Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரபுரத்தில் ஒரே நாளில் 52 பொதுமக்கள் பலி: ஐ.நா.

Featured Replies

வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது கடந்த செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். யார் இதற்கு பொறுப்பு என்பது தொடர்பாகவும் எத்தனை எறிகணைகள் ஏவப்பட்டன என்பது தொடர்பான விபரங்களும் எமக்கு தெரியாது.

ஆனால், இந்த அறிக்கை எம்மால் தயாரிக்கப்பட்டது.

மேலும் 16 மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட எறிகணை மற்றும் கொத்து குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து வன்னி பிரதேசத்தில் இயங்கிய ஒரே ஒரு மருத்துவமனையில் இருந்த நோயாளர்களும் மக்களும் நேற்று காலை வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

புதினம்

கொத்தணி குண்டுகள் பாவனை தொடர்பாக தமது அறிக்கையில் ஏற்பட்ட தவறுக்கு ஐ.நாவின் இலங்கை வதிவிடப்பிரதிநிதி அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரியுள்ளதாக இலங்கை சமாதான செயலகம் அறிவித்துள்ளது.

அததெரண.

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தணி குண்டுகள் பாவனை தொடர்பாக தமது அறிக்கையில் ஏற்பட்ட தவறுக்கு ஐ.நாவின் இலங்கை வதிவிடப்பிரதிநிதி அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரியுள்ளதாக இலங்கை சமாதான செயலகம் அறிவித்துள்ளது.

அததெரண.

ஏற்கனவே வெடிக்காத நிலையில் கொத்தணிக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில்.. சிறீலங்காவின்.. பொய் அறிக்கைக்காக.. ஐநா மன்னிப்புக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

ஆனால் சிறீலங்காவை கொத்தணிக் குண்டை பாவிக்காதே என்று சொல்ல ஐநாவுக்கு அதிகாரம் கிடையாது. ஏனெனில்.. அமெரிக்கா.. பிரிட்டன்... சீனா.. ரஷ்சியா.. இஸ்ரேல்.. இவர்கள் இக்குண்டுகளை செய்யவும்.. விற்கவும்.. பாவிக்கவும் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.

இவர்களே உலகில் நடக்கும் ஆயுத ரீதியான மனித அழிவுகளுக்கு முக்கியமான காரண கர்த்தாக்கள்..! அல்கொய்டாவோ தலிபானோ அல்ல. முதலில் இவர்களிடம் உள்ள ஆயுதங்களை உறைய வைக்க வேண்டும். அல்லது பறித்து அழிக்க வேண்டும். அப்போதுதான் சிறீலங்காவில் தமிழர்கள் உட்பட உலகில் எல்லோரும் சம உரிமையோடு வாழலாம்.

ஆயுதமற்ற உலகை உருவாக்குவோம். இதற்கான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க போகிறேன். அதற்கு ஐநா அங்கீகாரம் அளிக்க வேண்டும்..! :)

Edited by nedukkalapoovan

ஏற்கனவே வெடிக்காத நிலையில் கொத்தணிக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில்.. சிறீலங்காவின்.. பொய் அறிக்கைக்காக.. ஐநா மன்னிப்புக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

இதற்கான ஆதாரங்களை உடனடியாக புலிகள் உள்ளுர் செஞ்சிலுவை மற்றும் ஐ.நா அதிகாரிகளை அழைத்து காண்பித்து அவர்கள் நிற்கும் புகைப்படங்களுடன் வெளியிட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான ஆதாரங்களை உடனடியாக புலிகள் உள்ளுர் செஞ்சிலுவை மற்றும் ஐ.நா அதிகாரிகளை அழைத்து காண்பித்து அவர்கள் நிற்கும் புகைப்படங்களுடன் வெளியிட வேண்டும்!

புகலிட நாடுகளில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் நூல் வடிவிலும் விட்டிருக்கிறார்கள். ஐநா அறிக்கை தற்செயலானதல்ல. தகுந்த பகுப்பாய்வின் பின்னரே வெளி வந்திருக்கும். ஐநா சில அழுத்தங்கள் காரணமாக மறுப்பறிக்கை விட வேண்டி ஏற்பட்டிருக்கலாம். ஐநா சுதந்திரமாகச் செயற்படும் அமைப்பாக இன்று உலகில் இல்லை.

ஐநாவை இயக்குபவர்களுக்கு சிறீலங்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் எண்ணம்.. இல்லை. மாறாக புலிகள் நிறுத்துவதே எண்ணம். அதன் மூலம் தான் நினைத்ததை சிறீலங்காவில் சாதிக்கலாம் என்பது அவர்களின் கொள்கை.

இருந்தாலும்.. தற்போதைய வேளையிலும் நீங்கள் குறிப்பிட்டது போல் செய்வது நன்றுதான்..! உலகத்துக்கு உண்மை தூலாம்பரமாகக் காட்டப்படும் போது.. பக்கச்சார்பான செயற்பாடுகளே சிறீலங்காவில் யுத்தம் விரியவும்... மனிதப் பேரவலம் நிகழவும் காரணமாக இருக்கிறது என்ற செய்தி நியாயமான உலகின் பக்கம் போய் சேரும். அது ஆதிக்க சக்திகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விடயமானால் மட்டுமே.. சி ஐ ஏ உலகெங்கும் நடத்தும் சித்திரவதைக் கூடங்கள் பற்றிய உண்மை வெளி வந்தது போல.. இதுவும் உணரப்படும். தீர்வுகள் பெற இதய சுத்தியுடன் அணுக உலகம் தூண்டப்படும். :)

வன்னியில் சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாதப் படைகளிலால் வீசப்பட்டு வெடிக்காத கிளஸ்ரர் குண்டுகள் அடங்கிய தாய்க் குண்டு மற்றும் பிரதான ஆதாரங்கள்..!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28053

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27824

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27644

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27633

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27625

29_11_08_01_vanni_01.jpg

பாவிக்கப்பட்டவை ரஷ்சிய தயாரிப்பு 0FAB - 500 வகை கொத்தணிக்குண்டுகள்.

http://warfare.ru/?lang=&linkid=2510&a...&image=1434

ரஷ்சிய இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள - 500 வகை கிளஸ்ரர் குண்டுகள்.

missile-ofab-500-bg.jpg

ரஷ்சியப் பாவனையில் இக்குண்டு உள்ளமை... பற்றிய செய்தி ஆதாரம்..!

But Russian news reports said at least some of the planes will now be re-equipped with a new smaller missile which in Russian is called OFAB-500 and which carries a massive cluster bomb weighing 515 kilograms (1,130 pounds).

http://www.spacewar.com/news/missiles-04zzx.html

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் இந்த ஆதாரங்களை இணைப்புடன் கடிதமாக சேர்த்து ஐ நா விற்கும் மற்ற அமைப்பிற்கும் உடன் அனுப்புங்கள்.. அத்துடன் இணையத்தில் ஒரு ஆங்கிலத்தில் கடிதம் தயாரித்து எல்லோரும் அனுப்ப யாழ் களத்தில் இணையுங்கள்...

இப்படியான வேலைத்திட்டங்களே நமக்கு தேவை.. காலத்தின் கடமை..

செய்திகளைச்சொல்லி செய்திகளை உருவாக்குவர்களாக தாயக காப்பு திட்டத்தில் எல்லோரும் பங்களியுங்கள்..

தமிழ்மக்களில் இப்போது எந்த வேறுபாடு இல்லாமல் செயல்பாட்டின் உச்ச நிலையை இலங்கையின் தமிழ்படுகொலைகள், ஆக்கிரமிப்பு செய்துள்ளது...

தமிழ்மக்கள் மிக அறிவானவர்கள் என்பதை நிருபியுங்கள்,

எமது தாயக மக்கள் அ நாதைகளாக இறக்க விடமாட்டோம் என்பதை உறுதி எடுங்கள்..

எங்கள் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக்கண்டு தமிழகமக்கள் தாங்க முடியாது உயிரை மாய்க்கும் அளவுக்கு வரும் போது நாங்கள் என்ன செய்கிறோம்?

இதனையாவது( பரப்புரைகள், விளக்கங்களை) செய்வோம்... செய் அல்லது ...?

கொத்தணி குண்டுகள் பாவனை தொடர்பாக தமது அறிக்கையில் ஏற்பட்ட தவறுக்கு ஐ.நாவின் இலங்கை வதிவிடப்பிரதிநிதி அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரியுள்ளதாக இலங்கை சமாதான செயலகம் அறிவித்துள்ளது.

அததெரண.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.