Jump to content

படித்ததில் ரசித்தது


vasee

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுறு சுறுப்பான காலைப்பொழுதில் வீதியோரத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் பக்கத்தில் அந்த மனிதன் நின்றிருந்தான் அவன் பக்கத்தில் வெள்ளைத்தடியும், நிமிர்த்தி வைத்த தொப்பியில் சில நாணயமும்,சில தாள் காசும் இருந்தது அத்துடன் ஓர் அறிவிப்பும் இருந்தது,அதில் நான் குருடன் தயவு செய்து உதவுங்கள் என்றிருந்தது.விரைந்து செல்லும் மக்கள் அவனை கவனியாது சென்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஓர் இரக்க சிந்தனையுள்ள ஒரு மனிதன் நின்று அந்த அறிவிப்பை வாசித்து விட்டு தொப்பியினுள் தாள் காசு சிலவற்றைப்போட்டு விட்டு கண்தெரியாத மனிதனிடம் எந்த அனுமதியும் பெறாமல் அந்த அறிவிப்பை மாற்றி எழுதிவிட்டு சென்றுவிட்டான்.

நண்பகல் உணவு இடைவேளையில் வந்த இரக்க சிந்தனையுள்ள மனிதன் கண்டதெல்லாம் தோப்பி நிறைய தாள் காசுகளும் நாணயங்களும்.

கண்தெரியாத மனிதன் வருவது யாரென்பதை அவனது கால் ஒலியிலேயே புரிந்து கொண்டான். அவனது மனதினுள் அரித்த ஒரு கேள்வியைக்கேட்டான்

"அப்படி என்னதான் புதிதாக எழுதினாய் என்று" அதற்கு " நான் ஒன்றும் புதிதாக எழுதவில்லை சில சொற்களை மட்டும் மாற்றி எழுதினேன் என்றான்.

அவன் என்ன எழுதியிருப்பான் என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன். கள உறவுகளே! உங்கள் கற்பனைக்குதிரையைத்தட்டி விடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தயங்காமல் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் இதில் சரி, பிழை என்று எதுவுமில்லை எமது கள உறவுகளின் வித்தியாசமான சிந்தனைகளை பார்க்கும் ஒரு எண்ணம்தான் எனது இம்முயற்சிக்கு காரணம்.

எபோதும் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு அதனால் எக்கருத்தும் தவறாகாது என நினைக்கிறேன்.

ஒரு பொருளியல் பேராசிரியர் ஒருவர் 50:50 நிகழ்தகவுள்ள ஒரு விடயத்தை விளங்கப்படுத்துவதற்காக தனது சட்டைப்பையிலிருந்த நணயம் ஒன்றை சுண்டி விட்டார், நாணயம் தலை அல்லது பூ விழுவதற்கு பதிலாக இரண்டிற்கும் பொதுவாக நிமிர்ந்து நிண்ட நாணயம் ஒரு புதிய பாடத்தைக்கற்றுக்கொடுத்தது அந்த பேராசிரியருக்கு அந் நிகழ்தகவு 50000:1 என்பதாம்

Posted

குருடன் என்ற சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை எழுதியிருப்பார் (உ+ம்: பிச்சைக்காரன்). குருடன் என்று தெரிந்தால், மற்றவர்கள் அவரது தொப்பியிலுள்ள பணத்தை, அவனுக்கு தெரியாமல் திருடிக்கொண்டு போவார்கள். இப்போது குருடன் என்று தெரியாது. திருடுவத்ற்கு தயங்குவார்கள்.

குருடன் என்ற சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை எழுதியிருப்பார் (உ+ம்: பிச்சைக்காரன்). குருடன் என்று தெரிந்தால், மற்றவர்கள் அவரது தொப்பியிலுள்ள பணத்தை, அவனுக்கு தெரியாமல் திருடிக்கொண்டு போவார்கள். இப்போது குருடன் என்று தெரியாது. திருடுவத்ற்கு தயங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுவும் சரிதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று அழகான வசந்த காலத்தின் முதல் நாள் .

ஆனால் என்னால் பார்க்கமுடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.