Jump to content

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "ஊனாட உடலாடுகிறது"


Recommended Posts

தமிழ் ஊடகங்களே மற்றும் எம் மக்களே

எமது இன அழிப்பு உச்ச கட்டத்தினை அடைந்து கிழமைக்கு ஐநூறு தமிழர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் கடந்த வாரம் நான் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்கள் சின்ன திரையில் சீரியல் பார்த்துக்கொண்டு கூத்தும் கும்மாளமும். பார்த்தவுடன் என்மீது ஆர்டிலரி செல் விழுந்த மாதிரி ஒரு உடைவு. அவர்களை விட இதனை போடும் தமிழ் மீடியாகளில் தான் எனக்கு கடும் கோபம். மக்களின் அழிவுகளை முற்றாக காட்ட மறுக்கும் இவர்கள் தமிழர்களா ?

கிராபிக்ஸ் வேண்டாம் நியத்தினை காட்டுங்கள். நாம் காட்டும் எரிந்த கிழிந்த தமிழனின் உடல் என்ன காட்டூணா? இல்லை கிராபிக்ஸ் தானாக? இதனை பார்த்த பின்னும் காடேறி சொல்லும் பொய்யினை காற்றில் விடுகிறீர்களே. போதும் போதும் இந்த பித்தலாட்டம். பிடிப்போம் இனி தமிழ் தேசிய வடம். இழுப்போம் இறுதிவரை. எட்டு கோடி தமிழனா ரெண்டு கோடி அரக்கனா பெரிது என்பதனை உலகறிய செய்வோம் .

எம் இனிய உறவுகளே, எனது அன்பான உருக்கமான வேண்டுகோள்

எம்மக்கள் அழிந்து எரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நாமும் எம்மால் இயலுமான தமிழ் தேசிய முன்னெடுப்புகளை செய்வதோடு தேவையற்ற களியாட்ட நிகழ்வுகளை குறைத்து மெய் வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் தமிழ் தேசியத்தினை நினைவோமாக

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்

தமிழ் ஓசைக்காக

புலம்பெயர் தமிழர் சார்பில் பொன்னார் மேனியன்

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை பேயாடுகிறது" சிங்களப் பேரினவாதம்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" தொடர்கிறது

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கபோவது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "சதை பாதி சகதி பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "கிபீர் தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "ஆர்டிலரி அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

உங்களுக்கு "சுப்பர் சிங்கர்" எங்களுக்கு "சுப்பர் ரன்னர்"

உங்களுக்கு "கோலங்கள்" எங்களுக்கு "அலங்கோலங்கள்"

உங்களுக்கு "நீங்கள் கேட்ட பாடல்கள்" எங்களுக்கு "சுண்ணத்து பாடல்கள்"

உங்களுக்கு "கனா காணும் காலங்கள்" எங்களுக்கு "கருகி எரியும் ஓலங்கள்"

உங்களுக்கு "கலசம்" எங்களுக்கு "கலக்கம்"

உங்களுக்கு "சிம்ரன் திரை" எங்களுக்கு "வெண்மண் தரை"

உங்களுக்கு "திருமதி செல்வம்" எங்களுக்கு "திரும்பாது செல்வம்"

நன்றி www.tamiloosai.com

Source Link: http://www.tamiloosai.com/index.php?option...1&Itemid=68

Link to comment
Share on other sites

அட இது யாழில் நான் தொலைக்காட்சிகளை திட்டி எழுதிய வரிகள் மாதிரி இருக்கு... அதோட சில வசனங்களும் சோந்துள்ளன... :)

சிலர் இங்கே இதைப்பற்றி வீண்விவாதம் செய்தார்கள், ஆனால் நான் எழுதியது வீண் போகவில்லை, அது செல்ல வேண்டியவர்களளைச் சென்றடையும் என்று இதைப் பார்க்கும் போது புரிகிறிது. :)

யாழில் : http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry489445

எனது தளத்தில் : http://www.thayakam.net/forums/viewtopic.php?id=452

Link to comment
Share on other sites

தாயகன் எழுதியைத்தான் அப்படியே கொப்பி பண்ணிப்போட்டுட்டு சிலவரிகளை மாற்றியிருக்கிறார்..

ஏன் தாயகன் பெயரைப்போட்டு நன்றி யாழ்.கொம் இணையம் என்று போட்டிருக்கலாமே...!!

அதுக்குள்ள தமிழ் ஓசைக்காக புலம்பெயர் தமிழர் சார்பில் பொன்னார் மேனியனாம்...

இப்படி ஒருவரின் எழுத்தை திருடி............. என்னத்தை சொல்ல..!!

(தாயகனே பேசாமல் இருக்கிறார் நான் மூக்கை நுழைக்கிறனோ?)

Link to comment
Share on other sites

(தாயகனே பேசாமல் இருக்கிறார் நான் மூக்கை நுழைக்கிறனோ?)

ஐயோ அப்படி இல்லை வசி அண்ணா, யார் குத்தினாலும் அரியானால்ச் சரி, கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது போலதான்.

யாழில் போடுவதால் என்ன பயன் என்று ஒருவர் கேட்டிருந்தார், அவருக்கு தற்போது புரிந்திருக்கும் யாழைப்பற்றி.

உண்மையில் எனக்குள் இருந்த ஆதங்கத்தை தான் வெளிக்காட்டினேன், தனிமனிதனின் கோரிக்கைகள் உரியவர்களை சென்றடையாது, யாழில் இருந்ததால் அது பலரையும் சென்றடைந்துள்ளது, அதற்காக யாழுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

எம்மக்கள் அழிந்து எரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நாமும் எம்மால் இயலுமான தமிழ் தேசிய முன்னெடுப்புகளை செய்வதோடு தேவையற்ற களியாட்ட நிகழ்வுகளை குறைத்து மெய் வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் தமிழ் தேசியத்தினை நினைவோமாக

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்

தமிழ் ஓசைக்காக

புலம்பெயர் தமிழர் சார்பில் பொன்னார் மேனியன்

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை பேயாடுகிறது" சிங்களப் பேரினவாதம்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" தொடர்கிறது

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

........

நன்றி வசி_சுதா.ஒன்றை வடிவாக கவனியுங்கள்.

மேலே பாருங்கள் புலம்பெயர் தமிழர் சார்பில் பொன்னார் மேனியன் அந்த தாயகன் எழுதிய பந்திக்கு மேலே தான் போடப்பட்டுள்ளது.அதில் எந்தவித பிழையும் இல்லை.சொல்லவந்த விடயத்தினை கவனியுங்கள்.

மற்றும் இதனில் பல வரிகள் சேர்க்கபட்டுள்ளன அத்துடன் சிலவரிகள் மாறி உள்ளன.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர்களே,

யார் சொன்னா என்ன?ஆழ்ந்த பொருள் உள்ள கருத்து.

நம்மில் வேற்றுமை களைய வேண்டும்.

நான் எதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........... நான் எழுதின இரண்டு வரிகளில் ஒன்றை நானே சென்சார் செய்து விட்டுத் தான் அந்தச் செய்தியையே போட்டிருந்தேன்.........ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம் என்று மீண்டும் இன்னொரு தடவை இங்கு நிரூபிக்கப்படுகின்றது...........
    • நிச்சயதார்த்ததுக்கு ஒத்த சொல் =.(திரு)மணஒப்பந்தம்.
    • பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை! உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் அல்லது தேசிய அடையாள அட்டையின் எண் யாருக்காவது தெரிந்தால், அந்த விண்ணப்பத்தை நிரப்பினால், மீள்பாிசீலணை செய்யும் மாணவருக்கு அதை மீண்டும் நிரப்ப இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது. அது நடந்தால், நீண்ட காலத்திற்குப் பிறகு, முழு கணினி செயல்முறையையும் மாற்றிய பின்னரே சட்டப்பூர்வ உரிமையாளரால் இந்த அணுகலைப் பெற முடியும். அப்படி நடந்தால், அந்த மாணவர்களை ஆணைக்குழு பார்த்துக்கொள்ளும். ஆனால் தயவு செய்து உங்களது பரீட்சை எண்ணை து சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்கவும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். https://athavannews.com/2024/1385960
    • 8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்டின‌ம் உங்க‌ட‌ க‌ணிப்பு பிழைச்சு போச்சு அண்ணா...............................................................
    • 👍....... ஜீ அவரால் முடிந்த அளவிற்கு எல்லாப் பாத்திரங்களிலும் நல்லாவே நடித்தாரே...........
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.