Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜெயலலிதா உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேகமடையும் ஈழத் தமிழர் விவகாரமும் புதிய கூட்டணிக்கான பேரங்களும்

அபிஜித்

இந்தியாவில் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஈழத்தமிழர் விவகாரம் முக்கிய பிரச்சினையாக இருக்குமென கருதப்படுகிறது. கடந்தவாரம் தான் தேர்தலுக்கான திகதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. ஏப்ரல் 16 முதல் மே 13 வரை பலகட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. கடைசி இரு கட்டங்களின் போது தான் தமிழகத்தின் வாக்களிப்பு நடக்கவுள்ளது. இதில் தமிழக வாக்களிப்பில் ஈழத்தமிழர் விவகாரம் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தமிழக அரசியல்வாதிகள் பெரும் கலவரமடைந்துள்ளனர்.

குறிப்பாக ஈழத்தமிழர் விரோத அரசியல் கட்சிகளான காங்கிரஸ், அ.தி.மு.க. என்பன வெகுவாக கவலை கொண்டுள்ளமை தெளிவாகிறது. இதன் எதிரொலியே ஜெயலலிதா அண்மையில் அறிவித்த ஈழத்தமிழர் ஆதரவு உண்ணா நோன்பாகும். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்த உண்ணா நோன்பில் அ.தி.மு.க. பங்கெடுக்கும் என அறிவித்துவிட்டு கடைசிநேரத்தில் ஜெயலலிதா பின்வாங்கியமை நினைவிருக்கலாம். அ.தி.மு.க.வுக்கும் கம்யூனிஸ்ட்களுக்குமிடையே கூட்டணி உருவாகமுன்னர் இது நிகழ்ந்தது.

இப்போது அவரது கூட்டணியில் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் ஆகிய இரு பிரதான ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சிகள் உள்ளன. இவர்கள் மூலம் அ.தி.மு.க.வுக்கு கணிசமான ஈழத்தமிழர் ஆதரவு வாக்குகள் கிடைக்கலாமெனினும் ஜெயலலிதா ஈழத்தமிழர் விரோதி என்பதால் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என அவர் அஞ்சுவதாக தெரிகிறது. இல்லாவிட்டால் திடீரென உண்ணாவிரதம் பற்றி அறிவிக்க காரணம் ஏதுமில்லை. ஈழத்தமிழருக்காக தி.மு.க எதுவும் செயவில்லை எனச் சொல்லி வாக்குகளை கவர்வதற்கும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

பல எதிர்க்கட்சிகள் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதால் காங்கிரஸுக்கும் ஜெயலலிதாவுக்கும் தேர்தல் நேரத்தில் தமது சுயரூபத்தை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த பட்சம் தேர்தல் முடியும் வரையாவது தமது ஈழத்தமிழர் விரோத நிலைப்பாட்டை ஒத்திப் போட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் உள்ளனர்.

சரியாக தேர்தல் சமயத்தில் ஈழத்தமிழர் விவகாரம் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பது இவர்களின் துரதிர்ஷ்டமே. குறிப்பாக தென் தமிழ்நாட்டு மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியா குமரி மாவட்டங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்படுவதால் அம்மாவட்டங்களில் ஈழத்தமிழர் ஆதரவு உணர்வு பொங்கிப் பிரவாகித்து வருகிறது.

இலங்கை கடற்படை தமிழக மக்கள் மீதுள்ள ஆத்திரத்தை தமிழக மீனவர் மீது கொட்டுவதால் இவ்வுணர்வு இன்னும் அதிகரித்துள்ளது. வைகோவின் செல்வாக்குகள் அவரது சொந்த ஊரும் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டமும் தென் தமிழக மாவட்டமும் ஒன்றே. இதனால் தென்தமிழ்நாட்டு மாவட்டங்கள் பலவற்றில் இம்முறை வாக்களிப்பில் ஈழத்தமிழர் என்ற அம்சம் முக்கியமாக தீர்மானிக்கும் காரணியாக இருக்குமென கருதப்படுகிறது. வழக்கமாகவே வட தமிழக மாவட்டங்கள் தி.மு.க.வினதும் தென்மாவட்டங்கள் அ.தி.மு.க.வினதும் கோட்டைகளாக விளங்கி வருபவை.

இந்த முறை அ.தி.மு.க வின் கோட்டையான தென்மாவட்டங்களில் தி.மு.க. புகுந்து விளையாட ஈழத்தமிழர் விவகாரம் பெரிதும் உதவலாம். காரணம் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. போன்ற ஈழ ஆதரவு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருப்பதே. காங்கிரஸ் கட்சிக்கும் அ.தி.மு.க போன்று தென்மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உண்டு. எனவே தி.மு.ககாங்கிரஸ் கூட்டணி தென்மாவட்டங்களில் வெல்ல ஒரு வாப்பு ஏற்படலாம்.

இந்தநேரத்தில் ஈழ எதிர்ப்பு என்ற தனது கொள்கையை ஜெயலலிதா தூக்கிப்பிடித்தால் கடும் இழப்பு நேரிடலாம். இதனையொட்டியே ஈழத்தமிழர் விடயத்தில் அம்மா அடக்கி வாசிக்கிறார் எனக் கூறப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை வெல்லக்கூடிய அதிகூடிய எண்ணிக்கை தொகுதிகளை வெல்ல வேண்டும்.

அதன் மூலமே மத்தியில் அமையும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பாரதீய ஜனதா கட்சியோ, காங்கிரஸ் கட்சியோ ஆட்சி அமைக்க பெரும்பான்மை போதாமல் திண்டாடும் போது தனது எம்.பிக்களின் ஆதரவை தந்து தி.மு.க.அரசைக் கலைக்க வேண்டுமென்பதே அம்மாவின் வியூகமாகும். அதற்காக எவ்வளவு தொகுதிகளை வெல்ல முடியுமே அவ்வளவு வெற்றியை சம்பாதித்துக் கொள்ள அம்மா தயாராகி வருகிறார்.

தி.மு.க.கூட்டணியில் பல சிக்கல்கள் உள்ளமை உண்மையே. கலைஞர் இப்போது தான் சத்திரசிகிச்சையின் பின் வீடு வந்துள்ளார். அவரால் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய முடியாது. கட்சிக்கு நட்சத்திரப் பேச்சாளர் என கலைஞரை விட்டால் வேறு யாருமில்லை. காங்கிரஸ் கட்சியில் சோஷலிச கட்சியோ, ராகுல், பிரியங்காவோ தமிழகம் வர விருப்பம் காட்டவில்லை. சென்ற 2004 பொதுத் தேர்தலில் கூட சோனியா காந்தி கட்சி சென்னையில் ஒரேயொரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலைஞருடன் பங்கேற்றார். மற்றபடி கலைஞர், ராமதாஸ், வைகோவின் பிரசாரத்தில்தான் 40 தொகுதிகளும் கூட்டணியின் வசமாகின. இந்த முறை வைகோவும் தி.மு.க.அணியில் இல்லை. கலைஞரும் உஷாருடன் இல்லை. பிரசாரம் என்பது மந்தமாகவே இருக்கும். மறுபுறம் அ.தி.மு.க. அணியிலோ வைகோ ஒருபுறமும் ஜெயலலிதா ஒருபுறமும் நட்சத்திரப் பிரசாரகர்களாக வலம்வரப்போகின்றனர்.

இது தவிர தி.மு.க. ஆட்சியில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்திருப்பது தி.மு.க.விற்கு சேதமாகவே முடியும். ஜெயலலிதா பெண் என்பதால் அவரது கட்சியில் ரவுடிகளின் கொட்டம் மேலோங்க அவர் அனுமதிக்கவில்லை. இது தமிழக நடுத்தர, கீழ்மட்ட மக்களுக்கு நன்கு நினைவில் உள்ளது. இது குறித்து கலைஞர் கவனம் செலுத்தாது இருப்பது அவருக்கு தேர்தல் பின்னடைவில் முடியலாம். விலைவாசி பெருமளவு குறைந்துள்ள போதும் சட்டம், ஒழுங்கு சீர்கேடு தி.மு.க.விற்கு எதிராகவே வேலை செயும் என்பது புலனாகிறது. ஜெயலலிதாவை பொறுத்தவரை இத் தேர்தலில் மேற்கூறிய காரணங்களால் தி.மு.க.வை முந்தும் நிலையிலேயே உள்ளார். எனினும் இதை நூறுவீத வெற்றியாக மாற்றும் வாப்பை அவராகவே உதறிவிட்டுள்ளார் எனலாம். தேசிய கட்சியான பிஜேபியுடன் அணிசேராதது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை தேர்தல் முடிவு வரும்போது அவர் உணரக்கூடும். பாரதீய ஜனதாவை மட்டுமன்றி பாட்டாளி மக்கள் கட்சியையும் ஜெயலலிதா உதறியுள்ளார். இவையிரண்டும் இருந்திருப்பின் அவரது கூட்டணி சொல்லிவைத்து 40 தொகுதிகளிலும் வென்றிருக்க முடியும். ஆனால் தனது தனிப்பட்ட அகந்தை, கோபம் காரணமாக இவ்விரு கூட்டணிகளையும் அவர் தவிர்த்துள்ளார். இது அரசியல் தற்கொலைக்கு சமனாகும்.

இதேவேளை பாட்டாளி மக்கள் கட்சியும், விஜயகாந்தியின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் எந்தக் கூட்டணி என்ற தடுமாற்றத்தில் இன்னும் உள்ளன. ஜெயலலிதா குறைவான தொகுதிகளையே தரமுடியும் என்று சொன்னதால் கடுப்படைந்த ராமதாஸ் தி.மு.க.அணியிலேயே இருந்துவிடலாமென்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தீர்க்கமான முடிவெதுவும் எட்டப்படவில்லை. தி.மு.க.அணியில் பா.ம.க.சேர்ந்தால் தே.மு.தி.க அவ்வணியில் சேராது. அவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடும்பகை உள்ளது. ஆனால் விஜயகாந்தை தி.மு.க. அணிக்கு இழுக்க காங்கிரஸ் கட்சி கடுமையாக முயன்று வருகிறது.

இங்கு சுவாரஸ்யமான விடயம் என்னவெனில் வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வரமுன்பே கூட்டணியும் தயாராகி தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிடும். இம்முறை கட்சிகளின் தயாரிப்பில் பெரும் தொவு உள்ளது. ஜெயலலிதா கூட இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. கலைஞரோ இப்போது தான் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிகளும் தேசிய முன்னேற்ற திராவிடர் கழகமும் எந்த அணியில் சேர்வது என்ற மயக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால் தேர்தல் பிரசாரம் இன்னும் களைகட்டவில்லை. ஆனால் ஈழ ஆதரவு கூட்டாளிகளும் பேரணிகளும் ஏற்கனவே நடந்துவருவதால் இப்பேரணிகளே தேர்தல் மேடைகளாக உள்ளன. இது ஈழ ஆதரவு அரசியல்வாதிகட்கு பெரும் சாதகமான அம்சமாகும். தேர்தலில் ஈழ ஆதரவு கோஷம் எதிரொலிப்பதற்கு இது பெரிதும் உதவும். ராஜிவ் கொலைக்குப் பிறகு லோக்சபா தேர்தல்கள் 5 முறை நடந்துள்ளன. இவற்றில் எவற்றிலும் இராத ஈழ ஆதரவு அலை இந்தத் தேர்தலில் அடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ், ஜெயலலிதா போன்றோருக்கு இது பெரும் எரிச்சலான விடயம்.

எனினும் தவிர்க்க முடியாதபடி இந்தப் பாதிப்பு இருக்கத்தான் போகிறது. எதற்கும் அசையாத ஜெயலலிதாவே ஈழ ஆதரவு, உண்ணா நோன்பு என அறிவித்திருப்பது இதனால் தான் என்பதும் தெளிவு. வழக்கம்போல வைகோவை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திவிட்டு பின்னர் உதறித் தள்ளும் வழிமுறைக்கு வர ஜெயலலிதா தயங்கமாட்டார். தேர்தலுக்கு முன் வைகோவை உதற அவர் விரும்பவில்லை. காரணம் தேர்தல் பிரசாரத்தில் பிரசார பீரங்கியாக நிச்சயம் வைகோ உதவுவார் என்பதே. வைகோவுக்கும் அ.தி.மு.க.வை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் தனது அதிதீவிர ஈழ ஆதரவு வாக்குகளை முழு ஈழ விரோதிகளை ஜெயலலிதாவுக்கு சம்பாதித்துக் கொடுக்கும் நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

-தினக்குரல்

  • Replies 54
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஜெ.

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். மேடையி்ல வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியையும் அவர் போட்டார்.

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. மாலை 5 மணி வரை ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை அவர் தொடங்கினார்.

மேடைக்கு அருகில் பெரிய பந்தலும் போடப்பட்டுள்ளது. அதில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சிகளும், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவக் கட்சி ஆகியவையும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளனர்.

உண்ணாவிரதப் பகுதியில் பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், போக்குவரத்திலும் மாற்றம் செய்யலாம் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் போலவே மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுகவினர் பெரும் திரளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஜெ.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சிகளும், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவக் கட்சி ஆகியவையும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

விடுதலைச்சிறுத்தை ???

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைச்சிறுத்தை ???

தொல். திருமாவளவனின் கட்சியான விடுதலை சிறுத்தைகளும் ஆதரவு கொடுத்துள்ள படியால் ,

அவர்கள் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்க கலைஞர் அனுமதிப்பாரா ... என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறக்க நிலையில் இருக்கும் கரிநாநிதியை விழிப்படைய செய்ய இது போண்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன, இனி பாருங்கள் கரிநாநிதியின் புதிய எழுச்சியை, இதற்குள் அம்மாவை சோமாறி சந்தித்து குழப்பாமல்விட்டால் சரி, முதலும் அவர் இப்படியான ஒரு நிலையை எடுத்த போது சோமாறி குழப்பி விட்டது இலாவிடில் இப்போது இருக்கும் நிலையில் அனைத்து இடங்களிலும் அதிமுக இலகுவாக வெண்றிருக்க முடியும், காங்கிரசை வீழ்த்தும் நோக்கில் அம்மா வெண்று இருக்கலாம் , எல்லாம் சோமாறி அனியாயமாகிவிட்டது, காலம்கடந்த ஞானம் அமாவிற்கு வந்தாலும் எல்லாம் லேட்தான், காங்கிரசு தோற்க வேண்டும், இனிவரும் மத்திய அரசுகளுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். வெறும் காங்கிரசின் தோல்வி என்று இயங்குவதை விட , அம்மாவிற்கு ஆதரவு என இயங்குவது, காங்கிரசின் தோல்வியை நிட்சயப்படுத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.