Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009

Featured Replies

வாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது.

வழிபடத் தயாரென்றால் வாருங்கள், இன்றுமுதல் திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். ஆல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

முதலில் விநாயக வணக்கம்.

1. ஆலடி விநாயகர் ஆலயம்

http://geevanathy.blogspot.com/2009/01/2009_23.html#links

2. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்

http://geevanathy.blogspot.com/2009/01/2009_28.html#links

3. சனீஸ்வரன் ஆலயம்

http://geevanathy.blogspot.com/2008/12/2009.html#links

நன்றி மீண்டும் சந்திப்போம்.....

http://geevanathy.blogspot.com/2009/01/blog-post_31.html#links

Edited by TJR

  • தொடங்கியவர்

1. ஆலடி விநாயகர் ஆலயம்

அமைவிடம் :- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் அமைந்துள்ளது. ஆலயமுன்றலில் நின்றவாறு ஈழத்தில் மிகப்பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமாகிய திருக்கோணேசர் ஆலயத்தினை அடியவர்கள் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.

வரலாறு ;- சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாத்தளையிலிருந்து வியாபார நிமிர்த்தம் வந்தவர்கள் ஐயனார் கேனியடியில் வைத்து வழிபட்டுவந்த கேணியடிப்பிள்ளையாரை எடுத்து வந்து தற்போது ஆலடி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து 1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

சிறப்பம்சம் ;- கிழக்கு மாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதலாக பஞ்சமுகவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

திருவிழாக்கள்;- சித்திராபூரணையைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாதசதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்காரம், சர்வாலயதீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.

{ மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. }

புகைப்படங்களை மேலுள்ள சுட்டிமூலம்காணலாம்.

தரிசனம் தொடரும்.......

  • தொடங்கியவர்

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008

http://thampainakar.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவன் உங்களுடைய வலைப்பூ பார்த்தேன் நல்ல வண்ணமயமாக உள்ளது வாழ்த்துக்கள்.புகைப்படங்கள் அழகாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள் :)

  • தொடங்கியவர்

ஜீவன் உங்களுடைய வலைப்பூ பார்த்தேன் நல்ல வண்ணமயமாக உள்ளது வாழ்த்துக்கள்.புகைப்படங்கள் அழகாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள் :)

நன்றி suppannai

உங்கள் வாழ்த்து உற்சாகம் தருகிறது.....

ஆலய தரிசனம் தொடரும்.......

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வலைப்பூ அழகாக இருக்கின்றது. தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

  • தொடங்கியவர்

உங்கள் வலைப்பூ அழகாக இருக்கின்றது. தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

நன்றி suvy

பக்கத்தில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரி முற்றவெளி கடற்கரை என அருமையான இடம் எமது வீடும் இதற்கருகிலேயே இருந்தது.

  • தொடங்கியவர்

பக்கத்தில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரி முற்றவெளி கடற்கரை என அருமையான இடம் எமது வீடும் இதற்கருகிலேயே இருந்தது.

அவற்றை படம்பிடிக்கவே பயப்படும் நிலை இன்று

நன்றி ஈழவன்85

  • தொடங்கியவர்

2. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்

அமைவிடம் :- திருகோணமலை நகரின் பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் எதிரே பரந்த விளையாட்டு மைதானமும், அதையடுத்து விரிந்து கிடக்கும் கடலும் இவ்வாலய சூழலின் இயற்கை அழகை மெருகூட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.

வரலாறு :- இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராஜேந்திர சோழனுடைய காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவ்வாலயம் அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழிபாட்டுக்குரிய தலமாக இருந்துவந்துள்ளதென்பதைத் துணிந்து கூறலாம்.

திருவிழாக்கள்

வைகாசிப் பொங்கல்

வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை ஸ்ரீ பத்திரகளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலையில் சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக்காணலாம்.

நவராத்திரி விழா

இலட்சார்ச்சனை :- இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திதிக்கு வருடாவருடம் சங்காபிஷேகம் செய்வார்கள். சங்காபிஷேகத்திற்கு முன்னுள்ள பத்து நாட்களும் இலட்சார்ச்சனை நடைபெற்று மறுநாள் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

கேதாரகௌரி விரதம்

இவ்வாலயத்தில் கடந்த 150 வருடகாலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம்.புரட்டாதிமாதம் விஜயதசமி முதல் ஐப்பசிமாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொள்வார்கள்.இவ்விரதத்

Edited by TJR

  • தொடங்கியவர்

தம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009

http://geevanathy.blogspot.com/2009/01/2009_17.html#links

  • தொடங்கியவர்

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம், திருகோணமலை, இலங்கை.

http://geevanathy.blogspot.com/2008/08/blo...5648.html#links

  • தொடங்கியவர்

3.சனீஸ்வரன் ஆலயம்

சனீஸ்வரன், ஒன்பது நவக்கிரகங்களில் ஒருவர். (கிரகங்கள் என்றால் பிடிப்பது என்று பொருள்) பெரும்பாலான பக்தர்களால் பயத்துடன் அணுகப்படும் கடவுள். அதே வேளை துன்பம் நேர்கையில் பக்தர்களால் நிறைய அர்ச்சிக்கப்படும் கடவுளும் இவராகத்தான் இருக்க வேண்டும். திருகோணமலையில் நிறைய ஆலயங்கள் இருந்தாலும் சனீஸ்வரனுக்கு தனியாக அமைக்கப்பட்டிருக்கும் ஆலயம் இதுவொன்றுதான். இலங்கையிலுள்ள ஒரேயொரு சனீவரன் ஆலயம் இதுவென நினைக்கிறேன். இந்தியாவிலுள்ள சனீஸ்வரனை பிரத்தியோகமாக வழிபடும் தலம் திருநள்ளாறு. நளன் சனிபகவானிடமிருந்து விடுபட்ட இடமாக கருதப்படும் இங்கு சனீஸ்வரனுக்குத் தனியான சன்னிதி உண்டு.

சனீஸ்வரன் ஆலயம் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் பிரதேசத்தில் ஸ்ரீ கிருஸ்ணண் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.

வழமையாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விசேட வழிபாடு நடைபெறும். இவ்வாலயத்தில் புரட்டாதி மாதத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் புரட்டாதிச் சனீஸ்வர விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்படும். இவ்வாலய தலவிருட்சமாக தாண்டி மரம் கொள்ளப்படுகிறது.

http://geevanathy.blogspot.com/2008/12/2009.html#links

  • தொடங்கியவர்

நன்றி மீண்டும் சந்திப்போம்.....

குருதியும்,தசையும் சகதியாய் குவிந்து கிடக்கிறது என் தேசம். பத்து வயதில் என் பாட்டனார் {கதைசொல்லி} கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் குருசேத்திரம். இரத்தமுறைந்து நடுங்கிக்கொண்டே நாற்புறமும் பார்த்தவண்ணம் அவருடன் நடந்த ஞாபகங்கள் நிழலாடிமறைகிறது இப்போது.

காட்சிகளில் காலமாற்றம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. போரின் கொடூரமும், வலியும் , வேதனைகளும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது...நிகழ்வின் கோரத்தை எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்

Edited by TJR

  • தொடங்கியவர்

தம்பலகாமம் ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்

திருச்சிற்றம்பலம்

நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்

நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்

ஊரதன் பெயரே தம்பலகாமம்

உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்

சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த

கோயில் குடியிருப்பெனும் பதியில்

கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த

கோண நாயகர் அமர்ந்தாரே

பிரமனும் அரியும் பிழைபடத் தாமே

பெரியவர் என்றென்னும் சிறுமை

புரிபடச் செய்ய முடிவிலா மலையாய்த்

தோன்றினார் பெரும் புகழாளர்

அரியயன் செருக்கு அடங்கிய பின்பு

அவர்கட்கும் நல்லருள் புரிந்தார்

கரிதனை உரித்துப் போர்த்திய நிர்மலர்

கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கானிடைச் சென்று வேட்டுவ வடிவில்

காண்டீபனுடன் சமர் விளைத்து

வானிடை எற்றி வரம்பல ஈந்த

மாபெரும் வானவர் தலைவர்

தானெனும் முனைப்பு உடையவர்க் கென்றும்

தரிசிக்க முடியாத முதல்வன்

தேன்மலர்ச் சோலையும் வயல்களும் சூழ்ந்த

கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தேவர்கள் துயரம் தீர்த்திட எண்ணி

தேரூர்ந்து சென்றவர் அங்கே

மூவர்கள் உறையும் முப்புரங்களையும்

முறுவலால் எரிபடச் செய்தார்

சேவலைக் கொடியாய்க் கொண்ட செவ்வேளைச்

செந்தமிழ்க் கடவுளாய் நல்கும்

காவலர் எங்கள் சிவபெருமானார்

கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கன்றினால் எறிந்து விளாங்கனி உதிர்த்த

கண்ணனின் தங்கையை மணந்தார்

மன்றுனில் ஆடும் கூத்த பிரானை

மறந்திடா திருந்திடும் பெரியோர்

என்றுமே துன்ப இடர்தனில் சிக்கார்

ஏற்றமே அருளுவார் ஈசர்

குன்றென உயர்ந்த தென்னைகள் சூழ்ந்த

கோயில் குடியிருப்பு அமர்ந்தாரே.

குளத்தினில் மூழ்கிய தந்தையைக் காணாக்

குழந்தையின் அழுகுரல் கேட்டு

அளப்பெரும் அன்பொடு அம்மையாய் அப்பராய்

அச்சிறு குழவி முன் தோன்றிக்

கிளர்ந்திடும் ஞானப் பாலமு தூட்டிக்

கிருபையைப் புரிந்த கோணேசர்

வளத்தினில் சிறந்த வயல்களால் சூழ்ந்த

கோயி;ல் குடியிருப் பமர்ந்தாரே

மாதவம் மிகுசெய் மணிவாசகரின்

மனத்துயர் அகற்றுதற்காக

வேதத்தின் முடிவாய் விளங்கிடும் ஈசர்

விரைந்தனர் பரித்திரள் சூழ

பாதி நள்ளிரவில் பரியெல்லாம் நரியாய்

ஆக்கியோர் அற்புதம் புரிந்த

மாதுமை பங்கர் வயல் வெளி சூழ்ந்த

கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கல்லுடன் பிணித்துக் கடலினுள் எறிந்தும்

கஷ்டங்கள் ஏதுமே இன்றி

நல்லிசைப் பாடலால் நாதனின் நாமம்

நவின்றிடும் நாவுக்கு அரசர்

வல்வினை அகற்றி வைத்தவரான

வானவர் போற்றிடும் தலைவர்

நெல்மணிப் போர்கள் நெருக்கமாய்த் தோன்றும்

கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தோழமை உயர்வை உலகினுக் குணர்த்த

சுந்தர மூர்த்தியின் மனையாள்

நீழ்விழி நங்கை பரவையா ரிடத்தில்

நயந்துரையாடித் தன் அன்பர்

வாழ்வது சிறக்க வழிவகை செய்த

வல்லவரான எம் பெருமான்

ஆழ்கடல் சூழ்ந்த இலங்கையிலுள்ள

கோயில் குடியிருப் பமர்ந்தாரே

அம்மையை இடப்புறம் இருத்தி இவ்வுலகோர்

இல்லற வாழ்க்கையின் புனிதச்

செம்மையை உணர அம்மை அப்பராய்

சிறப்புற அவர் கொண்ட கோலம்

தம்மையே துதித்து உரிகிடுவோரின்

தழைஎல்லாம் பொடிபடச் செய்து

இம்மையில் முத்தி அருளிடும் முதல்வன்

கோயில் குடியிருப் பமர்ந்தாரே

மாயஇவ்வுலக வாழ்க்கையில் சிக்கி

வருந்திடும் அடியவர் தமக்கு

நோய்தனை அகற்றும் மருத்துவர் போல

நோக்கினால் திருவருள் புரிவார்

தாயினும் பரிவு கொண்டு இவ்வுலகத்

தலைமையைத் தாங்கும் பேரிறைவன்

கோயிலும் வயலும் நீருடன் சூழ்ந்த

கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தொல்லைகள் சூழ்ந்திடும் துயரங்கள் நேர்ந்திடும்

போதவர் நாமம் நினைந்தால்

அல்லல்கள் அகன்றிடும் ஆனந்தமோங்கிடும்

அகத்தினில் புத்தொளி வீசும்

தில்லையில் திரு நடம் செய்தருள் புரிகின்ற

தெய்வமே இப்பதி மாந்தர்

வல்வினை போக்கிடும் கருணையினால் வந்து

கோயில் குடியிருப்பில் அமர்ந்தாரே.

திருச்சிற்றம்பலம்

தம்பலகாமம்.க.வேலாயுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.