Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மோதல் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா வரவேற்கும்'- சிவ்சங்கர் மேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த போர் இடை நிறுத்தம் என்பதை இன்னும் ஆராய்ந்துகொண்டுதான் இருகிறார்கள். இதுவரை எதுவும் சொல்லவில்லை. அதிலும் இது ஒரு தற்காலிக நிறுத்தம் மட்டுமே. மக்களை கொண்டுபோய் ராணுவ முகாம்களில் அடிப்பதற்காகவே இதை சொல்கிறார்கள்

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

இலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார்.

மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் நிறுத்தம் உட்பட பல வழிவகைகள் குறித்து ஆராய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதாக அண்மையில் வரும் செய்திகளை இந்தியா வரவேற்கின்றது என்றார் சிவ்சங்கர் மேனன்.

இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.

நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேயப் பணிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விவாதித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழர்கள் வலியுறுத்த வேண்டிய முக்கிய விடயம் இப்போது..

கட்டாயப்படுத்தி மக்கள் வெளியேற்ற படக்கூடாது... ஐநா வின் பணியாளர்கள், சுதந்திர ஊடகர்கள் வன்னிக்கு போக அனுமதிக்க வேண்டும்...

அப்போதுதான் உண்மை நிலையை உலகம் புரிந்து கொள்ளும்..

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் National post பத்திரிகை தனது இனவாதத்தை மீண்டும் கக்கியுள்ளது.

Canada.com Network nationalpost.com financialpost.com Today's Paper & Archive Home Delivery Digital Paper

Rebels Use 150,000 As 'Shields'

... a Sri Lankan army base after weeks trapped with 150,000 other civilians ... government

launched an offensive that has steadily driven the rebels from almost ...

National Post - Monday, March30, 2009

http://www.nationalpost.com/search_results...as+human+shield

கனடாவின் National post பத்திரிகை தனது இனவாதத்தை மீண்டும் கக்கியுள்ளது.

Canada.com Network nationalpost.com financialpost.com Today's Paper & Archive Home Delivery Digital Paper

Rebels Use 150,000 As 'Shields'

... a Sri Lankan army base after weeks trapped with 150,000 other civilians ... government

launched an offensive that has steadily driven the rebels from almost ...

National Post - Monday, March30, 2009

http://www.nationalpost.com/search_results...as+human+shield

இப்படி விடை வருகிறதே...??

We're sorry, the page you requested does not exist at this address

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை வெளியேற்றுவது வெறியோடு கொல்வது என்பது சிவமேனனுக்கு பிடித்தது என்பது அவர் சொல்லாமலே எல்லோருக்கும் தெரிந்ததுதானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனனின் முதலைக் கண்ணீர்

23 ஆண்டுகளாக தொடரும் சிவில் யுத்தத்தினால் அப்பாவி பொது மக்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

அகில இந்திய வானொலிச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்தள்ளார். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவது போன்று இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டிய இராணுவ தளபாடங்கள் மற்றும் தொழிநூற்ப வசதிகளை வழங்கி வன்னியில் உள்ள பொதுமக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யும் அதே சமயத்தில் தமிழர்களில் இரக்கம் காட்டுவது போன்று அறிக்கைகளையும் அனுதாபங்களையும் வெளிட்டுவரும் இந்திய அரசியல் மற்றும் அதிகாரிகளின் திட்டங்களில் ஒன்று மேனனின் கருத்தாகும்.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானிய ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளை கவலை வெளியிட்டுவரும் வேளையிலும் இலங்கை படைகள் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிப்பதை பார்த்து வேடிக்கை பார்க்கும் இந்திய மத்திய நிலைப்பாட்டுக்கு வெளிவிவகார அமைச்சரின் கருத்து வேடிக்கையாக உள்ளது.

http://www.orunews.com/?p=3568

இந்தியாவில் எதிர்வரும் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு ஏற்படும் சரிவை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையான மேனன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்ற சகலவிதமான உதவிகளையும் வழங்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார். இந்த உதவிகள் அனைத்தும் தமிழ் மக்கள் அனைவரும் உயிரிழந்த பின்னர் சமாதி கட்டுவதற்குதான் உதவியாக இருக்கும்.

யுத்தம் காரணமாக இலங்கையில் அப்பாவிச் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் சிக்கல்கள் குறித்து அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் மேனன் இது உண்மையில் தமிழினம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கான அமெரிக்கா எடுத்த முயற்சியாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.