Jump to content

யதார்த்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

சுரேஸும், ரசிகாவும்ஒரு வாரமாக பேசவில்லை. சுரேஸ் அவளுடன் பேசுவதற்கு ஒருமுறை முயன்றும் அவள் முகம் கொடுக்காமல் போனதால், தனக்கே உரிய மிடுக்கில் அவனும் அதன் பின் அவளுடன் பேச முயலவில்லை. எப்போதும் மலரும் மகரந்தமும் போல் உல்லாவிய இவர்களின் புது நடத்தை இருவரின் நன்பர்களின் முகத்திலும் பல கேள்விகளை எழுப்பியது. சுரேஸின் நன்பர்கள் என்ன நடந்தது என்று குடைந்து கொண்டு இருந்தார்கள். சுரேஸோ "ஒண்டும் இல்லையடா சும்மா இருக்க பாப்பம்" என்று சினந்துகொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றான்.

ரசிக்காவும், சுரேஸும் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள். ரசிகா கொழும்பில் புறநகர் பகுதியில் வசிப்பவள். சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்டவள். பெயருக்கேற்ப மிகவும் அழகானவள். பார்பவர் மனதை சுண்டி இழுக்கும் உடல் வாகும், காந்தக் கண்களும் கொண்டவள். பெரிய இடத்துப் பெண். தந்தையின் BMW வில் வந்து, தமயனின் Audi யில் தான் வீட்டுக்கு போவாள். சிலநேரம் கறுப்பு வண்ண Prado வில் போவாள். நுனிநாக்கு ஆங்கிலம் வேறு...! இருந்தாழும் சிறந்த முற்போக்கு சிந்தனை உள்ளவள். நாட்டில் தற்போது நடக்கும் சண்டைகளுக்கு சிங்கள பதவி வர்க்கமே காரணம் என்று எண்ணுபவள். இருந்தாலும் தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும் விட்டுக்கொடுத்து பேச மாட்டாள்.

சுரேஸ், சராசரி தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவன். பேச்சிலே அப்படியே யாழ்பாணத்தமிழ் வாசம் வீசும். நடக்கப் பழகுமுன்னே ஓடப்பழகிய இன்றைய ஈழத்து குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டு. புத்திசாலி. எதையும், யாரையும் உடனே புரிந்து கொள்வான். சிறுவயதிலிருந்தே cricket ஆர்வம் இருந்ததால், வானொலியில் நேரடிவர்ணனை கேட்டு கேட்டு சிங்களத்தில் சிறிது தேர்ச்சி இருந்தது. ஆமிகாரன் பிடித்தால் தான் யார் என்றும் தான் கொழும்பில் என்ன செய்துகொண்டு இருக்கிறான் என்பதையும் தடுமாறாமல் எடுத்துக் கூறும் மனதைரியமும், மொழி வல்லமையும் இருந்ததால் தான் தாய் அவனை கொழும்பில் தனியே இருந்து படிக்க அனுமதித்தாள்.

இருவரும் வகுப்பில் பலமுறை நேரடியாக கடந்து சென்று இருக்கிறார்கள். ஓரிரு முறை ரசிகா அவனை பார்த்து சிநேகமான முறையில் புன்னகைத்திருந்தாலும் அவன் அதைக் கண்டு கொண்டதில்லை. அவனது சிறுபராயம் நிறைய வலிகளை கொடுத்திருந்ததால் அவன் தன்னுடைய உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தான். எப்பொதும் தன்னையே சுற்றி சுற்றி வரும் ஆண்களைப் பார்த்து சலித்துபோன ரசிக்காவுக்கு சுரேஸின் நடத்தை புதிதாக தெரிந்தது. சிலநேரங்களின் புதிராகவும் இருந்தது. எப்படியோ அவளுக்கு சுரேஸ் எனும் புதிர் பிடிக்க ஆரம்பித்தது. எப்படியாவது அவனுடன் பேசவேண்டும் என்ற அவாவினால் அவனது நன்பர்களிடம் சற்று பேச ஆரம்பித்தாள்.

பல்கலைகளகத்தில் அனைவரிடமும் அரட்டை அடிப்பதற்கான குறைந்தது ஒரு முகவரியாவது இருக்கும். சுரேஸிடமும் skypeல் ஒரு முகவரி இருந்தது. இந்த skype மூலமாகதான் சுரேஸுக்கும் ரசிக்காவுக்கும் இடையே ஓர் உறவுப் பாலம் உருவாக்கியது. சுரேஸின் நண்பர்களிடம் இருந்து அவனது முகவரியைப் பெற்ற ரசிக்கா, அவனை தனது அரட்டையர் பட்டியலில்(contact list) சேர்த்துக்கொண்டாள். அவனும் அவளுடைய அழைப்பை (invitation) ஏற்றுக்கொண்டான். (accept). இவ்வாறாக ஆரம்பித்த இவர்களது பழக்கம் இருவரையும் சிறந்த நன்பர்களாக்கியது. சற்று முற்போக்கு குணம் கொண்ட ரசிக்கா ஒருகட்டத்தில் தம் இருவருக்கும் இடையிலான உறவு வெறும் நட்பா, இல்லை அதையும் தாண்டியதா என்று கேட்ட, சுரெஸோ யதார்த்தமாக 'ஒரு ஆரோக்கியமான நட்பு' என்றான். அத்துடன் தனது காதலை மறைத்துக்கொண்டு, ஒரு நன்பியாக அவனுடன் பழக ஆரம்பித்தாள்.

சுரேஸுக்கு அவள் எவ்வளவு தூரம் நிருங்கிப்பழகினாலும் அந்த உறவை நட்பைத் தாண்டி எடுத்துச் செல்ல அவனால் முடியவில்லை. அவனது இலட்சிய பயணத்தில் அவள் தடையாக இருக்க கூடாது என்பதில் அவன் கண்ணும் கருத்துமாய் இருந்தான். இன்று அவனது ஊர் மயான பூமியாய் விரிந்து கிடந்தாலும், என்றோ ஒரு நாள் தனி நாடு கிடைக்கும். அப்போது ஈழத்தை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்றெல்லாம் ஒரு கற்பனைக் கோட்டையே கட்டிவைத்திருந்தான். தமிழர்க்கென்று ஒரு தனிச் சிறப்பு மிக்க நாடாக உருவாக்க தொழில்நுட்பத்தை எப்படி எல்லாம் பன்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் பன்படுத்த வேண்டும் என்று ஒரு அட்டவணையே போட்டு அதனை மெருகேற்றி வைத்திருந்தான். மன்னாரின் கனியவளம், முப்புறம் சூந்த கடல் வளம்....., அதில் கொழிக்கும் மீன்வளம்...உணவில் தன்னிறைவு...., மென்பொருள் உற்பத்தில் இந்தியாவுக்கு சவால் என அவன் மனக்கோட்டை நீண்டுகொண்டே செல்லும்.

இவனது கூட்டளிகளும் "மச்சான்.... நல்ல துண்டுடா...! மடக்கீட்டாய் என்டால் நீ கொழும்பிலயே settle ஆகிடலாம்.....வாழ்க்கை அந்தமாதிரி இருக்கும்" என்று அடிக்கடி உசுப்பேத்துவார்கள். இன்னும் சுதந்திரம் கிடைக்காவிட்டாலும், கொழும்ம்புக்கு போகும் போது "அம்மா... நான் சிறீலங்காவுக்கு போட்டு வாறன்..." என்று சொல்லி தான் வெளிக்கிட்டவன். அந்த அளவுக்கு அவனுக்கு தன் நாட்டின் மேல் ஈடுபாடு இருந்தது.

இதனாலோ என்னவோ அவனுக்கு ரசிக்காவிடம்ஓர் எல்லையை தாண்டி பழக முடியவில்லை. தன் நாட்டை விட்டு வெளியேறவேண்டி வந்துவிடுமோ என்ற ஏக்கம்.

கல்லூரி வாழ்கையில் இருவரும் பலவிடையங்களை பகிர்ந்திருக்கிறார்கள். விவாதித்து இருக்கிறார்கள். அப்படித்தான் ஒருநாள்... கொழும்பு கோட்டையில் குண்டு வெடித்து 6 பேர் இறந்து...., தலை நகரமே அதிந்துபொய் இருந்தது. முதல் முறையாக காரசாரமாக தமிழ் சிங்கள உரிமைகளைப் பற்றி விவாதித்தார்கள். ஒரு கட்டத்தில் அவள் "நீங்கள் எல்லோரும் தமிழ்நாட்டிற்கு சென்றுவிடுங்கள்.... நீங்கள் அங்கிருந்து தானே வந்தீர்கள்... இது சிங்கள பௌத்த நாடு...." என்றாள். அது மட்டுமல்ல அவளுக்கு அடிப்படை விடையங்களில் கூட தனது இன வக்கிரத்தை உதிர்த்தாள்.

சுரேஸ் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான். "ஒரு 6 ஆமி செத்ததுக்கே இவள் இப்பிடித் துள்ளுராளே....!" என்று சலித்துக்கொண்டான். அவன் அவள் மேல் வைத்திருந்த அத்தனை அன்பும் ஒரு கணத்தில் பொடிப்பொடியாகின. ஒரு கணம் அவன் கண்கள் குளமாகி பின் வறன்டன.

அது தான் அவர்கள் இருவரின் கடைசி சம்பாசனை. அதன் பின் இரு துருவங்களாகின இருவரும். நான்கு வருடங்கள் உயிரின் மேலாக பழகிய தோழிக்கே விளங்காத அடிப்படை விடயங்கள்..... எதுவுமே தெரியாத பதவி வர்க்கத்துக்கு எப்படி விளங்கப்போகின்றது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி முரளியண்ணா.

சஜீவன் அண்ணா உங்கட ஊக்கத்துக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நன்றாக உள்ளது நிருஜா

வலி என்பது எல்லோருக்கும் ஏற்படும் என்று அவளுக்கு புரியவில்லை [சிங்களவர்களால் தமிழர்கள் படுவது] :huh:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி முனி தாத்தா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கதை நன்றாக உள்ளது நிருஜா

வலி என்பது எல்லோருக்கும் ஏற்படும் என்று அவளுக்கு புரியவில்லை [சிங்களவர்களால் தமிழர்கள் படுவது] :o

புரியவில்லை என்பதை விட அவர்களுடைய அடிப்படைச் சிந்தனை வேறு விதமாக உள்ளது.

சிங்கள அரசும் சரி..., இனவாதிகளும் சரி... சிறுவயதிலிருந்தே தமிழர்களை அந்நியர்களாகவும் வேற்று நாட்டவர்களாகவும் சித்தரித்து அதை நம்பவைப்பதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள்.

எடுத்துகாட்டாக, என்னுடன் படிக்கும் ஒரு சிங்கள பெண் இருக்கிறாள். அவள் என்னை கேட்டாள் யாழ்ப்பாணத்தில் எப்போதாவது புலிகள் இருந்திருக்கிறார்களா என்று...?

எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இத்தனைக்கும் அவள் ஒன்றும் கிராமத்தில் இருப்பவள் இல்லை. கொழும்பு புறநகர் பகுதியில் இருப்பவள்.

அது மட்டுமல்ல, அவளைப் பொறுத்தவரைக்கும் தமிழர் எல்லாரும் தங்களுடைய நாட்டை பறிப்பதில் குறியாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டிலிருந்து வந்த்வர்கள்....

ஏன் அவளுக்கு ஆரம்பத்தில் ஈழம் என்ற சொல் கூட தெரியாது. ஏலம் என்று தான் சொல்லுவாள்.

எப்படி அடிப்படையிலேயே மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுடன் எம்மால் எப்படி சேர்ந்து வாழ முடியும்......!!!!

இது வெறும் கேள்வி அல்ல.....! ஏக்கம்...!!!

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.