Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் காலனால் கவரப்பட்ட சாரங்கன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் காலனால் கவரப்பட்ட சாரங்கன்

வீரகேசரி நாளேடு 12/5/2008 11:02:09 PM - எந்தவொரு பெற்றோருமே தமது பிள்ளைச் செல்வங்களை எப்பாடுபட்டாவது நன்கு வளர்த்து கல்விச் செல்வத்தை வழங்கி சமுதாயத்தில் நற்பிரஜைகளாக ஆளாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். சில பிள்ளைகள் தமது பெற்றோரது விருப்பை நிறைவேற்றுவதுமுண்டு. மாறாக சிலர் புறம்போக்கான முறையில் செயற்படுவதுமுண்டு.

இவ்வாறு சமூகத்தில் சிறந்த கல்விப் பிரஜைகளாக திகழ வேண்டும் என்ற இலட்சியத்தில் எம்மில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியை பல்கலைக்கழக மட்டத்தில் பயின்று சிறப்புற்ற உதாரணங்கள் பலவுண்டு. அந்த வகையில் கல்வித் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சிய வெறியில் தனது பெற்றோரின் பூரண ஒத்துழைப்புடன் கடந்த 2000ஆம் ஆண்டு பல்கலைக்கழக படிப்பை மேற்கொள்வதற்காக மலேசியாவுக்குச் சென்றவர்தான் சாரங்கன். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா, திருமதி சம்மந்தராணி ஆகியோரின் இரண்டாவது புதல்வனே இந்த சாரங்கன். இவரது தந்தை ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை வங்கியில் உதவி முகாமையாளராகவும் தாயார் சம்மந்தராணி முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். மூத்த மகன் சஞ்சயன், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவன். இரண்டாவது புதல்வனே சாரங்கன். மூன்றாவது மகள் சர்மிளா, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவியாவார். தனது ஆரம்பக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் வவுனியா சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வவுனியா மத்திய கல்லூரியிலும் பிற்பாடு கொழும்பில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்ட சாரங்கன் உயர்தரத்தில் முதல் தடவையிலேயே 3 அ பெறுபேற்றினை பெற்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக சுமார் 6 மாத காலம் பயின்றார்.

சிறு வயது முதற்கொண்டே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வியினைத் தொடர வேண்டும் என்ற பெரு விருப்பு சாரங்கனின் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது. இவரது இப்பெரு விருப்பை நிறைவேற்றும் பொருட்டு சாரங்கனின் பெற்றோர் 2000ஆம் ஆண்டு பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ள சாரங்கனை மலேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

மலேசியாவின் University of Nottingham Malaysia பல்கலையில் பட்டப்படிப்பை ஆரம்பித்த சாரங்கன் 2 ஆவது வருட படிப்பை இலண்டனிலுள்ள அதே சர்வ கலாசாலையில் முடித்துக் கொண்டார். 3ஆவது வருட படிப்பை மேற்கொள்வதற்காக இவ்வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் மலேசியாவுக்கு தனது விஜயத்தை ஆரம்பித்தார். விதி எவரைத்தான் விட்டது? மரணம் எப்படியும் சம்பவிக்கலாம் என்பதற்கு சாரங்கனின் அகால மரணமும் ஓர் எடுத்துக்காட்டு.

12.03.1986ஆம் ஆண்டு பிறந்த சாரங்கன் தான் கல்வித்தரத்தில் மேம்பட்டு விளங்கினாலும் சகல தரத்தினருடனும் சகஜமாக மனம் விட்டு பழகக் கூடிய சுபாவமுடையவர். தனது சக மாணவர்கள் மீது அலாதி பாசத்தையும் கொண்டிருந்தவர் தான் சாரங்கன். எனவே இவரைச் சுற்றி ஒரு சிறு நண்பர் பட்டாளம் எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும். வழமையாக சாரங்கன் தனது நண்பர்களுடன் மலேசியாவில் குறித்த ஓர் கடையில் தேநீர் குடிப்பது வழக்கம். மிடுக்கான தோற்றமும் சுறுசுறுப்பும் கொண்டிருந்த போதிலும் சாரங்கன் சண்டை சச்சரவுகளுக்கு ஒரு போதுமே செல்லாத அப்பாவி மாணவன். இப்போதுதான் காலன் சாரங்கனை பின் தொடர்ந்தான்.

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி பல்கலையில் இடம்பெறவிருந்த வகுப்பொன்று துரதிர்ஷ்டவசமாக இடம்பெறாததால் அன்றைய தினம் சாரங்கன் உட்பட மொத்தம் 5 பேர் இவர்கள் வழமையாக தேநீர் அருந்தும் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் அங்கு வந்த வெளி மாணவ கோஷ்டி ஒன்று சாரங்கன் உட்பட 5 பேரை தாக்க வந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தப்பியோட சாரங்கனையும் மேலும் இருவரையும் அக்கோஷ்டி தாக்கியுள்ளது. அக்கோஷ்டியின் நோக்கம் இவர்களை கொல்லுவது அல்ல, மாறாக வெட்டிக் காயப்படுத்துவதே நோக்கமாகும்.

அக்கோஷ்டியின் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சாரங்கனின் இரு கைகளிலும் காலிலும் சிறிய ரக ஆயுதங்களாலேயே காயப்படுத்தியுள்ளனர். சாரங்கனை காயப்படுத்திய பிற்பாடே இக்கோஷ்டி தாங்கள் தாக்க வந்த நபர்கள் இவர்கள் அல்லவென்பது புரிந்தது. எனவே மற்றையவரை தாக்காது உடனே அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்று விட்டனர். காயப்பட்ட சாரங்கன் ஒருவாறு அங்குள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிற்பாடு மலேசியாவிலுள்ள இவரது உறவுக்காரர் ஒருவரது உதவியுடனும் பாதுகாப்புடனும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதில் கவலைக்கிடமான விடயம் யாதெனில் சாரங்கன் தாக்கப்பட்ட தினம் இவரது தாயாரின் பிறந்த நாளாகும். விதி இவரை காத்திருந்ததாலோ என்னவோ வழமைக்கு மாறாக சாரங்கன் 26ஆம் திகதிக்கு முந்தைய தினமே தாயாருக்கு தொலைபேசி மூலம் பிறந்த தின வாழ்த்தைத் தெரிவித்து விட்டார். சாரங்கன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் மலேசியாவிலுள்ள சாரங்கனின் உறவுக்காரர் மூலமாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது.

தொலைதூரத்தில் காயப்பட்டுக் கிடக்கும் தனது அருமை மகனை காண்பதற்காக நவம்பர் 30ஆம் திகதி இரவு மலேசியாவுக்குச் சென்றடைந்தார் சாரங்கனின் தாயார். அவர் அங்கு சென்றடைந்த பொழுது தனது மகனின் உயிரற்ற உடலைத்தான் அத்தாய்க்கு காண முடிந்தது. சிகிச்சை பெற்று தேறி வந்த சாரங்கனுக்கு சடுதியாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாயாரை காண்பதற்கு முன்பாகவே அவனது உயிர் பிரிந்து விட்டது. 10 மாதம் தனது கருவறையில் சுமந்து பல எதிர்பார்ப்புகளுடன் வளர்த்து ஆளாக்கி தனது மகனின் இலட்சிய வெறியை பூர்த்தி செய்வதற்காக அந்நிய நாட்டுக்கு அனுப்பி வைத்த மகனுக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும் என அத்தாய் நினைத்திருப்பாளா?

உடனே மகன் இறந்த விடயம் கொழும்பிலுள்ள சாரங்கனின் தகப்பனுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவரும் சோகத்தில் ஆழ்ந்தார். 30ஆம் திகதி மரணமடைந்த சாரங்கனின் உடல் கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு தற்பொழுது கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.

வெள்ளவத்தையிலுள்ள சாரங்கனின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோருடன் உரையாடினோம். ""எனது மகன் தவறுதலாக கொலை செய்யப்பட்டு விட்டான். கொலை செய்தவர்களின் இலக்கு எனது மகனுமல்ல. கொலை செய்வதும் அவர்களது நோக்கமல்ல. எனவே எவர் இதனைச் செய்திருந்தாலும் அவர்களை நான் சபிக்கப் போவதில்லை. அவர்களை நான் மன்னிக்கின்றேன்...'' என்றவாறு சாரங்கனின் தகப்பன் கண்ணீர் சிந்தினார்.

தவறுதலாக ஏற்பட்ட தாக்குதலில் மரணித்த சாரங்கனின் நிலை இனியேனும் வேறு எவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என பிரார்த்திப்போம்

.

எனது மகன் தவறுதலாக கொலை செய்யப்பட்டு விட்டான். கொலை செய்தவர்களின் இலக்கு எனது மகனுமல்ல. கொலை செய்வதும் அவர்களது நோக்கமல்ல. எனவே எவர் இதனைச் செய்திருந்தாலும் அவர்களை நான் சபிக்கப் போவதில்லை. அவர்களை நான் மன்னிக்கின்றேன்...'' என்றவாறு சாரங்கனின் தகப்பன் கண்ணீர் சிந்தினார்.

மனிதருக்குள் இவர்களைப் போன்றவர்களை தெய்வங்கள் என்று அழைக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப கவலையாக்கிடக்கு

இவர் எமது ஜூனியர் நல்ல திறமையான மாணவன் அநியாய சாவு சாரங்கனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சாரங்கனுக்கு கண்ணீர் அஞ்சலிகள். பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

. ""எனது மகன் தவறுதலாக கொலை செய்யப்பட்டு விட்டான். கொலை செய்தவர்களின் இலக்கு எனது மகனுமல்ல. கொலை செய்வதும் அவர்களது நோக்கமல்ல. எனவே எவர் இதனைச் செய்திருந்தாலும் அவர்களை நான் சபிக்கப் போவதில்லை. அவர்களை நான் மன்னிக்கின்றேன்...'' என்றவாறு சாரங்கனின் தகப்பன் கண்ணீர் சிந்தினார்.

இத்தகைய பெருந்தன்மை யாருக்குமே வராது. பெற்ற பிள்ளையை கொன்னவர்களை அந்தப்பெற்றொர் மன்னித்தது கொலைசெய்தவர்களை வாழ்க்கை முழுவதும் வருத்திக் கொண்டேயிருக்கும்.

பாதியில் தனது கனவுகளைக் காலனிடம் கொடுத்துவிட்டுப்போன சாரங்கனுக்கு அஞ்சலிகள். :rolleyes:

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாரங்கனுக்கு கண்ணீர் அஞ்சலிகள். பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விதி எங்கு போனாலும் தமிழனை விரட்டிக்கொண்டே இருக்கிறதே?

ஆழ்ந்த அனுதாபங்கள்'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.