Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடல் உறுப்பு தானம் செய்வதாக 'விபரீதம்': 'துறுதுறு' மகனை 'கூரறுக்க' தயாரான பெற்றோர்

Featured Replies

tblfpnnews_86128962040.jpg

கோவை: உடல் உறுப்பு தானம் குறித்து தெளிவான வழிமுறைகள் தெரியாமல் பலரும் ஆர்வக்கோளாறு காரணமாக, தவறான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, கோவை கலெக்டர் அலுவலகம் வந்த பெற்றோரால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரையிலும் ரத்த தானம், கண் தானம் பற்றியே சமூக அமைப்புகள் அதிகமாக வலியுறுத்தி வந்தன. சென்னையில் விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பின், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதயேந்திரனுக்குப் பின் சேலம், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மூளை செயல் இழந்த சிலரது உடல் உறுப்புகள், அவர்களது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இதுபற்றிய தெளிவான வழிமுறைகள், மருத்துவ உண்மை தெரியாமல் பலரும் தவறான முடிவுகளை எடுப்பதாகவும் தெரிய வருகிறது.

இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டபோது, அதற்குக் கிடைத்த அதீத வரவேற்பும், "மீடியா'க்கள் கொடுத்த அதிமுக்கியத்துவமும் பலரையும் ஈர்த்துள்ளது. ஆனால், இதயேந்திரனின் தாய், தந்தை இருவருமே டாக்டர்கள் என்பதையும், அவர்கள் அந்த முடிவை எடுத்ததற்கான சூழல் எத்தகையது என்பதையும் பலரும் மறந்து விடுகின்றனர். தங்களது குடும்பத்திலும் இத்தகைய உடல் உறுப்பு தானம் செய்தால், தங்களது குடும்பத்துக்கும் பெரிய அளவில் புகழ் கிடைக்கும் என்ற தவறான எண்ணமும் பலரது மத்தியில் உருவாகியுள்ளது. இது சிலரை தவறான முடிவு எடுக்கவும் தூண்டி விடுகிறது.

கோவை காரமடையைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராஜாராம் - கவிதா தம்பதியினர் எடுத்த முடிவும் இத்தகையதே. இவர்களது ஐந்து வயது மகன் நவீன் குமாருக்கு மூளை வளர்ச்சி இல்லை. ஆனால், எப்போதும் "துறுதுறு'வென்று நடமாடிக் கொண்டிருக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறான். குழந்தையாக இருக்கும்போதே இந்த குறைபாடு பற்றி தெரியவில்லை. சில நடவடிக்கைகளைப் பார்த்து மூளை வளர்ச்சி இல்லாததைத் தெரிந்து கொண்டனர். டாக்டரிடம் அழைத்துச் சென்ற போது, "உங்கள் மகனின் மூளையின் எடை குறைவாக உள்ளது; சில காலம் தான் உயிர் வாழ்வான்' என்று கூறியதாகத் தெரிகிறது. இந்த நேரத்தில் தான், இதயேந்திரன் பெற்றோரின், பரந்த இதயம் உலகுக்கு தெரிய வந்தது. உடனே, இவர்களும் அதே பாணியில் நவீன்குமாரின் உடல் உறுப்புகளை இப்போதே தானம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி பகிரங்க அறிவிப்பு வெளியிட்ட அவர்கள், உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அனுமதி பெறுவதற்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில் மனு கொடுத்தனர். அப்போது குழந்தை நவீன்குமாரையும் அழைத்து வந்தனர். பரிதாபத்துக்குரிய அந்த குழந்தையுடன் அவர்கள் வந்ததை அறிந்த பத்திரிகையாளர்கள், அவர்களைச் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தனர். அப்போது, குழந்தை நவீன்குமாரின் நிலையை விளக்கி அவர்கள் கண்ணீர் வடித்தனர். அவர்கள் மனு கொடுத்தபோது, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கில்லை. அவர்கள் வந்த பின், இந்த மனுவைப் பற்றி விசாரித்து அதை வாங்கிப் பார்த்தனர்.

அந்த மனு மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி கலெக்டர் பழனிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கூறுகையில், "இதுபோன்ற தவறான அபிப்பிராயங்களை ஊக்குவிக்கக் கூடாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அந்த பெற்றோரால் பார்க்க இயலாத பட்சத்தில், அக்குழந்தையை பராமரிக்க எத்தனையோ இல்லங்கள் இருக்கின்றன. அங்கு சேர்க்கலாம்; இதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். நன்றாக இருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய நினைப்பது பெரும் தவறு' என்றனர்.

இதயேந்திரனின் பெற்றோர், டாக்டர்கள் என்ற முறையில் ஒரு நல்ல விஷயத்தை மக்கள் மனங்களில் விதைத்தனர். ஆனால், பல பெற்றோர், மனித நேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, அதற்கு "உயிரோடு சமாதி' கட்ட முயற்சிக்கின்றனர் என்பது வேதனை தரும் விஷயம்.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...43&cls=row3

பாவி மனுசா

சாதாரணமாக பார்க்கையில் இது தவறான செயற்பாடு தான். ஆனால் எத்தகைய வேதனையின் அடிப்படையில் இம்முடிவிற்கு அவர்கள் வந்திருப்பார்கள் என்பதையும் சற்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாகவே மற்றைய குழந்தைகள் சாதாரணமாக ஓடி ஆடி விளையாடுவதைப் பார்க்கும் இந்தப் பெற்றோர்களுக்கு, தமது குழந்தையின் இந்நிலை தினம் தினம் எவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்கும். அந்த வேதனை தினம் தினம் அனுபவிக்கும் அவர்களுக்குத் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் வசம்பு . ஆனால் என்ன குறைபாடாக இருந்தாலும் , தன் குழந்தையை உயிருடன் கூறு போட முயற்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது .

இப்படி குறைபாடாக பிறக்கப் போகும் குழந்தைகளை , கருவிலேயே கண்டு பிடிக்க வைத்திய வசதிகள் இன்னும் வரவில்லையா ?

அவர்களின் செயல் தவறானது தான். ஆனால் அவர்களின் மன நிலையையும் நாம் உணர வேண்டுமென்பதையே சுட்டிக் காட்்டினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி குறைபாடாக பிறக்கப் போகும் குழந்தைகளை , கருவிலேயே கண்டு பிடிக்க வைத்திய வசதிகள் இன்னும் வரவில்லையா ?

தமிழ்சிறி..

நவீன மருத்துவத்தில் சில வழிமுறைகள் உள்ளன. அதாவது, பெண் தாய்மை அடைந்து ஆறாவது மாதத்தில் இரத்தப் பரிசோதனை செய்யப்படும். பலவகை கணக்குகளின் முடிவில் ஒரு இலக்கம் வரும். இது 210 ஐ தாண்டினால் மூளைவளர்ச்சி குன்றியதாகக் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. நன்றாகக் கவனியுங்கள் வாய்ப்பு மட்டுமே உள்ளது. அப்போது இரண்டு வாய்ப்புகள் தருவார்கள். ஒன்று கருக்கலைப்பு செய்வது. இரண்டாவது, மேலதிக பரிசோதனைகள் செய்தல். மேலதிக பரிசோதனையில், தாயின் வயிற்றின் ஊடாக ஊசி மூலம் பனிக்குடத்திலிருந்து திரவத்தை எடுத்துப் பரிசோதனை செய்வார்கள். இதன் மூலம் குழந்தையின் மூளைவளர்ச்சி பற்றி அறுதியிட்டுக் கூறலாம். ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் பனிக்குடத்தில் ஊசி ஏற்றியபிறகு அதுவாகவே கருச்சிதைவு ஆவதற்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, முடிவெடுப்பதை பெற்றோரிடமே விட்டுவிடுவார்கள்.

காரமடையில், புதுக்குடியிருப்பில், தெல்லிப்பழையில் இந்த வசதி கிடைக்குமோ டங்குவார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நாசமறுப்பே :lol::) . தானம் செய்வது என்றாலே என்னவென்று தெரியாத கூட்டமாக இருக்குதுகளே.தானம் செய்வது என்றால் உதாரணமாக அன்னதானம். நாம் உண்டு எமது பசியை ஆற்றிய பின்பு மேலதிகமாக உள்ளதைத்தான் தானமாக மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் அது தான் தானம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி..

நவீன மருத்துவத்தில் சில வழிமுறைகள் உள்ளன. அதாவது, பெண் தாய்மை அடைந்து ஆறாவது மாதத்தில் இரத்தப் பரிசோதனை செய்யப்படும். பலவகை கணக்குகளின் முடிவில் ஒரு இலக்கம் வரும். இது 210 ஐ தாண்டினால் மூளைவளர்ச்சி குன்றியதாகக் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. நன்றாகக் கவனியுங்கள் வாய்ப்பு மட்டுமே உள்ளது. அப்போது இரண்டு வாய்ப்புகள் தருவார்கள். ஒன்று கருக்கலைப்பு செய்வது. இரண்டாவது, மேலதிக பரிசோதனைகள் செய்தல். மேலதிக பரிசோதனையில், தாயின் வயிற்றின் ஊடாக ஊசி மூலம் பனிக்குடத்திலிருந்து திரவத்தை எடுத்துப் பரிசோதனை செய்வார்கள். இதன் மூலம் குழந்தையின் மூளைவளர்ச்சி பற்றி அறுதியிட்டுக் கூறலாம். ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் பனிக்குடத்தில் ஊசி ஏற்றியபிறகு அதுவாகவே கருச்சிதைவு ஆவதற்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, முடிவெடுப்பதை பெற்றோரிடமே விட்டுவிடுவார்கள்.

பொதுவாக ஒரு பெண் கருக்கட்டி 20வது வாரமளவில் வளரும் சிசு உள்ள இடத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு மரபணு பரிசோதனை செய்வார்கள். மேலும் சில பரிசோதனைகள் செய்வார்கள். அதிலிருந்து குறைபாடுகள் இனங்காணப்பட்டு தீவிரமான குறைபாடுகள் இருப்பின் மட்டுமே பெற்றோரின் அனுமதியோடு கருக்கலைப்புச் செய்வார்கள்.

ஆனால் இப்படியும் சங்கதிகள் நடக்கிறது. இன்று ஏறத்தாள எல்லாப் பெண்களுமே கருத்தடை மாத்திரைகளைப் பாவித்து குழந்தை உருவாகாத வகையில் உடலறுவு வைத்துக் கொள்கின்றனர். அது அவர்களின் சொந்த விடயம் தான். ஆனால் அதில் 90% மட்டுமே வெற்றியளிக்கும். மிகுதி 10% கருத்தடை மாத்திரைகள் சரிவரக் கையாளப்படாமையால் குழந்தை உருவாகி.. அதை உணராமல் தொடர்ந்து கருத்தடை மாத்திரையை விழுங்கிக் கொண்டு உடலுறவு கொண்டு.. அதன் மூலம் உருவான கருவை ஊனமாக்கி.. சிதைவடையச் செய்யும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதற்கு யாரைச் சொல்லி.. எதைச் சொல்லி.. சமாளிக்கிறது..??! :(:rolleyes:

முடியல்லங்க.. நம்ம மனித மிருகங்களுக்கு உள்ள பசியின் அளவை உணர முடியல்லங்க..! இப்படி எல்லாம்.. இந்த மிருகங்கள் செயற்பட நவீன மருத்துவம்.. தவறாக மக்களை வழிநடத்துவதும் ஒரு காரணம் என்றே கூற வேண்டும்.

பொதுவாக போர் பிராந்தியங்களில் அடிப்படை வசதிகள் கிடைப்பது அரிது. எனவே தான் அங்குள்ள மக்களுக்கு போர்க்கால துரித மீட்பு அல்லது கவனிப்பு என்பதன் கீழ் வசதிகள் வரையறைகளுக்குட்பட்டு அளிக்கப்படுகின்றன. அதனை மையமாக வைத்து.. அங்கெல்லாம் நவீன மருத்துவம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புவது உலக நிலவரத்தை சரியாக விளங்கிக் கொண்டுதான் இவ்வாறான கேள்விகள் எழுகின்றனவா என்பதே ஒரு கேள்விக்குறி..??! :)

Edited by nedukkalapoovan

இந்தியாவில் மனவளர்ச்சி குறைந்த நிலையில் உள்ளவர்களது பாதுகாப்பகங்கள் உள்ளன.

அங்கேயாவது சேர்க்கலாம்.

இதோ ஒரு தகவல் :

http://www.adhikaalai.com/index.php?option...&Itemid=163

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.