Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடற்படையின் இரு நீரூந்து விசைப்படகுகள் கடற்புலிகளால் தாக்கியழிப்பு: முல்லை கடலில் அதிகாலை கடும் சமர்

Featured Replies

கடற்கரும் புலிகளின் சுழியோடும் பிரிவினர் நேற்றும் இன்றும் ஆழ்கடலில் பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது.

4 கி லே மீற்றர் பரப்பளவில் புலிகளை முடக்கியிருப்பதாக கூறிவரும் இராணுவத்தினர், புலிகள் தப்பிச் செல்லாதவாறு தாம் கடலில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.

இவ்வாறு கடலில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கும் தாக்குதல் படகுகள் மற்றும் டோராப்படகுகள் மீது புலிகளின் சுழியோடும் பிரிவினர் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால் சுமார் 10 தடவைகள் தரையிறக்கம் மேற்கொள்ள முயற்சித்தும் இலங்கை இராணுவம் தோல்வியை தழுவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வெடிபொருட்களை நிரப்பிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த கடற்படையினர் இந்த ஆழ் கடல் தாக்குதல் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் மிக அருகாமையில் நிலைகொண்டிருந்த இப் படகுகள் தற்போது ஆழ்கடல் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரட்டைவாய்கால் பகுதியிலும் கடும் சமர் இடம்பெற்றுவருவதாகவும், இருப்பினும் இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சேதவிபரங்கள் விரைவில்...........

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

Edited by தராக்கி

  • தொடங்கியவர்

கடற்கரும் புலிகளின் சுழியோடும் பிரிவினர் நேற்றும் இன்றும் ஆழ்கடலில் பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது.

4 கி லே மீற்றர் பரப்பளவில் புலிகளை முடக்கியிருப்பதாக கூறிவரும் இராணுவத்தினர், புலிகள் தப்பிச் செல்லாதவாறு தாம் கடலில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.

இவ்வாறு கடலில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கும் தாக்குதல் படகுகள் மற்றும் டோராப்படகுகள் மீது

புலிகளின் சுழியோடும் பிரிவினர் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால் சுமார் 10 தடவைகள் தரையிறக்கம் மேற்கொள்ள முயற்சித்தும் இலங்கை இராணுவம் தோல்வியை தழுவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வெடிபொருட்களை நிரப்பிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த கடற்படையினர் இந்த ஆழ் கடல் தாக்குதல் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இத்தாக்குதல் 4 டோராப்படகுகள் மூழ்கடிப்பு ,முல்லைத்தீவு கடற்பரப்பில் மிக அருகாமையில் நிலைகொண்டிருந்த ஏனைய படகுகள் தற்போது ஆழ்கடல் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரட்டைவாய்கால் பகுதியிலும் கடும் சமர் இடம்பெற்றுவருவதாகவும், இருப்பினும் இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து

நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  • கருத்துக்கள உறவுகள்

attack on SBS of Navy...2nd in charge killed..

--------------------------------------------------------------------------------

The progress of the 53, 58 and TF-8 troops have been hit by seasonal extremities in Vellamullaivaikkaal. Marching from north of Mullaitivu to south of Mullaitivu is a particularly difficult choice for the infantry.

Experienced officers know that the Mullaitivu coast is particularly harsh during the months of May, June and July when the winds raise dust storms and the sun beats down on you whenever there's a break from the heavy downpour.

Given these harsh conditions, troops marched and gained control of a 50m2 area by last evening. The sand and heavily mined beaches make the progress tedious. But the Army is preparing a new strategy against the Tigers; one that is quite different to the first phase of the rescue mission.

With the LTTE's back against the wall, the group has called on the Sea Tigers to take over its escape strategy. The seas off Mullaivaikkaal have been the scene for bitter battles between the Navy and the Sea Tigers with the Navy gaining the upper hand in many of the face to face skirmishes.

Today, however, was a bad day for the Navy, particularly for the Navy's elite Special Boat Squadron. 12 men from the SBS including the SBS' 2nd in-charge (2IC) were killed when they were lured into a trap laid by LTTE Sea Tigers.

The valiant officer and his SBS men, having successfully engaged a flotilla of Sea Tiger boats had observed a fast moving boat off the Mullaitivu coast and approached it with the hope of capturing the boat. Surprisingly, this particularly large vessel had been unmanned.

By the time they realized what it was, it was too late for the gallant officer and men. The remote controlled vessel packed with explosives exploded, killing the 2 IC, a Lieutenant Commander (Posthumously Commander) and 11 other men

Source : defencewire.blogspot.com

முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள மக்கள் வாழும் இடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் றொக்கட் ஆட்டிலறிகளைப் பொருத்திய இரண்டு நீரூந்து விசைப்படகுகள் இன்று அதிகாலை கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் - கட்டளைப் பீடத்தை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கத்தை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அரோப் படகுகளில் பெருமளவு இராணுவத்தினர் கடற்பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டு நீரூந்து விசைப்படகுகளும் கரையை நோக்கி தொடர்ச்சியாகவும் செறிவாகவும் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தன.

இந்நிலையில் கடற்புலிகள் இதற்கு எதிரான தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடும் சமர் இரு தரப்பினருக்கும் இடையில் வெடித்தது.

கடற்படையினரின் நீரூந்து விசைப்படகுகளில் 107 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றைப் பயன்படுத்தியே முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி கடற்படையினர் சரமாரியான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர்.

இதற்கு எதிராக கடற்புலிகள் இன்று அதிகாலை திடீர்த் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் இரண்டு கடற்படை நீரூந்து விசைப்படகுகளும் தாக்கி அழிக்கப்பட்டு அந்த இடத்திலேயே மூழ்கியது. இதனால் இன்று காலை மேற்கொண்ட தரையிறக்க முயற்சியை கடற்படையினர் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளனர்.

கடற்படையினரின் இரண்டு விசைப்படகுகளிலும் இருந்த கடற்படையினரின் எண்ணிக்கை தொடர்பாகவோ கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை தொடர்பாகவே உடனடியாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதற்கான கடுமையான முயற்சிகளை கடற்படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போதிலும், கடற் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டுவருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையும் இப்பகுதியில் கடற்படையினரின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் இரண்டு கடற்படைப் படகுகள் இன்று மூழ்கடிக்கப்பட்டிருப்பது சிறிலங்கா கடற்படையினருக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.