Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீயினை எதிர்த்து ஈசல்கள் போரா ?

Featured Replies

காலத்தின் தேவை கருதி கணப்பொழுதில் வரைந்த கிறுக்கல் . . ஈழப்புதையல் தேடி உழுது தேய்ந்த சந்தணக்கலப்பைகளை மனதில் இருத்தி கிறுக்கியுள்ளேன் . . . காலம் கண்மூடி திறப்பதற்குள் கரைந்து போய்விடுகின்றது. எம் உறவுகளே கரங்கள் எம்முடன்தானே பலமாக இருக்கின்றுது. உழைக்கின்றோம் ஒரு சிறு தொகை மனமுவந்து உதவுவோம். ஈழப்போர் இறுதிக்கு வந்து நிற்கின்றது. எதிரியின் எறிகணை எல்லைக்குள் எம்மக்கள் தவிக்கின்றார்கள். இந்தக்கணத்தில் நாம் செய்யவேண்டியது அவர்கள் கேட்டுக்கொள்வதும் ஓன்றே ஒன்றுதான். அன்பின் புலம்பெயர் உறவுகளே உதவிக்கொள்ளுங்கள். இது ஒரு கடன் நாம் கட்டாயம் திருப்பித்தருன்றார்கள் ஒருவர் கேட்கும்போது கைவிரிக்கும் பழக்கமற்றவர்கள் நாம். கொடுத்துச்சிவந்த கரங்கள் எமது கரங்கள் இன்னும் கொடுப்போம் கொடுத்துக்கொண்டேயிருப்போம். இன்றைய காலகட்டத்தில பல வல்லரசுகளின் உதவியுடன் சிங்கள அரசு ஒரு முடிவுடன் போரை ஆரம்பித்துள்ளது. எம் போராட்டத்திற்கு எந்த சிறு தேசமும் ஆதரவு இல்லை நாம்தான் உதவவேண்டும் எம்மை நம்பித்தான் அந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே உறவுகளே உங்களால் முடிந்த ஒரு சிறுதொகையை இந்த காலகட்டத்தில் வழங்கிக்கொள்ளுங்கள் இது இறுதி யுத்தம் இதில்தான் எம் வாழ்க்கை தங்கியிருக்கின்றது. அம்மா, அப்பா, அண்ணா, தங்கை , மகன் , மகள் என லட்சக்கணக்கான உறவுகள் அங்கு உயிருக்கு உத்திரவாதம் இன்றி எம் போராளிகளின் உயிர் கவசத்தில் வாழ்கின்றார்கள். எம் போராளிகளிற்கு நாம்தான் கவசம் கொடுக்க வேண்டும். உடன் உதவுங்கள் உறவுகளே . .

எல்லையில் எதிரிகூட்டம்

இல்லை இல்லை உன்

கொல்லையில் புகுந்துவிட்டான்

கொலைக்களமறுக்கும் கணம் இது

கொடுங்கோல் ஆட்சியை

குதறக்குதறக் கடித்தெறியும் நாளும் இது

தூங்க மறுத்து துடிக்கின்ற

கண்ணிமையும் ஏங்கித்தவித்து

எட்டித்துடிக்கும் இதயமும்

போனதனை எண்ணிப் புலம்புவதில்லை

நாளைய விடியலிற்காய் சாவைச்சுமந்து

சத்திய வேள்வியில் துடித்து நிற்கும்

எல்லைகள் மாறினாலும்

எரிதழலால் தேசம் எரிந்தே போனாலும்

கொண்ட லட்சியம் குன்றிடாது

கொள்கைகளும் மாறிடாது

விரக்தியென்பது வாழ்வில் வரும்

விடுதலையே மூச்சாயின் விரைந்தே மறைந்துவிடும்

அரக்கமனம் கொண்ட அரசினால்

அடுக்கடுக்காய் புனைகதைகள் தோற்றம்பெறும்

புலி அழிந்ததென புவியை நம்ப வைக்கும்

வெடுக்கென்று ஓர் நாள் புலி புவுpயதிரவெழும்

அன்றைய நாள் நாளைய நாள்

விடியல் தோன்றும் ஈழத்தின் விடிவும் தோன்றும்

கடலோடு கரைந்தவர்கள் மண்ணோடு மறைந்தவர்கள்

கந்தகத்தை தின்றவர்கள்

கனவுகளை சுமந்து சென்றவர்கள்

நெஞ்சினிலே பலவாசை தோன்ற

நெருப்பினிலே புதைந்தவர்கள்

கனவெல்லாம் பலிக்கும்

கட்டாயம் விடிவு வரும்

கொடியேற்றும் கைகள் கொடும்போரால்

அறுந்தே வீழ்ந்தாலும் கொள்கைள் மாறாது

கொண்ட லட்சியம் வீழாது

சிரமறுந்து வீழ்ந்தாலும்

சிரிப்பறாத மலராய்

விடுதலைத்தீயில் தம்மை

விறகாக்கிய வீரர்கள் வாழ்ந்த மண் அது

தமிழனை - தெருப்புழுதியென எண்ணி

நீயும் தீண்டிவிட நினைத்தாயோ

பொறுத்திரு சிங்களமோ

தீயினை எதிர்த்து ஈசல்கள் போரா ?

திருநாட்டை அழிக்க தீயவர் கூட்டமா ?

போகட்டும் என்றெண்ணி

புகுவதற்கு விட்டுவிட்டால்

மறத்தமிழன் மடியிலேயே

மந்தையர் ஆட்டமா ?

இடுப்பாட்;டம் காட்டும் சிங்களத்தின்

இடுப்பினை ஓடிக்க வேண்டும்

குள்ள நரிகளின் முகத்திரை கிழிக்கவேண்டும்

கிளஸ்ரர் குண்டினால்

கிளறியெறியும்போதெல்லாம்

கைகட்டி நின்றாய் ஜ.நாவே - நீ

இனியும் கைகட்டித்தான் நிற்கவேண்டும்

எக்கணத்திலும் எம்மைத் தடுக்காதே

கொதித்திடும் விடுதலைத்தீயில்

எம்மில் கூதல் காய வந்த சிங்களக்காடையே

ஓநாயக்கூட்டத்துடன் ஒத்து ஊதி

வீணாண ஆசையுடன் விரைந்து வந்தாயோ

நாளைய விடியலில்

உன்னை நாய்க்கிரையாக்குவோம்

தலைநகரம் வீழ்ந்துவிட்டால்

தலைவனையே வீழ்த்திடலாம் என்ற

பகற்கனவில் வந்தவரை

விழவிழ புதைக்கவேண்டும்

உள்ளே வந்தோரை

ஓட ஓட விரட்டவேண்டும்

கைகள் அங்கு துணிவுடன்

கவசம்தான் நாம் இங்கே

பலம் சேர்க்கவேண்டும்

புலத்தமிழரை நம்பித்தான்

களப்புலி இன்று கனவுடன்

முகத்தை தொங்கவிட்டு நாம்

முந்தானைக்குள் பதுங்கலாமோ ?

மானாட மயிலாட மகிழ்ச்சியுடன்

களித்தது போதும்

பேயாட்டம் ஆடும் சிங்களத்தை

பிடரியில் கால்பட ஓடவைப்போம்

கைகொடுங்கள் உறவுகளே

கொடுத்துச்சிவந்த கரங்கள்தான்

இனியும் கொடுக்க பிறந்த கரங்கள்

துன்பம் வரும்போது துவழ்தல் அழகல்ல

அள்ளி அள்ளிக் கொடுப்பதுதூன் அழகு

  • கருத்துக்கள உறவுகள்

தலைநகரம் வீழ்ந்துவிட்டால்

தலைவனையே வீழ்த்திடலாம் என்ற

பகற்கனவில் வந்தவரை

விழவிழ புதைக்கவேண்டும்

உள்ளே வந்தோரை

ஓட ஓட விரட்டவேண்டும்

கைகள் அங்கு துணிவுடன்

கவசம்தான் நாம் இங்கே

பலம் சேர்க்கவேண்டும்

நாம் தான் பலம் சேர்க்க வேண்டும்.

கவிதை அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரக்தியென்பது வாழ்வில் வரும்

விடுதலையே மூச்சாயின் விரைந்தே மறைந்துவிடும்

அரக்கமனம் கொண்ட அரசினால்

அடுக்கடுக்காய் புனைகதைகள் தோற்றம்பெறும்

புலி அழிந்ததென புவியை நம்ப வைக்கும்

வெடுக்கென்று ஓர் நாள் புலி புவுpயதிரவெழும்

அன்றைய நாள் நாளைய நாள்

விடியல் தோன்றும் ஈழத்தின் விடிவும் தோன்றும்

கடலோடு கரைந்தவர்கள் மண்ணோடு மறைந்தவர்கள்

கந்தகத்தை தின்றவர்கள்

கனவுகளை சுமந்து சென்றவர்கள்

நெஞ்சினிலே பலவாசை தோன்ற

நெருப்பினிலே புதைந்தவர்கள்

கனவெல்லாம் பலிக்கும்

கட்டாயம் விடிவு வரும்

கொடியேற்றும் கைகள் கொடும்போரால்

அறுந்தே வீழ்ந்தாலும் கொள்கைள் மாறாது

கொண்ட லட்சியம் வீழாது

சிரமறுந்து வீழ்ந்தாலும்

சிரிப்பறாத மலராய்

விடுதலைத்தீயில் தம்மை

விறகாக்கிய வீரர்கள் வாழ்ந்த மண் அது

தமிழனை - தெருப்புழுதியென எண்ணி

நீயும் தீண்டிவிட நினைத்தாயோ

பொறுத்திரு சிங்களமோ

தீயினை எதிர்த்து ஈசல்கள் போரா ?

திருநாட்டை அழிக்க தீயவர் கூட்டமா ?

போகட்டும் என்றெண்ணி

புகுவதற்கு விட்டுவிட்டால்

மறத்தமிழன் மடியிலேயே

மந்தையர் ஆட்டமா ?

கிளஸ்ரர் குண்டினால்

கிளறியெறியும்போதெல்லாம்

கைகட்டி நின்றாய் ஜ.நாவே - நீ

இனியும் கைகட்டித்தான் நிற்கவேண்டும்

எக்கணத்திலும் எம்மைத் தடுக்காதே

கொதித்திடும் விடுதலைத்தீயில்

எம்மில் கூதல் காய வந்த சிங்களக்காடையே

ஓநாயக்கூட்டத்துடன் ஒத்து ஊதி

வீணாண ஆசையுடன் விரைந்து வந்தாயோ

நாளைய விடியலில்

உன்னை நாய்க்கிரையாக்குவோம்

தலைநகரம் வீழ்ந்துவிட்டால்

தலைவனையே வீழ்த்திடலாம் என்ற

பகற்கனவில் வந்தவரை

விழவிழ புதைக்கவேண்டும்

உள்ளே வந்தோரை

ஓட ஓட விரட்டவேண்டும்

கைகள் அங்கு துணிவுடன்

கவசம்தான் நாம் இங்கே

பலம் சேர்க்கவேண்டும்

புலத்தமிழரை நம்பித்தான்

களப்புலி இன்று கனவுடன்

முகத்தை தொங்கவிட்டு நாம்

முந்தானைக்குள் பதுங்கலாமோ ?

மானாட மயிலாட மகிழ்ச்சியுடன்

களித்தது போதும்

பேயாட்டம் ஆடும் சிங்களத்தை

பிடரியில் கால்பட ஓடவைப்போம்

கைகொடுங்கள் உறவுகளே

கொடுத்துச்சிவந்த கரங்கள்தான்

இனியும் கொடுக்க பிறந்த கரங்கள்

துன்பம் வரும்போது துவழ்தல் அழகல்ல

அள்ளி அள்ளிக் கொடுப்பதுதூன் அழகு

பரணி

கிறுக்கிய வரிகளா இவை...? தமிழர் மனங்களில் தீ மூட்டும் வரிகள்...! மிக அற்புதம்...சகலகலா வரிகள் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் வரிகள் தமிழ் மனங்களில் இன்று இருக்கும் சோர்வுக்கு மருந்தாக, எதிரிக்கு எச்சரிக்கையாக, எங்கள் தியாகச் செல்வங்களின் தியாகத்திற்காக மேலும் மக்களின் சோகங்களுக்காக மொத்தத்தில் எல்லாவற்றிற்குமாக ஓர் கவிதை....! அருமை அருமை அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள்....

மேலே கூறிய வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது...

பி.கு: என் அனுபவத்தில்..ஓர் தலைப்பை எடுத்து இதைப் பற்றி கவிதை எழுத வேண்டுமென்று சில நாட்கள் எடுத்து எழுதிய கவிதை சரிவராமல் போனதும் ஆனால் சில வேளைகளில் மனதில் ஏதோ ஒரு பொறி தோன்றியதும் வரிகள் தானாகப் பெருக்கெடுத்து உடனே கணனிக்கு வந்து எழுதிய கவிதை மக்கள் மனங்களை பெரியளவில் போய் சேர்ந்ததும் எனக்கு நடந்துள்லது.

உங்கள் வரிகளும் அப்படி ஓர் கவிதை கிறுக்கிய கவிதையென்றீர்கள் அது மற்றவர்களுக்கு எப்படியோ என்னை கிறுங்க வைத்துவிட்டது...

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு பின் பரணியின் கவிதை வரிகள் அருமை. அதிலும் இவ்வரிகள் என்னை மிக கவர்ந்தவை.

கொதித்திடும் விடுதலைத்தீயில்

எம்மில் கூதல் காய வந்த சிங்களக்காடையே

ஓநாயக்கூட்டத்துடன் ஒத்து ஊதி

வீணாண ஆசையுடன் விரைந்து வந்தாயோ

நாளைய விடியலில்

உன்னை நாய்க்கிரையாக்குவோம்

  • கருத்துக்கள உறவுகள்

உனக்குள் உறங்கும் உன்னை வெளியிழுத்து வந்து வலியில் துடித்தபடி வரைந்த கவிதையிது. காலம் எதற்காகவும் கைகட்டி நிற்பதில்லை. வல்லமை உள்ளவனே வாழ்வதாய் இருக்கிறது இதுதான் உலக நடப்பு. தமிழருக்குப் பணியவும் தெரியும். துணியவும் தெரியும் என்பது இப்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் புது வரலாறு. களத்திற்கு மட்டுமல்ல புலத்திற்கும்தான். பரணி உங்கள் பணி மிகவும் காத்திரமானது. வானலை என்பதை வசைக்கத் தெரிந்தவனுக்கு வீழ்ச்சியே இல்லை. வாழ்த்துகள் பரணி.

  • தொடங்கியவர்

அனைவருக்கும் நன்றிகள்

களம் பல கடுமையான சோதனைகளை தன்னகத்தே கொண்டு நகர்ந்துகொண்டிருக்கின்றது. எமது கடமைகளை நாம் சரிவரச்செய்ய வேண்டும்.

கண்ணை மூடித்திறப்பதற்குள் எதிரி வந்து விடுகின்றான். ஒவ்வொரு போராளியும் எவ்வளவு வேதனைகளுடன் எவ்வளவு வலிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாம் அவர்களிற்கு ஊக்கம் கொடுக்கவேண்டும் அதற்காகத்தான் எமது பேனாக்கள் மை சிந்தவேண்டும் அதுதான் எனது விருப்பம்.

இங்கு வரையப்படும் கவிதைகள் யாவும் உண்மையிலேயே ஓவ்வொரு தமிழரையும் ஊக்கப்படுத்துகின்றது. அது வரவேற்றத்தக்க ஓன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.