Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் வாழ் தமிழர்களே உண்மை என்ன?

Featured Replies

பிரான்ஸ் வாழ் தமிழர்களே உண்மை என்ன?

பிரான்ஸ் நாட்டில் தமிழர்களால் பொலிஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக

அருவருடிகளின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது இது விபரம் உண்மையா?

இதனைச் செய்தது புலிகள் எனவும் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

அரச பயங்கரவாதம் இங்கும் கைநீட்டி செய்துவிட்டு புலிகள்மீது பழி போட வைக்கிறதா?

lacourneuve என்ற இடத்தில் போலிஸ் ஒருவர் அவரது துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். யார் சுட்டது , எதற்காகச் சுடப்பட்டார் என்று இன்னும் தெரியவில்லை. அத்துடன் அவர் சுடப்பட்ட வேளை கடமையில் இருக்கவில்லை. ஏன் அந்த இடத்திற்குத் தனது துப்பாக்கியுடன் சென்றார் என்றும் தெரியவில்லை. அவர் சுடப்பட்ட இடத்தில் அதிகமான பாகிஸ்தானியரும் சில தமிழர்களும் வாழ்கிறார்கள். இது தொடர்பாக 6 பாகிஸ்தானியரை காவல்துறை கைது செய்துள்ளது.

தமிழர்கள் போலிஸ் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாக நேற்றே வதந்தி பரவத் தொடங்கிவிட்டது.

செய்வதெல்லாம் அரசு பழி மட்டும் வீழ்வதெல்லாம் நம் தமிழர்கள்மேலா?

தமிழர்கள் மீண்டும் மீண்டும் மௌனிகளாக இருக்க இருக்க இனிமேல் எம்மேல் சீரகம் அரைத்து கறிவைத்து சாப்பிடுவார்கள் அதையும் நாம் பார்த்திருக்க வேண்டுமா? ஒவ்வொரு தமிழனும் ஒரே தலைவனின் வழியில் ஒரே வழிகாட்டலில் ஓரணியில் நின்றாலே போதும் நாம் சாதிப்போம், வேற்றுமை பகமை எல்லாம் மறந்து ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் தெளியட்டும் உலகம் விடியட்டும் நம் ஈழம்

நேற்றைய இரவுச்செய்தியில் 6 பாகிஸ்த்தானியர்களை கைது செய்ததுபற்றியே கூறினார்கள்.இது தொடர்பாக இன்றைய பாரிசியன் இணையத்தளத்தில் வந்த செய்தி இது

Un policier a été tué de deux balles dans la tête ce samedi soir à la Courneuve (Seine-Saint-Denis). Le policier - un homme d'une trentaine d'années - était en civil au moment des faits. Les circonstances de cette mort restent pour l'heure indéterminées. De nombreux effectifs de police étaient encore sur place cette nuit. Selon Frédéric Lagache, secrétaire national du syndicat des agents de la paix, Alliance, l'enquête avance à grand pas. L'arme du policier qui n'a pas été immédiatement retrouvée sur le policier a refait surface dimanche. Elle aurait été retrouvée non loin du corps du policier et envoyée aux services de police spécialisés pour une étude balistique. Le jeune agent de la paix, père de deux enfants, connaissait très bien dans le quartier puisqu'il y intervenait régulièrement dans le cadre de son travail. Il serait intervenu, alors qu'il était en civil, dans le cadre d'une bagarre entre pakistanais. Selon le derniers éléments de l'enquête, dimanche en fin de matinée, la police aurait procédé à cinq interpellation

http://videos.leparisien.fr/video/iLyROoafJdZI.html

போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த பாகிஸ்;த்தான் இளைஞர் கும்பலே இந்தக் கொலையின் பின்னணி என்று பொலீஸ் விசாரணையில் தெரியவந்திருப்பதாகச் சொன்னார்கள்.சம்பவம் நடந்த பகுதியில்; அடிக்கடி பாகிஸ்தான் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்நடைபெறுவது வழக்கம் என்றும் போதை பொருள் கடத்தல்காரகளை பிடிக்கச் சென்ற இடத்திலேயே இந்த பொலீஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சொன்னார்கள்.

நெருப்பு இணையத்தளம் தனது பிரெஞ்சு நிருபரை மேற்கோள்காட்டி வெளிட்ட அவதூறு செய்தி குறித்து பிரெஞ்சு உள்துறை அமைச்சுக்கு முறையிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பிரான்

இந்த வதந்தியை ஒட்டுக்குழு ஊடகங்களிலும், கொழும்பின் ஊடகங்களில் வெளிவரச் செய்தது ஆறுசனலான் என்று நம்பகமாகத் தெரிய வருகின்றது. "பிரான்ஸ் நிருபர்", "விரி" என்று பல பெயர்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுபற்றி தமிழ்மக்களால் பிரான்ஸ் காவற்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினரை அவதூறு செய்தமை, பொய்யான தகவலை பிரசுரித்தமை போன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்தியாளரிடமும் விசாரணை நடைபெறும். சைபர் கிரைம் பிரிவினர் இணையத்தள உரிமையாளரை கண்டுபிடித்து விசாரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கொன்றினை திசைதிருப்ப முயன்றது என்ற கோணத்திலும் விசாரணைகள் கடுமையாக இருக்குமாம்.

அத்தோடு குறிப்பிட்ட தளத்தின் பதிவுகள் சிடியில் பிரதியெடுக்கப்பட்டு காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது!

Edited by pepsi

இந்த செய்தி கொழும்பில் இருந்து வெளிவரும் dailymirror பத்திரிகையிலும் விடுதலைப்புலிகளை கைதுசெய்துள்ளதாக வெளிவந்துள்ளது

கொலை செய்தவர்கள் இலங்கையர்கள் என் இப்போது கூறுகிறார்கள். நான்கு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி கொழும்பில் இருந்து வெளிவரும் dailymirror பத்திரிகையிலும் விடுதலைப்புலிகளை கைதுசெய்துள்ளதாக வெளிவந்துள்ளது

காவற்துறைக்கு தெரியமுதலே இவர்களுக்கு விடுதலைப்புலிகள் என்று தெரிந்துவிட்டது!! இவர்களே திட்டம்போட்டு செய்திருப்பார்கள்!

இது ஒரு சாதாரணவிடயம் இல்லை.விடுதலைப்புலிகளின் பேரால் நாசவேலைகளை செய்வதற்கு ஒட்டுக் குழுக்களை பயன்படுத்தும் சிறிலங்கா அரசின் சதிநடவடிக்கையின் ஒருங்கம் தான் இந்த செருப்பு தனத்தில் வெளிடப்பட்ட செய்தி.நான் இன்று காலை லாடூகூர் நெவ் நகரசபைக்குச் சென்று எனது முறைப்பாட்டை உரியவர்களிடம் எழுத்து மூலம் கொடுத்தேன்.நமது இளையோர் அதிகளவு மனுக்களை லா கூர் நெவ் நகரசபைக்கும் 93 ம் மாவட்ட அதாவது சென் சென்டனி மாவட்ட காவல்துறை பொறுப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.அதன் பிரதிகள் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.எமது அடுத்த ஆர்பாட்டத்தை லா கூர் நெவ் நகரசபைக்கு முன்பாக இந்த சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியும் இந்த அவதூறு செய்தியை எழுதிய நபரை கைது செய்யும் படியும் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.இது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய வேலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையர்கள் என்றும் விசாரணைக்குத்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவற்துறை சொல்கிறது. அவர்கள்தான் சுட்டவர்கள் என்று சொல்லவில்லை.

மற்றும் கொல்லப்பட்ட பொலீஸ்காரருக்கு அன்று வேலை நாள் இல்லை என்றும் அவர் ஏன் அங்கு போனார் என்று தெரியவில்லை என்றும் காவற்துறையே கூறுகிறது.

இதில் குறிப்பிட்டவர்கள் இலங்கையர்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறது. தமிழர்கள் என்றோ புலிகள் என்றோ பிரான்ஸ் காவற்துறை எந்த இடத்திலும் கூறவில்லை. அப்படியிருக்க எவ்வாறு இந்த எலும்புத்துண்டு நக்கும் பரதேசிகள் இவ்வாறு செய்தியை பரப்பியது. இதை வீரகேசரி வேறு போட்டிருக்கிறது (எத்தனை எலும்புத்துண்டு கிடைத்ததோ?).

தமிழ்மக்களின் செயற்பாடுகளை ஒழிக்க திட்டம் ஒன்று திரைமறைவில் அரங்கேறப்படுகிறது என்பது தெளிவு! இதனை தமிழ்மக்கள் சும்மா விடக்கூடாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.