Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்துக்கு ஓர் பயணம்..........

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்துக்கு ஓர் பயணம்..........

கவிதை....

சிறுவனாய் அன்று

சிட்டுக்கள் வால் பிடித்து

சுற்றிவந்த தெருக்களெல்லாம்

வசந்தமாய் நினைவில் வர

வானூர்தியில் அமர்ந்து

வாழ்ந்த நிலம் செல்கிறேன்....

வட்ட நிலவுகளாய்

வண்ண நிறங்களாய்

குருவிக் கூட்டங்களாய்

குளிர்விக்கும் வசந்தங்களாய்

கூடி நின்ற எங்கள்

சின்னஞ்சிறு காதலிகள்

கூடிவந்த தெருக்கள் என்றும்

எந்தன் நினைவுகளில்

இன்பக் கனவுகளாய்

அன்று நான் நண்பனிடம்

அவள் என் கிளியென்பேன்

அவளோ தன் தோழியிடம்

அவன் என் புலியென்பாள்

இப்படியாய் பல பல

பள்ளிக் கால விளையாட்டு

இவையெல்லாம்

மனங்களில் மறையாத

இன்பத் தேனூற்று....

சிட்டுக்களைச் சிறைபிடிக்க

அவசரமாய் செல்வதென்றால்

அம்மா காய்ச்சி வைத்த

பால் கூட

அன்று எனக்கு கள்ளாகும்

பானையிலே கிடந்த

பழஞ்சோறும் தேனாகும்......

அண்ணாவின் அரை பெனியன்

நம் சயிக்கிலை அழகாக்கும் .....

அம்மாவின் காசுப்பையில்

காசுகள் மாயமாகும்.....

வீடு தாண்டிச் சென்றுவிட்டால்

என் சயிக்கிலும்

சாதனைகள் பல செய்யும்....

சமயத்தில் எங்கள்

வாகன வீதி கூட

நம் சயிக்கிலுக்கு

வான வெளியாகும்.....

இப்படியாய் நாமெல்லாம்

விளையாடி மகிழ்ந்த தெரு

இன்று நம் கண்களிலே

வேதனையின் சின்னங்களாய்...

எவர் கண்கள் பார்த்தாலும்

அடங்காத வேதனையின்

அடையாள அழிவுகளாய் ....

வீதித் தார் கூட தாங்காத

தடங்களுள்ள சோகங்களாய் ....

வீதி மண்கூட மறைந்து விட்ட

வரலாற்றுக் கொடுமைகளாய்....

மரம் கூட நிம்மதியாய்

மூச்சுவிட மறந்துவிட்டு

மரண பயங்கொண்டு அசையாமல்

மெளனமாய் நிற்கிறது.....

நாம் எல்லாம் கூடி நின்று

கும்மாளம் போட்ட தெரு

கொடுங்கோல் ஆட்சியினால்

குப்பறக் கிடக்கிறது...

ஈழத்தின் சிட்டுக்களாம்

எங்கள் அழகுச் சின்னங்களின்

மயக்கும் கண்களெல்லாம்

மயான அமைதியுடன்

மெளனக்கண்ணீர் பொழிகிறது......

இனிய தமிழென்று

உலகம் புகழ்ந்த

நம் தமிழ் இன்று

வாய்கள் பூட்டப்பட்டு

ஊமையாய் திரிகிறது..

எங்களின் சுதந்திரம்

இவ்வளவுதான் இன்று....!

திறந்தவெளிச் சிறையில்

நடமாடும் சுதந்திரம்......

தின்றுவிட்டு வீட்டுக்குள்ளே

படுத்துக்கொள்ளும் சுதந்திரம்

பல நாட்கள் பட்டினியாய்

பழகிக்கொள்ள சுதந்திரம்......

எங்கள் பட்டினிச் சாவுக்கு

விடை தெரியாச் சுதந்திரம்.......

பறப்பன வந்துவிட்டால்

பதுங்கு குழியில்

பதுங்கிக் கொள்ளும் சுதந்திரம்.....

பயந்தவண்ணம் இரவுகளில்

படுத்துக்கொள்ளும் சுதந்திரம்.....

பன்னிரென்டே வயதான

பருவமடையாச் சிறுமியின்

பரிதாபக் கற்பழிப்பை

கண்டுகொள்ளும் சுதந்திரம்.....

இப்படியாய் நாம் வாழ்ந்த

இனிய தெருக்களெல்லாம்

இன்றிக்கும் நிலை சொன்னால்

வழிந்தோடும் சோகங்கள்

நான் திரும்பிவரும் வழிகளிலே

மனிதப் படுகுழிகள்

வந்த வழி எல்லாமே

நம் வீர மறவர்களின்

வீரத்தின் சின்னங்கள்........

நம் நெல் விழைந்த

வயல்கள் எல்லாம்

இன்று புற்களுக்கு

புது வனங்கள்...

எங்கள் சோகங்களின் தொடர்ச்சி

தொலைதூரம் தெரிகிறது....

இன்னும் பல பலவாய்

தமிழீழ மண்ணின் மறுக்கப்பட்ட

உண்மைகளும் தெரிகிறது.....

எங்கும் அழுகுரல்கள்

எல்லாமே அழுகுரல்கள்

எங்கள் அழு குரலை

அடக்கிக் கொல்லும்

புத்த அண்ணர்களின்

படு கொலைகள்....!

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கோ தொடங்கி

எங்கோ முடியும்

ஈழ மக்களின் பெயர்வு போல்

ஏதோ சொல்லி எங்கோ

எகிறி பாய்ந்நதிருக்கிறது

எழுத்து...!

எல்லாமே உணர்வாக

இல்லாமல் போகட்டும்

உறவுகள் துயர்...

பாராட்டுக்கள் இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Paravaikal

முதலில் பாராட்டுக்கு நன்றிகள்...

தனித்தனியாக ஒவ்வொரு உணர்வுக்குமாய் எனது ஆக்கம் இல்லாமல் உணர்வுகளின் கலவையாய் சொன்னால் மக்களிடம் இலகுவாகச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் எழுதப் பட்ட கவிதை.....

உங்கள் வாழ்த்து எனது முயற்சிக்கு பிள்லையார் சுளி போட்டது போல் அமைந்துவிட்டது.

மேலும் கவிதையில் தரப்பட்டவை அனைத்தும் ஒவ்வொரு ஈழக் குடிமகனின் இன்றைய உணர்வுகள் தானே...

மீண்டும் நன்றிகள் ...

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி எனது கருத்து உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்! உங்கள் எழுத்துக்கு தலைவணங்குகின்றேன். கவிதையை பாராட்டி விட்டு போவது இலகு ஆனால் அதை எழுதுவது எவ்வளவு கடினம் (நம்மை போன்றவர்களுக்கு) என்று நன்றாகவே எனக்கு தெரியும்! :)

ஆனால் ஒன்றை சொல்லலாம் என்று நினைக்கின்றேன் ! கவிதையை முயற்ச்சித்து ஒரு 15- 20 வரிகளுக்குள்ளாவது முடிக்க பாருங்கள் அது உங்கள் கவிதைக்கு அழகையும் வாசகர்களுக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டும்! ( தவறெனில் மன்னிக்கவும்)

Edited by Paravaikal

இளங்கவி..

இதயம் நினைவில் நனைந்தது

ஒரு கணம்..

நினைவே சுமையாய் கனந்தது

மறுகணம்..

தென்றலில் கலந்த புயலாய்..

தேகத்தில் நுழைந்த அனலாய்...

சோகத்தின் சொற்பொழிவுகள்..

நிஜத்தின் கல்வெட்டுகள்..

நானும் அழுகிறேன்..

வெந்து விழும் கண்ணீரில்

வேதனை இன்னுமெரிய...

நானும் அழுகிறேன்..நண்பா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Paravaikal

நான் பாராட்டை ஏற்றுக்கொண்டு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்பவன், காரணம் பாராட்டுக்கள் மேலும் மேலும் எழுதத் தூண்டும், விமர்சனங்கள் என்னை திருத்திக் கொள்ள உதவும், எனவே ஒரு படைப்பாளியின் முன்னெற்றத்துக்கு பாராட்டும் , விமர்சனமும் இரு கண்களைப் போன்றவை என்பது என் கருத்து.

மேலும், எங்கள் உணர்வுகளைச் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் போதாது...! இருந்தும் இக்கவிதை உணர்வுகளின் கலவையாகத் தந்த படியால் அறுபது சிறிய வரி வரை நீண்டுவிட்டது. எனது அடுத்த ஆக்கத்தில் நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன்....

கருத்துக்கு மிக்க நன்றி...

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vikadakavi

என் கவிக்கு உங்கள் பதில் என்னை கண் கலங்க வைத்துவிட்டது..... நிஜமாகவே....

மலை போல கவி தரும் நீங்கள், இந்த மடுவின் கவியையும் ரசித்ததற்கு மிக்க நன்றி.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்கு ஓர் பயணம்..........

கவிதை....

வீடு தாண்டிச் சென்றுவிட்டால்

என் சயிக்கிலும்

சாதனைகள் பல செய்யும்....

சமயத்தில் எங்கள்

வாகன வீதி கூட

நம் சயிக்கிலுக்கு

வான வெளியாகும்.....

மரம் கூட நிம்மதியாய்

மூச்சுவிட மறந்துவிட்டு

மரண பயங்கொண்டு அசையாமல்

மெளனமாய் நிற்கிறது.....

இளங்கவி

வீடுதாண்டி ஊர் முகப்புவரை அமைதிகாத்த மிதியுந்து

வீரபத்திரர் கோவில் தாண்டினால் விண்ணேறிப்பறக்கும்

குறுக்காலை போனதுகளின்ரை தொல்லை பெருந்தொல்லை

என் ஊர்ப்பெருசுகள் திட்டும்படியும் சயிக்கிள் ஓடிய ஞாபகங்களை நினைவுபடுத்தியுள்ளது உங்கள் வரிகள்.

மரம்கூட மூச்சுவி முடியாமல் கலங்கள் இயற்கையை கிழித்தெறியும் கொடுமை மிக்க நமது தேசத்தின் அவலம் சொன்ன அருங்கவியில் பதின்மவயது ஞாபகங்களை எனக்குள்ளும் விதைத்த தங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள் இளங்கவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

shanthy

எங்கள் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் இருக்கும் உணர்வுகளை முடிந்த வரைக்கும் இயல்பானதாக சொல்ல முயன்றதன் வெளிப்பாடே இந்தக் கவிதை.

கவிதையை ரசித்து அதிலிருக்கும் சோகங்களையும் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி...

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.