Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணுமா கவனயீர்ப்பு?அன்பார்ந்த புலம்பெயர் மக்களே ஒருகணம் பாருங்கள்

Featured Replies

அன்பார்ந்த புலம் பெயர் மக்களே ஒருகணம் பாருங்கள்

கடந்த வாரங்களில் நீங்கள் அலை அலையாகத் திரண்டு நடாத்திய பிரமாண்டமான போராட்டங்கள் உங்கள் நாடுகளின் பார்வையை மாற்றி சாவுக்குள் சரணடையும் வன்னிவாழ் தமிழரின் அன்றாட படு பயங்கர நாட்களை வெளிக்கொணர்ந்தது.

மேலும் ஸ்ரீ லங்கா அரசின் மீது சில கவலை கலந்த அழுத்தங்களை தெரிவிக்க ஆவனை செய்தது.

இன்று அனைத்து உலக தமிழரின் ஏகோபித்த முடிவு ,"புலிகள் எமது ஏகபிரதிநிதிகள்","தமிழீழம் எமது முடிந்த முடிவு" மேலாக "புலிகள் எம் காவலர்கள்" .

ஆனால் அதையும் மீறிய இந்திய தலையீடு இவ் உலக நாடுகளை ஒருதலைப்பட்சமாய் விடுதலை புலிகளின் நோக்கி ஆயுதங்களை களைந்து விட்டு அவர்களை சரணடையவும் சொல்கிறது. இது என்ன நீதி?

எமது வார்த்தைகளை நம்புங்கள் இந்த ஸ்ரீ லங்கா பேரினவாத சிங்கள அரசு நிச்சயமாக பல செம்மணிகளை வன்னியில் உருவாக்கும். மக்களை தமது பக்கம் எடுத்து "மீண்டும் செம்மணி" எனும் கொலை நாடகத்தினை அரங்கேற்ற, ஒத்திகை பார்த்து கொண்டிருப்பதை யாவரும் அறிவீர்.இத்தனை அறிந்தும் அறியாதது போல் நடிக்கும் பல நாடுகளின் நடிப்போ ஒஸ்கார் விருதை தட்டினால் ஆச்சரியம் இல்லை.

இவர்களின் இந்த பார முகத்தால் ஸ்ரீ லங்கா அரசு மீண்டும் மீண்டும் வேண்டுமென்ற கண்மூடித்தனமான ஆகாய மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. தினம் தினம் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை சாகடிக்கிறது.

இவ்வளவுக்கு மத்தியிலும் களத்தில் போராடும் வீரர்கள் தீரமுடன் வீரியமாக போராடி எதிரிக்கு பாரிய அழிவுகளை கொடுத்தவண்ணம் உள்ளனர். "99 வீதமான யுத்தம் முடிந்துவிட்டது – கெகலிய" ஒரு வீத யுத்தத்தில் ஆயிரத்துக்கு மேல் இராணுவம் பலி என்றால் சிங்கள அரசின் பொய் பிரச்சாரத்தினை கேட்டு முதுகுக்கு கீழால் சிரிப்பதை வேறு என்ன செய்ய முடியும்.

ஆனால் ஒரு உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. நெடும் தூர ஓட்டத்தின் கைமாறும் கோல் தற்பொழுது எம்மிடம். நின்று யோசிக்க நேரமில்லை, ஓய்ந்து ஓய்வெடுக்க காலமில்லை, போதும் என்று புறக்ணிக்க பொழுதுமில்லை,விரைந்து செயற்படுங்கள் இன்றே.

களத்தில் எம்மவர்கள் மீண்டும் மீண்டும் போராட புலத்தில் நாங்கள் ஓய்ந்திருந்தால் பொறுக்குமா?வெறுமனே கவலைகள் தெரிவிக்கும் எங்கள் அரசுகளை ஸ்ரீ லங்கா நோக்கி கண்டனங்கள் தெரிவிக்க வைக்க வேண்டாமா? பறவை செத்தால் பரிதவிக்கும் எங்கள் நாடுகள் பாரே பதறும் போது பார்க்காமல் இருப்பது ஏன் எம்மக்கள் சாவதை பார்த்து. கேழுங்கள் அவர்களிடம் உள்நோக்கம் என்வென்று. தமிழினம் அழிய வேண்டும் என்றால் சொல்ல சொல்லுங்கள் இன்றே,உலக தமிழர் நாம் நஞ்சுண்டு சாகிறோம், நெஞ்சுரம் கொண்ட தமிழன் கவரி மான் பரம்பரையில் மானத்துடன் வாழ்ந்தான் என்று வரலாறு சொல்லட்டும்.

எங்கள் வரிப் பணத்தில் ஸ்ரீ லங்காவுக்கு ஆயுத உதவிகளை தொடர்ந்து செய்யும் எங்கள் அரசுகளை ஏன் இதை நிறுத்து என்று தட்டி கேட்க வேண்டாமா?

மனிதாபிமானம் பேசும் எங்கள் நாடுகள் வன்னித் தமிழர் படும் அவலத்தை எடுத்துரைக்க வேண்டாமா?

மனித உரிமை பேசும் எங்கள் நாடுகள் தட்டிக் கேட்காதா தமிழனின் சாவை. இல்லை நாம் மனிதர்கள் அல்லவோ? அப்படி என்றால் பத்திரங்களில் பதியும் போது ஆணா? பெண்ணா? என்பதற்கு முன் " நீ மனிதனா ? " என்ற வரியை சேர்க்க சொல்லுங்கள்

ஓயாது உழையுங்கள்.

வன்னியில் எம்மக்கள் படும் அவலத்தை நிறுத்த எங்கள் நாடுகளை ஒருங்கு திரட்டுங்கள்.

எங்கள் நாட்டு அரசுகளை ஈழ மக்களின் தார்மீக போராட்டத்தை அங்கீகரிக்க சொல்லுங்கள்.

இந்திய மத்திய அரசினை மஹிந்தவின் சால்வையை பிடிப்பதை விட்டு விட்டு தமிழனின் பாடையை பிடிக்க சொல்லுங்கள்.

நாங்கள் ஓய்ந்தால்

நாங்களே வீழ்வோம்

நாங்கள் வீழ்ந்தால்

நம் வரலாறே வீழும்

நம் ஈழ தமிழினம்

நாதியற்று போகும்

எம் சொந்த ஊரிலேயே- நாம் மூன்றாம் தர பிரஜைகளாய் ஆவோம்.இல்லை இல்லை ஆவதற்கு நாமிருக்க மாட்டோம்.

எங்கள் இனம் !!!!

வாசலின்றி

வரலாரறின்றி

ஈனப் பிறவிகளாய் "ராஜபக்ச" களிடம் மண்டியிட சம்மதமா?

வீழும் வரையும் விடுதலைக்காய் விலை கொடுக்க எம் தானை தலைவன் சேனைகள் தயாராக இருக்குகையில்

நாம் மட்டும் சோர்வுற்று செய்வதறியாது இருத்தல் முறையோ?

இன்றே விழித்தெழுங்கள் !

மாண்டவர் மீதினில் சத்தியம் செய்தொரு

மறத் தமிழனாய் மாறிடுவோம்

மீண்டும் மீண்டும் எங்கள்

போராட்டங்கள் தொடரட்டும்

மீண்டும் மீண்டும் எங்கள்

குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்

செய்வீர்களா எம் உறவுகளே?என்று நான் கேட்கவில்லை நேற்றிரவு கனவில் வந்த ஈழ நிலம் எங்களிடம் உரிமையுடன் கேட்கிறது.

கடமை காத்து நிற்கிறது

எமக்காக நாம்

எனக்காக நான்.

அவன் செய்வான் இவன் செய்வான் என்று ஆறி இருக்காமல்

நான் செய்வேன் என்று நகருங்கள் முன்னே

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்

தமிழ் ஓசைக்காக

புலம்பெயர் தமிழர் சார்பில் பொன்னார் மேனியன்

குறிப்பு : இங்கே எங்கள் நாடு - புலம்பெயர் நாடு என்பதே பொருளில்லா பொருள்,முதுகுக்கு கீழ் என்பது முதுகுக்கு கீழே என்பது பொருள்

நன்றி www.tamiloosai.com

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...5&Itemid=68

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாடுகளில் தொடர்ந்து கவனயீர்ப்பு நிகழ்வுகளைச் செய்தல் வேண்டும்.

தேசம்! நீங்கள் எளுதியது 100% உண்மை,சரியான விடயம்,உரிய முறையில் விழக்கம்,இதைவிட யாரும் உணர்வுபூர்வமாக கூறமுடியாது.

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து செயல்படவேண்டிய தறுணமிது.

இப்படி சிந்திக்க எல்லாராலும் முடியாது,

ஆனால் இந்த சிந்தனைப்படி ஒன்றுபட்டு செயல்பட எல்லோராலும் முடியும்.

செயல் ஒன்ரே சாதனை படைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் சென்றகிழமைக்கு பிறகு பெரும்பாலான நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒன்றையும் காணவில்லை. தொடர்ந்து கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்த வேண்டும்.

வெளிநாட்டுக்காரன் நினைக்குறான் நாங்கள் சும்மா கத்துறம் என்டு... ஒருக்கா கத்துறாங்கள் ஒருக்கா பேசாம இருக்குறாங்கள்... அப்ப உதுக்கு பின்னால யாரோ இருந்து உசுப்பி விடுறாங்கள் எண்டு நினைக்குறாங்கள்... எமது போராட்டம் தொடரவேணும்... தொடர்ந்து ஒலிக்க வேணும் அப்பத்தான் ஒரு பதில் கிடைக்கும்... காசா போர் எவ்வாறு ஒரு தற்காலிக அமைதி பேண ஏற்பாடு செய்யப்பட்டது??? இன்று என்னடா எண்டா உந்த மகிந்த டாக்குத்தர் மாரையும் திருப்பிக் கூப்பிடுறான் இனி சாப்பாடும் அனுப்ப மாட்டானாம் அப்ப தமிழனை முற்றாக அழிக்க நிக்குறான். ஏன் இதை இன்னமும் கண்மூடி பாக்குறீங்கள்... மருத்துவம் என்பது ஒரு மனிதனின் அடிப்படைத்தேவை... இத தடுக்க யாருக்கு உரிமை??? சர்வதேசத்தின் கண்களுக்கு சொல்லுங்கள் செஞ்சிலுவை வெளியேற்றியாச்சு, இப்ப டாக்குத்தர் மாரையும் வெளியேற்றினால் ஒரு இனத்தை முற்றாக அழிக்கலாம் எண்டு கங்கணம் கட்டுறான்... கள்ள வே.... தாமதம் வேண்டாம், தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிருகு உலைதான்...

  • தொடங்கியவர்

தேசம்! நீங்கள் எளுதியது 100% உண்மை,சரியான விடயம்,உரிய முறையில் விழக்கம்,இதைவிட யாரும் உணர்வுபூர்வமாக கூறமுடியாது.

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து செயல்படவேண்டிய தறுணமிது.

இப்படி சிந்திக்க எல்லாராலும் முடியாது,

ஆனால் இந்த சிந்தனைப்படி ஒன்றுபட்டு செயல்பட எல்லோராலும் முடியும்.

செயல் ஒன்ரே சாதனை படைக்கும்.

நன்றி sivansaami. அனைவரும் ஒன்று படுவோம். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்.

விடுதலை வேண்டும் தமிழினமே

விடுதலை சும்மா விளைவதில்லை"

"அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ

அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ"

தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம்

இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்?

அதை பிடித்து விட்டான்

இதை பிடித்து விட்டான்

என்று அங்கும் இங்கும் ஆர்ப்பரிக்காமல்

ஆகவேண்டியதை பார்ப்போமா?

இன்னும் பிந்தவில்லை இனியும் வெல்லலாம் ,இன்றே தொடங்குங்கள்

அவன் செய்வான் இவன் செய்வான் என்று ஆறி இருக்காமல்

நான் செய்வேன் என்று நகருங்கள் முன்னே

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்

Birmingham இல் அமைதி கவனயீர்ப்பு போராட்டம் 18ம் திகதி இந்திய உபதூதுவரகத்தின் முன் நடைபெறுகிறது. Birmingham கிட்ட ஊள்ள நகரங்களில் உள்ள உணர்வுள்ள தமிழர்களே வாருங்கள். வெளியிடங்களில் வசிப்பவர்களும் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் லெஸ்ரர், லெமிங்ரன், வோரிக், பெர்மிங்கம் மற்றும் கொவென்றி போன்ற இடங்களில் இருந்தால் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்தி கவனயீர்ப்பு நிகழ்வுக்கு வருவதற்க்கான ஒழுங்குகளைச் செய்து தருமாறு உரிமையோடு கேட்டுக்க்கொள்கிறோம்.

A peaceful protest has been arranged opposite to the Indian High Commission in Birmingham on the 18th February 2009. Please take part in it to show your solidarity.

Consulate General of India

20 Augusta Street

Jewellery Quarter

Hockley

Birmingham B18 6JL

Getting to the Consulate

By train New Street and Snow Hill stations for trains from outside Birmingham

By bus Bus numbers 8 and 101 (Warstone Clock) stop close to the Consulate

Coventry Tamil Welfare Association (CTWA)

லண்டனில் ஏன் கவனயிர்ப்புகள் திடீர் என்று நின்று விட்டது. British Tamil Forum ஏன் ஒன்றும் செய்வதில்லை.

யாராவது மிரட்டினார்களா? இல்லை Permisson கிடைக்கவில்லையா?

ஏன் யாழ் கள உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒன்றை ஏற்பாடு செய்யக்கூடாது.

அது மிக சின்னதாக இருந்தாலும் பறவாய்யில்லை

நான் ஒன்றை அவதானித்தேன். பல மக்கள் மிகவும் மன வேதனை அடைந்து இருக்கிறார்கள். 31ம், மற்றும் 4ம் திகதியும்

நடந்த ஊர்வலங்களில் பங்கு பற்றியதன் மூலம் அதை குறைக்க கூடியதாக இருந்திருக்கு.

பலர் தங்கள் உள்ள குமுறலை கத்தி ஆர்பரிப்பதம் மூலம் மன ஊளைச்சலையும் மனதையும் ஆற்றி இருக்கிறது.

பலர், இவர்கள் இன்னும் ஏன் தெடங்கவில்லை ஏன்று கோவப்படுகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.