடா இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் எழுச்சியை பற்றிய செய்திகளை தரலாமே..மே..வெறுமனே மற்றவர்களை தாக்குவதை நிறுத்தி..தி..அவர்கள் நடாத்தும் போராட்டத்தை ஏனையவர்களு அறிய செய்யுங்கள்..நன்றி.. :(

ஏனேனில்..ல்

தாமாக இணைய வேண்டும்..ம் அதை விட்டு வற்புறுத்துவதால்..ல் எத்தகைய பிரயோசனமும் கிடைக்க போவதில்லை என்பது என் கண்ணோட்டம்..ம் சில வேளை தவறாகவும் இருக்கலாம்.. :D

அப்ப நான் வரட்டா!!

நீங்களும் வேலை மெனக்கட்டு, இந்தப் பதிவைப் போட்டிருக்கிறீங்கள். ஆனால் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், போராட்டம் முடிஞ்சவுடனை ஆயிரம் குறை சொல்லமட்டும் ஓடோடி வருவினம். இதுதான் இங்குள்ள நிலைமை. இவர்களெல்லோரும் நாலு சுவத்துக்குள்ள இருந்து வியாக்கியானம் கதைக்கத்தான் சரி.

தமிழ் அச்சு அக்கா..கா..!!. :D

என்ன இப்படி சொல்லிட்டியள்..ள் நாலு சுவருகுள்ள இருந்து கதைக்கிறது தான் சரியான கஷ்டம்..ம் அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..ம் ஏனேனில் அவர்கள் எவ்வளவு அலசி ஆராய்ந்து..து போராட்டத்தில் ஏற்படும் பிழைகளை சுட்டி காட்டுகிறார்கள்..ள்.. :)

இதை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் கொண்டு தான் போராட்டமே..மே சரியான முறையில் போகுது எண்டு நான் சொல்லவில்லை..லை சில பேர் இங்க சொன்னவை..வை.. :D

பிறகென்ன..ன.. :)

அப்ப நான் வரட்டா!!

வா..சகி மாமி..மி..!!. :)

கனடா இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் எழுச்சியை பற்றிய செய்திகளை தரலாமே..மே..வெறுமனே மற்றவர்களை தாக்குவதை நிறுத்தி..தி..அவர்கள் நடாத்தும் போராட்டத்தை ஏனையவர்களு அறிய செய்யுங்கள்..நன்றி.. :)

ஏனேனில்..ல்

தாமாக இணைய வேண்டும்..ம் அதை விட்டு வற்புறுத்துவதால்..ல் எத்தகைய பிரயோசனமும் கிடைக்க போவதில்லை என்பது என் கண்ணோட்டம்..ம் சில வேளை தவறாகவும் இருக்கலாம்.. :D

அப்ப நான் வரட்டா!!

தமிழ் அச்சு அக்கா..கா..!!. :)

என்ன இப்படி சொல்லிட்டியள்..ள் நாலு சுவருகுள்ள இருந்து கதைக்கிறது தான் சரியான கஷ்டம்..ம் அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..ம் ஏனேனில் அவர்கள் எவ்வளவு அலசி ஆராய்ந்து..து போராட்டத்தில் ஏற்படும் பிழைகளை சுட்டி காட்டுகிறார்கள்..ள்.. :lol:

இதை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் கொண்டு தான் போராட்டமே..மே சரியான முறையில் போகுது எண்டு நான் சொல்லவில்லை..லை சில பேர் இங்க சொன்னவை..வை.. :)

பிறகென்ன..ன.. :(

அப்ப நான் வரட்டா!!

உண்மைதான் யம்மு. உதைத்தான் சொல்லுறவை, நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கிறது எண்டு. எல்லாத்துக்கும் கெதியிலை ஒரு விடிவு வரும். அப்ப கிழியும் அவையின்ர முகமூடிகள். :(:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

நேற்று புதன் காலை 9 மணி முதல் டன்டாஸ் சதுக்கத்தில் நடைபெறும் 72 மண நேர கவனயீர்ப்பு நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடவிருக்கின்றது. ரொரன்ரோவில் அதிகளவிளான சனத்தொகையைக் கொண்ட யாங் வீதியில் அமைந்திருக்கும் இச்சதுக்கத்தில் தமிழ் இளையோர் அமைப்பினர், மகளீர் அமைப்பினர் மற்றும் உணர்வுள்ள தமிழர்கள் இணைந்து தாயக மக்களின் இன்னல்கள் தொடர்பான பரப்புரைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

இப்பரப்புரைகள் துண்டுபிரசுரங்கள், ஒளித்தட்டுக்கள், மற்றும் நேரடியான விளங்கப்படுத்தல்களோடு தொடர்கின்றது.

நேற்று காலை 5000 பெயரளவில் பங்கு கொண்ட கனேடிய மாணவர் சமூகத்தில் பேரணியிலும் தமிழ் இளையோர் அமைப்பு எமது மக்களில் இன்னல்கள் பற்றி பரப்புரைகளை மேற்க்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி, பொது இடங்களான மக்கள் அதிகளாவாக கூடும் நிலக் கீழ் தொடரூந்து pநலையங்கள், தொடரூந்து நிலையங்கள் என்பவற்றில் மக்கள் அதிகாலை வேலையில் சென்று எமது போராட்டம் தொடர்பான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இது வரை எமக்குள் பேசியதை இன்று அயலவருக்கும் சொல்லுவோம் என்ற நோக்கோடு தமிழ் இளையோர் அமைப்பு முன்னின்று ஒழுங்கு படுத்திய இந்நிகழ்வில் தாயக நோக்காக கொண்டு இயங்கும், அமைப்புக்கள், பழைய மாணவர் சங்கங்கள், ஊர் அமைப்புக்கள் என பல நூறு பேர் தம்மை இணைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வு வாரம் நான்காம் நாள்

தாயக மக்களின் அவலநிலைகளை வெளியுலகிற்கு எடுத்துக் கூறுமுகமாகவும், அவ் அவலநிலைகளைத் தொடராவண்ணம் அங்குள்ள எம்மக்களைப் பாதுக்காக்கவும், இன்றைய நாட்களில் உலகெலாம் வாழும் தமிழர் மத்தியில் அறப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.,

அந்த வகையில் இந்த வாரம் கனடாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் விழிப்புப் போராட்டமானது கடந்த மூன்று நாட்களாக தாயக இன்றைய நிலையை தன்னகம் சுமந்த துண்டுப் பிரசுரங்கள், ஆங்கில மொழியில் விளக்கமாக மக்களின் வாழ்க்கை முறையை உள்ளடக்கியதான இறுவட்டும் விநியோகிக்கப்பட்டுக் கொண்டும், இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிமனைகளில் நேரடியாகச் சென்று அவர்களுக்கு தாயகத்தில் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழினம் படும் அல்லல்களை எடுத்துரைத்தும், இப்போது அங்கு வாழும் உறவுகளுக்கான மனிதாபிமான குரல்களை ஒலிக்கச் சொல்லியும், இவ்விழிப்புணர்வுப் போராட்டம் மெல்ல மெல்ல உரமேறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நாலாவது நாளாகத் தொடரும் இவ்விழிப்புப் போராட்டம், கடந்த மூன்று நாட்களைக் காட்டிலும் ஒருபடி மேலேறி, ரொரன்டோ பெரும்பாகத்தின் மைய நிலப்பரப்பில் மையம் கொண்டுள்ளது. ரொரன்டோ பெரும்பாகத்தின் சனநெரிசல் மிகுந்த இப்பகுதியில் கடந்த பகல் மட்டும் பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை பல்லின சமூகத்தவர்கள் பெற்றுக் கொண்டதுடன் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த அவசரகாலக் குடியிருப்பையும் நின்று அவதானித்து தங்களுக்குள் எழுந்த கேள்விகளை அங்கிருந்த இளையோரிடம் கேட்டு அறிந்தும், ஆதரவு வழங்கியும் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சிறுபொறிபோல் ஆரம்பித்த இவ்விழிப்பு வாரம் இன்று கொழுந்து விட்டெறியும் பரிணாம வளர்ச்சியுடன் ரொரன்டோ மையப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. Young & Dandas திறந்தவெளிச்சதுக்கத்தில் நேற்றையதினம் காலை ஒன்பது மணிக்கு நிலையெடுத்துக் கொண்ட எழுபத்திரண்டு மணிநேர தொடர் விழிப்புப் போராட்டம், இன்னும் 15 நிமிடங்களில் 24 மணிநேரத்தை கடக்க உள்ளது. இந்நாட்டின் காலநிலைக்குள்ளும் இரத்த ஓட்டத்தை உறையச் செய்யக்கூடிய குளிர்காற்று வீசும் திறந்த சதுக்கத்திலும் ஓர்மமான, தாயகமக்களின் வலிகளைக் களையவேண்டும் என்று தாகங்கொண்ட இளைய தலைமுறையின் இலட்சிய நெருப்பிற்குள் ஒளிரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்தும் தகவல்களை இங்கு இணைக்குமாறு யாழ்க்கள கனடா உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது விடை பெறுகின்றேன் மேலதிக தகவல்களுடன் மீண்டும் தொடர்கிறேன்.

Edited by valvaizagara

ஊடக அறிக்கையாக எனக்குக் கிடைத்ததை யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறன்

கனடியர்களின் ஒருமித்த குரல்

இலங்கைத்தீவில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களிற்கு நிவாரணம் அளிக்கும் வண்ணம் பன்னாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களின் தலையீட்டைக் கோரி CanadianHART விடுத்த வேண்டுகோளிற்கு ஆதரவாகப் கனடிய அமைப்புக்கள் பல இணைத்துள்ளன.

60 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பான ரொறன்ரோ பெரும்பாகத்தில் அமைந்துள்ள மிகப்பெரும் சமாதானத்திற்கான அமைப்பான யுத்தத்திற்கெதிரான ரொறன்ரோ கூட்டமைப்பு (TCSW) உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைப் பாதுகாப்பதற்காக உடனடித் தலையீட்டுக்கு கனடிய அரசிற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு ஜேம்ஸ் க்ளார்க் அவர்கள் “இலங்கை அரசாங்கம் உடனடியாக போரை நிறுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு அரசசார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்கள் செல்வதற்கு வழிவகை செய்வதற்கும் அப்பகுதி மக்கள் உதவிகளை பெறுவதற்கும் கனடிய அரசியற்கட்சிகள் தமது அழுத்தத்தினைக் கொடுக்கவேண்டும்" என்று தனது ஊடக அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

செப்ரம்பர் 2008இல் சிறீலங்கா அரசாங்கத்தினால் தொண்டர் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் வாழியல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊதவிகள் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் உணவு, உடை, உறையுள் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்களிற்கு உதவிகள் சென்றடைவதற்குப் பன்னாட்டு சமூகத்தின் தலையீட்டை வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

“இலங்கைத்தீவில் நிகழும் இம் மனித அவலத்தைக் கனடிய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்க்கவேண்டும்... மீண்டும் ஓர் உருவாண்டா அவலம் நிகழ்வதைத் தடுப்பதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களிற்காக அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் கனடிய அரசானது உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டும்” என்று திரு க்ளார்க் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரம் - அல்லலுறும் மக்களிற்காக உங்கள் கண்களைத் திறவுங்கள், தமிழ் மக்களிடையே நவம்பர் 2, 2008 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. விபரணத் துண்டுப்பிரசுர விநியோகம், அஞ்சலட்டை மற்றும் கையெழுத்துப் பிரச்சாரம் என்பன பல மக்களிடையே முன்னெடுக்கப்பட்டு அது பல்லாயிரக்கணக்கான மக்களிடையே சென்று சேர்ந்துள்ளது. நவம்பர் 4, 2008, “பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் நாள்” ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நாளில் அனைத்து மக்களும் தம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து இலங்கைத் தீவில் மக்களால் எதிர்கொள்ளப்படும் மனித உரிமைப் பிரச்சினைகளை எடுத்துக் கூறவேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகரித்து வரும் இம் மனித அவலத்தை வெளிக்கொண்டுவர சமூக அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் இது தொடர்பாக ஈடுபாடுடைய குழுக்கள் மற்றும் மக்களை இந் நிகழ்வுத்திட்டத்தில் முன்வந்து இணைந்து செயற்பட நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.

நவம்பர் 02, 2008 இலிருந்து நவம்பர் 09, 2008 வரை ரொறன்ரோ மாநகரில் CanadianHART பிரச்சார நிகழ்வு நடைபெறுகின்றது. நவம்பர் 5 தொடக்கம் 7 வரை தொடர்ச்சியாக 72 மணிநேரம் டவுண்ரவுண் ரொறன்ரோவில் நடைபெறும் காட்சிப்படுத்தலிலும் கண்காட்சியிலும் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை, நவம்பர் 7, 2008 இல் அனைத்துலகத்தின் உடனடித் தலையீட்டிற்கு வேண்டுகோள் விடுத்து இவ் 72 மணிநேரக் காட்சிப்படுத்தலும் கண்காட்சியும் முடிவுக்கு வருகிறது.

நிறைவு நாள் நிகழ்வுகள் வெள்ளி மாலை 5:30 மணியிலிருந்து 8:00 மணிவரை இடம்பெறும்போது, அமைதி மற்றும் மனிதாபிமான பணியாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூகப்பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு:

Tamil IDP-HART Communications

தொலைபேசி : 416-838-9637 (பொது)

மின்னஞ்சல் : info@tamilidpcrisis.com

இணையத்தளம் :www.tamilIDPcrisis.org

  • கருத்துக்கள உறவுகள்

Young & Dandas திறந்தவெளிச்சதுக்கத்தில்

72 மணிநேர தொடர்விழிப்புப் போராட்டத்தின் முதலாம் நாள்

IMG_0001.jpg

IMG_0003.JPG

IMG_0007.JPG

IMG_0012.JPG

IMG_0014.JPG

IMG_0027.JPG

IMG_0049.JPG

IMG_0052.JPG

IMG_0250.JPG

72 மணிநேர தொடர் விழிப்புப் போராட்டம் முதலாம் நாள்

IMG_0264.JPG

நாம் மாறி மாறி ஒருத்தரை ஒருத்தர் குறை கூறாது செயலில் ஈடுபடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடியத் தமிழரால் முன்னெடுக்கப்படும் பல்லின மக்களை நோக்கிய விழிப்புணர்வு வாரம்

தாயக மக்களின் அவலநிலைகளை வெளியுலகிற்கு எடுத்துக்கூறும் முகமாகவும், அவ் அவல நிலைகளைத் தொடராவண்ணம் அங்குள்ள எம் மக்களைப் பாதுகாக்கவும் உலகெலாம் வாழும் தமிழர்களால் விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவற்றின் தொடர்ச்சியாக கனடிய மண்ணில் மேற்கொள்ளப்படும் அல்லலுறும் மக்களின் விடிவிற்காக உங்கள் கண்களைத் திறவுங்கள் எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் வாரத்தின் 4ம் நாளான இன்று காட்சிப்படுத்தலும் கண்காட்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 72 மணிநேரத்திற்கு நடைபெற ஏற்பாடாகியுள்ள இக் கண்காட்சி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவுப்பொழுதைத் தொட்டுள்ள இவ்வேளையிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கனடாவில் குளிர்காலம் ஆரம்பித்துள்ள இவ்வேளையில் அக் குளிரினையும் பொருட்படுத்தாது பலர் மிகவும் ஆர்வத்துடன் இன்றைய இரவுப் பொழுதைத் தாயக உறவுகளின் துயர்துடைப்பதற்காக திறந்த வெளியரங்கில் கழித்துக் கொண்டுள்ளார்கள்.

பல்லின மக்களும் வந்து செல்லும் மிகவும் சனநெருக்கடி மிகுந்ததும், பல இன்னிசை நிகழ்வுகளை நடாத்திப் புகழ் பெற்றதுமான ரொறன்ரோ மத்திய பகுதியான Dundas மற்றும் Younge சந்திக்கருகில் அமைந்திருக்கும் டன்டாஸ் சதுக்கத்தில் இந் நிகழ்வு இடம்பெறுகின்றது. இன்று ஆரம்பித்த நேரம் தொட்டு பல்லின மக்களும் மிக ஆர்வத்துடன் இக்கண்காட்சியைப் பார்வையிட்டு அவை தொடர்பான விளக்கங்களைப் பெற்றுச் சென்றுகொண்டிருந்தார்கள். DVD வடிவிலும் தாயக உறவுகளின் துன்பங்கள் எடுத்துக்கூறப்படுகின்றன.

இவ்வாறு இளைய சமுதாயத்தினர் மேற்கொண்டுள்ள இந்நிகழ்வினை கனடியப் பிரபல இசைநிகழ்ச்சியை வழங்கும் Much Music தொலைக்காட்சி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பிலே இணைத்து அங்கு சென்றிருந்த இளையோரை மிகவும் உற்சாகமாக வரவேற்று பல்லின மக்களிடையேயும் எடுத்துச் சென்றிருந்தது.

இதில் பல தமிழ் மக்களும் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டதனைக் காணக்கூடியதாக இருந்தது. இந் நிகழ்வில் இளைய சமுதாயம் மட்டுமல்ல வெகு தொலைவில் இருந்தும் பல முதியவர்களும் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் தொடங்கிய அரசியற் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்வு இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந் நிகழ்வுகள் தொடர்ந்து நவம்பர் 9ம் திகதிவரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளன.

தமிழ் இளையோர் அமைப்பின் செய்தி குறிப்பிலிருந்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக எழுச்சியுடனும், உணர்வு பூர்வமாகவும் கனேடிய தமிழர்களின் பரப்புரைகள் நடைபெற்று வருகின்றது. பல இளைஞர்கள் வயோதிபர்கள் என பல வட்டத்தை சார்ந்தவர்களும் இத் துண்டுப்பிர விநியோகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன

Edited by Paravaikal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.