Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதர் சிவராம் அவர்களின் சில கட்டுரைகள்!

Featured Replies

உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்...

sivaram010505.jpg

பட உதவி: விக்டர்

ஆனையிறவிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்திக்கள செயல்வீரன் சிவராம்

மாமனிதர் சிவராம் தமிழ்நாதத்துடன் நெருக்கமான உறவுகளை பேணியவர். அந்த உயரிய பண்புள்ள துணிச்சலான ஊடகவியலாளனின் ஆக்கங்களை தமிழ்நாதம் தாங்கி வந்தபோதெல்லாம் வாசகர்களாகிய நீங்கள் தரும் கருத்துக்களை நாங்கள் கிரமமாக அவருக்கு அனுப்பிவைத்தோம். அவற்றை மிகவும் ஆவல்கொண்டு வாசிக்கும் மாமனிதர் சிவராம் அவர்கள் அது குறித்த கருத்தாடல்களை எம்முடன் மேற்கொண்டுள்ளார்.

தான் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்கின்ற மமதை இல்லாமல் வாசகர்களின் கருத்துக்களை உள்வாங்கும் அவரது பாங்கு அவர் மீதான மதிப்பை எம்முள் ஒருபடி உயர்த்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உரையாடும் போது தனக்கு ஏற்படும் நெருக்குதல்கள் குறித்து கருத்துப்பகிர்ந்த மாமனிதர் சிவராம் அவர்கள்ää என்னையும் இவர்கள் முடித்துவிடுவார்கள். அப்படி நான் மரணமடைந்தால் பெரிய படமாக போட்டு விடுங்கள் என்று கூறியிருந்தார்.

யதார்த்தம் புரிந்தும் அச்சம் கொள்ளாமல் தமிழ்த் தேசியத்திற்காக உரக்க குரல் கொடுத்த அந்த மாமனிதனுக்கு எவ்வாறு அஞ்சலி செலுத்துவது என்று தெரியாமல் தமிழ்நாதம் திக்கித்திணறுகிறது.

அந்த உயரிய ஊடகவியலாளன் விட்டுச் சென்ற பணியை தொடர்வோம் என்ற திடசங்கற்பத்துடன் அவரது முன்னைய ஆக்கங்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறது.

விரைவில் சந்திக்கும் வரை

தமிழ்நாதம் இணையக் குழுவினர்

முப்படைகளுக்கும் மரபு வழி போர்த்தகைமை உண்டா?(28.03.05)

இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்(24.11.04)

இராணுவச் சமநிலையைப் பேணுவதாயின் அரசியல் மயமாக்கல் தேவை(07.11.04)

ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்(31.10.04)

தினக்குரல் பத்திரிகையில் 26.10.04 அன்று வெளிவந்த ஆசிரியர் தலையங்கமும் அதற்கு டி.சிவராம் (தராக்கி) அளித்த பதிலும்(05.11.04)

சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்(24.10.04)

விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை..? எனக்கேட்கும் சிங்கள தேசம்(11.10.04)

தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்(03.10.04)

உங்கள் செல்லிடத் தொலைபேசியின் குருதிக்கறை(27.09.04)

இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்(12.09.04)

அந்நிய இராணுவ தலையீட்டை விரும்பும் சிங்கள தேசம்(05.09.04)

அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை(30.08.04)

சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம்(17.08.04)

சூடான் - தமிழ் ஈழம்; அமெரிக்கா இரட்டை வேடம் போட இயலாது(08.08.04)

காலத்தின் தேவை அரசியல் வேலை(25.07.04)

நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி(19.07.04)

கருணா ஓடியது எதற்காக?(27.04.04)

கருணாவுக்கு ஒரு கடிதம்(16.03.04)

நன்றி தமிழ் நாதம்.

மன்னா நன்றி

  • தொடங்கியவர்

குளக்கட்டான், வசி, தமிழ் நாதத்தில் பிரசுரமான முதலாவது கட்டுரையுடன் நானும் தொடர்புபட்டுள்ளேன் பார்த்தீர்களா? கருணாவுக்கு ஒரு கடிதம் என்ற கட்டுரையை வீரகேசரி வார இதழில் படித்துவிட்டு அவசர அவசரமாக நானும் எனது நண்பன் ஒருவனும் சேர்ந்து வேகமாக தட்டச்சு செய்து தமிழ் நாதத்துக்கு அனுப்பி வைத்தோம்! அவர்களும் காலத்தின் தேவை கருதி உடனே அதை பிரசுரித்துவிட்டனர், ஆனால் அதில் அதிக எழுத்துப்பிழைகள் காணப்பட்டதால் மாமனிதர் சிவராம் அவர்கள் தமிழ் நாதத்தோடு தொடர்புகொண்டு முக்கியமாக எழுத்துப்பிழைகளை கருத்துத்தில் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்! அதன் பின் அவரின் கட்டுரைகள் தொடர்சியாக தமிழ் நாதத்தில் பிரசுரமாக தானே வழிசெய்துகொடுத்தார்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செயல் வீரன் சிவராமை கடந்த தை முதல் கிழமை நியூயோர்க் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தது அடியேன் தான்.

  • தொடங்கியவர்
இந்த செயல் வீரன் சிவராமை கடந்த தை முதல் கிழமை நியூயோர்க் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தது அடியேன் தான்.
ஈழப்பிரியன் உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கின்றது, ஆனால் நான் கல்கிஸ்சையில் வசித்தும் அவரை நேரில் சந்திக்கமுடியவில்லை, அதுதான் இன்றுவரை எனக்கு கவலை :cry:
  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் படுகொலையின்

  • தொடங்கியவர்

:roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

வெகு விரைவில் சங்கதி இணையத்தளத்தில் அதை பற்றிய விபரம்...

அதை விட எனது புலனாய்வு ஊகத்தின் படி "ROW" வின் திட்டப்படி 'இலங்கை புலுனாய்வு துறை" உதவியுடன் " EPDP" தோளர்கள் "கறுனா அன்ட் ENDLF " கும்பல்கள் ஒன்றாக சேர்ந்து நடாத்திய படுகொலை. :?: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெகு விரைவில் சங்கதி இணையத்தளத்தில் அதை பற்றிய விபரம்...

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

:idea: :idea: :!: :!: :!:

என்ன ஆளுக்காள் முழிக்கிறீங்கள் ஆஆ? :evil:

விசயத்தை முழுசா சொல்லுங்கப்பா :x

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள கொலை கொள்ளைக் கோஸ்டிகளுக்கு எல்லாம் சங்கரியார் தான் தலைவர் ஆக போகிறார். :evil:

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியார்: ஆரம்பமே நல்லாயில்ல - செங்குட்டுவன்

த.வி.கூட்ணியின் தனிப்பெரும் தலைவர் ஆனந்தசங்கரியாரின் கதிகள் தொடர்ந்துகொண்டே போகின்றன.

கடந்த சில வாரங்களாக சங்கரியார் தமிழ் மக்களின் கழுத்தில் கத்தி வைக்குமளவிற்கு களத்தில் இறங்கி கதைக்க ஆரம்பித்துவிட்டார்.

அதுமட்டுமல்ல மற்றொரு த.விகூட்டணிக்குத் தானே தலைவரென பட்டம் சூட்டிக்கொண்டு தானே தந்தை செல்வாவின் வாரிசு எனத் தம்பட்டம் அடித்துத் திரிந்தவர்

இப்போது தமிழர் விரோதக் கூட்டணி ஒன்றிற்கு அயலகத்தில் வைத்து தலையேற்கக் கோரப்பட்டதையடுத்து அவருக்குப் பொருத்தமான கட்சித் தலைவராகியுள்ளனராம்.

ஏற்கனவே கதிர்காமரை ஓரம்கட்டும் அளவுக்கு தமிழின மற்றும் விடுதலைப் புலிகள் எதிர்ப்புப் பிரசாரத்தில் உச்ச மொத்த அறளைத்தனத்துடன் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த சங்கரியார்இ இப்போது ஹெலஉறுமயப் பிக்குகளையும்இ ஜே.வி.பி கும்பலையும் வியப்பால் விழிபிதுங்க வைக்குமளவிற்கு பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து தன் தன் முழுமையான சுயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுக்கட்டமைப்பு என்பது தேவையற்ற ஒன்று என்றும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டிய அவசிமில்லை என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ள சங்கரியார் கடைசியில் பொதுக்கட்டமைப்பு உருவானால் அதனால் இந்திய நலன்களும்இ இந்தியாவின் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்றும் இந்தியா அதனைத் தடுக்க முன்வரவேண்டுமென்றும் அறைகூவல் ஐஸ் மழை கொட்டியுள்ளார்.

உடனேயே அவரை தமிழர் விரோதக் கூட்டணியின் தலைமையை ஏற்க இவரைவிடப் பொருத்தமான ஆசாமி ஒருவர் ஒரு காலத்திலும் கிடைக்கப்போவதில்லை என்று முடிவுகட்டிய அயலக உளவுத்துறையினர் அவர்கள் வசமிருந்த ஈ.என்.டி.எல்.எவஇ வரதராஜப் பெருமாள் அணியினர்இ கருணா கும்பல் மற்றும் இவைபோன்ற தமிழ்தேசிய விரோதக் குழுக்களுக்கெல்லாம் தலைவராக்கியுள்ளதாக ஊடகங்கள் ‘இழிவுச்’ செய்தியொன்றினை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே கொடி – குடை – ஆலவட்டம்இ போன்றவற்றை மட்டுமல்ல அனைத்தையும் இழந்து துண்டைக்காணோம்இ துணியைக்காணோம் என்று ஒடிய சங்கரியாரின் கோவணச் சீலையும் பறிக்க அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் போலும்.

பாவம் புதுப் பதவியைப் பொறுப்பேற்றதுமேஇ சேருவில சம்பவத்தில் கொல்லப்பட்ட ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர்களின் சடலங்களைப் பொறுப்பேற்று அடக்கம் செய்யும் திருப்பணியை பொறுப்பேற்க வேண்டியவராகிவிட்டார்.

சங்கரியாரே ஆரம்பமே நல்லாயில்லையே! பதிவிப் பதர்களுக்கு இப்படி ஒரு இழிந்த வாழ்வு தவிர்க்க முடியாதது தானே..!

சுட்டது சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிவராமைக் கருணாவே நேரடியாகக் கொன்றார்?

ஊடகவியலாளர் சிவராமை கருணாவே தனது கைகளால் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற தகவலை ஊடக வியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் வெளியிட்டிருக்கின்றார்."கருணாவே நேரடியாக தராக்கி சிவராமைக் கொன்றாரா?' - என்ற தலைப்பில் "த சண்டே லீடர்' பத்திரிகையில் தாம் வரைந்த கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.சிவர

  • 11 months later...

மாமனிதர் சிவராமுக்கு எனது முதலாம் வருட கண்ணீர் அஞ்சலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.