Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேஷம் கலைந்த கலைஞர்

Featured Replies

வேஷம் கலைந்த கலைஞர்

[04 - January - 2009] [Font Size - A - A - A]

கலைஞன்

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வாரா... மாட்டாரா என்பது இன்று இரு நாடுகளிலும விவாதத்திற்குரிய விடயமாகியுள்ள அதேவேளை அவ்வாறு அவர் சென்றாலும் எந்தவிதப் பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லையென்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் என்ற தமிழக அரசியல் தலைவர்களின் ஒட்டு மொத்த குரலும் இன்று சுருதி மாறி இலங்கைக்கு பிரணாப்பின் விஜயம் என்ற தொனியில் ஒலிக்குமளவுக்கு மத்திய அரசின் செயற்பாடுகள் தமிழகத்திற்கு விராதமான போக்கிலும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நோக்கிலும் சென்றுகொண்டிருக்கின்றன.

தமிழக அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக இலங்கைத் தமிழர் ஆதரவுக் காஷத்தை சற்று அதிகமாகவ எழுப்பிய தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இன்று வேஷம் கலைந்து விட்ட நிலையில், தனது சுயலாப அரசியல் சித்தாந்தத்தை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டு மத்திய அரசின் புகழ்பாடிச் சித்தனாகிவிட்டார்.

தமிழக எம்.பிக்கள் 40 பரும் பதவி துறப்பு, உண்ணாவிரதப் போராட்டம், மனித சங்கிலிப் போராட்டம், இலங்கைத் தமிழர்களுக்கான நிதி, பொருள் சகரிப்பு என்ற பெயர்களில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து நடித்த திரைப்படங்களின், அரசியல், வியாபார சூட்சுமங்களை இன்று தமிழக மக்கள் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்களும் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

"இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவேன்' என்று சூளுரைத்து வீரவாளெடுத்த கருணாநிதி, இன்று டில்லி அரங்கற்றும் அரசியல் நாடகத்தில் கோமாளி வேடமற்று சிறப்பாக நடித்து "சிறந்த தமிழக நடிகர்' என்ற பெயரை பெற்றுக் கொண்டு ஏனையவர்களைப் பார்த்து மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்கிறார்.

"இலங்கையில் போர் நிறுத்தம்' என்ற கருணாநிதியின் கோஷம் இன்று, "இலங்கைக்கு பிரணாப் பாவார்' என்ற தொனிக்கு சுருதி இறங்கிவிட்டது. இலங்கைக்கு பிரணாப்பைய அனுப்ப மறுக்கும் மத்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தத்தை ஒரு பாதும் ஏற்படுத்த முற்படாது என்பது கருணாநிதிக்கு தெரியாதவிடயமல்ல. எனவ கருணாநிதி தெரிந்து கொண்ட தமிழக மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றார்.

தமிழ் நாட்டு அரசியலை சூதாட்ட களமாக மாற்றிவிட்ட தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை பகடைக்காயாக்கி அம் மக்கள் சிந்தும் குருதியில் குளித்து கும்மாளமடித்து அரசியல் ஆதாயங்களுக்காக அந்தரத்தில் பறக்கின்றன. தமிழின உணர்வு அரசியல் சாக்கடையுடன் கலந்து விட்டதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறந்த உதாரணங்களாகியுள்ள சம்பவங்கள தற்போது, தமிழகத்தில் நடந்தறி வருகின்றன.

தி.மு.ககாங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்காக "புலி ஆதரவு தி.மு.க.' என்ற ஆயுதத்தை கையிலெடுத்துக் கொண்ட அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா அதன் மூலம் தி.மு.க.வை கண்மூடித்தனமாக தாக்கியதினால் திக்குமுக்காடிப் போன கருணாநிதி தான் காங்கிரஸ் விசுவாசி என்பதைக் காட்டி கூட்டணியை தக்க வைப்பதற்காகவ சில கைது நடவடிக்கைகளை அரசியல் அதிரடியாக மேற்கொண்டார்.

கருணாநிதியின் இந்த அரசியல் சகுனித்தனத்தினாலேயே, எந்தவித அரசியல் நாக்கமுமின்றி தமிழன் என்ற உணர்வினால் மட்டும் இலங்கைத் தமிழர்களையும் அவர்களின் போராட்டத்தையும் ஆதரித்துப் பேசிய திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றார் சிறையிலடைக்கப்பட்டனர். இன்று கூட தனது இனத்துக்காக பேசிய ஒர குற்றத்திற்காக இயக்குநர் சீமான் சிறை வாசம் அனுபவிக்கின்றார்.

எதிர்காலத் தேர்தல் ஆதாயம் ஒன்றுக்காக புதுடில்லியுடன் செய்து கொண்ட அதிகார சமரசத்தின் விளைவாகவ இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழகத்தில் குழிதாண்டிப் புதைக்கும் வலையில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகவும் அவர்களின் போராட்டம் தொடர்பாகவும் தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும் தான் முன்னர் நியாயப்படுத்தி பேசிய பல விடயங்களை தற்போது அரசியல் நலன்களுக்காக தான எதிர்த்துப் பேசுகிறார்.

இலங்கைத் தமிழர் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழகத்தில் மீண்டும் ஆதரவு பெருவாரியாக அதிகரித்து வருவதினால் தமிழக காங்கிரஸ் கட்சியும் சில பார்ப்பன ஊடகங்களும கதி கலங்கிப் போயுள்ளன. இவர்கள் வைக்கும ஒப்பாரிகளினால் தனது குடும்ப அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து வந்து விடுமா என்ற அச்சத்திலும் டில்லியின் மிரட்டலுக்கு அடிபணிந்தும தமிழகத்தில் சில இலங்கைத்தமிழர் விரோத நடவடிக்கைகளை கருணாநிதி முன்னெடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராக பேசுவோர் செயற்படுவோர் மீது தமிழகத்தில் தமிழின உணர்வாளர்கள் மற்கொண்ட சில நடவடிக்கைகள் டில்லி வரை எதிரொலித்தன. இதன் விளைவாகவே "இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பசினாலும், செயற்பட்டாலும் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்காது இந்த எச்சரிக்கை எல்லாருக்கும் பொருந்தும்' என்று கருணாநிதி அறிக்கை வெளியிட வேண்டி வந்தது.

காங்கிரஸ் மேலிடம் கொடுத்த அழுத்தம கருணாநிதியின் இந்த அறிவிப்பின் பின்னணியாகும். தமிழக சட்டப் பேரவையில் தி.மு.க.விற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும் இல்லாத நிலையில் காங்கிரஸின் ஆதரவுடன் தான் ஆட்சியில் நீடிக்க முடியுமென்ற நிலையில் தனது அரசை காப்பாற்றிக் கொள்ளவ காங்கிரஸ் விடுக்கும் கைதுக் காரிக்கைகளை தமிழக அரசு அவசர நடவடிக்கைகளாக நிறைவற்றி வருகின்றது.

தி.மு.க.அரசின் ஆயுட் காலம் தற்போது காங்கிரஸ் கட்சியின் கைகளில்தான் உள்ளது. அதனால் தான் காங்கிரஸ் சொல்வதையெல்லாம் கருணாநிதி சிரமற் கொண்டு செய்து வருகின்றார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பது தான் தி.மு.க.அரசின் குறிக்காள் என்று கூறும் கருணாநிதியால் அத குறிக்காளை அடையவே இலங்கையில் ஒரு போராட்டம் நடைபெற்று வருகின்றதென்பதை மறுக்க முடியுமா?

2007 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழீழ ஆதரவு மாநாட்டின் போது திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பேசியதை கண்டித்து தமிழக சட்டப்பரவையில் காங்கிரஸ் கட்சியினர் பசிய போது அவர்களுக்கு பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் கருணாநிதி "தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது அந்த இயக்கத்திற்கு உதவுவதாக ஆகாது' என்று பொடா சட்டத்தின் கீழ் வைகா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீமன்ற நீதிபதிகள் கூறியதை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். ஆனால் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு எதிராகவ செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வண்டும். இலங்கைக்கான இராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டுமென கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த தமிழகமும் போராடி வருகின்றது. தமிழக மக்களின் உணர்வு ரீதியான போராட்டத்தை தனது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி இன்று அந்தப் போராட்டத்தைக் காட்டியும் கொடுத்துவிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வண்டுமென்ற தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களினதும் தீர்மானத்தை ஆதரித்து அவர்களை டில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் கழுத்தறுத்து போர் நிறுத்தமென்ற தீர்மானத்தை பிரணாப்பின் இலங்கை விஜயமாக மாற்றிய சதிவலையை கருணாநிதி திட்டமிட்ட செய்து முடித்தார்.

மத்திய அரசு இலங்கையரசின் பக்கம நிற்கும். இலங்கையில் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த மத்திய அரசு ஒரு போதும் இலங்கையரசுக்கு அழுத்தங்களை கொடுக்காது என்பது கருணாநிதிக்கு நன்கு தெரிந்த விடயம். அதனால் தான் கருணாநிதி மத்திய அரசைக் காக்கும் விதத்திலும் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதிலும் தனது சாணக்கியத்தை பயன்படுத்தி வருகின்றார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை இந்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது. காஸா பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரல் நடத்தி வரும் இராணுவ நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வண்டுமென்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளதுடன் இஸ்ரல் கட்டுப்பாட்டுடன் செயற்பட வண்டுமென்றும் எச்சரித்துள்ளது.

காஸா பகுதி மீது இஸ்ரல் நடத்தும் தாக்குதலுக்காக துள்ளிக் குதித்து ஆவசப்படும் இந்தியா தனது அயல் நாடான இலங்கையில் ஒரு இனம் மீது இனவழிப்பு யுத்தத்தை நடத்தி வரும் அரசுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையைக் கூட இதுவரை விடுத்ததில்லை. மாறாக அந்த அரசின் இனவழிப்பு போருக்கு உதவியாக இராணுவ தளபாடங்களையும் நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசிற்கும் இலங்கை அரசிற்குமிடைய சிறந்த புரிந்துணர்வு உள்ளது. அதனால் தான் இன்று வரை இலங்கை அரசை, அதன் தமிழர் ஒழிப்புக் கொள்கையை எதிர்த்து இந்திய அரசு ஒரு கண்டன அறிக்கையைக் கூட விடுக்க வில்லை. இலங்கைத் தமிழர் தொடர்பான காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள "பார்வை' இதுதான்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இந்திய அரசு ஒருபாதும் முயற்சிக்காது என்பது தெளிவானது.அதனால் தான் கருணாநிதி அக்காரிக்கையின் வீரியத்தை குறைத்து பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதன் மூலமாவது தமிழக மக்களையும் இலங்கை தமிழர்களையும் திருப்திப்படுத்திவிடலாமென கணக்குப் போட்டு அது தொடர்பான காரிக்கையை பிரதமரிடம் விடுத்தார்.

கருணாநிதியின் இக்காரிக்கையினால் பெரும் நெருக்கடிக்குள்ளிலிருந்து தப்பித்துக் கொண்ட மத்திய அரசு இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு உடனடியாக அனுப்புவதாக டில்லி சென்ற தமிழக அனைத்துக் கட்சிக் குழுவிடம் உறுதியளித்தது. இதில் பல தலைவர்களுக்கு உடன்பாடில்லாத போதும் கருணாநிதி மீதிருந்த மரியாதையாலும், நம்பிக்கையாலும் அரை மனதுடன் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் ஒன்றரை மாதங்கள் கடந்த விட்ட பாதும் இதுவரை பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லவும் இல்லை. இலங்கையில் பார்நிறுத்தம் ஏற்படவும் இல்லை. அதவளை இலங்கைத் தமிழர் தொடர்பான நாடகத்தை கருணாநிதி அரங்கற்றத் தொடங்கி 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இக்காலப்பகுதியில் மட்டும் இலங்கையில் நூற்றுக்கு மற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கு மற்பட்டார் படுகாயப்படுத்தப்பட்டுமுள்ள

தினக்குரல்.......உது சிங்களவர்களின் மேற்பார்வையில் உள்ள பத்திரிகையல்லவா? :D

  • கருத்துக்கள உறவுகள்

கரு -நா -நிதி என அழைக்கலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.