Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதழில் மட்டுமல்ல உன் இறப்பிலும் மொழியுண்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதழில் மட்டுமல்ல உன் இறப்பிலும் மொழியுண்டு.

"தீபன்" என்ற பெயர் ஓராயிரம்

தீப்பொறிகளின் அடையாளம்.

தளபதியாய் தலைவனின் பெறுமதியாய்

எல்லாமுமாய் எங்கள் வல்லமை நீ.

பலங்கொண்டு வந்தவர்கள்

எவரெனினும் பலம் திரட்டிப்

படைநடத்திப் படைத்தவை

விரல்களுக்குள் எண்ணி

முடித்திட முடியாத வரலாறு நீ.

களமாடி வெல்ல முடியாப் பலம் நீங்கள்

என்பதறிந்தோர் நச்சுக்காற்றனுப்பிக்

களக்கொலை புரிதலில் வெல்வதே

வென்றியென்று முழக்கமிட்டுப்

புலம்புகின்றார்.

வீரங்களே எங்கள்

விடுதலையின் ஆழங்களே....!

இது வீழ்ச்சியல்ல எழுச்சி.

வண்ணப்படங்கள் காட்சியிட்ட

உங்கள் முகம்

இன்றும் எங்களுக்கு

வரலாற்றுக் காட்சிகள் தான்.

புலிவீழ்ச்சி புலிவீழ்ச்சியென

விட்டத்தை அண்ணாந்து விஸ்கியடிக்கும்

வீணாய்ப்போனவரின் எண்ணங்களில்

நீ எட்டாத வீரமய்யா.

எங்களுக்கு நீ என்றும் தோழனய்யா.

நீங்களில்லையென்ற துயர்

கொண்டாடி உம் நினைவில்

தோழமையின் நினைவோடு நெஞ்சுருகி

நினைவெரிக்க நேரமில்லாப் பொழுதாய்

நிலத்தை வல்லரசும் சிங்களமும்

பாழ் சுடுகாடாய்ப் பதியமிட நாங்கள்

ஊர்முழுதும் கூடி உலகையெழுப்பும்

முனைப்போடு உலக வாயிலெங்கும்

உரிமையின் பொருளுணர்த்தி

உண்ணாநோன்பு உறங்காச் சுழற்சியென

ஓயாப் போர் தொடுத்து

ஓடுகிறோம் தெருத்தெருவாய்....

இதையுணராப் பேய்களோ

உன் வீரம் உன் மிடுக்கு உன் பற்று

எல்லாம் பொய்யென்று ஊழையிடுகிறது.

நீயெங்கள் நெஞ்சுகளில்

எல்லாத் தோழரும் தோழியரும்

எங்கள் நினைவுகளோடு பத்திரமாய்....

பெயர் அறிவித்துப் பேரெடுக்கும்

நோயோடு அலைகின்ற

நோயாளர்களுக்கெல்லாம்

புரியாத புதிர்களிவை.

புரிந்துணர்வு மிக்க உன்னைப்

புரிந்து கொள்ளாத துரோகங்கள்

வாயில் இன்று நீ.

அவர்கள் வரிகளுக்குள்ளும்....

போகட்டும் இந்த விஸ்கி வியாதிகளின்

நோய்கள் என்றோ புரிந்தவைதான்.

ஆயினும் எங்கள் தோழனின் மரணத்தை

ஏலம் போடும் ஈனனுக்கு ஒரு வரி

எழுதாமல் போய்விடின்

காலமென்னை காறித்துப்பும்.

அந்தக்கரிய நரி வேட்டையில் நீயும்

எமது தோழமைகளும்

கறைபடமாட்டீர்கள் தெரியும்.

ஆயினும் உங்களை

உரிமையோடு உரிமை கொள்ள

இருக்கிறோம் என்பது

புரியட்டும் ஈனர்க்கெல்லாம்.

நினைவுக்காய் உனக்குக்

குறிப்பெழுதுகிறதாம் நரிகள்.

காலம் எப்போதோ

இந்தக் காதகர்களைத் தள்ளி வைத்து

கடமையெழுதுகிறது.

இன்னும் கனவில் தாமே தமிழின மீட்பர்களாய்

கதையழந்தபடி கால்மாக்ஸ்,லெனின் கனவோடு....

குதிரைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன

இலக்கு நோக்கி

நாய்கள் குரைத்தபடியின்னும்

கவிதையோடும் , கடைசிக்களமிதென்ற

புலம்பலோடும்.....

ஒரு மந்திரிப்பதவி ஒரு ஆலோசகப்பதவி

அதுவுமில்லாது போயின்

எவனுக்காவது கால்கழுவிக் கொடிபிடித்து

மக்களின் வாழ்வென்று வாழ்வையோட்ட

ஒரு வசதிக்காய் புலம்பெயர் அறைகளில்

புதுமையென்று புழுகுவதில் பொய்யுரைப்பதில்

காலம் கடத்தும் விஸ்கிப்போத்தல் வியாதிகளும்

சிலுப்பாத்தலைச் சிறுக்கிகளும்.....

தளபதி 'தீபன்' தமிழின நீதி

இதழில் மட்டுமல்ல - உன்

இறப்பிலும் மொழியுண்டு.

இது எந்தத் துரோகனுக்கும் புரியாது.

14.04.09

(தளபதி தீபனின் மரணம் மாற்றுக்கருத்தென்று புலம்பும் சில மாட்டுக்கருத்தாளர்களின் எழுத்துக்களில் அகப்பட்டமையை நோக்கிய பதிவு இது. தளபதி தீபன் ஏனைய தளபதிகள் மரணம் சிங்களத்தினதும் இந்தியத்தினதும் இயலாமையின் வெளிப்பாட்டால் களக்கொலை செய்யப்பட்டார்கள். யுத்தவிதிகளுக்கு மாறான முறையில் மேற்கொள்ளப்பட்ட சதி. இதைத் தமது எழுச்சியாக எண்ணிப் புலம்பும் ஈனர்களுக்குப் பதிலாக இதனைப்பதிவிடுகிறேன். "தளபதி தீபன் தமிழின நீதி")

Edited by shanthy

தளபதி தீபன் அண்ணாவின் மரணம் அண்மைய எல்லாச் சோகங்களினதும் ஒன்று திரட்டிய ஒட்டுமொத்த கனதியின் முழுப் பரிமாணத்துடன் என்னைத் / எம்மைத் தாக்கிய சோகம். உடலில் ஒரு அவயத்தினை முற்றாக இழந்தால் கூட இத்தகைய சோகம் எம்மைத் தாக்குமா என்று தெரியாது.

ஒரு உறுதிமிக்க வீரனாய், தன் அணியினை தீரமுடன் வழிநடத்தும் தளபதியாய், ஆழக் கடலின் நடுப்பகுதியில் இருக்கும் அமைதியை போன்ற சாந்தமுமாய் வாழ்ந்த தீபன் அண்ணா எம் இனக்குழுமத்திற்கே உரிய வீரத்தின் குறியீடுகளில் ஒன்றாய் திகழ்ந்தார். ஒரு வீரனின் இழப்பு என்பது வெற்றிடத்தினை விட்டு வைக்கப் போவதில்லை, அது அவனிலும் பார்க்க இன்னும் ஓர்மமாய் பாயும் பல வீரர்களை தோற்றுவிக்கத்தான் போகின்றது.

தீபன் அண்ணா இறுதி கணம் வரை போராடி வீழ்ந்தவர்...அவர் வீழ்ந்த மண் மீண்டும் அவரை வீழ்த்தியவர்களையும் உளவு சொல்லி அழிவை தந்தவர்களையும் வீழ்த்தியே ஆகும். வரலாறுகள் பொய் சொல்லுவதில்லை

Edited by நிழலி

வாங்குகிற காசுக்கு காலை நக்கி குலைப்பதுதான் அதுகளுக்கு இட்டிருக்கும் வேலை. இதையெல்லாம் காதில் எடுத்தால் எங்களுக்குத்தான் வேலை இல்லை என்று அர்த்தம்! எங்கள் பணியில் நாங்கள் உறுதியாய் நிற்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.