Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குட்டிக்கதை

Featured Replies

  • தொடங்கியவர்

மாதங்கி ஓவெனக் கதறி அழுதபடி தலையணைக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி, விம்மி அழுதாள்.

அவளால் தான் ஒரு பையனிடம் தோற்றதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

  • 1 month later...
  • Replies 313
  • Views 33k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாகம் - 7

மாதங்கிக்கு இன்றைக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்து விட்டது. குழந்தை அரவிந்தும் நித்திரையாக இருக்கிறான். ஏதாவது படம் போட்டுப் பார்க்கலாம் என்றால், எல்லாம் பார்த்த படமாயிருக்கிறது. சரி, இந்த சோஃபாவில கொஞ்சம் ஓய்வாக கண்ணை மூடிக் கொண்டு இருக்கலாம் என்று எண்ணி அப்படியே சாய்ந்து உட்கார்ந்த மாதங்கி கண்களை மூடிக் கொண்டாள். சாருவுக்கு ஒருவரை திருமணம் பேசி முடித்திருப்பதாக அப்பா நேற்று போனில் கதைக்கும்போது சொன்னார். அவர் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான் என்று அப்பா கூறியது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவளுக்கு தனது வாழ்வில் நடந்த விஷயங்கள் எல்லாம் ஒரு படமாக எண்ணத்தில் ஓடத் தொடங்கியது..................

அப்போது மாதங்கிக்கு பன்னிரண்டு வயது. பாடசாலைக்குப் போகும்போதும் வரும்போதும் பயமறியாத இளங்கன்றுபோல் துள்ளிக்குதித்தபடியே செல்வாள். கண்ணில் படுவோர் எல்லோருடனும் ஏதாவது பேசிக்கொண்டே செல்வாள். எதுவும் பேசாது நிற்பவர்களைக்கூட அண்ணா, அக்கா, மாமா, தம்பி என்று வாய்க்குவந்த முறைகளைக்கூறி அழைத்து ஏதாவது கதைத்துக்கொண்டே செல்வாள்.

"சரியான வாயாடி" என்று மாதங்கியைக் காண்பவர்கள் கூறுவார்கள்.

ஆனால் அவள் யாரையும் பொருட்படுத்தமாட்டாள். அப்படியானதொரு வேளையில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மாதங்கி ஓவெனக் கதறி அழுதபடி தலையணைக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி, விம்மி அழுதாள்.

அவளால் தான் ஒரு பையனிடம் தோற்றதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...........

.

:arrow: தொடருங்கள்

யாருக்கும் தெரியாமல் - அவள் அழுதாலும்

அவளையே உலகம் என்று நினைச்சு வாழும் அப்பா காதில்-நான்கு சுவர்களையும் தாண்டிகேட்டது-! ஓடிவந்தார்-

"பிள்ளை - பிள்ளை- என்னம்மா ஆச்சு -? ஏதோ சத்தம் கேட்டுது" ?

"ஒண்டும் இல்லையப்பா" - முகத்தை எதிர் திசையில் திருப்பியவாறே மாதங்கி பதில் சொன்னாள்!

அப்பா போய்விட்டார் என்று நினைத்துக்கொண்டு -

மறு பக்கம் திரும்பியவள்- அப்பா அங்கேயே இடி விழுந்தது போன்றதொரு உணர்வில் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் - ஓடிவந்து கட்டிக்கொண்டாள்-

"அப்பா நான் நல்லவ இல்லயாபா"?

"ஐயோ என்ன நடந்தது- சொல்லி தொலையேன்மா"

"இல்லபா - சின்னதா ஒரு சண்டை போட்டேன் இன்னிக்கு ஸ்கூல்ல - அதுக்கு என்னை நல்லவ இல்ல- இருந்து பார் நீ கஸ்டபடுவேனு என்னோட படிக்கிறவன் சொல்லிட்டான் பா"

யன்னலினூடே வீசிய குளிர்காற்று முகத்தில் அறைய - மாதங்கி நிகழ்காலத்துக்கு மீண்டும் திரும்பி வந்தாள்--

:arrow: தொடருங்கள்

என்ன பலமான யோசனை? என்று கேட்டபடியே கணவன் அருகில் வந்தான்.

இல்லை இல்லை சும்மா தான். அப்பா போன் பண்ணி சாருவின் கலியாணம் விடயம் பற்றி சொன்னவார். யாரு புரோக்கார் என்று கேட்டதிற்கு நம்ம சுண்ணாக சந்தை முகத்தார் என்று சொன்னவர். அதுதான் யோசனையாக இருக்கின்றது என்று கூறி அவரின் சுத்துமத்தல் கலியாணங்களை பற்றி கூறி அதற்காக தான் கவலைப்படுவதாக கூறிவிட்டு படுப்பதற்கு ஆயத்தமானள்.

  • 2 months later...
அப்போது தான் பக்கத்து அறையில் இருந்து அழுகைச்சத்தம் ஒன்றுகேட்டது. படுப்பதற்குப் போன மாதங்கி சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினாள்... அது வேறு யாருமில்லை சாருதான் அழுதுகொண்டிருந்தாள்.:arrow:
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மாதங்கி தவிப்புடன் அவள் அருகில் சென்று சாரு என்னம்மா ஏன் அழுகிறாய் என அன்புடன் வினாவினாள். அப்போது அவள் சொன்னாள் உன் வாழ்க்கையில் நடந்து எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது என்று.

ம்ம்ம் அதை எல்லாம் ஒரு கெட்ட கனவாய் நினைத்து மறந்துவிடும்மா நான் கூட மறந்து புது வாழ்வு ஏற்று சந்தோசமாக வாழ வில்லையா எனக் கூறினாள்.

எப்படி அக்கா அச் சம்பவத்தை இலகுவில் மறக்க முடியும். அப்பா விசாரிக்காமல் வெளிநாட்டு மாப்பிளை என்று செய்து வைத்தது. அங்கு போன அப்புறம் உன்னை பிடிக்க வில்லை என்று திருப்பி அனுப்பியது. எல்லாம் என் கண்முன்னால் படமாக வருகிறதே.. ம்ம்ம்ம்

உஸ்.. பைத்தியம். இதற்கெல்லாமுமா கலியாணம் வேண்டாம் என்று சொல்லுவார்கள். அதுதான் அப்பா நல்லா விசாரிச்சு இருக்கிறாரே அதை விட மாப்பிளையை உனக்கு முதலே தெரியும் தனே. அவரும் நம்ம அத்தான் மாதிரி நல்லவர். ஆகவே பயப்படாமல் உனது சம்மததை தெரிவி என பாசத்துடனும் சிறு கண்டிப்புடனும் தங்கைக்கு அறிவுரை கூறினாள்.

அன்று இரவு முழுவது சாரு நிதானமாக யோசித்தாள். அக்கா சொல்வது உண்மைதானே அக்காவின் முதல் திருமணம் முடிந்து எல்லாமே வெறுத்து வாழ்க்கையே முடிந்துவிட்டதாக இருந்த அக்கா. இப்ப அத்தானை மணந்து சந்தோசமாக இல்லையா. ஆம் அத்தான் வேற யாரும் அல்ல சின்ன வயதில் அவவுடன் சண்டை பிடித்த அதே நிசான் தான். போர்க்காலத்தில் மனைவியை இழந்து பின் வெளிநாடு சென்றவன் தான் மாதங்கியை இரண்டாம் தாரமாக மணந்து இப்போ அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

சாரு நீண்ட நேர மனப்போரட்டத்திற்கு ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னை மணக்கம் போகும் சுதாகரனுடன் கதைத்து தனது ஆதங்கத்தை தெரிவித்தாள். அவனும் அவளை புரிந்து கொண்டு இதமாக நடந்தான்.

ம்ம்ம்ம் அப்புறமென்ன?? டும் டும் டும் தான். ;)

முற்றிற்று.

  • தொடங்கியவர்

பாகம் - 7

இணைந்த உள்ளங்கள்

மாதங்கிக்கு இன்றைக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்து விட்டது. குழந்தை அரவிந்தும் நித்திரையாக இருக்கிறான். ஏதாவது படம் போட்டுப் பார்க்கலாம் என்றால், எல்லாம் பார்த்த படமாயிருக்கிறது. சரி, இந்த சோஃபாவில கொஞ்சம் ஓய்வாக கண்ணை மூடிக் கொண்டு இருக்கலாம் என்று எண்ணி அப்படியே சாய்ந்து உட்கார்ந்த மாதங்கி கண்களை மூடிக் கொண்டாள். சாருவுக்கு ஒருவரை திருமணம் பேசி முடித்திருப்பதாக அப்பா நேற்று போனில் கதைக்கும்போது சொன்னார். அவர் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான் என்று அப்பா கூறியது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவளுக்கு தனது வாழ்வில் நடந்த விஷயங்கள் எல்லாம் ஒரு படமாக எண்ணத்தில் ஓடத் தொடங்கியது..................

அப்போது மாதங்கிக்கு பன்னிரண்டு வயது. பாடசாலைக்குப் போகும்போதும் வரும்போதும் பயமறியாத இளங்கன்றுபோல் துள்ளிக்குதித்தபடியே செல்வாள். கண்ணில் படுவோர் எல்லோருடனும் ஏதாவது பேசிக்கொண்டே செல்வாள். எதுவும் பேசாது நிற்பவர்களைக்கூட அண்ணா, அக்கா, மாமா, தம்பி என்று வாய்க்குவந்த முறைகளைக்கூறி அழைத்து ஏதாவது கதைத்துக்கொண்டே செல்வாள்.

"சரியான வாயாடி" என்று மாதங்கியைக் காண்பவர்கள் கூறுவார்கள்.

ஆனால் அவள் யாரையும் பொருட்படுத்தமாட்டாள். அப்படியானதொரு வேளையில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மாதங்கி ஓவெனக் கதறி அழுதபடி தலையணைக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி, விம்மி அழுதாள்.

அவளால் தான் ஒரு பையனிடம் தோற்றதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

யாருக்கும் தெரியாமல் - அவள் அழுதாலும்

அவளையே உலகம் என்று நினைச்சு வாழும் அப்பா காதில்-நான்கு சுவர்களையும் தாண்டிகேட்டது-! ஓடிவந்தார்-

"பிள்ளை - பிள்ளை- என்னம்மா ஆச்சு -? ஏதோ சத்தம் கேட்டுது" ?

"ஒண்டும் இல்லையப்பா" - முகத்தை எதிர் திசையில் திருப்பியவாறே மாதங்கி பதில் சொன்னாள்!

அப்பா போய்விட்டார் என்று நினைத்துக்கொண்டு -

மறு பக்கம் திரும்பியவள்- அப்பா அங்கேயே இடி விழுந்தது போன்றதொரு உணர்வில் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் - ஓடிவந்து கட்டிக்கொண்டாள்-

"அப்பா நான் நல்லவ இல்லயாபா"?

"ஐயோ என்ன நடந்தது- சொல்லி தொலையேன்மா"

"இல்லபா - சின்னதா ஒரு சண்டை போட்டேன் இன்னிக்கு ஸ்கூல்ல - அதுக்கு என்னை நல்லவ இல்ல- இருந்து பார் நீ கஸ்டபடுவேனு என்னோட படிக்கிறவன் சொல்லிட்டான் பா"

யன்னலினூடே வீசிய குளிர்காற்று முகத்தில் அறைய - மாதங்கி நிகழ்காலத்துக்கு மீண்டும் திரும்பி வந்தாள்

என்ன பலமான யோசனை? என்று கேட்டபடியே கணவன் அருகில் வந்தான்.

இல்லை இல்லை சும்மா தான். அப்பா போன் பண்ணி சாருவின் கலியாணம் விடயம் பற்றி சொன்னவார். யாரு புரோக்கார் என்று கேட்டதிற்கு நம்ம சுண்ணாக சந்தை முகத்தார் என்று சொன்னவர். அதுதான் யோசனையாக இருக்கின்றது என்று கூறி அவரின் சுத்துமத்தல் கலியாணங்களை பற்றி கூறி அதற்காக தான் கவலைப்படுவதாக கூறிவிட்டு படுப்பதற்கு ஆயத்தமானள்.

அப்போது தான் பக்கத்து அறையில் இருந்து அழுகைச்சத்தம் ஒன்றுகேட்டது. படுப்பதற்குப் போன மாதங்கி சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினாள்... அது வேறு யாருமில்லை சாருதான் அழுதுகொண்டிருந்தாள்.

மாதங்கி தவிப்புடன் அவள் அருகில் சென்று சாரு என்னம்மா ஏன் அழுகிறாய் என அன்புடன் வினாவினாள். அப்போது அவள் சொன்னாள் உன் வாழ்க்கையில் நடந்து எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது என்று.

ம்ம்ம் அதை எல்லாம் ஒரு கெட்ட கனவாய் நினைத்து மறந்துவிடும்மா நான் கூட மறந்து புது வாழ்வு ஏற்று சந்தோசமாக வாழ வில்லையா எனக் கூறினாள்.

எப்படி அக்கா அச் சம்பவத்தை இலகுவில் மறக்க முடியும். அப்பா விசாரிக்காமல் வெளிநாட்டு மாப்பிளை என்று செய்து வைத்தது. அங்கு போன அப்புறம் உன்னை பிடிக்க வில்லை என்று திருப்பி அனுப்பியது. எல்லாம் என் கண்முன்னால் படமாக வருகிறதே.. ம்ம்ம்ம்

உஸ்.. பைத்தியம். இதற்கெல்லாமுமா கலியாணம் வேண்டாம் என்று சொல்லுவார்கள். அதுதான் அப்பா நல்லா விசாரிச்சு இருக்கிறாரே அதை விட மாப்பிளையை உனக்கு முதலே தெரியும் தனே. அவரும் நம்ம அத்தான் மாதிரி நல்லவர். ஆகவே பயப்படாமல் உனது சம்மததை தெரிவி என பாசத்துடனும் சிறு கண்டிப்புடனும் தங்கைக்கு அறிவுரை கூறினாள்.

அன்று இரவு முழுவது சாரு நிதானமாக யோசித்தாள். அக்கா சொல்வது உண்மைதானே அக்காவின் முதல் திருமணம் முடிந்து எல்லாமே வெறுத்து வாழ்க்கையே முடிந்துவிட்டதாக இருந்த அக்கா. இப்ப அத்தானை மணந்து சந்தோசமாக இல்லையா. ஆம் அத்தான் வேற யாரும் அல்ல சின்ன வயதில் அவவுடன் சண்டை பிடித்த அதே நிசான் தான். போர்க்காலத்தில் மனைவியை இழந்து பின் வெளிநாடு சென்றவன் தான் மாதங்கியை இரண்டாம் தாரமாக மணந்து இப்போ அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

சாரு நீண்ட நேர மனப்போரட்டத்திற்கு ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னை மணக்கம் போகும் சுதாகரனுடன் கதைத்து தனது ஆதங்கத்தை தெரிவித்தாள். அவனும் அவளை புரிந்து கொண்டு இதமாக நடந்தான். அப்புறமென்ன?? டும் டும் டும் தான். ;)

கதையை முடித்து விட்டீர்களா ரசிகை?

  • தொடங்கியவர்

கதையை முடித்து விட்டீர்களா ரசிகை?

ம்ம் குட்டிக்கதை மாதக் கணக்கா நீண்டு கொண்டே போச்சா அதோடை வேற புது கதை ஆரம்பிப்பம் என்று அதுதான் முடிச்சு விட்டன் ஏன் நல்லா இல்லையா? :oops:

  • தொடங்கியவர்

பாகம் - 8

"முடிவும் கடசியுமா சொல்லுறனம்மா; என்னால் இலங்கைக்கு வரவே முடியாது"

"உனக்கு வரமுடியாட்டி, உன்னோட நான் தான் இங்க இருக்க வேண்டும். அப்பா மட்டும் போயிற்று வரட்டும்"

" நோ நோ அப்பாவும் போறதில்லை! அங்க யாரும் போறதில்லை.

" என்னடா நீ சின்னக்குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறாய், பத்து வருடங்களுக்கு பிறகு அவர் தன் தாயாருக்கு சுகமில்லையெண்டு நாட்டுக்கு போய் வர கூப்புட்டா நீயும் வரமாட்டன் அப்பாவையும் போக விடமாட்டன் என்று அடம்பிடிக்கிறாயே??..

தொடரும் :arrow:

மன்னா தவறு செய்து விடாதீர்கள். அவர்கள் நடப்புவிவகாரம் (கறண்ட்) தொடர்பான திணைக்களத்தில் வேலைசெய்பவாகள் என்றாராம்

நீங்கள் கதையை தொடர்ந்து எழுதியிருக்கிறீர்களா? :roll: :roll:

  • தொடங்கியவர்

நீங்கள் கதையை தொடர்ந்து எழுதியிருக்கிறீர்களா? :roll: :roll:

மணிவாசகன் வேற ஏதோ கதையை சொல்லுறார் போல கிடக்கு. மணிவாசன் நீங்கள் இப்ப நான் ஆரம்பித்த கதையை தொடர்ந்து சொல்ல வேண்டும்.

சரி இதுக்கு பொருத்தமா சொல்லுங்கோ

பாகம் - 8

"முடிவும் கடசியுமா சொல்லுறனம்மா; என்னால் இலங்கைக்கு வரவே முடியாது"

"உனக்கு வரமுடியாட்டி, உன்னோட நான் தான் இங்க இருக்க வேண்டும். அப்பா மட்டும் போயிற்று வரட்டும்"

" நோ நோ அப்பாவும் போறதில்லை! அங்க யாரும் போறதில்லை.

" என்னடா நீ சின்னக்குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறாய், பத்து வருடங்களுக்கு பிறகு அவர் தன் தாயாருக்கு சுகமில்லையெண்டு நாட்டுக்கு போய் வர கூப்புட்டா நீயும் வரமாட்டன் அப்பாவையும் போக விடமாட்டன் என்று அடம்பிடிக்கிறாயே??..

ஐயோ! நான் ஊருக்கு(யாழ் தளத்துக்கு) புதுசு தெரியுந்தானே. அதுதான் ஆர்;வக் கோளாறிலை நுனிப்புல்லை மேஞ்சு போட்டு தொடங்கிட்டன்.

சத்தியமா இனிமேல் இப்படி எல்லாம் செய்ய மாட்டன். மன்னிப்பீங்களோ?

மணிவாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

அது கொஞ்சம் கஸ்டம் தான். இருந்தாலும் புது உறுப்பினர் என்பதாலே 20 தோப்புக்கரணம் விடாமல் தொடர்ந்து போடுங்கோ!! இப்போதைக்கு போதும்! :wink: 8) 8)

அதனால் என்ன மணிவாசன். இதுக்கு போய் மன்னிப்பு கின்னிப்பு எண்டு பெரிய வார்த்தை சொல்லிட்டு. நீங்களும் இந்த கதையை தொடர்ந்து கூறலாம் மேலே பாகம் 8 இருக்கு அல்லோ அதை வாசிச்சுட்டு அதை தொடர்ந்து எழுதுங்கோ.

  • தொடங்கியவர்

அது கொஞ்சம் கஸ்டம் தான். இருந்தாலும் புது உறுப்பினர் என்பதாலே 20 தோப்புக்கரணம் விடாமல் தொடர்ந்து போடுங்கோ!! இப்போதைக்கு போதும்! :wink: 8) 8)

அது உமக்கு தான் :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

அது உமக்கு தான் :evil: :evil: :evil: :evil:

என்ன இது!! களத்தில் புது உறுப்பினருக்கு ராக்கிங் செய்ய உரிமை இல்லையா? இதை உரிமை மீறலாகப் நிர்வாகத்திடம் பதிவு செய்கின்றேன்! :evil: :evil:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

என்ன இது!! களத்தில் புது உறுப்பினருக்கு ராக்கிங் செய்ய உரிமை இல்லையா? இதை உரிமை மீறலாகப் நிர்வாகத்திடம் பதிவு செய்கின்றேன்! :evil: :evil:

தூயவன் எல்லாம் உம்மாலதான் மணிவாசன் அங்கிளை இந்தப்பக்கம் காணலைப்பா :evil: :evil:

ஜோவ் யாராவது தொடருங்களன். :roll: :oops:

தூயவன் எல்லாம் உம்மாலதான் மணிவாசன் அங்கிளை இந்தப்பக்கம் காணலைப்பா

பிள்ளை நீ வீணாப் போட்டுக் குளப்பிக் கொள்ளாதை. நான் பனங்காட்டு நரி. உந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டன்.

நேரம் கொஞ்சம் மட்டுமட்டாக் கிடக்குது. கட்டாயம் வருவன்.

அன்புடன்

சரி சரி அங்கிள் நேரம் கிடைக்கும் போது வாங்க :lol:

  • தொடங்கியவர்

பாகம் - 8

"முடிவும் கடசியுமா சொல்லுறனம்மா; என்னால் இலங்கைக்கு வரவே முடியாது"

"உனக்கு வரமுடியாட்டி, உன்னோட நான் தான் இங்க இருக்க வேண்டும். அப்பா மட்டும் போயிற்று வரட்டும்"

" நோ நோ அப்பாவும் போறதில்லை! அங்க யாரும் போறதில்லை.

" என்னடா நீ சின்னக்குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறாய், பத்து வருடங்களுக்கு பிறகு அவர் தன் தாயாருக்கு சுகமில்லையெண்டு நாட்டுக்கு போய் வர கூப்புட்டா நீயும் வரமாட்டன் அப்பாவையும் போக விடமாட்டன் என்று அடம்பிடிக்கிறாயே??..

தொடரும் :arrow:

"அங்கை நாட்டு நிலமை உங்களுக்குத் தெரியுந்தானே. அங்கை Nன இடத்திலை இவருக்கு ஒண்டு எண்டால் ஆர் என்ன செய்யிறது?"

அவனது வாதத்தில் உண்மை இருப்பது போல் பட்டாலும் கணவனின் ஆசையை தட்டிக்கழிக்க செல்லம்மாவால் முடியவில்லை.

"அங்கை சனம் இல்லையே. பாவம் தாயைப் பற்றின யோசினையிலை அவர் ரெண்டு மூண்டு நாளாச் சரியாச் சாப்பிடவும் இல்லை"

அவள் முடிக்கவில்லை . அதற்குஅவன் சன்னதங் கொள்கிறான்.

"அம்மா பேக்கதை கதையாதையணை. இலங்கைக்குப் பொயிட்டு வாறதெண்டால் இப்ப ஆயிரம் டொலருக்கு மேலை வேணும். நானும் தேவியும் இஞ்சை குளிருக்குள்ளை கிடந்து மாரடிக்கிறம்.உங்களுக்கு புளிப்பு மெத்திப்போச்சுது... .. .

சரி மிச்சத்தைச் சகோதரங்கள் யாராவது தொடர்வீர்கள் தானே

அன்புடன்

மணிவாசகன்

"அங்கை நாட்டு நிலமை உங்களுக்குத் தெரியுந்தானே. அங்கை போன இடத்திலை இவருக்கு ஒண்டு எண்டால் ஆர் என்ன செய்யிறது?"

அவனது வாதத்தில் உண்மை இருப்பது போல் பட்டாலும் கணவனின் ஆசையை தட்டிக்கழிக்க செல்லம்மாவால் முடியவில்லை.

"அங்கை சனம் இல்லையே. பாவம் தாயைப் பற்றின யோசினையிலை அவர் ரெண்டு மூண்டு நாளாச் சரியாச் சாப்பிடவும் இல்லை"

அவள் முடிக்கவில்லை . அதற்குஅவன் சன்னதங் கொள்கிறான்.

"அம்மா பேக்கதை கதையாதையணை. இலங்கைக்குப் பொயிட்டு வாறதெண்டால் இப்ப ஆயிரம் டொலருக்கு மேலை வேணும். நானும் தேவியும் இஞ்சை குளிருக்குள்ளை கிடந்து மாரடிக்கிறம்.உங்களுக்கு புளிப்பு மெத்திப்போச்சுது... .. .

சரி மிச்சத்தைச் சகோதரங்கள் யாராவது தொடர்வீர்கள் தானே

அன்புடன்

மணிவாசகன்

  • 3 weeks later...

நான் கைவைச்சதிலையோ தெரியேல்லை. கதை அப்படியே நிண்டிட்டுது. :(

அன்புடன்

மணிவாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.