Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு மட்டும்

Featured Replies

  • தொடங்கியவர்

ஜஸ்டின் இவர்களெல்லாம் தூங்குவது போல நடிப்பவர்கள். ஆனால் நாங்களும் இவர்கள் தூங்குகிறார்கள் என நம்புவது போல நடித்து இவர்களிடம் காரணம் கேட்கலாம். இப்படியான பத்திரிகைக்கு நீங்கள் விளம்பரம் கொடுக்கிறீர்களா? உண்மையா என்று கேட்கலாம். அதற்கு அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று பார்ப்போம். இவர்களுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் நிச்சயமாகக் களத்திலும் இருப்பார்கள். இதை முதலில் செய்வோம்.

முடிந்தவரை இந்த வியாபார நிறுவனங்களின் தொலைபேசி இலக்கங்களையும் இங்கே இணைத்து விடுங்கள். எனக்கு அந்தப் பத்திரிகைகள் கிடைக்கவில்லை. ஒரு முறை வியாபார நிறுவனமொன்றிற்குச் சென்றிருந்த போது கையில் கிடைத்தது. அதை வைத்துத் தான் அந்தக் கட்டுரையை எழுதினேன். அந்தப் பத்திரிகைகள் கிடைத்தால் தொலைபேசி இலக்கம் முகவரி போன்றவற்றையும் இணைத்து விடுகிறேன்.

Netcom College உரிமையாளர் எனக்கு தெரிந்தவர் என்பதால் அவரை அழைத்து இந்த விளம்பரம் பற்றி கேட்டேன்.அவர் சொன்னார் சில காலத்துக்கு முன் தான் விளம்பரம் கொடுத்ததாகவும் அதன் பின் அவங்கள் தொடர்ந்து விளம்பரத்தை தொடர்ந்து பிரசுரித்து வருவதாகவும் அதற்கு பணம் வசூலிப்பது இல்லை என்றும் கூறினார்.நான் அவருக்கு தேவையான விளக்கத்தை கொடுத்த பின் தனது விளம்பரம் இனி வராமல் இருக்க ஆவன செய்வதாக உறிதியளித்துள்ளார். இதே போல் உங்களுக்கு தெரிந்தவர்களின் விளம்பரம் சிங்களவனின் பத்திரிகைகளில் வருகிறது என்றால் அவர்களை அழைத்து அதை உடனடியாக நிறுத்தும் படி கேளுங்கள். சிங்கள நாட்டுக்கு எமது 1 சதமேனும் போகக் கூடாது. எல்லோரும் ஒன்று சேர்ந்து முயன்றால் இது ஒன்றும் பெரியவேலை இல்லை. தமிழராய் ஒன்றினைவோம் ,வெல்வோம் சிங்கள நாட்டை ,படைப்போம் தமிழீழம்.

Edited by Valvai Inthi

நல்ல முயற்சி இந்தி.

Edited by kaviya

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஏன் பரந்துபட்ட முறையில் சிந்திக்கக்கூடாது? மாற்றுக் கருத்துள்ளவர்களின் ஊடகத்தில் விளம்பரம் கொடுப்பவர்கள் எல்லோரும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களாக சித்தரிக்ககூடாது, அதேபோல் தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுக்கொண்ட ஊடகத்தில் விளம்பரம் செய்பவர்கள் எல்லாம் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவானவர்கள் என்றும் கருத முடியாது.

மேலே உங்களால் அட்டவணைப்படுத்திய பல வர்த்தகர்கள் தமிழ்த்தேசியத்திற்கு தொடர்ந்து பங்களிப்பு செய்பவர்கள், உங்கள் கருத்துப்படி, உங்களால் எதிர்பார்க்கும் ஊடகத்தில் விளம்பரம் செய்யும்போது தமிழ்த்தேசியத்தின் ஆதரவாளர்களை மட்டுமே அவர்களால் வாடிக்கையாளர்களாக வைத்திருக்கமுடியும்.

வியாபாரம் என்பது வேறு, பங்களிப்பு, கடமை என்பது வேறு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து குழப்புவது அவ்வளவு நல்லதல்ல.

நாம் வர்த்தகர்களின் பக்கம் நின்று சிந்தித்தோமானால் உண்மையை அனுபவரீதியாக புரியக்கூடியதாக இருக்கும்.

மேலே குறிப்பிட்ட அட்டவனையில் உள்ள வர்தத்தகர்களில் நெற்கொம் நிறுவனத்தை உதாரனத்திற்கு எடுத்தோமானால், அவரால் நடாத்தப்படும் கணனி கல்வி நிறுவனத்தில் பல்லின மக்கள் அதிகளவில் கல்வி கற்கின்றார்கள் ஆகவே பல தரப்பட்ட ஊடகத்தில் விளம்பரத்தை மேற்கொள்ளவேண்டிய ஒரு அவசியம் அவருக்குள்ளது. இப்படி விளம்பரத்தை மேற்கொள்ளும்போது மாற்றுக் கருத்துள்ள ஊடகவியலாளர்களும் தங்களை அறியாமலே, தமிழ்த்தேசியத்தில் பங்காளியாகின்றனர் என்பது மகிழ்ச்சியான விடயம் தானே?

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்

வல்வை மந்தனின் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்படியானால் சிங்கள தேசத்துப் பொருட்களை வைத்து விற்பதும் குற்றமற்றதா?

சிங்களப் பத்திரிகைகள் எமக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதற்கு நாமே (எமது வியாபாரத் தேவைகளுக்காக) பணம் கொடுத்து உதவி செய்வது சரியென்றால்..... இன்னும் எத்தனை எத்தனை வழிகளில் பணம் பண்ணலாம்.

வல்வை மைந்தன் உங்கள் கருத்து சரிதான்.Toronto வை பொறுத்த மட்டில் ஏராலமான பல்லின மக்கள் வாழ்கிரார்கள். அவர்களுடைய பத்திரிகைகளில் தாராலமாக விளம்பரபடுத்தலாம்.நாம் வேண்டி கேட்பது சிங்கள நாட்டு பத்திரிகைகளை பகிர்ஷ்கரிக்க வேண்டும் என்பதே.இவ்வளவு காலமும் இப்படியான விளம்பரங்களை கொடுத்து உழைத்தவர்கள் தானே!!! இப்ப காலத்தின் தேவை முழு புறக்கணிப்பு. சிங்கள நாட்டு பத்திரிகைகளை புறக்கணிப்பதால் இவர்களுடைய வியாபாரம் ஒன்றும் குடிமுழ்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தன் சொன்னது எல்லாரும் சொல்லும் மேலோட்டமான கருத்து. ஆனால் இப்படிச் சொல்லும் யாரும் இந்தச் சின்னச் சின்ன விஷயங்களின் பின் விளைவுகளை யோசிப்பதில்லை. (நான் ரூம் போட்டு யோசிக்க இல்ல, ஆனா எனக்கு இப்படித் தான் விளங்குது!):

1. புறக்கணிப்பினுடைய நீண்ட கால இலக்கு புலம் பெயர் தமிழரிடையே சிறி லங்காப் பொருட்களை நிரந்தரமாக இல்லாதொழிக்கிறது தான். எங்கள் பிரபலமான வர்த்தகங்கள் அவர்களின் பொருட்களுக்கு விளம்பரம் செய்தாலோ அல்லது சிங்களவன் பேப்பரில் தமிழர் கடை விளம்பரம் வந்தாலோ மக்களிடையே எப்படி இந்த புறக்கணிப்பு ஊக்கத்தைக் கொண்டு போக முடியும்? இப்பவே இங்க களத்தில இருக்கிற சிலரின் புறக்கணிப்புக்கு எதிரான வாதம் என்ன எண்டு பார்த்தால் "இறக்கிறவை நிப்பாட்டட்டும், நாங்கள் நிப்பாட்டிறம்" எண்டு இருக்கு. இது மன நிலை சம்பந்தப் பட்டது, இதை மாற்ற சிங்கள தமிழ் விளம்பர வியாபார விடயங்கள் ஒட்டாத இரு கோடுகள் எண்ட தோற்றத்தை ஏற்படுத்த வேணும்.

2."பல்லினம்" எண்டதுக்குள்ள வெளிநாட்டில அவ்வளவு பிரபலமாகாத சிங்கள இனம் எத்தனை வீதம் ? அல்லது சிங்களவருடைய பேப்பரப் பார்த்து தங்களுடைய நுகர்வுப் பொருட்களை தேர்வு செய்கிற வேற்றினத்தார் எத்தனை வீதம் பேர்? அதனால சிங்களவனுக்கு விளம்பரம் கொடுக்கிறது கொடுக்காதது எந்த விளைவையும் லாபத்தில கொண்டு வராது.

3.இன்னுமொரு நோக்கம் இந்த புறக்கணிப்பு சிங்களவனுக்கும் தெரிய வேணும். "உனக்கு ஒரு ரூபாய் கூட என் உழைப்பிலிருந்து தர மாட்டேன்" என நேரயோ அல்லது மறைமுகமாகவோ சொல்ல வேணும். இது சிங்களவனுக்கு "ஆத்ம தேடலைத்" தூண்டாது. ஆனால் அவனோட நாங்கள் "ஒண்டாச் சேர்ந்து ஒண்டுக்கிருக்க மாட்டம்" எண்டு காட்டும் சமிக்ஞையாக இருக்கும்.

4.புறக்கணிப்பு வலு இலகுவானது. உங்கட தனிப்பட்ட ருசியுணர்வு தடையாக இருக்குமெண்டா ஆயிரக் கணக்கில இணையத்தில உலவுற மக்கள் அவல வீடியோவ ஒருக்கா பார்த்து அதில எத்தினை வீதம் என்னுடைய சிறி லங்காவுக்கான பங்களிப்பால நடந்தது எண்டு ஒருக்கா யோசித்தால், புறக்கணிப்பு ஒரு சுமையே இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழீழ‌ம் என்னும் எம‌து குறிக்கோளை அடைவ‌த‌ற்கு முன், நாம் ம‌ன‌த‌ள‌வில் ஒரு தேசிய‌ இன‌ம் என்ப‌தை க‌ருத்தில் கொள்ள‌வேண்டும். அவ்வாறில்லாது கிடைக்கும் ஒரு வெற்றி, நீண்ட‌ கால‌ அடிப்ப‌டையில் ந‌ம்மை மீண்டும் அடிமைத்த‌ழைக்குள் சிக்க‌ வைக்கும். சிங்க‌ள‌வ‌ர்க‌ள் எங்க‌ள் தேச‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளில்லை என்ப‌தும் நாம் அவ‌ர்க‌ள் நாட்டைச் சேர்ந்த‌‌வ‌ர்க‌ள் இல்லை என்ப‌தும் எம்ம‌ன‌ங்க‌ளில் எழுத‌ப்ப‌ட‌ வேண்டும். இருக்கும் ஒருசில‌ மாற்றுக் க‌ருத்தாள‌ர்க‌ளின‌தும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளின‌தும் வியாபார‌ நுக‌ர்வுக‌ள் தமக்குத் தேவையா என்ப‌தை எமது வர்த்தகர்கள்தான் முடிவு செய்ய‌ வேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்கிற‌ வ‌கையில் அவ‌ர்க‌ள் இவ்விட‌ய‌த்தில் செய‌ல்ப‌ட‌ முடியாது.

வ‌ல்வை இந்தி சொன்ன‌ விட‌ய‌த்தில், ச‌ந்தா இல்லாம‌லே அவ‌ர்க‌ளைப் பிர‌சுரிக்க‌ விடுவதும் அபாய‌க‌ர‌மான‌து. சிறிது கால‌த்துக்குப் பின் இன்வொயிஸ் அனுப்பினாலும் அனுப்புவார்க‌ள். காசைத்த‌ர‌ முடியாது என்று எல்லா நேர‌ங்க‌ளிலும் கூற‌முடியாது. அவ‌ர்க‌ளுட‌ன் ஆர‌ம்ப‌த்தில் போட‌ப்ப‌ட்ட‌ ஒப்ப‌ன்த‌த்தில் ஏதாவ‌து வில்ல‌ங்க‌மான‌ ச‌ர‌த்துக்க‌ள் இருந்தாலும் இருக்க‌லாம். இதெல்லாம் வியாபார‌த் தந்திர‌ம். க‌ட்டாவிட்டால் க‌லெக்ஷ‌ன் ஏஜென்சி மூல‌ம் மிர‌ட்ட‌ல் விட‌ப்ப‌ட‌லாம். கிர‌டிட் பாழாகுமே என்கிற‌ ப‌ய‌த்தில் க‌ட்டித் தொலைக்க‌ வேண்டி வ‌ர‌லாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் மணிவாசகன்!

சிங்கள தேசத்து உற்பத்திப்பொருட்களை வாங்கி விற்பதிற்கும், சிங்கள ஊடகத்தில் எங்கள் விளம்பரங்களை பிரசுரிப்பதிற்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குப்படுகின்றது, இது எனது கருத்து, அதற்காக இதுதான் சரி என்று விவாதிக்க வரவில்லை.

சிங்களவரின் பத்திரிகையில் எங்களது விளம்பரத்தை செய்வதன் நோக்கம், அவர்களுக்கு வருமானத்தை கொடுப்பதிற்காகவோ, அல்லது ஆதரவை கொடுப்பதிற்காகவோ அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

சிங்களவரை எங்களது வர்த்தக நிலையங்களுக்கு வரவழைக்கும் நோக்கமாகத்தான் விளம்பரங்களை அவர்களது பத்திரிகையில் செய்கின்றார்களே தவிர, வேறெந்த நோக்கமுமில்லை.

மற்றும்படி பத்திரிகையை புறக்கணிக்கவேண்டும் என்று தகுந்த காரணத்தை உங்களால் முன்வைக்கப்பட்டால், அதை கவனத்தில் எடுக்க எமது மக்கள் பின் நிற்கமாட்டார்கள் என்பதும் அசைக்கமுடியாத உண்மை.

இதற்கு உதாரனமாக கனடாவில் இடம்பெற்ற ஒருசம்பவத்தை தெரிவிக்க விரும்புகின்றேன், அதாவது தன்னை தமிழ்த்தேசியவாதி என்று கூறிக்கொண்ட ஒருவர் உலகத்தமிழர் பத்திரிகையின் ஆசிரியராகவும் சிறுதுகாலம் இருந்தவர், இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டினால் பிரிந்து சென்று சுயமாக ஒரு பத்திரிகையை ஆரம்பித்தது மட்டுமன்றி, தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியும், தேசியத்தலைவரையும், போராளிகளையும் கேவலப்படுத்தும் நோக்கமாகவும்கொண்டே இயங்கி வந்தார்.

இதை ஏற்றுக்கொள்ளமுடியாத ரொரண்டோவாழ் வர்த்தகர்கள் ஒட்டுமொத்தமாகவே இவரது பத்திரிகையை விநியோகிப்பதை நிறுத்திக்கொண்டார்கள், சில அடி வருடிகள் அடம்பிடித்ததால் சில வன்செயல்களும் இடம்பெற்றன, அத்துடன் அந்த பத்திரிகை முகவரியே இல்லாமல் போய்விட்டது.

இதேநபர்தான் இப்போது பி.பி.சி தமிழோசையில் அரசியல் ஆய்வாளராக இடைக்கிடை முகங்காட்டுகின்றார் என்பதையும் நாம் அறிந்திருத்தல் நல்லது.

ஆகவே தகுந்த காரனமாகவிருந்தால் மக்கள் புரிந்துகொண்டு கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்ற எனது அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொண்டு, இதில் நான் ஏதாவது தப்பான கருத்தை கூறியிருந்தால் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடைபெறுகின்றேன்.

Edited by Valvai Mainthan

இந்தப் பத்திரிக்கை சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்படும் பத்திரிக்கை என்பது எல்லோருக்கும் தெரியும்

இதற்கு ஆதரவு அளிப்பதும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதும் ஒன்று தான்

இவர்கள் விலாங்கு மீன்கள்

சிறிலங்காவின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு புலம் பெயர் தமிழர்களே தடையாக இருப்பது தான் உண்மை

நீங்கள் வாங்கும் சிங்களப்பொருள் ஒவ்வொன்றும் தமிழன் மேல் போடுகின்ற ஒரு குண்டுக்கு சமன் ஒரு சன்னத்திற்கு ஒரு செல்லுக்கு சமன் என்ற உணர்வு வரவேண்டும்

இங்கு பலருக்கு இனமானத்தை விட சுய லாபமும் சுய நலமும் தான் அதிகம்

இன்னும் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்பதற்கு பலரும் பின்னிக்கிறார்கள்

திண்ட சுவைக்கு இவர்கள் அடிமைகள்

அதற்கு மாற்றீடு கொடுத்தால் தான் இவர்கள் புறக்கணிப்பார்களாம்

இவை எல்லாம் பித்தலாட்டம்

இந்த விளம்பரங்கள் ஒரு வருடத்திற்கு முற்பட்டவை இப்போது விளம்பரமிடுபவர்கள் யார் யார் என்று அறியுங்கள்

இதில் உள்ள ஒரு சிலர் சிங்கள அருவருடிகள் இவர்களுக்குத் தான் விருது கொடுக்க முற்பட்டார்கள் பின்னர் நடந்தவை உங்களுக்கு தெரியும்

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.