Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரிமாணம் மாறும் தமிழர் போராட்டங்கள் - பருத்தியன்

Featured Replies

களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள்.

சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என ஆழமாக ஆராய்ந்து பார்ப்போமானால்... பல உண்மைகளை புரிந்து கொள்ள முடியும். அதாவது புலிகள் தாம் இவ்வாறான இக்கட்டான நிலைமையை அடைவதற்கு ஒருபோதும் தாங்களாகவே இடமளிப்பவர்கள் அல்லர். புலிகள் நினைத்திருந்தால் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தினை பூநகரிக்கு முன்பாகவே தடுத்திருக்க முடியும். தமது பெருநிலப்பரப்புகளை தக்கவைத்து இருந்திருக்கவும் முடிந்திருக்கும். ஆனால் அதற்கான மிகப்பலமான எதிர்ப்புக்களை அவர்கள் காட்டியிருக்கவில்லை. அப்படியிருக்க, புலிகள் படையினரை இவ்வளவு தூரத்திற்கு முன்னேற அனுமதித்தது ஏன்?

இக்கேள்விக்கு இராணுவ ரீதியிலான பல பதில்கள் இருந்தாலும், அரசியல் ரீதியிலான காரணங்களே அடிப்படையாக இருக்கின்றதாக புலப்படுகின்றது.

ஏனெனில், நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகள் அரசியல் நகர்வுகளிலேயே சிரத்தையெடுத்து வந்திருந்தனர். முன்னர், சந்திரிக்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து தாமாக விலகி மூன்றாம் கட்ட ஈழப்போருக்குள் புலிகள் நுழைந்ததனால் சர்வதேசத்தின் அதிருப்திகளை சம்பாதித்திருந்தனர். அதே தவறை புலிகள் இம்முறையும் இழைத்திருக்கவில்லை. மகிந்த அரசுதான் சமாதான உடன்படிக்கையிலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தாங்கள் அதை மதித்து நடந்து வருவதாகவே புலிகள் கூறிவருகின்றனர். மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் மாபெரும் வெற்றிகளை ஈட்டியிருந்தனர். தமிழீழ நிலப்பரப்பில் எழுபது சதவீதமான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. யாழ்ப்பாணத்தினைக் கூட மீளக் கைப்பற்றும் வல்லமையை பெற்றிருந்தனர் புலிகள்.[அப்போதும் அதை தடுத்திருந்தது இந்திய அரசுதான்] இவ்வாறு மிகப்பலம் பொருந்திய நிலையில் இருந்த புலிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரை முடித்துக்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு போகும்போது சிங்கள அரசை நம்பிப் போயிருக்கவில்லை. சர்வதேசம் தங்களுக்கு நியாயமான தீர்வொன்றை தருவதற்கு முன்வரும் என்று முழுமையாக நம்பியிருந்தார்கள். ஆனால் நடந்தது தலைகீழாகவே இருந்தது. சிறியளவிலான அதிகாரப்பகிர்வுக்குக் கூட சிங்கள அரசு தயாராய் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்க, மறுபக்கத்தில் புலிகளை பலவீனப்படுத்தும் சதித்திட்டங்கள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டன.அதற்கு சர்வதேச நாடுகள் பலவும் உடந்தையாக இருந்தன. அதில் முக்கியமாக, கருணாவை புலிகளிலிருந்து பிரித்ததில் இந்தியாவின் "றோ" அமைப்பு பிரதான பங்கு வகித்ததை குறிப்பிட முடியும். ஐரோப்பிய நாடுகளும் தம் பங்கிற்கு புலிகளை தடை செய்திருந்தது. தமிழர் தரப்பு சர்வதேசத்திடமிருந்தும் முற்றுமுழுதான ஏமாற்றத்தையே கண்டிருந்தது. மான்புமிகு தியாகங்களினால் ஈட்டப்பட்ட மாபெரும் இராணுவரீதியான வெற்றிகள் கூட தமிழருக்கான நியாயமான தீர்வை பெற்றுத்தர முடியாமல் வீணாகிப் போயின.

எனவேதான் , நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகளின் குறி இராணுவரீதியான வெற்றிகளிலிருந்து விலகி "சர்வதேச ஆதரவு" என்ற ஒன்றின் மீதே குறியாய் இருந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியான விளைவுகளாய்தான் தற்போதைய நிலைமைகள் தொடர்கின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவாக கருதப்படுகின்ற விடயங்கள் அனைத்துமே உண்மையிலேயே புலிகளின் இராஐதந்திர காய்நகர்த்தல்களுக்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துவரும் முக்கியமான அம்சங்கள்.புலிகள் தமது இராணுவ வெற்றிகளைவிட சர்வதேச ரீதியிலான இராஐதந்திர வெற்றிகளே தமது இலட்சியமான தமிழீழம் எனும் தனிநாடு மிகவிரைவில் உருவாக வழிவகுக்கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

இம்முறை தமிழர்தரப்பு தமது களத்தினை பிரதானமாக சர்வதேசத்திலேயே தொடங்கியிருக்கின்றது. "மக்களின் உணர்ச்சிமிக்க எழுச்சிகள் எப்போதும் இழப்புக்களினால் ஏற்படும் தாக்கங்களிலிருந்தே உருவாகும். இழப்புக்கள் அதிகமாகும் போது அது புரட்சியாகவும் மாறும்". அதற்கு ஏதுவாக சிங்கள அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் அமைந்து வருகின்றன. புலிகளின் தந்திரோபாயங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் பின்வாங்கல்களை தமது மாபெரும் வெற்றிகளெனக் கருதி வெற்றி மமதையில் கண் மண் தெரியாமல் அப்பாவி மக்களை கொன்று குவித்து மிகப்பெரும் இனவழிப்புப் போரையே சிங்கள அரசு நடாத்தி வருகின்றது. அகதிகளாகி அல்லற்படும் மக்களை அநியாயமாக கொன்றொழித்து வருகின்றது. அம்மக்களின் துயரங்களை வாயினால் சொல்ல முடியாது. எழுத்துக்களினால் வரித்திட முடியாது. காட்சிகளால் காண்பித்துவிட முடியாது.அந்தவலிகளை அந்த இடத்திலிருந்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும், உலகத்தமிழருக்கு அவ்வலியின் கொஞ்சமேனும் புரிய ஆரம்பித்தது. வீறுகொண்டு பொங்கியெழுந்தார்கள். தற்போது பாதுகாப்பு வலயம் என்ற சிங்கள அரசின் மரணப்பொறிக்குள் அகப்பட்டிருக்கும் இரண்டரை இலட்சத்துக்கு மேலான தம் உறவுகளை காப்பாற்றுவதற்காக புலம்பெயர் தமிழ் உறவுகள் ஆக்ரோஷமாய் கிளர்ந்தெழுந்திருக்கின்றார

  • கருத்துக்கள உறவுகள்

ஏனையோர் எமைப்பார்த்து பரிதாபப்படும் இனமாக எப்போதுமே நாம் இருக்கக்கூடாது என தேசியத்தலைவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இக்கட்டுரையாளர் வாசகர்கட்கு தான் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பதைவிட அவர் இறுதியில் இணைத்த வரிகள் உலகம் எமைப் பார்த்து பரிதாபப்படல் வேண்டுமென எதிர்பார்ப்பதாக இருக்கின்றது.

நாம் தனியரசு அமைத்து எமைநாமே ஆழ்வதற்கான உரிமையும் தகுதியும் உடையவர்கள் என்பதை எம்மில் அனேகர் அடிக்கடி மறந்து விடுகிறார்கள். அதன் பிரதிபலிப்புத் தாணே என்னவோ நாம் மற்றவர்களைப்பார்த்து எமதுரிமைக்காக கெஞ்சுமாம்போல் பாவனை காட்டுவது.

இவ்விடையத்தை நேற்றைய தினம் கனேடிய வாணொலி ஒன்றில் கருத்துக் கூறியவரிடமும் அவதானித்தேன். அவர் என்ன கூறுகிறார் என்றால் நாம் ஒரு வங்கிக் கடன் தொடர்பாக வங்கி அதிகாரியைச் சந்திக்கும்போது அவர் கனடா தேசத்தில் ஆங்கில விண்ணப்பப் படிவத்தைத்தான் தருவாராம் அதை நாம் மறுப்புக்கூறாமல் வாங்கி நிரப்பிக் கொடுக்க வேண்டுமாம் அப்போது தான் இலகுவாக கடன் பெற்று எமது அலுவல்களை முடிக்கலாம் அதுபோல கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டவரைச் சந்திப்பதென்றால் அவர்கள் கைகளில் வைத்துள்ள தமிழீழத் தேசியக்கொடியை அப்புறப்படுத்தினால்தான் வந்து சந்திப்பேன் என அடம் பிடிக்கிறார்கள் எனவும், எமது தேசியக்கொடி விவகாரத்தை வங்கியில் கடன் எடுப்கும் நடைமுறையுடன் ஒப்பிட்டு தானும் குழம்பி மற்றவர்களையும் குளப்பிவிட்டு விடைபெற்றார். அவரது கருத்துப்படி போறபோக்கில் உங்கள் கோரிக்கைகளைக் கைவிட்டு சாதாரணமாக வாருங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கூறினால் அதையும் ஒருக்கால் செய்துபார்க்கலாம் என புத்திசாலித்தனமாகக் கூறுவார்போலிருக்கின்றது.

ஆகவே எமது குறிக்கோள் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கும் வண்ணம் போராட்டங்களை முன்னெடுப்பதே. அதுவே தலைவர் கடந்த மாவீரர் உரையில் புலம்பெயர் தமிழ்சமூகத்திற்கு தலைவர் இட்ட கட்டளை குறிப்பாக இளையோருக்கு (அதுக்காக பழசுகள் எல்லாம் தலைப்புச்சு அடிக்காமல் எமக்கு வயசு போய்விட்டது என ஒதுங்கக்கூடாது)

நாம் சாதாரணமாக ஏனைய இனங்கள் போன்று முட்டாள்தனமாக போராட்டத்தினை முன்னெடுக்கவில்லை. அதைவிட நாம் பலவீனமான சமூகமும் இல்லை. பொருளாதாரத்திலோ அன்றேல் கல்வியறிவிலோ குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு முன்னேற்றமடைந்தவர்கள். காலப்போக்கில், தற்போது போலவே உலக ஒழுங்குகள் உமது உரிமைப்போர் விடையத்தில் தொடர்ந்திருக்குமாக இருந்தால், எமது தேசத்திலும் தேசத்திற்கு வெளியே சிறீலங்காவிலும், இந்தியாவிலும் இருக்கின்ற பல லட்சக்கணக்கான இடப்பெயர்ந்த எமது உறவுகளை நாமே உணவு, உடை மற்றும் அடிப்படை வசதிகள் கொடுத்து பராமரிக்கும் பொறுப்பினை நாம் கையெடுக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் சிறீலங்கா உட்பட்ட உலகநாடுகளின் முகத்தில் கரியினை தடவி மேலும் நாம் இப்போது அனைத்து சிறப்புக்களுமுடையோம் போரட்டத்தை முன்னெடுப்பது மட்டுமல்ல அதன் விளைவுகளையும் நிவர்த்திசெய்கின்ற தனிச்சிறப்பினையும் நாமுடையோம் சர்வதேசமே உனது கடமை எமது தேசத்தினை அங்கீகரிப்பது மட்டுமே என அறைகூவல் வடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

(இதில் ஒரு கேள்வி வரலாம் வணங்காமண் விடையத்திலேயே ஒன்றும் சாதிக்க முடியவில்லை என, அது வேறு விடையம். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தை புலம்பெயர் தமழ் சமூகம் ஒன்றுகூடிக் கேட்குமாகவிருந்தால் அதாவுது ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் நாளொன்றிற்கு ஒரு டாலர்ப்படி தருகின்றோம் அப்பணத்தை எக்காரணம் கொண்டும் சிறிலங்காவிற்கு நேரடியாக எடுத்துச் சென்று எமதுறவுகளுக்கு உதவிடாமல் அவர்கட்குத் தேவையான பொருட்களை வேறு நாடுகளில் கொள்வனவு செய்து வினியோகம்செய் இதனை கண்காணிப்பதற்கு எம்மவரையோ அன்றேல் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையோ அனுமதி என ஒருமித்த குரலில் உரத்துக்கேட்டால் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்)

தமிழ் ஈழத்திற்க்கான ஒரு வழி சுலபமான வழி இந்தியாவில் புலிகளின் மீதான தடையை நீக்க முழு மூச்சுடன் போராட வேண்டும்..... இன்றைய சூழ்நிலையில் புலிகள் மீதான தடையை நீக்குவது சாத்தியமான ஒன்று தான்... ஒரு சில மாதங்களில் தமிழ் ஈழம் மலரும்....இந்த முறை பிஜெபி ஆட்சிக்கு வந்தால் ஈழ பிரச்சினை நிச்சயமாக எமக்கு சாதகமாக முடிக்கலாம்.....இது தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கைகளிலும் இளைஞர்களின் கைகளிலும் தான் உள்ளது......இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என்றே எண்ணுகிறேன்

ஆயுதம் போனால் என்ன எமது இலக்கு தமிழீழம்.....

தமிழனுக்கு ஆயுதமும் தெரியும் அஹிம்சையும் தெரியும்

Edited by mayavan

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியன் உங்கள் ஆய்வு கட்டுரை ஆழமான உண்மை...நல்ல ஒரு பதிவு .......நன்றி பாராடுக்கள்.

  • தொடங்கியவர்

நண்பர் எழுஞாயிறு அவர்களே!

கடைசியில் நான் இணைத்த வரிகள் தேனிசை செல்லப்பாவின் குரலிலான தமிழீழ தேசியப்பாடலொன்றின் முதல் வரிகள்.

நம் மக்கள் படும் அவலத்தினை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதையே அப்பாடல் வரி மூலம் சொல்ல வந்திருந்தேன். நாம் யாரினதும் பரிதாபமான பார்வைக்காக ஏங்கும் இனமாக இருந்திருந்தால் , நமது 25000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்திருக்கத் தேவையில்லை.

தன்மானத்தோடு வாழப் பிறந்தவன்தான் உண்மையான தமிழன்.

அத்தோடு,

நானும் CTR இல் அவர் வழங்கிய அந்த கருத்தினைக் கேட்டிருந்தேன். புலிக்கொடியை நாளை[21.04.2009] ஒருநாள் தன்னும் தவிர்க்கலாமே என்று கேட்டிருந்தார். அதனால் பல விடயங்களை சர்வதேசத்திற்கு தெரிவிக்கலாம் என்றும் சொல்லியிருந்தார்.

இதைப்பற்றி எனது கருத்து என்னவென்றால்...

புலிக்கொடியை தவிர்த்து நாங்கள் அங்கு செல்வதும் ... நம் ஆடைகள் அனைத்தையும் களைந்துவிட்டு நிர்வாணமாகப் போவதும் ஒன்றுதான்.

தமிழினமே!

தன்மானம் விட்ட தமிழினமாய் தரணிதன்னில் உலவுவதைவிட ,

எதிரியிட்ட தீயில் தீவது மேல்.

நிலாமதி அக்கா! நன்றிகள் பல .

என்னால் விடப்பட்ட தவறுகள் ஏதாவது இருந்திருந்தால் சுட்டிக்காட்டலாமே....!? தங்களின் நடுநிலையான விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.