Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர்.மற்றவர் கா.சிவத்தம்பி.தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள்அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள்.

மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருதமொழி இந்தியா முழுவதும் பரவியிருந்தமொழி எனவும் இலக்கண,இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கியமொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள்கிரேக்க,உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது,சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க நூல்கள் மேற்குலகில்கவனம்பெற உழைத்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எனும் இருவரும் என்றும் தமிழர்களால் நன்றியுடன் போற்றத்தக்கவர்களே.

க.கைலாசபதி கிரேக்க வீரநிலைக் கவிதைகளுடன் சங்க இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வுசெய்து 1966 இல் Tamil Heroic Poetry (தமிழ் வீரநிலைக் கவிதை) என்னும் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கா.சிவத்தம்பி அவர்கள் 1970 இல் பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் (Drama in Ancient Tamil Society) என்னும் தலைப்பில் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவ்விரு ஆய்வேடுகளும் உலக அளவில் அனைவராலும் மதிக்கப்படும் ஆய்வுத்தரத்தன. ஈழத்து இரட்டை அறிஞர்களான இவ்விரு அறிஞர்களுள் கா.சிவத்தம்பியின் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரை நினைவுகூர்கிறது.

கா.சிவத்தம்பி இளமை வாழ்க்கை

கா.சிவத்தம்பி அவர்கள் யாழ்ப்பாணம் அருகில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் 1932,மே பத்தாம் நாள் பிறந்தவர்.பெற்றோர் கார்த்திகேசு,வள்ளியம்மை அவர்கள்.தந்தையார் பண்டிதராகவும் சைவப் புலவராகவும் விளங்கியவர். எனவே சிவத்தம்பி அவர்களுக்கு இளமையில் கல்வியார்வம் தழைக்க வாய்ப்பு மிகுதியாக இருந்தது.கரவெட்டி விக்கினேசுவரா கல்லூரியில் தொடக்கக் கல்வியையும்,கொழும்பு சாகிராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றவர்.இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(1956), முதுகலைப்(1963) பட்டங்களைப் பெற்றவர்.1970இல் பர்மிங்காம் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வேடு பலதுறைச்செய்திகளை உள்ளடக்கி வெளிவந்த ஆய்வேடாகும்.

தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றி விரிவாக ஆராயும் இவர்தம் ஆய்வேட்டில் கிரேக்க நாடகங்களின் தோற்றம்,வளர்ச்சி,தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.அதுபோல் தொல்காப் பியம்,சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் கல்வெட்டுகள், நாணயங்கள் உள்ளிட்ட தரவுகளை உட்படுத்தி தம் ஆய்வை சிவத்தம்பி நிகழ்த்தியுள்ளார். எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு ஆய்வுகளை எளிமைப்படுத்தி முனைவர் பட்டம் பெறும் இக்காலச்சூழலில் இவ்வாய்வேட்டின் தரவு தொகுப்பு,வகைப்படுத்தல்,ஆய்வு செய்தல் ஆங்கிலத்தில் எழுதுதல் எனப் பல கட்டங்களைத் தாண்டியே இவர் ஆய்வு நிகழ்ந்துள்ளது.தமிழக வரலாறு,சமூக அமைப்பு உள்ளிட்ட பல தகவல்கள் இவ்வாய்வேட்டில் விளக்கப்பட்டுள்ளன.

கா.சிவத்தம்பியின் முனைவர் பட்ட ஆய்வுநூல்

ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட ஆய்வேடு பத்தாண்டுகளுக்குப் பிறகு திருத்தங்களுடனும் கூடுதல் செய்திகளுடனும் 1980 அளவில் புது நூற்றாண்டுப் புத்தக நிறுவனத்தின் வழியாக வெளிவந்தது.அந்த நூல் தமிழக அரசின் சிறந்த பரிசினையும் பெற்றது.25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களால்(சிவத்தம்பி அவர்களின் மாணவர் இவர்) மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

சிவத்தம்பியின் ஆய்வேடு வெளிவந்த பிறகு தமிழின் மிகப்பெரிய துறைகளுள் ஒன்றாக இருக்கும் நாடகத்துறை பற்றிய விழிப்புணர்ச்சி ஈழத்தில் ஏற்பட்டது.பாடத்திட்டங்களில் நாடகம் முதன்மை இடம்பெற்றது.பல மாணவர்கள் நடிக்கவும் ஆராயவும் இத்துறையில் புகுந்தனர்.தமிழ் நாடகம் இவ்வாய்வேட்டின் வருகைக்குப் பிறகு ஈழத்தில் மறுமலர்ச்சி பெற்றது எனலாம்.தமிழகத்து அறிஞர்களும் நாடகத்துறையில் கவனம் செலுத்த இந்த நூல் ஒரு காரணமாக அமைந்தது.

சிவத்தம்பி தொடக்கத்தில் கொழும்பு சாகிராக் கல்லூரியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பதினேழு ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து,செர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் கல்வி நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கல்வி நிறுவனங்களின் அழைப்பின்பேரில் சிறப்புரைகள் வழங்கித் தமிழாய்வுப் புலத்தில் ஆக்கப்பணிகள் புரியும் கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை வியப்பளிக்கிறது.தமிழ்ப்பேரா

சி.த மீது ஆழ பற்றுள்ள ஒருவன் நான். அவர் எந்த பெயரில் (புனை பெயரில்) எழுதி இருந்தாலும் அதனைக் கண்டு பிடிக்கும் அளவிற்கு அவரிம் நிறைய நூல்களை (முக்கியமாக யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல் மற்றும் சர்நிகரில் அவர் தொடர்ந்து எழுதிய பல அரசியல் கட்டுரைகள்) படித்தவன் நான்

ஆயினும்

எக் காலத்திலும் என்னால் அவரின் இரு விடயங்களை மறக்க முடியாது

ஒன்று, யாழை விட்டு முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தினை நியாயப்படுத்திய பாதக செயல்

இரண்டு, செல்லன் கந்தையா எனும் ஒரு தலித் யாழ் தமிழன் மீண்டும் யாழ் நூலகத்தினை திறக்கும் போது காட்டிய எதிர்பு (அதே நூலகம் 3 மாதத்தின் பின் மீண்டும் திறக்கப்படும் போது அவர் திறக்க வேண்டாம் என்று சொன்ன காரணங்கள் அப்படியே அவரின் மெளனத்தினை போல இருந்தன )

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அறிவாளியாக சிவத்தம்பி சேர் தமிழுக்கு இருப்பது மிகச்சிறப்பு. இப்படியான பேராசிரியர்களை காண்பது அரிது. அவருடன் பல தடவைகள் பேசிக்கொண்டிருக்கிறேன்.செவ

Edited by ANAS

  • கருத்துக்கள உறவுகள்

29 2008இ 04:26

சி.த மீது ஆழ பற்றுள்ள ஒருவன் நான். அவர் எந்த பெயரில் (புனை பெயரில்) எழுதி இருந்தாலும் அதனைக் கண்டு பிடிக்கும் அளவிற்கு அவரிம் நிறைய நூல்களை (முக்கியமாக யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல் மற்றும் சர்நிகரில் அவர் தொடர்ந்து எழுதிய பல அரசியல் கட்டுரைகள்) படித்தவன் நான்

ஆயினும்

எக் காலத்திலும் என்னால் அவரின் இரு விடயங்களை மறக்க முடியாது

ஒன்றுஇ யாழை விட்டு முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தினை நியாயப்படுத்திய பாதக செயல்

இரண்டுஇ செல்லன் கந்தையா எனும் ஒரு தலித் யாழ் தமிழன் மீண்டும் யாழ் நூலகத்தினை திறக்கும் போது காட்டிய எதிர்பு (அதே நூலகம் 3 மாதத்தின் பின் மீண்டும் திறக்கப்படும் போது அவர் திறக்க வேண்டாம் என்று சொன்ன காரணங்கள் அப்படியே அவரின் மெளனத்தினை போல இருந்தன

நிழலி நீங்களும்தான் புனைபெயரிலை எழுதிறீங்கள் நாங்கள் யாரெண்டு கண்டு பிடிக்கிறம்.யாழில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது அந்தக்காலகட்டத்தில் சரியானதே என்று நானும் தொடர்ந்து எழுதியும் சொல்லிக்கொண்டுத்தான் வருகிறேன்.அது நியாயமானதுதான் என்று பேராசிரியரும் சொல்லியிருந்தார். மற்றது யாழ் நூலக விடயத்தினை செல்லன் கந்தையன் என்கிற ஒரு மனிதனின் விடயமாகப் பாருங்கள்.நீங்களும் அதில் தலித் டின்கிற பதத்தினை பாவித்து மற்றறை மாற்றுக்கருத்து என்கிற பெயரில் மலினமான வேலைகளை செய்துகொண்டிருப்பவர்களைப்ப

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனையைத் தூண்டிய கருத்தரங்கு

- முத்தையா வெள்ளையன்

ஒவ்வொரு சமூக அமைப்பும் தன்னுடைய இலக்கியங்களோடு தன்னைக் கட்டமைத்துக் கொள்கிறது என்ற முன் மொழிவோடு தனது ஏற்புரையைத் தொடங்கினார் இலங்கையைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் பேராசிரியர் கா.சிவத்தம்பி.

சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையும் டொரண்டோ பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வு மையமும் இணைந்து டிசம்பர் 12 முதல் 14 வரை கார்த்திகேசு சிவத்தம்பியின் வகிபாகமும் திசைவழிகளும் என்ற தலைப்பில் மூன்று நாள் நடத்திய கருத்தரங்கின் நிறைவில் தான் சிவத்தம்பி இவ்வாறு குறிப்பிட்டார். இலக்கியம் காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல; சமூகத்தின் கண்ணாடியுமாகும் என்பது பன்முக ஆய்வுகளில் தெரியவரும்.

1960களில் தொடங்கி அரை நூற்றாண்டு காலத்தை நெருங்கும் நிலையில் தமிழ் இலக்கியத் தளத்தை அதன் ஆய்வுத் தளத்தை நுணுகிய பார்வையின் பக்கம் திருப்பிய பெருமை கா. சிவத்தம்பிக்கு உண்டு. அவரது நுண்மாண் நுழை புலம் வழமையான உணர்ச்சிபூர்வ முறையை மாற்றி தமிழர்களின் சமூக வாழ்க்கையோடு உரசி ஒப்பிட்டு அறிவுபூர்வ ஆய்வு முறைக்கு இட்டுச் சென்றது. மிகச் சிறந்த வழிகாட்டி ஆய்வாளர்களில் ஒருவரான அவர், இந்தக் கருத்தரங்கில் பேசும் போது, தனது பள்ளி, கல்லூரி வாழ்க்கையையும் குடும்பத்தினர் பற்றிய நினைவுகளையும் உணர்ச்சி ததும்ப முன்வைத்தார். இலங்கைப் பேராசிரியர் கைலாசபதி, தமிழகத்தின் இலக்கிய ஆய்வு முன்னோடிகளான தொ.மு.சி. ரகுநாதன், வி.ஐ. சுப்பிரமணியம் ஆகியோருடன் தமக்கிருந்த தொடர்பையும் தமது ஆய்வுப் பணியில் அவர்களின் பங்களிப்பையும் மறவாமல் குறிப்பிட்டார்.

இன்றைய ஆய்வு நிலைகளோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒரு காலக்கட்டத்தோடு தாம் தேங்கிப்போனதாகவும் இன்றைய ஆய்வுகள் மார்க்சீய அடிப்படையில் வேறொரு பரிமாணத்திற்கு சென்றுள்ளது என்றும் தமக்கேயுரிய மேதைமையோடும் எதார்த்தத்தோடும் அவர் பேசினார்.

`உலகத்தின் புதிய சிந்தனைகளைப் பேராசிரியர் சிவத்தம்பி உள்வாங்கவில்லை’ என பேராசிரியர் அ. மார்க்ஸ் பேசியதற்கு பதில் போல் இது அமைந்திருந்தது.

இந்தக் கருத்தரங்கில் புதிய சிந்தனைகள் என்ற தலைப்பில் உரையாற்றிய அ.மார்க்ஸ் முன்வைத்த வேறு சில கருத்துக்களும் சிந்திக்க வேண்டியவையாக இருந்தன. ‘ரஷ்ய, சீன முரண்பாடுகளை வெறும் அரசியல் முரண்பாடாகக் கண்டது பேராசிரியர் சிவத்தம்பியின் தவறான முடிவாகும். ஏனெனில் அதனை சோஷலிசக் கட்டுமானங்களில் உள்ளப் பிரச்சனையாகக் கண்டறியவில்லை’ என்று அவர் சொன்னார்.

‘தமிழ்நாட்டில் உள்ள புலமையாளர்கள் உள்ளூர் அளவிலேயே பேசப்பட்டனர். அதே நேரத்தில் தேசிய சர்வதேசிய அளவில் பேசக்கூடிய பலர்

இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களிலும் பேராசிரியர் சிவத்தம்பி முக்கியமானவர். அவர் மேற்கத்திய நவீன பார்வையோடு, நவீன தன்மையோடு அறிவியல் ரீதியான கோட்பாட்டு முறையைத் தமிழ் ஆராய்ச்சி உலகத்துக்கு அளித்தார். அதற்கு முக்கியமான பின்புலம் மார்க்சிய முறைமையே ஆகும்’ என்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கி. நாச்சிமுத்து கூறியதும்;

‘தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு விஞ்ஞானப் பூர்வ அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதில் கைலாசபதியும், சிவத்தம்பியும் முக்கியமானவர்கள். எல்லாவற்றிலும் வரலாற்றுப் பார்வையை அடிப்படையாகக் கொள்கிறார் சிவத்தம்பி. இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில் இதனைப் பரீட்சித்துப் பார்க்கிறார். அதற்கான தரவுகளை எவ்வளவு தூரம் பெற முடியுமோ பெறுகிறார்’ என தமிழவன் கூறியதும்;

வரலாற்று ரீதியில் திணைக் கோட்பாடுகளை அணுகிய விதம், மன்னர்கள் பற்றிய தெளிவான நிலைப்பாடுகள் என பேராசிரியர் சிவத்தம்பியின் பல்வேறு நூல்களில் உள்ள வரலாற்றுப் புரிதல் பற்றி மே. து. ராசுகுமார் கூறியதும், உண்மைகள்; வெறும் புகழ்ச்சியல்ல.

“முல்லைத் திணையில் இருந்த அகத்தை வைத்துக்கொண்டு பெண்ணியம் சார்ந்த சில கேள்விகளைக் கேட்க முடியும். சங்க காலம் பொற்காலம் என்றால் பெண்ணிய அறம் என்னவாக இருந்தது? பெண்ணின் நடத்தை என்பது கற்பு என்பதோடு மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. கடந்த கால, நிகழ்காலப் பகுப்போடு விமர்சனத்திற்கு உட்படாமல் மரபாகிறது” என்ற வ. கீதாவின் கருத்துக்களும்,

“தமிழ்ப் பண்பாடு என்பது சமய சமரசம், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுதல் என்பதாக இருக்கிறது. தமிழ் ஆய்வு முறையில், மானுடவியலாரைப் போல் புறவயமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். சமூகம், மொழி, பண்பாடு ஆகியவை இயங்குதல் தன்மையுடையது. சமூக, அரசியல் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது” என்ற ஆ. தனஞ்செயன் பேச்சும்,

“80, 90 களில் ஈழத்துப் போர்ச் சூழலில் ஈழத் தமிழ் அரங்கம் ஏற்பட்டது. இளையபத்மநாபன் போன்றவர்களால் அடையாள அரசியல் அது பற்றிய நாடக விவாதங்கள் நடைபெற்றன. பல்கலைக்கழகங்களில் நாடகம் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. புலம் பெயர்ந்தோர் நாடகங்கள் உருவாயின” என பேராசிரியர் அ. மங்கை தெரிவித்த கருத்துக்களும் பார்வையாளர்களுக்குப் புதிய சிந்தனைக் களத்தை உருவாக்கிக் கொடுத்தன.

தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் இரட்டைப் பிறவிகள் போல் இன்னமும் ஒட்டிக் கொண்டேயிருக்கின்றன. சினிமா காட்சிகளும் பாடல்களும் வசனங்களும் பெரும்பாலும் அரசியல் பிரவேசத்தைக் குறியாக வைத்தே கட்டமைக்கப்படுவதை பல திரைப்படங்களில் பார்க்கலாம். இதனையும் கா. சிவத்தம்பி தனது இலக்கிய ஆய்வுகளின் ஒரு பகுதியாக கொண்டிருக்கிறார்.

திரைப்பாடல்கள் நாட்டார் வழக்காற்றுப் பாடல்களிலிருந்து வந்ததையும், சிவாஜிகணேசன் என்ற நடிகரின் பாத்திர வார்ப்பையும், தமிழ் சினிமா தமிழ் மக்களின் கருத்தை முன்னெடுக்காமல் சினிமா நடிகரை அரசியல் தலைவராக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பதையும் தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் கா. சிவத்தம்பி எழுதியிருப்பதை செ. ரவீந்திரன் விளக்கமாக எடுத்துரைத்தது தமிழகத்தின் தற்கால அரசியல் நிலையையும் காட்டுவதாக இருந்தது.

தமிழ் இலக்கிய ஆய்வுக் களத்தில் தடம் பதித்துள்ள பொ. வேல்சாமி, தொ. பரமசிவன், மு. ராமசாமி, ராம. சுந்தரம், எம்.எஸ்.எஸ். பாண்டியன், கி.பி. அரவிந்தன், பெ. மாதையன், இன்குலாப், கே.எஸ். சிவசுப்ரமணியன், சி. மகேந்திரன், ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி, ஆர். சண்பகலட்சுமி ஆகியோரும் இவ்வாய்வரங்கில் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

ஆய்வாளர்களுக்கென இதுவரை எந்தக் கருத்தரங்கமும் நடைபெற்றதில்லை. இதுவே முதன்மை என்பதால் பெருமிதம் கொள்ள வைக்கிறது என்று வாழ்த்துரை வழங்கிய வா.செ. குழந்தைசாமி கூறியது மிகச் சரியானதாகும்.

மொத்தத்தில் கைலாசபதி, தொ.மு.சி. ரகுநாதன், கார்த்திகேசு சிவத்தம்பி என்ற இயக்கவியலை அடிப்படையாகக் கொண்ட விமர்சன ஆய்வு முறை அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டதாகவே இந்தக் கருத்தரங்கம் இருந்தது எனலாம்.

புதிய இலக்குகள், எதிர்கொள்ளும் புதிய ஆய்வு முறைகள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் அடுத்த தலை முறையின் ஆய்வில் தெரியவரும்.

மூன்று நாள் கருத்தரங்கம் புதிய புரிதலோடு நம் முன் உள்ள சவால்களையும் கோடிட்டுக் காட்டியது.

http://www.keetru.com/koottanchoru/mar06/muthiah.php

யாழில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது அந்தக்காலகட்டத்தில் சரியானதே என்று நானும் தொடர்ந்து எழுதியும் சொல்லிக்கொண்டுத்தான் வருகிறேன்.அது நியாயமானதுதான் என்று பேராசிரியரும் சொல்லியிருந்தார். மற்றது யாழ் நூலக விடயத்தினை செல்லன் கந்தையன் என்கிற ஒரு மனிதனின் விடயமாகப் பாருங்கள்.நீங்களும் அதில் தலித் டின்கிற பதத்தினை பாவித்து மற்றறை மாற்றுக்கருத்து என்கிற பெயரில் மலினமான வேலைகளை செய்துகொண்டிருப்பவர்களைப்ப

Edited by நிழலி

சி.த மீது ஆழ பற்றுள்ள ஒருவன் நான். அவர் எந்த பெயரில் (புனை பெயரில்) எழுதி இருந்தாலும் அதனைக் கண்டு பிடிக்கும் அளவிற்கு அவரிம் நிறைய நூல்களை (முக்கியமாக யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல் மற்றும் சர்நிகரில் அவர் தொடர்ந்து எழுதிய பல அரசியல் கட்டுரைகள்) படித்தவன் நான்

ஆயினும்

எக் காலத்திலும் என்னால் அவரின் இரு விடயங்களை மறக்க முடியாது

ஒன்று, யாழை விட்டு முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தினை நியாயப்படுத்திய பாதக செயல்

இரண்டு, செல்லன் கந்தையா எனும் ஒரு தலித் யாழ் தமிழன் மீண்டும் யாழ் நூலகத்தினை திறக்கும் போது காட்டிய எதிர்பு (அதே நூலகம் 3 மாதத்தின் பின் மீண்டும் திறக்கப்படும் போது அவர் திறக்க வேண்டாம் என்று சொன்ன காரணங்கள் அப்படியே அவரின் மெளனத்தினை போல இருந்தன )

சிவத்தம்பியாருக்கும் சாதிவெறி என்று சொல்ல வருகிறிங்களோ?

நிழலி நீங்களும்தான் புனைபெயரிலை எழுதிறீங்கள் நாங்கள் யாரெண்டு கண்டு பிடிக்கிறம்.யாழில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது அந்தக்காலகட்டத்தில் சரியானதே என்று நானும் தொடர்ந்து எழுதியும் சொல்லிக்கொண்டுத்தான் வருகிறேன்.அது நியாயமானதுதான் என்று பேராசிரியரும் சொல்லியிருந்தார். மற்றது யாழ் நூலக விடயத்தினை செல்லன் கந்தையன் என்கிற ஒரு மனிதனின் விடயமாகப் பாருங்கள்.நீங்களும் அதில் தலித் டின்கிற பதத்தினை பாவித்து மற்றறை மாற்றுக்கருத்து என்கிற பெயரில் மலினமான வேலைகளை செய்துகொண்டிருப்பவர்களைப்ப
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் - யார், எவர்?

கார்த்திகேசு சிவத்தம்பி

http://www.noolaham.net/project/01/40/40.htm

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு:ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்-கா. சிவத்தம்பி

வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது.

ஆர். சி. கொலிங்வூட்

வரலாற்றியலறிஞர்.

பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள் எமக்கு இங்கு இயைபுடைய ஒன்றாகின்றது. வுரலாற்று முகவர்களின் சிந்தனைப் பக்கத்தை அறிவது வரலாற்றாசிரியரின் கடமையெனின், இலக்கிய வரலாற்றாசிரியனின் பணியோ, இலக்கியங்கள், வாத விவாத எழுத்துக்கள் ஆகியவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்கள் வரலாற்றை எவ்வாறு வெளிப்படுத்துவனவாயுள்ளன என அறிவதாகும்.

எந்த எழுத்தும், சம்பந்தப்பட்டவரின் அறிகை முறையின் அடியாக வருவதாகும். ஏந்த அறிகையும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட எழுத்தாளரின் சமூக நிலைப்பாடுகளோடு சம்பந்தப் பட்டதாகும்.

இந்த அறிகை முறை அவ்வச் சமூக பொருளாதார மரபுகளினு}டாக வரும் அறிகை முறைமைகயோட ( முழெறடநனபந ளலளவநஅ) சம்பந்தப் பட்டதாகும். அறிவு முறைமை என்பது கல்வி, கேள்வி மரபு, பயிற்சிமரபு, அவை பற்றிய கருத்து நிலைகள் ஆகியனவற்றை உள்ளடக்கி நிற்பதாகும். ஊயர் அங்கீகாரம் பெறும் அறிவு முறைமை, சம்பந்தப்பட்ட சமூகத்தின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் ஒரு நிறுவனமாகவே அமையும்.

யுhழ்ப்பாணச் சமூகத்தின் வரலாற்றோட்டதில் மேலாண்மையுடையனவாக விளங்கியமையும், மேலாண்மையடைய விரும்பியவையுமான சிந்தனை மரபுகள் யாவை என்பதையும், அந்தச் சிந்தனை மரபுகள் எவ்வாறு நடந்தேறிய சமூக வரலாற்று மாற்றங்களின், அன்றேல் மாற்ற முயற்சிகளின் பட்டெறிவாக (சுநகடநஉவழைn) இருந்தன என்பதையும் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு சமூகத்தின் சிந்தனைகள், அதன் புலமையாளரால வெளிக்கொணரப்படுகின்றன. புலமையாளர் (சற்று இலக்கியமயத்திக் கூறினால் ‘புலத்துறை போகியோர்’) என்னும் பதம், அறிவு, காரணி விளக்க ஆற்றலையுடையோரைக் குறிக்கும். இந்தப் புலமையாளர் அறிவினாலும், அறிவு தரும் கற்பனைத் திறனாலும் ஆற்றலாலும் வாழ்க்கையை நடத்துபவர் ஆவார். புலமைத்துவ (ஐவெநசயெவழையெட) மரபு என்பது இப்புலமைச்செல்நெறி பாய்தோடிய பாங்கினை விளக்குவதாகும். இந்தப் புலமைத்துவ மரபினை எழுத்துக்களிலும் மற்றைய ஆக்கங்களிலும், இயக்கங்களின் செயற்பாடுகளிலும் கண்டு கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபினை அதற்குரிய பின்புலத்தில் வைத்து விளங்கிக் கொள்வதற்கும் நாம் இரு அமிசங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும். முதலாவது, யாழ்ப்பாணத்தில் இயல்புகளை அறிந்துக் கொள்ளுதல். இரண்டாவது, புலமைத்துவ வெளிப்பாட்டு முறைமைகளான எழுத்துக்கள், சமூக சீர்திருத்த முயற்சிகள் போன்றவற்றின் தளமாக அமையும் சிந்தனைக் செல்நெறிகள் யாவை என்பதைக் தெளிவுபடுத்திக் கொள்ளல்.

யாழ்ப்பாணம் இலங்கையின் வடகிலுள்ள தீபகற்ப பகுதியாகவும், இந்தியாவின் தென்பகுதிக்கு மிக அண்மையானதாகவும் அமைந்துள்ளது. இத்தீபகற்பத் தன்மை காரணமாக ஓர் ஒதுக்கற்பாட்டுணர்வு நிகழ்தேறியது. அந்;த அளவுக்கு இது முக்கியமான ஒரு தமிழ்க் குடியிருப்பாக அமைகின்றது. இந்த முக்கியத்துவம் இலங்கை, இந்தியா, தென்னாசியா ஆகிய மூன்று நிலைகளிலும் உணரப்படுவதொன்றாகும்.

இப்பிரதேசம் பிரதானமான சைவமும் தமிழும் என்ற ஒரு மேலாக்கக் கருத்து நிலையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், இங்கு சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். முத அடிப்படையில் நோக்கும் பொழுது கிறிஸ்தவர்களும் கணிசமான தொகையினர் உள்ளனர். கிறிஸ்தவர்களுள் றோமன் கத்தோலிகரே பெருந் தொகையினரெனினும், புரட்ஸ்தாந்திகள் கல்வி முதலாம் புலமைத்துவத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். யாழ்ப்பாணத்து அறிவு முறைமையின் ஓர் அங்கமான உயர் பாடசாலை வளர்ச்சியில் இவர்கள் ஏற்படுத்திய மிக முக்கிமானவையாகும்.

யாழ்ப்பாணத்தின் பொருளாதார வரலாற்றின் பண்புகளை எடுத்துக்கூறிய பேராசிரியர் அரசரத்தினம்.

The strength of the Jaffna settlement has been this concentration of population and their density. This has enabled them to develop economic relationships among themselves and has encouraged regional specializations and exchange of commodities. It has also enabled the region to grow in insolation from the rest of the island and shelterd it from vicissitudes else where ………………………….. ………………………. ………………………………….. ………………. With in peninsula itself patterns of settlement have continued with relatively little change over last 400 years. These has been little internal movement of population except with in small distance in areas of little productivity and areas subject to sabination.

குடியேற்றம், சனநெருக்கம் பற்றிய இந்த ஸ்திரப் பண்பு ஏறத்தாழ 1984வரை காணப்படுகின்றதெனலாம். அதன் பின்னர் இனக்குழுமப் போர் காரணமாக பெருமளவில் சனத்தொகை மாற்றம் ஏற்படுகின்றது. எனினும் இதற்கு முன்னர் ஏறத்தாழ 14, 15 ஆம் நு}ற்றாண்டிலிருந்து ஒரு நிலையான சமூக - பொருளாதார அமைப்பு உருவாகி நிலைபெற்று வந்துள்ளது.

இந்த ஸ்திரப்பாட்டிற்கு இம்மக்களிடையே நிலவிய ஒரே சீரான பொருளாதார நடவடிக்கை மரபும், சட்ட ஒழுங்கு மரபும் காரணமாக அமைகின்றன. இதனை யாழ்ப்பாணத்தில் நிலவிய தேச வழமைச் சட்டமும், சாதியமைப்பையும் வழங்கின. துனியார் சொத்துக்கு வழங்கப்பட்ட மரியாதையும், அவை பேணப்பட்ட முறைமையும் (வேலியிட்டுப் பிரித்து வைத்துக் கொள்ளல்) இந்த ஸ்திரப்பாட்டுடன் காரணகாரியத் தொடர்பு கொண்டவையாகும்.

யாழ்ப்பாணத்தின் சமூக, பொருளாதார ஸ்திரப்பாடு பற்றியும் அரசரத்தினம் அவர்கள் தொகுத்துக் கூறுவது உற்றுநோக்கப்பட வேண்டியது.

There was then the institution of caste which evolved in ways different from the original home - lands of the Tamils. The absence of a large group of Tamils weakend the Brahminie norms which the Tamils had brought from south India. Castes did not have to strictly adhere to traditional occupations and there was some socio - economic mobility. These occupations did not and could not have the same social values attached to them in south India. Agriculture and Agriculture persuuts continued as the most valued occupations but seafaring and the industries associated with seproduce achieved a value greater than I n south India provided the means to upward social mobility. /The numerical preponenrance of the major agricultural caste, which soon become the dominant caste in society gave a stability to society.

(S.Arasarathnam Historical foundation of the Tamils of North SriLanka - Fourth Chelvanayagam Memorial lecture Jaffna. - 1982)

மாற்றங்கள் அதிகம் ஏற்படாது தொடர்ந்தமைக்கும், அதே வேளை மேனிலை நோக்கிய சமூக - பொருளாதார அசைவியக்கத்துக்கான (தென்னிந்திய சாதி மரபில் இருக்காத சில) சாத்தியப்பாடுகளும் இங்கு நிலவியமைக்கான காரணங்கள் இப்பொழுது துல்லியமாகின்றன. யாழ்ப்பாணச் சாதியமைப்பு வழங்கிய மேலாண்மையுடன் விவசாயம் பிரதான இடத்தை வகிக்கத் தொடங்கிற்று.

இந்த விவசாய மேலாண்மைக்கான இன்னொரு காரணம் இங்கு ஒரு வன்மையான வணிக வர்க்கமோ, முயற்றியாளர் குழாமோ (நவெசநிநnரெசயைட பசழரிள) இல்லாது போனமையாகும். சிறு வியாபாரிகள் ஆன வணிக குழுவினரைத் தவிர இங்கு எடுத்துப் பேசக்கூடிய வணிக மரபினர் மிகக் குறைவானோரே, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை கடலோடிகளால் நடத்தப் பெற்று வந்த ஒரு வர்த்தகப் பாரம்பரியம், பாய்க்கப்பல் முறைமையின் ஒடுங்குதிசையின் பின்னர்(இதே காலத்திலேற்பட்ட சுங்கத்திணைக்கள வளர்ச்சியுடன்) மங்கிப் போயிற்று. வணிக முனைப்பும், பெருந்தொகை வணிக முதலீடுமில்லாது இருந்தமையும், இச்சமூகத்தில் ஒரு வகையான மாற்றமின்மையைத் தவிர்க்க முடியாததாக்கிற்று எனலாம்.

இவ்வாறான ஒரு “பாரம்பரிய” ச் சூழலில், பாரம்பரியப் பேணுகை முக்கிய இடம் பெற்றது ஆச்சரியத்தைத் தருவதன்று.

இத்தகைய சமூகங்களில் மதம் முக்கியம் பெறுகின்றது. அதனை மையமாகக் கொண்டே பாரம்பரியப் பேணுகை நடப்பதும் இயல்பே.

இத்தகைய சமூகத்தில் நிலவும் அறிவு - முறைமையும், சமூகப் பாரம்பரியங்களைப் பேணுவதாகவே அமையும். இங்கு வரன்முறையான கல்வியென்பது மதம் சார்ந்ததாகவும், சமூகத்தின் சகல ஆக்கங்களையும் உள்ளடக்காததாகும். உண்மையில் இச்சமூகத்தின் அடிநிலையினருடன் சம்மந்தப் படாததாகவே இருக்கும்.

அடுத்து, இந்தச் சமூகப் பொருளாதாரப் பின்புலமுள்ள இச்சமூகத்தில் எழுத்துக்களும் புலமைத்துவச் செல்நெறிகளும் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்குவது அவசியமாகின்றது.

அதனைப் பின்வரும் வகையில் மிகச் சுருக்கமாக உடுத்துக் கூறலாமெனக் கருதுகிறேன்.

மேனாட்டு வருகைக்கு முந்திய காலம்(Pசந - றநளவநசn)

அ. யாழ்ப்பாண அரச உருவாக்கம் நடந்தேறிய காலம் (14ஆம்,15ஆம்) பெரும்பாலும் ~வரலாறு| சார்ந்த எழுத்துக்களே காணப்படுகின்றன. இவை இந்துப் பாரம்பரியத்தில் வரலாறு எடுத்துக் கூறப்படும் பௌராணிக, ஐதீக மரபை ஒட்டியே அமைந்துள்ளன. தக்கிண கைலாசபுராணம்,கோணேசர் கல்வெட்டு, வையாபாடல்,கைலாயமாலை ஆகியன. மற்றையவை மதம், மருத்துவம் சார்ந்தவை.

ஆ. முஸ்லிம்களின் வருகை: மேனாட்டார் வருகைக்கு முந்திய காலத்து முஸ்லிம் இலக்கியப் படைப்புக்கள் எதுவும் இல்லையென்றே கூறல் வேண்டும்.

புpரிட்டிஷ் ஆட்சிக்கு முற்பட்ட காலம் (1505 - 1796)

அ. போர்த்துக்கேய,ஒல்லாந்தர் காலங்கள் - கிறிஸ்தவத்தின் வருகை - கத்தோலிக்கம், இறப்பறமாதுக் கிறிஸ்தவம்

இந்துமதமும் இஸ்லாமும் பலத்த பாதிப்புக்குள்ளாக்கப்படல், இக்காலத்துக்குரியனவாக உள்ள கிறிஸ்தவ, இந்து எழுத்தாக்கங்கள்

ஆ. அந்நிய கல்விமுறை நிறுவப்படல் - டச்சு ஆட்சியின் கல்வி முறைமை. பாரம்பரியக்கல்வி முறையின் தொடர்ச்சி - தமிழக் தொடர்புகளின் தொடர்ச்சி.

பிரிட்டிஷ் காலம் (1796 - 1948)

பிரித்தானிய ஆட்சியின் மதநெகிழ்ச்சிக் கொள்கைகள்: சமூக - பண்பாட்டுத் தலைவர்கள் பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவம் சாராத ஒரு கல்வி முறையைக் கோரியமை: கிறிஸ்துவத்திற்கான இவ்வெதிர்ப்பு கல்வி முறைமைக்குள் கிறிஸ்தவம் முனைவுப்படுத்தப்பட்ட முறைமை பற்றியிருந்ததுவே தவிர அந்தக் கல்வி முறைமைக்கு அது கொண்டு வந்த உள்ளடக்கம், அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரானதன்று.

இந்தக் கல்விமுறைமையை ஏற்பது பற்றி நடந்த போராட்டங்கள் முக்கியமானவையாகும். தமிழ்க்கல்வி மரபையும்,ஆங்கில மொழிப் பயில்வையும் எவ்வாறு இணைப்பதென்பது ஒரு பிரச்சனை மையமாக விளங்கியது. ஆறுமுகநாவலரின் இயக்கம் இது சம்மந்தப்பட்டதாகவே அமைந்தது.

இறுதியில் சமூகத் தேவைகளையும் மதத் தேவைகளையும் இணைக்கும் சைவ ஆங்கிலப் பாடசாலை மரபு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த இணைப்பு ஏற்பட்டதும் பாரம்பரியப் பேணுகையையும் புதிய தேவைகளையும் அனுசரிக்கும் ஒரு சமூக அசைவியக்க முறைமையையும் கடைப்பிடிப்பது சுலபமாயிற்று.

இந்து மத மட்டத்தில் இவ்விணக்க இயைபு முயற்சி மேற்கொள்ளப்பட்ட வேளையில் புதிய கல்வி மரபு கிறிஸ்தவ முகாமையின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்டாலும், விஸ்தரிக்கப்படலும் நடைபெறுகின்றன.

இதனை முதலில் ஏற்படுத்தியவர்கள் புரட்டஸ்தாந்துப் பிரிவினர்களே. (அமெரிக்க மிஷன், வெஸ்லியன் மிஷன், ஆங்கிலத் திருச்சபை மிஷன் ஆதியன முதலிலும் கத்தோலிக்கம் பின்னருமே வந்தன)

பிரித்தானிய ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களின் பின்னர், நவீனமயப்பாடு(ஆழனநசணையவழைn) ஆங்கிலக்கல்வி முறைமையே மூலமே வந்தது. இந்த நவீன மயப்பாடு இல்லாது சமூக அந்தஸ்துப் பேணுகையையோ, சமூக மேனிலைப்பாடோ சாத்தியமற்றதாகிற்று. இதனால் இந்த நவீன மயப்பட்ட கல்வி சமூக முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்றாயிற்று. அதனால் இக்கல்வியை மிகச் சிறந்த சூழலிற் பெறக்கூடிய கல்வி வாய்ப்புக்கள் முக்கியமானவையாகின.

யாழ்பாணத்தில் நடந்தேறிய நவீன மயமாக்கம் ஏறத்தாழ 1950 கள் வரை தொழிநுட்ப மயவாக்கத்துடன் (வநஉhழெடழபணையவழைn) சம்மத்தப்படவில்லை. கல்வி மூலமாகவே இந்த நவீன மயவாக்கம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் பிராமணிய முறையில்லாததால் சாதியமைப்பில் தமிழகத்திற் காணப்படாத ஒரு நெகிழ்ச்சி இங்கு இருந்தது. இடைநிலைச் சாதியினர் தங்கள் இந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும், தங்கள் இடம் நன்கு வரையறுக்கப்படாதிருந்த சாதிக் குழுமங்கள் (அகம்படியார், தனக்காரர், சாயக்காரர் போன்றோர்) உயர்நிலையினருடன் தம்மை இணைத்துக் கொள்ளவும் கல்வி பயன்பட்டது. இந்த நெகிழ்சிசியினைப் பயன்படுத்திய நவீனமயமாக்கம், கல்வியை ஒரு முக்கிய பொருளாதார முயற்சியாக்கிற்று.

ழூ ஆங்கிலக்கல்வி வாயில்களாக அமைந்த நிறுவனங்களினுள் அமெரிக்க மிஷரினர்மார் நடத்திய யாழ்ப்பாணக்கல்லு}ரி, இருந்த ஆங்கிலக் கல்லு}ரிகளிலும் பார்க்க உயர் வகுப்புக்களை நடத்தியபடியாலும், பிரிட்டிஷ் காலனித்துவ மேலாண்மைக்குக் கட்டுப்படாதிருந்தமையாலும், பாடசாலை நிர்வாகத்தி;ற்கு அரச நிதியுதவியை எதிர்பாராதிருந்தாலும் 19ஆம் நு}ற்றாண்டு அமெரிக்கத் தாராண்மைவாதக்கல்வி முறைமையைப் பின்பற்றியதாலும் மற்றைய கல்வி நிலையங்களில்லாத ஒரு தாராண்மை (டiடிநசயட) வாதப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடியதாகவிருந்தது.

இந்தக் தாராண்மைவாதச் சூழலில் அக்கல்லு}ரி மாணவர்கள், யாழ்ப்பாணத்தில் எல்லாக் காலத்திலும் நிலவி வந்துள்ள இந்தியச் செல்வாக்குக் காரணமாக வந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சமகாலப் போக்குளை உள்வாங்கி முற்றிலும் புதிய தளமாற்றவாத (சயனiஉயட) சமூக, அரசியற் கோடபாட்டை முன்வைக்கின்றனர்.

இது நடந்தது 1924- சமகாலப் பிரிவிலாகும். இதுவே யாழ்ப்பாணத்தின் மாணவர் பேரவை இயக்கமாகும். (ளுவரனநநவெ ஊழபெசநளள) அதனைத் தொடர்ந்து 1939 முதல் மார்க்ஸியச் சிந்தனை பரவப் தொடங்குகின்றது. அடிப்படைப் பொருளாதார உறவுகள் மாறாத ஒரு சூழலில் மார்க்ஸியம் இங்கு வன்மையாக சமூக - பொருளாதாரக் கோட்பாடாக கிளம்பாது புலமை நெறியாகவே வளரத் தொடங்குகின்றது. புலமை நெறியாகத் தொடங்கியது நிறுவன அமைப்பாக மாறத்தொடங்க சமூகச் சுரண்டல்கள் இடம் பெறும் இடங்களில் வேரூன்றித் தொடங்கிற்று. அரசியலில் இது இலங்கையை ஒரே தேசியச் கூறாகக் கொண்டது.

சுpங்களத் தேசியவாதக் காலம் (1948)

இந்தப் புலமைத்துவ நெறிப்பரவலைத் தொடர்ந்து, மிக முக்கியமான சிந்தனை மரபாக மேற்கிளம்புவது இலங்கையை முற்று முழுக்கத் தனது என உரிமை கொண்டாடிய சிங்களத் தேசியவாதமாகும். இது 1920 களில் தொடங்கி 1930களில் முக்கியமாகி, சுதந்திரத்தின் பின்னர் தன்னைப் புவியியல் hPதியாகவும், நிர்வாக hPதியாகவும் நிலைநிறுத்தத் தொடங்கிற்று. சிங்களத் தேசிய எழுச்சியின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள், தமிழரின் சமூக மேனிலைப்பாட்டுக்கான பிரதான வாயிலான கல்வியுரிமைகளைப் பாதிக்கத் தொடங்கவே, அதற்கெதிரான இனக்குழுமத் தனித்துவ வெளிப்படுத்துகை தொடங்குகின்றது. இது 1949 இல் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் தொடங்குகின்றதெனலாம். 1956 இன் பின்னர் இது வளரத் தொடங்கி 1972 இல் ஓர் அரசியல் திருப்புமுனையை எய்துகின்றது. 1972 ஆட்சியமைப்பில் தமிழர்கக்கான இடம் பேசப்படாமலே விடப்பட்டது. இலங்கைத் தமிழ்ப் போராட்டம், அது எதிர்நோக்க வேண்டிய சிங்களத் தேசியத்தின் அரச நிலைப்பட்ட ஒடுக்குமுறைகள் காரணமாக வன்முறைப்பட்டதாகவும், புதிய தலைமையை நாடுவதாகவும் அமைந்தது. 1970 களின் பின்னர் தமிழ்த்தேசியம் முக்கிய அரசியற் சக்தியாகி மேற்கிளம்புகின்றது.

அடுத்து மேற்கூறிய காலகட்டங்களில் தோன்றிய எழுத்துக்களையும் பிற புலமைத்துவ வெளிப்பாடுகளையும் சற்று விரிவாக நோக்குவோம்.

அவ்வாறு ஆராய்வதற்கு முன்னர், ஒரு அவதானிப்பினைப் பதிவு செய்து கொள்ளுதல் அவசியமாகின்றது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய அமைப்புக்குச் சவால்கள் கிளம்பிய காலகட்டங்களிலேயே முக்கியமான புலமைத்துவ நடவடிக்கைகள் தோன்றின என்பது உய்த்தறியப்படத்தக்கதாகவுள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.