Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் போர்க்குற்றங்களை ஐ.நா. விசாரிக்க வேண்டும் - அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு புரிந்துவரும் யுத்தக்குற்றங்களை விசாரிக்குமாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் ப.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தம்மிடம் போதுமான ஆவனங்களும் ஆதாரங்களும் இருப்பதாக கூறியுள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை, செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை மற்றும் மனித உரிமை கழகத்தின் அறிக்கை என்பன தம்மிடம் உள்ளதாகவும், ஆவனப்படுத்தப்பட்டுள்ள இவ்வறிக்கையில் இலங்கை அரசானது போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சர்வதேச செஞ்சிலுவைச்சங்க அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதும், மற்றுமொருவர் காயமடைந்ததும் ,இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் தான் என்பதை உறுதிப்படுத்தியது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தான் என சுட்டிக்காட்டிய ப. நடேசன் அவர்கள் இலங்கை அரசின் யுத்தக்குற்றங்களை ஜ.நா உடனடியாக விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைதார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka's Tamil Tiger rebels on Sunday urged the United Nations to investigate possible war crimes by the military but made no mention of the world body's allegations the separatists themselves may be committing them. Sri Lanka's government immediately rejected the call by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and said it was the separatists themselves who should be probed.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL463121.htm

Edited by Muhil

61 வருடகால இனவழிப்பின் வடுக்கள் இன்று வரை ஆவணப்படுத்தப்படவில்லை!! இன்று வரை எம்மவர்கள் எவராலும் இனக்கொலையாளிகள் எவரையேனும் யுத்தக் குற்றவாளியாக்க முயலவில்லை!!! மாற்றாக சிங்கள இவவெறிக்கொலையாளிகள் எமக்கெதிரான குற்றங்களை மிகைப்படுத்தி ஆவனப்படுத்தி வருகிறான்!!!............ ஆனால் நாமோ 61 வருடகாலமாக ............. தெருத்தெருவாக அவலக்குரல்கள் எழுப்பியதுதான் மிச்சம்!!!!!!!!!

இன்று 61 வருடத்திற்கு பின் அமெரிக்காவில் முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது!! இது அமெரிக்காவில் முடக்கப்பட்ட தமிழ்த்தேசிய செயற்பாடுகளுக்கு உத்வேகம் அழிக்கவும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கு பயத்தைக் கொடுத்து எச்சரிக்கவும், ........ நீண்ட காலமாக செயற்படுத்தப்பட்டு வரும் இனவழிப்புகளீன் இன்றைய காதாநாயகர்களான கோத்தபாய, பொன்சேகாவை குற்றவாளிக்குண்டில் ஏற்றவும் முயற்சிக்கப்படுகிறது. இதில் அமெரிக்க சட்டங்கள், இது நெற்றி அடையக்கூடிய சாத்தியக்கூறுகள் என்பன கேள்விக்குறியாக இருந்தாலும், ............. நீண்ட இனவழிப்பு முயற்சியில் முதல் முயற்சி!

ஆனால் பல வழிகளில் சிங்கள் தப்புவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. சிங்கள் கூறும் ....

1. இலங்கை ஒரு ஜனநாயக நாடு

2. மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் உள்ளது

3. எவ்வழக்குகளும் இங்கு விசாரிக்கப்படும்

இவைகளே சிங்களம் சர்வதேச சட்டங்களிலிருந்து தப்ப போதுமானவை!!

ஆனால் குறிப்பாக அமெரிக்காவில் சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக வழக்குகள் தொடர்வதற்கு பல சாதகமான சூழ்நிலைகளும் உள்ளன. இவ்விருவரும் அமெரிக்க பிரஜைகள்!!!அண்மையில் சிங்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சில படுகொலைகளுக்கு சட்ட விசாரணைகள் கூட சிங்களத்தினால் முடக்கப்பட்டுள்ளது ம், நிறுத்தப்படுள்ளதும் ஆக சிலவைகளே இவைகளை சர்வதேசத்துக்கு கொண்டு போக போதுமானவை!!

வெற்றியோ தோல்வியோ நாம் முயற்சித்தோம் .......... இப்படி வேலைகள் நடைபெற ....

...... லண்டனில் சில பூசாரிகள் இதனை குழப்பி விட படாதபாடு படுகிறார்கள்!! இவர்களுடன் ததே விட்ட தவறுகளில் ஒன்றான எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படும் தமிழையே நம்பி அரசியல் நடத்திம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சேர்ந்துள்ளாராம்!!! கடந்த காலங்களில் ........... விடுதலைப் புலிகளுக்கு பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர முற்பட்டவர்கள் ............ துரோகிகள் ஆக்கினார்கள்!!! ஏன்????? புகழடைந்து விடுவார்கள்... வெற்றி பெற்றால்!!!!!!!!! துரோகி ஆனவர்கள்/ஆக்கப்பட்டவர்கள் செய்த/செய்கின்ற அட்டூளியங்களுக்கு பயந்து ஒளிந்தார்கள்/ஒளிகிறேர்கள்!! கடந்த காலங்களில் இவர்கள் விட்ட பிழைகளை இன்னும் மீளாய்வு செய்யவில்லை!! இன்றைய சூழ்நிலையில் இவர்களது நடவடிக்கைகள் தளத்துக்கு தெரியாமலேயே போய் விடக்கூடியதாகவும் உள்ளது. இவர்கள் போன்றவர்கள் தாமும் செய்ய மாட்டார்கள், மறையவர்களையும் செய்ய விட மாட்டார்கள்!!! ............. வேதனை!!!!!

இன்று சர்வதேசம் ......... குறிப்பாக ஐ.நா யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டால் ............... இவர்களிடம் ஏதாவது ஆவணங்கள் உள்ளனவா? முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? ...........??????????

பூசாரிகளே,

தயவுசெய்து நாலறிவி உள்ள மிருகங்கள் சித்திப்பது போல சிந்தியாதீர்கள்!! இனம் அழிந்து கொண்டிருக்கிரது!! உங்களது ஈகோ பிரட்சனைகளை ஒதுக்கி வையுங்கள்!!! போட்டி, பொறாமை, ... எல்லாவற்றுக்கும் மேலாக எம்மினத்தை இன்று காப்பாறியே தீர வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளோம்!!! இனத்தையும் அழிய விட்டு விட்டு, யுத்தக்குற்றங்கள் எம்மீதி சுமத்தப்படக்கூடிய சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்!!! நீங்கள் புத்தி சாதுரியமாக சிந்திக்க வேண்டும், செயற்படுத்த வேண்டும்!! .......... இல்லையேல் சிங்களவன் செய்யும் அழிவுகளுக்கு நீங்கள் ஒத்தாசை வழங்குபவர்களாகவே கணிக்கப்படுவீர்கள்!!!...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் போர்க்குற்றங்களை ஐ.நா. விசாரிக்க வேண்டும் - அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன்

அண்மையில் ஐ.நா மனிதவுரிமைகளுக்கான ஆணையரின் அலுவலகத்திலிருந்து வந்த வன்னி சம்பந்தமான அறிக்கை பற்றி திரு நடேசன் அவர்களிடம் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார், " சிறிலன்காவின் மகிந்த அரசாங்கமானது தமிழ்மக்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்திவரும் தாக்குதல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கெதிரான குற்றங்களுக்கான போதியளவு சான்றுகளும் ஆவணங்களும் எம்மிடம் இருக்கின்றன" என்று கூறினார்..

"அங்கே ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும், உதவிப் பணியாளர்களிடமும் இருக்கின்றன.சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது" என்று அவர் கூறினார்.சிங்கள அரசால் பிரகடணப்படுத்தப்பட்ட"பாதுகாப்பு வலயத்தினுள்" வைத்தே அண்மைய ஷெல் தாக்குதலில் ஒரு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் கொல்லப்பட்டதும் இன்னொருவர் காயமடைந்ததும் குறிப்பிடத் தக்கது".

"சிங்கள அரசானது தொடர்ந்தும் மருந்துப்பொருட்களை தடுத்து வருவதால் வன்னியில் காயங்களுக்கு உள்ளான மக்கள் படும் அவஸ்த்தைகளையும், காயப்பட்ட பெருமளவு பொதுமக்களை காப்பாற்றாத் திண்டாடும் வைத்தியசாலையையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கண்டு உணர்ந்திருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்".

"பொதுமக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து பலாத்காரமாக பிடுங்கப்பட்டு, அவர் குடும்பங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு முட்கம்பிகளாலான தடை முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான தமிழர்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் தென்னிலங்கையிலும் காணாமல்ப் போயிருக்கிறார்கள்." என்றும் அவர் தெரிவித்தார்.

"சர்வதேசத்தைச் சேர்ந்த சுயாதீன அவதாணிகள் முல்லைத்தீவுக்கு வருமிடத்து அவர்களிடம் தமது இழப்புகளையும், ஆதாரங்களையும் கூறுவதற்கு மக்களும், மக்கள் நலன்புரி அமைப்புக்களும் தயாராக இருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.

ஐ.நா வின் அறிக்கையைச் சுட்டிக் காட்டி அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, கடந்த தை மாதத்தின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை குறைந்தது 2800 பொதுமக்கள் சிங்கள ராணுவத்தின் தாக்குதல்களில் பலியாகி இருப்பதோடு இன்னும் 7000 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார். ஆனால் சிங்கள அரசின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உண்மையான தமிழர்களின் எண்ணிக்கையானது ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் மிகவும் அதிகமானது எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான வேண்டுமென்றே திட்டமிட்ட கூட்டு இன அழிப்புப் போரை நடத்தி வரும் சிங்கள அரசானது அவர்கள் மீதும், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் மீதும் அவர்கலைப் பராமரிக்கும் வைத்தியசாலைகள் மீதும் தனது கொடூரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அண்மைக்காலமாக இவ்வாறான தாக்குதல்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையின் அருகிலிருந்தே ராணுவத்தால் நடத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டத் தவரவில்லை.

குண்டு வீச்சு விமானங்களிலிருந்து ஏவப்படும் கொத்தணிக்குண்டுகள், பல்குழல் பீரங்கிகளிலிருந்தும் எறிகணை செலுத்திகளிலிருந்தும் ஏவப்படும் கொத்தணி மற்றும் எறிகுண்டுகளை பயன்படுத்தி ஆரம்பத்தில் சுதந்திரபுரத்திலிருந்த பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்திய சிங்கள ராணுவம் தற்போது பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் மற்றும் ரெட்டைவாய்க்கால் , அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் மீதும் தனது கொலைவெறித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எறிகணைகள், பல்குழல் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதல்கள் மூலம் சிங்கள அரசானது மக்களை ஆரம்பத்தில் தர்மபுரத்திலிருந்து சுதந்திரபுரம் நோக்கி இடம்பெயர்க்கவும் பின்னர் முல்லைத்தீவுக்கு வடக்கேயிருக்கும் ஒடுங்கிய கரைப்பகுதி நோக்கி இடம்பெயர்க்கும் நோக்கிலும் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

சிங்கள அரசானது தர்மபுரத்தில் அமைந்திருந்த இடம்பெயர் மக்களுக்கான "உலக உணவுத் திட்டத்தின்" களஞ்சியத்தை குண்டுவீசி அழித்துள்ளது.இப்போது மீண்டும் அது மாத்தளன் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கவென சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருட் களஞ்சியம் மீதும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது.

"இதன் காரணமகாத்தான் நாம் தமது அதிகாரிகளை முல்லைத்தீவுக்கு அனுப்பி, இங்கே மக்கள் படும் அவலங்களை அறிந்துகொள்ள வேண்டுமென்று சர்வதேச சமூகத்தை வேண்டிக்கொள்கிறோம்" என்று அவர் கூறி முடித்தார்.

நன்றி தமிழ்நெட்

தமிழாக்கம் ரகுனாதன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka's Tamil Tiger rebels on Sunday urged the United Nations to investigate possible war crimes by the military but made no mention of the world body's allegations the separatists themselves may be committing them. Sri Lanka's government immediately rejected the call by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and said it was the separatists themselves who should be probed.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL463121.htm

விடுதலை புலிகள் இலங்கை அரசாங்கத்தின் போற்குற்றங்களை ஐ நா விடம் தானே முறையிடுகின்றனர். இதில் குற்றம்சுமதப்பட்ட இலங்கை எப்படி இந்த கோரிக்கையை நிராகரிக்கலாம் ? முதலில் இலங்கையிடம் யார் இந்த கோரிக்கையை விடுத்தது ? புலிகளும் போர்க்குற்றம் செய்ததாகவே வைத்துக்கொண்டாலும் அது எப்படி இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்கக்கூடாது என்பதற்கு ஒரு காரணமாகும் ??

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் இலங்கை அரசாங்கத்தின் போற்குற்றங்களை ஐ நா விடம் தானே முறையிடுகின்றனர். இதில் குற்றம்சுமதப்பட்ட இலங்கை எப்படி இந்த கோரிக்கையை நிராகரிக்கலாம் ? முதலில் இலங்கையிடம் யார் இந்த கோரிக்கையை விடுத்தது ? புலிகளும் போர்க்குற்றம் செய்ததாகவே வைத்துக்கொண்டாலும் அது எப்படி இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்கக்கூடாது என்பதற்கு ஒரு காரணமாகும் ??

மிகச்சரி செந்தில்.. தற்போதைய சிங்கள அரசினதும் ஆதரவாளர்களினதும் பலவீனங்களில் இதுவும் ஒன்று. தங்களிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டட்து என்பதில் அவர்களுக்குள் மிகுந்த குழப்பம் இருக்கிறது. இது அவர்கள் ஒரு மிக இறுக்கமான சூழ்நிலைக்குள் இருப்பதையே காட்டுகிறது.

அவர்களின் ஆதரவாளர்களிடம் சிங்கள அரசின் இன அழிப்பைப்பற்றிக் கேட்டால் ஏன் புலிகள் கொல்வதில்லையா என்பார்கள். பிறகு அதே புலிகள் தமிழரின் ஏக பிரதிநிதிகள் இல்லை என்றும் சொல்லி வைப்பார்கள். அப்படியானால் சிங்கள் அரசுடன் ஏன் புலிகளை ஒப்பீடு செய்தீர்கள் என்று கேட்டால் இப்பிடி கேட்டால் தமிழீழம் வந்திடுமா என்பார்கள்.. ரொம்பக் கஷ்டம்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.