Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இரு இராணுவங்களை அமைக்க போதுமானவை

Featured Replies

காவு கொடுத்ததைச் சொல்லவில்லை கைப்பற்றியதைச் சொல்கிறார் அண்ணாச்சி :D

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இரு இராணுவங்களை அமைக்க போதுமானவை

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பிரதேசம் இருப்பதாக கூறப்படுகின்ற போதும் அங்குள்ள வாவிப்பகுதி கைப்பற்றப்பட்டால் 20 சதுர கிலோமீற்றருக்கும் கூடுதலான பிரதேசம் மட்டுமே அங்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மிகுதியாக உள்ள பிரதேசம் கைப்பற்றப்படவுள்ளதோடு நாட்டின் முழுப் பிரதேசமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பொது சன முன்னணியின் கீழ் போட்டியிடும் மத்திய சூழல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் உதயகமன்பிலவின் இணையத்தளத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாளுக்கு நாள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் சுருங்கிவருவதாக தெரிவித்த கோதாபய ராஜபக்ஷ மேலும் தனது உரையில்;

இந்த யுத்தத்தில் விடுதலைப்புலிகள் இரு இராணுவப்பிரிவுகளை நிறுவுவதற்கு போதுமான பெருந்தொகையான ஆயுதங்களை நாம் கைப்பற்றியுள்ளோம்.

முன்னைய புலனாய்வு பிரிவின் அறிக்கையின் அடிப்படையில், விடுதலைப்புலிகளின் ஆளணி வசதிகள் மிகக்கூடுதலாக இருக்குமென நாம் எதிர்பார்த்தோம்.

அவர்களின் அவ்வாறான ஒழுங்கமைப்புகளை நாம் முறியடித்துள்ளதோடு, மிக விரைவில் அவர்களது பகுதிக்கு மூச்சுவிட முடியாத நிலைக்கு அவர்களை கொண்டு வந்து நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பகுதியையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.

30 வருடங்களாக தொடர்ந்த யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு கமன்பிலவைப் போன்றவர்களின் ஆதரவும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மிகவும் உதவியாக அமைந்ததாக கோதாபய குறிப்பிட்டார்.

புற்றுநோய் பரவுவது போன்ற பாதிப்பை இந்த யுத்தம் கொண்டிருப்பதோடு, இந்த பிரச்சினையை குறைந்தபட்சம் அடுத்த 10 பரம்பரைகளுக்கு நாம் விட்டுவைக்கப்போவதில்லை.

இப் பயங்கரவாத பிரச்சினை 30 வருடங்களை நிறைவு செய்துள்ளநிலையில் இதனை அடுத்த தொடர்பு அத்தியாயத்திற்காக நாம் விட்டுவைக்கப்போவதில்லை. இந்த யுத்தம் ஒரு புற்றுநோயை போன்றது.

ஒரு கட்டத்தில் கதிரியக்க சிகிச்சை மூலமாக மேலும் புற்றுநோயை குணப்படுத்தலாம் . அவ்வாறே பயங்கரவாதத்தின் மூலமான யுத்தத்தையும் வெற்றி கொள்ள முடியும் . பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் அக்குரஸ்ஸவியில் நடைபெற்ற சம்பவம் போன்ற நிலைமைகள் இனிமேல் ஏற்படாது.

குறைந்த பட்சம் 10 தலைமுறைகளுக்கு பயங்கரவாதத்தின் கெடுபிடி இல்லாத நாட்டையே நாம் எதிர்பார்க்க விரும்புகிறோம்.

இதை இவர் சொல்லவில்லை:

"புற்றுநோய் பரவுவது போன்ற பாதிப்பை இந்த யுத்தம் கொண்டிருப்பதோடு, இந்த பிரச்சினையை குறைந்தபட்சம் அடுத்த 10 பரம்பரைகளுக்கு நாம் விட்டுவைக்கப்போவதில்லை.

இப் பயங்கரவாத பிரச்சினை 30 வருடங்களை நிறைவு செய்துள்ளநிலையில் இதனை அடுத்த தொடர்பு அத்தியாயத்திற்காக நாம் விட்டுவைக்கப்போவதில்லை. இந்த யுத்தம் ஒரு புற்றுநோயை போன்றது.

ஒரு கட்டத்தில் கதிரியக்க சிகிச்சை மூலமாக மேலும் புற்றுநோயை குணப்படுத்தலாம் . அவ்வாறே பயங்கரவாதத்தின் மூலமான யுத்தத்தையும் வெற்றி கொள்ள முடியும் ".

இவருக்கு சொல்லிக் கொடுத்தவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

The Only Practical Solution - D Kannangara,

http://www.lankaweb.com/news/items06/070806-21.html

"A genocide will solve the terrorist problem for good", Unless all cancer cells are exterminated, the sickness will take-over the entire living body.

This surgery should be done soon and entirely if we want to save the patient - the nation.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குரூர முகத்தை உலகுக்கு தோலுரித்துக் காட்டாமல், எமக்குள் முட்டி மோதுவதைத்தான் இதுவரை புலத்தில் செய்தோம். இன்று வரலாறு அடுத்த தலைமுறைக்கு விடுதலை பொறியை மூட்டி விட்டது. அதையாவது கெடுக்காமல் தட்டிக்கொடுப்போம்.

இது யாரையும் மனதில் கொண்டு எழுதியது அல்ல. தமிழினத்தின் விடிவின் மேல் கொண்ட நம்பிக்கையால் எழுதியது. கீழே உள்ள இணைப்பையும் பாருங்கள்.

http://www.canadatyo.org/reach/issue/1newsletter12feb.pdf

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வியாதி இப்ப தான் பரவதொடங்கியுள்ளது. வியாதி எங்கே என்று தான் தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.