Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுக்குழு ஜனநாயகம் ........... மனிதம்?

Featured Replies

logo.jpg

கடந்த சில வாரங்களுக்கு முன் தொலைபேசி கதறியது ... தூக்கியதும் ... என் நண்பனொருவன் ... "சும்மாவா இருக்கிறாய்? இன்று .... பத்திரிகையின் சந்திப்பாம்!! அத்துடன் ... எடுத்த திரைப்படம் தொடர்பான விமர்சன நிகழ்வாம்!! வாறியா?" ... என்றதும் "ஓம், வருகிறேன்" என்று ... அவனது காரிலேயே தொற்றினேன். போகும் வழியில் காரினுள்ள ரேடியோவில் ...

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,

நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!

நாளில் மறப்பா ரடீ

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்

அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!

அகலிகளுக் கின்ப முண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற

பெண்களின் கூட்டமடீ! - கிளியே!

பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,

மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!

மாங்கனி வீழ்வ துண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்

செப்பித் திரிவா ரடீ! - கிளியே!

செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்

நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!

நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்

பேதைகள் போலு யிரைக் - கிளியே

பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய

ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே

அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்

உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே

ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா

மாக்களுக் கோர் கணமும் - கிளியே

வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்

ஈனர்க் குலகந் தனில் - கிளியே!

இருக்க நிலைமை யுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்

வந்தே மாதர மென்பார்! - கிளியே!

மனத்தி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்

பழமை இருந்த நிலை! - கிளியே!

பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்

தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!

சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!

செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்

துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!

சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்

வாயைத் திறந்து சும்மா - கிளியே!

வந்தே மாதர மென்பார்! "

.... என்ற காலங்கடந்த கவி பாரதியின் வரிகள் ஜேசுதாஸின் குரலில் தவழ்ந்து முடிய மீண்டும் மீண்டும் ...... போய் சேர்ந்தோம். பத்திரிகை சந்திப்பு என்றார்கள்! ஆனால் ... அங்கு லண்டனில் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டு வரும் ஒரு சிலர் வந்திருந்தனர். அப்படியானால் இப்பத்திரிகையும் ......???????? நீண்ட கேள்வி!!!

"தமிழ் பேசும் ஒரு புதிய இனம் உருவாகின்றதா"?????????...............

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்... தமிழை பேசிக் கொண்டு ஓர் இனம் ஒன்று ஈழத்தமிழினத்திலிருந்து தோன்றுகிறதா???? என்று!! இக்கேள்வி எழ ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!! .....

கடந்த காலங்களில் தமிழையே பேசிய திராவிட இனத்தினுள், சமஸ்கிருந்தம் நுளைந்ததினால் மலையாளம் என்றும், தெலுங்கு என்றும், கன்னடம் என்றும் பிரிந்தது வரலாறு.

அதை விட மதத்தை அடிப்படையாக வைத்து, இலங்கைத்தீவினுள் தமிழே பேசும் இஸ்லாமியர்களும் தம்மை இனமாக காண்பிக்க முற்படுவதும் இன்றைய நிகழ்வு.......

ஏன் இவ்வாறு எனக்கு சந்தேகம் எழுந்தது???

தன் குடும்பம், அயல், இனம் சிங்கள கொலைவெறி ஆட்சியாளர்களினால் குதறக் குதற அழித்தொழிக்கப்படும்போது, இன்று தோன்றியுள்ள தமிழ் பேசும் புதிய இனத்தவர், கை கொட்டி சிங்களத்தோடு சேர்ந்து எக்காளமிடுகிறார்கள். அப்படி ஒரு இனப்படுகொலையே நடபெறவில்லை என உலகிற்கு சிங்களத்தின் சாட்சிகளாக மாறுகிறார்கள்!! சிங்களத்தினால் கடத்தல்கள், காணாமல் போதல்கள், கற்பளிப்புகள் , சொத்தளிப்புகள் என இன்னோரென்ன நடத்தப்பட இவர்கள், கற்பளிக்கப்பட்டவர்களை வேசிகள் என்கிறார்கள்!! காணாமல் போனவர்களை புலிகள் என்கிறார்கள்! சொத்தளிப்புகள் நடந்தேறியதே இல்லை என்கிறார்கள்!! கொல்லப்படுவபவர்கள் எல்லாம் புலிகள் என்கிறார்கள்!! ஒன்றை மட்டும் இதன் மூலமாக இவர்கள் "புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு இல்லை" என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்!!

இவற்றை விட இன்று தளத்தில் மட்டுமல்லாது, புலத்திலும் கூட இருக்கும் உதிரிகளான இவர்கள், தமது குடும்ப நிகழ்விலும் கூட தமக்குள்ளேயே நடத்த முற்பட்டிருக்கிறார்கள். சமூகத்தின் முன் முகத்தை காண்பித்து நிமிர்ந்து நடக்க முடியாமல் கூனிக்குறுகி திரிகிறார்கள்.

உன் தாய், தந்தை , சகோதரி, உற்றார், உறவினர், அயலவர், இனத்தவர்ருக்கு துன்பம் விளையும் போது, உன்னை அவை பாதிக்கவில்லையாயின், நீ நிச்சயமாக அவர்களுடன் சேர்ந்தவராக இருக்க முடியாது!! இதற்கு விதிவிலக்கனவர்கள் இல்லை இன்று தோன்றியுள்ள தமிழே பேசும் புதிய இனத்தவர்கள்!!!

அங்கு வந்தவர்கள் அழைக்கப்பட்ட காரணங்களுக்கு அப்பால், சிங்கள இராணுவ ஆய்வரங்கமாகவே நிகழ்வு ஆரம்பித்தது என்ன நடந்தே முடிந்தது!!

தம்மை மாற்றுக்கருத்து ஜனநாயகவாதிகள் என்று கூறித் திரிவோரின் சிலரின் கைகளில் வன்னியின் நிலவரிப்படம் இருந்தது. "இப்படி இப்படித்தான் (சிங்கள) இராணூவம் முன்னேறும்!! இந்த இடங்களை குறி வைத்து ஆட்லறி அடிப்பார்கள்!! இந்த இடங்களுக்கு கட்டாயம் விமானத்தாக்குதல் நடத்தப்பட வேண்டும்!! .......... மேலும் ..... புலிகள் இப்படித்தான் தப்பி ஓடுவார்கள்!! இல்லை ஓடவே முடியாது முழுக்க முடிந்து விடும்!! அழித்தொழிக்கப்பட வேண்டும்!! .... தொடர்ந்து ..... மேலும் ... மேலும் ....... போய்க்கொண்டு இருந்தது!! நானே ..... எங்கே???? ....... மக்கள்...... மக்கள் ........ சீரளிகிறார்கள்........சிதறடிக்கப

்படுகிறார்கள்........அழித்தொழிக்

கப்படுகிறார்கள் .. ஏதாவது இதில் ஒரு வார்த்தை இவர்களில் வாய்களில் இருந்து வரும் என ....... எதிர்பார்த்து .... இறுதியில் புளித்ததுதான் மிச்சம்!!!!

சடுதியாக .... என்மனம் சொன்னது ...... "இவர்கள் எம்மினத்தவர்கள் இல்லை"..........

..... வேண்டாம் வெளிக்கிடுவோம்!! ....

மீண்டும் வீடு திரும்பும் வழியில் நண்பன் திரும்ப அதே .....

.......சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!

செம்மை மறந்தா ரடீ! . ........

சுழற்ற முற்பட எனது கைகள் தடுத்தன. ""ஏன்"??? என்றான்!!!! நானோ "உதைக் கேட்டும் தானே, உங்கும் சென்றோம்" என்றேன்.

Edited by சோழன்

உறங்கையிலே பானைகளை

உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே

உருப்படியாய் இருப்பதையும்

கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்

இறங்குவோரைக் கொன்று

இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்

இத்தனையும் மனிதனிடம்

மொத்தமாய் வாழுதடா

பொறக்கும்போது - மனிதன்

பொறக்கும்போது பொறந்த குணம்

போகப் போகப் மாறுது - எல்லாம்

இருக்கும்போது பிரிந்த குணம்

இறக்கும்போது சேருது

பட்டப்பகல் திருடர்களைப்

பட்டாடைகள் மறைக்குது - ஒரு

பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து

திருடனென்றே உதைக்குது

காலநிலையெ மறந்து சிலது

கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்

கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்

வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின்

கணக்குப் புரியாம ஒண்ணு

காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்

காதோரம் நரைச்ச முடி

கதை முடிவைக் காட்டுது

புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை

புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்

போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்

ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை

உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி

ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்

உளறி என்ன,கதறி என்ன?

ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று லண்டனில் நடந்த சிங்களவர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஒருவர் சொன்னார் தீக் குளிக்க முயன்ற இளைஞர் சும்மா நடிப்பிற்காக தண்னீரை தலையில் ஊற்றி விட்டு கொளூத்துற மாதிரி நடித்தாரே தவிர உண்மையில் தன்னை ஊற்றி கொளூத்த இல்லையாம்.இந்த மாதிரி கதைப்பவர்களூக்கு வலி என்றால் என்ன என்பதை புரிய வைக்க வேண்டுமா? இல்லையா?

............... ஒரு கட்டத்திலாம் மகிந்த தேர்தல் மூட்டம் புலிகளுக்கு காசு கொடுத்த கதை வந்ததாம். அப்போது லண்டன் தற்கால கண்ணகியான கற்ப்புக்கருங்கலம் ஒருவர் ""சீச்சி, அவர்(யார்??? மகிந்த. அவரென்றால்....????????) ஒருகாலமும் கொடுக்கவில்லை என்று ஒற்றைக்காலில் நின்றாராம் (அவர் பகலில் மட்டும்தானாம் ஒற்றைக்க்காலில் அவரது நிற்பாராம். அப்போ ... இரவில் .?????) . உதைக் கேட்டுக் கொண்டிருந்த போன ஒன்று சொல்லிச்சாம் "உவ அவரோடை **** ******தான் இருப்பா!! அவ சொன்னா சரிதான்!!" .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.