Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விடயத்தில் ஒபாமாவின் தலையீடு

Featured Replies

ஒபாமா ராஜதந்திர ரீதியில் ராஜபக்சேவுக்கு சொல்லாமல் சொல்கிறார்.....

அவர் ராஜபக்சேக்கு எழுதிய தன்னுடைய மடலில் கூறியதாவது ....

சுதந்திர தினத்தை, தேசிய நாளாக கொண்டாடும் இலங்கை வாழ் மக்களுக்கும், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்மிரு நாடுகளுக்கிடையில் உள்ள இடையறாத நட்பினை எங்கள் நாடு மதிப்பளிக்கிறது.

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் அகியவற்றில், அமெரிக்காவுடன் ஒத்த கருத்துடைய தோழமை நாடான இலங்கையில் நடைபெறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன்னேற்றம் காணப்படும் என நான் நம்புகிறேன்.

போரினால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கை முழுவதையும் வருங்காலத்தில் அமைதியிலும், பொருளாதார கட்டுமானத்திலும் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு நாடக உருவாக்க இணைந்து செயல்படுவோம்.

தேசிய நாளை கொண்டாடும் அதேவேளை, உங்கள் இன்பங்களில் பங்கு கொள்ளவும் துயர் வரும்போது தோள் கொடுக்கும் ஒரு நண்பனாகவும் நான் இருக்கிறேன் என்பதை இலங்கை மக்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

என்று சொல்கிறார்.

ராஜ தந்திர ரீதியில் இதனை சரியாக ராஜபக்ஷே விளங்கி கொள்வாரேயானால்...ராஜபக்ஷே நிச்சயம் ஒபாமா மடல் கண்டு மகிழ்ச்சி கொள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சமம், அது மட்டுமின்றி இங்கு தமிழ், சிங்களம் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு தேசிய இனமாக, கருதப்பட்டு அனைவரும் 4th Feb யை தேசிய நாளாக கொண்டாட வேண்டும்.

அது மட்டுமின்றி அவரது நிர்வாகத் திறமையின்மையையும் சாடுகிறார்..இலங்கையிலுள்ள அனைத்து மக்களின் நண்பனாகவும் தன்னை வெளிப்படுத்துகிறார்...

ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு மற்றும் சமத்துவம் எனும் வட்டத்துக்குள் நிற்பதாக தான் அவருடைய மடல் சொல்கிறது. சுயாட்சி மற்றும் சுயநிர்ணயம் எனும் கோட்பாட்டில் நாம் நினைக்கும் வட்டத்துக்குள் அவர் இன்னும் முழுமையாக வரவில்லை என்றே தோன்றுகிறது.

நம்முடைய முயற்ச்சிகள் அனைத்தையும் அவர் பக்கம் திருப்பினால் பலன் பலமடங்காக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

இவ்வளவு பொறுத்த நாம் இன்னும் கொஞ்சம் பொறுக்க வேண்டும்.....பொறுத்திருந்து பார்க்க வேண்டும்... இது காலத்தின் கட்டாயம் ....!!

அதற்கு முன் செயலில் இறங்க வேண்டும்...

ஒபாமா மிகச்சிறந்த ராஜதந்திரி மிக நல்ல மனிதரும் கூட.... உலக நாடுகளாலும், குள்ள நரிகளாலும் ஒருசேர தவறான முறையில் அவரிடமுள்ள தூய சிந்தனைகள்

களவுபோய் விடக்கூடாது

மாயவன்.

Dear Mr. President:

As the people of Sri Lanka and Sri Lankan origin around the world celebrate National Day on February 4, I send my warmest greetings and wishes to you on behalf of the people of the United States.

The United States values its enduring friendship with the people of Sri Lanka. I hope that the coming year will see advancement of our shared beliefs in democracy, liberty, pluralism, and respect for human rights. Our governments together can work to foster peace, prosperity, and stability throughout Sri Lanka.

As the people of Sri Lanka celebrate National Day, they should know that they have a friend and partner in the United States.

Sincerely,

Barack Obama

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்போம் நல்லதே நடக்கெட்டும்

இன்னும் 'மீட்பர்' ஒபாமா எனும் கனவில் இருந்து வெளியே வரவில்லையோ?

எல்லாம் 'உள்ளுக்கை விட்டு அடிப்போம்' பெருங் கனவு கலைந்தமையால் எவ்வளவு பேரை நம்ப வேண்டி கிடக்குது

Edited by நிழலி

ஒபமாவிற்கு இருக்கும் பொருளாதாரம் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற உள்நாட்டு தலையிடிகள்

மத்திய கிழக்கு பிரச்சனைகள்

ஆப்கானிஸ்தான்

சூழல் வெப்பமடைதல்

புஸ் விட்டுச் சென்றிருக்கும் தவறுகளை நாகரீகமாக சீர்செய்வது

என்று இருக்கும் பிரச்சனைகள் எண்ணிலடங்கா.

உடனடியாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியிருப்பினும் தமிழருக்குள்ள பிரச்சினையையும் அவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பது தான் எங்களது எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை யாரும் தங்கத்தட்டில் வைத்துத் தரமாட்டார்கள். நாங்கள் போராடுவதாலும், பெறும் வெற்றியாலும் தான் பெற முடியும்.

தமிழீழத்தை யாரும் தங்கத்தட்டில் வைத்துத் தரமாட்டார்கள். நாங்கள் போராடுவதாலும், பெறும் வெற்றியாலும் தான் பெற முடியும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவையும் இப்படித்தான் நம்பினோம். ஆனால் இன்று கதை வேறு...

இது நமக்கு தொடர்கதையாகவே போகுது. நமக்கு நாமே துணை

ஒபாமாவும் பொடிவைச்சு கடிதம் எழுதுவாரா?.... இப்பிடி நம்பி நம்பியே... பாதிச்சனம் போய்ச்சேர்ந்திட்டுது.

தமிழீழத்தை யாரும் தங்கத்தட்டில் வைத்துத் தரமாட்டார்கள். நாங்கள் போராடுவதாலும், பெறும் வெற்றியாலும் தான் பெற முடியும்.

உண்மை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.