Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10.5.2009ஜெயலலிதாவின் முகமூடியைக் கிழித்து முதல்வர் கலைஞர் உரை

Featured Replies

சென்னை, மே 12- இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்திட இந்திய அரசின் உதவியைக் கோரி - விடு தலைப்புலிகளின் கொள்கை ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கமும், அவருடைய மனைவியும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சென்னையில் தங்குவதற்கு எதிர்ப்பைத் தெரி வித்தவர் ஜெயலலிதா என்ற உண்மையை வெளியிட்டார் முதலமைச்சர் கலைஞர்.

10.5.2009 அன்று மாலை சென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:-

முன்பெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய கோஷமாக வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று இருந்தது. இப்பொழுது நம்முடைய அம்மையார் சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் பொறுப் பையேற்று நல்லாட்சி நடத்துவதற்கு டாக்டர் மன்மோகன் சிங் அவர் களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள சூழ்நிலையில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற அந்த வாசகம் மாற்றப் பட்டு, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது அந்தக் காலம்! வடக்கு வழங்குகிறது, தெற்கு தேறுகிறது என்பது இந்தக்காலம். (கைதட்டல்)

நம்முடைய அருமை அம்மையார், தியாகத் திருவிளக்கு, சோனியா காந்தி அவர்களை நான் தியாகத் திருவிளக்கு என்று அடைமொழி கொடுத்து கூறுவதற்குக் காரணம், உலகம் அறிந்த உண்மை, நாடறிந்த செய்தி, நல்லோர் புரிந்து கொண்ட விவகாரம். அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க வருக, வருக என்று ராஷ்டிரபதி பவன் அழைத்தபோது, நான் வரமறுக்கிறேன் என்று அந்தப் பதவியை தியாகம் செய்தவர் நம் முடைய சோனியா காந்தி அம்மையார் அவர்களா வார்கள். அவருக்கு இணையாக, இன்னொரு தலை மையை சொல்ல முடி யாது என்கிற அளவில் வந்த பதவி, கதவைத் தட்டிய பதவி, காலடியிலே வந்து விழுந்த பதவி, இது வேண்டாம் என்று நான் மக்களுக்கு சேவை செய்கிறேன், என் கட்சியின் மூலமாக என்று தேர்ந்தெடுத்துக் கொண்ட அந்தச் சொக் கத் தங்கத்தை, தமிழ் நாட்டு மக்களின் சார் பாக வரவேற்று மகிழ் கிறேன்.

நான் வடக்கு வழங்கு கிறது என்று சொன் னேன். முன்பெல்லாம் பாராளுமன்றத் தேர்தல் என்றால் வடக்கை நோக்கி, டெல்லியை நோக்கி ஒவ்வொரு மாநிலத்திலே உள்ள மக்கள் பிரதிநிதிகளும், கட்சியினரும் தங்களு டைய தேர்தல் அறிக்கை யின் மூலமாக தேவை களை உணர்த்துவார்கள். அப்படி அன்றைக்கு உணர்த்தப்பட்ட தேவை கள் பல நிறைவு செய்யப் படாமலே போயின என் றாலுங்கூட, நிறைவேற் றப்பட்டவற்றில் ஒன்றி ரண்டை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

56 ஆயிரத்து 664 கோடி ரூபாய் - தமிழ கமெங்கும் சாலைகள், மேம்பாலங்கள், துறை முகப் பணிகள் என்று அவர்கள் வழங்கியிருக் கிறார்கள்.

14 ஆயிரத்து 600 கோடி ரூபாய்- சென்னை மாநகருக்கு மெட்ரோ இரயில் திட்டத்தை வழங்கி விட்டுத்தான் இங்கே வந்திருக்கின்றார் கள்.

2,427 கோடி ரூபாய் - சேதுசமுத்திரத் திட் டத்தை அனுமதித்து விட்டுத்தான் இங்கே வந்திருக் கின்றார்கள். 1,553 கோடி ரூபாய் - சர்வதேச தரத்தில் சேலம் உருட்டாலைக்கு ஒப்பு தல் கொடுத்து விட்டுத் தான் அம்மையார் இங்கே வந்திருக்கிறார் கள்.

1,330 கோடி ரூபாய் - ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அனுமதி வழங்கி அதை செயல் படுத்துகின்ற வகையிலேதான் இங்கே வந்திருக்கிறார்கள்.

908 கோடி ரூபாய் - சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் மற்றுமொரு திட்டத் திற்கும் வழி வகுத்து விட்டு வந்திருக்கிறார்கள்.

50 காசு செலவில் இந் தியா முழுவதும் தொலை பேசியில் பேசும் வசதி அவர்களால் இன்று செய்து கொடுக்கப்பட் டுள்ளது. 470 கோடி ரூபாய் - தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி வளர்ச்சிக் கட்டமைப்பு மய்யம் தமிழகத்திலே அவர்க ளால் உருவாக்கப்பட் டுள்ளது.

245 கோடி ரூபாய் - சென்னைக்கருகில் சர்வ தேச தரத்தில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம்!

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சத விகித இடஒதுக்கீடு!

தமிழ் செம்மொழித் திட்டம் நிறைவேற்றம்!

சென்னையில் செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்!

கோவையில் உலகத் தரத்தில் மத்தியப் பல் கலைக்கழகம்!

திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்!

மாணவர்களுக்குப் பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்!

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம்!

நெசவாளர்கள் நலன் காத்து சென்வாட் வரி நீக்கம்!

பொடா சட்டம் ரத்து!

தேசிய ஊரக வேலை வாய்ப்பு - 100 நாள் வேலைத்திட்டம் - இன்னும் அந்த நாட்கள் அதிகப்படுத்தப் போவ தாகவும் கூறியிருக்கின் றார்கள் - தேர்தல் அறிக் கையில்.

இவ்வளவும் சொன் னால் இங்கே உள்ள சிலர் இது நாடாளுமன்றத் திற்கு நடைபெறுகின்ற தேர்தல்தானே, திட்டங் களைப் பற்றித்தானே பேச வேண்டும் என்ற அந்த நிலையை மறந்து விட்டு, திசை திருப்பு கின்ற முயற்சியிலே ஈடு பட்டிருக்கின்றார்கள். இப்பொழுது ஒரு பெரிய பிரச்சினை. ஈழப் பிரச்சினை. ஜெயலலி தாவின் வேடிக்கை - விநோதம்

நான் 3.11.2007 அன்று தமிழ்ச் செல்வன் என் கின்ற இலங்கையிலே பால சிங்கத்தினுடைய ஆலோசகராக இருந்த ஒரு வாலிபருடைய மறை வுக்காக ஒரு இரங்கற்பா எழுதினேன்: எப்போதும் சிரித் திடும் முகம்

எதிர்ப்புகளை எரித் திடும் நெஞ்சம்

இளமை; இளமை; இதயமோ;

இமயத்தின் வலிமை! வலிமை!

உத்தம வாலிபன் - உயிரனையான் -

உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நில மெலாம் அவர் தம் உளமெலாம்

தன்புகழ் செதுக்கிய செல்வா; நீ எங்கு சென் றாய்?

என்று ஒரு இரங்கற் பா எழுதினேன். இது 4-11-2007 அன்று பத்திரி கைகளிலே வெளி வந் தது. உடனடியாக நம்மு டைய தமிழகத்தின் பிர தான எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஓர் அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கை :-

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டதற்கு அஞ்சலி கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம். பிரபாகரன் இந்திய அரசால் தேடப் பட்டு வரும் குற்றவாளி. விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த அரசியல் பிரிவுத் தலை வர் தமிழ்ச் செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு ஒரு முதலமைச்சர் அவ ருக்கு ஆதரவாக கவிதை எழுதி வானளாவ புகழ்ந் திருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

இதுபோன்ற ஒருவர் இனியும் ஒரு நிமிடம் கூட முதல் அமைச்சராக நீடிப்பதற்கு தகுதி யில்லை. தமிழ்ச்செல் வன் மறைவுக்கு இரங்கற் பா எழுதியதற்காக நான் முதல் அமைச்சராக ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதி யில்லையாம் அந்த உரிமையை கருணாநிதி இழந்து விட்டார். அவர் தலைமையில் இயங்கும் தி.மு.க. ஆட்சியும் அந்த உரிமையை இழந்து விட் டது. எனவே மத்திய அரசு உடனடியாக கரு ணாநிதி தலைமையி லான இந்த மைனா ரிட்டி தி.மு.க. அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று அறிக்கை விடுத் தார். அந்த ஜெயலலிதா தான், தி.மு.கழக ஆட்சி யைக் கலைக்க வேண்டு மென்று மத்திய சர்க் காரை வலியுறுத்திய அந்த எதிர்க்கட்சித் தலை வர் தான், இன்றைக்கு தமிழ் ஈழம் பெற்றுத் தரு வேன் என்று குறிப்பிடு கிறார்.

தண்டனிட்டுப் பழக்கப்பட்டவர்கள் -

நன்றாக தண்டனிடட்டும்!

சேது சமுத்திரத் திட் டத்தைப் பெற்றுத் தரு வோம் என்று ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அறிவித்து வந்தவர் இப் போது சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய் வோம் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே கூறியிருக்கிறார். அதைப் போலவே என் னுடைய ஆட்சியைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியவர், இப் போது தமிழ் ஈழத்திற் காக போராடுகிறார் என்றால், இது எவ்வளவு வேடிக்கை, விநோதம் என்பதை நீங்கள் எண் ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த அ.தி.மு.க. ஆட் சியில் ஆளுநர் உரை ஒன்று. அதிலே, விடு தலைப்புலிகள், இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த இந்திய அரசின் உதவியைக் கோரி உள்ள தாக வும், விடுதலைப் புலிகளின் கொள்கை ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கமும் அவரு டைய மனைவியும் அமை திப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக சென்னையில் இருக்கக் கோரப்பட்டுள்ளது என் றும் செய்திகள், பத் திரிகை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் பரவலாக வெளியிடப் பட்டுள்ளன.

அத்தகைய முயற் சிக்கு அ.தி.மு.க. ஆட்சி, தனது திட்டவட்டமான எதிர்ப்பை மத்திய அர சுக்குத் தெரிவித்துள்ளது என்று எழுதியிருக்கிறார் கள். பேசுவதற்கு, விவா திப்பதற்கு தமிழகத்திலே ஒரு இடத்தை வாடகைக் குப் பிடித்துக் கொண்டு தங்குவதற்குக் கூட அனு மதிக்க முடியாது என்று சொன்ன அந்நாள் முத லமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் ஈழம் கேட்கிறா ராம்! அவர் இருக்கும் திக்கு நோக்கி சில பேர் தண்டனிடுகிறார்களாம். பாவம் தண்டனிட்டு, தண்டனிட்டுப் பழக்கப் பட்டவர்கள், எனவே நன் றாக தண்டனிடட்டும். இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புப் பற்றி பிர தமரும் ராகுல்காந்தியும் குறிப்பிட்டுள்ளனர் ஒன் றைச் சொல்ல விரும்பு கிறேன். நம்முடைய தியாக விளக்கு, திருமதி சோனியா காந்தி அம் மையார் அவர்களோ, பிர தமரோ இலங்கையைப் பற்றிப் பேச வில்லை என்று சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியிலே நம் முடைய இளஞ்சிங்கம் ராகுல் காந்தியின் பேச்சை நான் தொலைக் காட்சி யிலே கேட்டேன். வரிக்கு வரி இலங்கைத் தமிழர் களுக்காக - அமெரிக்கா விலே வாழும் தமிழர் களுக்காக - இங்கிலாந் திலே வாழும் தமிழர் களுக்காக இங்குள்ள காங்கிரஸ் கட்சி பாடு படும், இந்தியா கவலைப் படும், ஏற்ற நடவடிக்கை களை எடுக்கும் என்று சொன்னார். அது நேற் றைக்கு முன்தினம்.

நேற்றைக்கு இந்தியப் பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் வந்தார், செய்தியாளர்களைச் சந் தித்தார். மிகப் பெரிய செய்தியாளர்கள் கூட் டம். அதிலே சொன் னார் - வரிக்கு வரி - இலங்கையிலே போர் நின்று, அரசியல் தீர்வு காண வேண்டும். ஜன நாயக வழியிலே இலங் கைப் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும். அங்கே வாழ்கிற இலங்கைத் தமி ழர்களுக்கு அமைதி யான வாழ்வு கிடைத்தாக வேண்டும். சொல்வார் கள் - அதெல்லாம் சரி, சோனியா காந்தி சொன் னார்களா என்று கேட் பார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தீர்மானம்

நான் 31-3-2009 அன்று அம்மையார் சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தை இங்கே படித்துக் காட்ட விரும் புகிறேன்.

Dear Thiru.Karunanidhi Ji,

Thank you for your kind letter of March 28.

I would like to assure you that our Prime Minister has spoken for us all in the Congress Party in his letter to you where he enumerated the steps taken by the UPA Government in relation to recent events in Sri Lanka.

(நம்முடைய பிரதமர் அவர்கள் உங்களுக்கு எழு திய கடிதத்தில் காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரின் சார்பாக இலங்கையில் அண்மை யில் நடைபெறும் சம் பவங்கள் குறித்து அய்க் கிய முற்போக்குக் கூட் டணி அரசின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை களை விவ ரித்திருப்பதைப் பற்றி நானும் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்.)

As you are aware, the Congress Party has for nearly three decades espoused the cause of the Tamils in Sri Lanka and has urged successive Sri Lankan governments to ensure that all communities, particularly, the Tamil speaking people, are guaranteed and enjoy equal rights within the framework of a united Sri Lanka.

(கடந்த முப்பதாண்டு காலமாக காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் துணை நின்று வருவதை யும், ஒன்றுபட்ட இலங் கைக்கு உட்பட்டு அனைத்து சமுதாயத்தி னரும் குறிப்பாக இலங் கைத் தமிழர்களும் சம உரிமையோடு வாழ வேண் டும் என்பதைத் தொடர்ந்து வருகின்ற இலங்கை அரசுகளிடம் வலியுறுத்தி வருவதையும் தாங்கள் நன்கறிவீர்கள்).

குழப்புவது நியாயமா?

இது திருமதி சோனியா காந்தியின் கடிதம் அல்லவா? அவ ருடைய கருத்து அல் லவா? தமிழ்நாட்டிலே உள்ள சிலர் வேண்டு மென்றே குழப்புகிறார் களே, நியாயம் தானா? அவர்களுடைய தலை மையை ஏற்றிருக்கிற அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலேயே இலங்கை பிரச்சினை குறித்த தீர் மானத்தை நிறைவேற்றி யிருக்கிறார்கள். மேலும் சோனியா காந்தி தனது கடிதத்திலே எழுதுகிறார்.

This position is also reflected in the Congress Party’s Manifesto released a few days ago.

(சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இந்த நிலை பிரதிபலித் துள்ளது.)

The ongoing conflict, and the extreme suffering of thousands of innocent Tamil citizens of that country especially of women and children who are its victims, have caused us all deep anguish.

(தற்போது, இலங்கை யில் நடைபெற்று வரும் போர், அதன் காரண மாக அங்குள்ள தாய் மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரங்கள், நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளது.)

The first step would, obviously, be a ceasation of hostilities.

(உள்ளபடியே அதற் கான முதல் கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். )

I would like to reiterate the Congress Party’s and our Government’s commitment to a negotiated settlement and to a devolution package that will ensure equality and equal rights for Tamils as assured for other citizens of Sri Lanka.

(இலங்கையில் ஏனைய குடிமக்கள் அனுபவித்து வருவதைப் போல தமிழ் மக்களும் சமத்துவ நிலை யினையும், சமமான உரி மைகளையும் பெற்று வாழ்வதற்கேற்ற அதி காரப் பகிர்வு ஏற்படுவ தற்குப் பேச்சு வார்த்தை கள் மூலம் தீர்வு காணப் படவேண்டும் என்ற நமது அரசின் நிலை யினை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறது.) அன்புடன், (ஒப்பம்) சோனியா காந்தி.

இதை விட இலங் கைத் தமிழர்களைப் பற்றி அம்மையார் சோனியா காந்தி அவர்களோ, பிர தமர் மன்மோகன்சிங் அவர்களோ, காங்கிரஸ் கட்சியோ கவலைப்பட வில்லை என்பதற்கு என்ன ஆதாரம் தரப்போகிறார்கள்? வேண்டுமென்றே நம் மீது பழி சுமத்துகி றார்கள் என்பதை எண் ணிப் பார்க்க வேண்டும். நான் பதிலுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. அது என் பழக்கமும் இல்லை. தேவைப்பட்டால் விளக்கம் சொல் வேன். பாம்பு கடிக் கிறது என்பதற்காக நாம் திரும்பவும் பாம்பைக் கடித்து விடக் கூடாது என்பதை மாத்திரம் உங்களுக்கு ஞாபகப்படுத்தி - அம்மையார் அவர்களின் பேச்சுக்கு காத்தி ருக்கின்ற உங்களுக்கு வழி விட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதவிக்காக எப்படியெல்லாம் புகழ வேண்டி இருக்கிறது?!!

"கருணா" என்ற பெயர்களே எட்டப்பனையும் விஞ்சிவிடும் கொடூரம்...

இவர் முதல் நாள் 'பிரபாகரன் தன் நண்பன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாளே 'தான் அப்படிச்சொல்லவே இல்லையென்று சொல்லிவிடுவாராம்..

ஆனால் ஜெ. அம்மா...அப்போ சொன்னதை மட்டுமே இப்போதும் சொல்ல வேண்டுமாம்...என்ன கொடுமைடா சாமி?

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக்காக எப்படியெல்லாம் புகழ வேண்டி இருக்கிறது?!!

"கருணா" என்ற பெயர்களே எட்டப்பனையும் விஞ்சிவிடும் கொடூரம்...

இவர் முதல் நாள் 'பிரபாகரன் தன் நண்பன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாளே 'தான் அப்படிச்சொல்லவே இல்லையென்று சொல்லிவிடுவாராம்..

ஆனால் ஜெ. அம்மா...அப்போ சொன்னதை மட்டுமே இப்போதும் சொல்ல வேண்டுமாம்...என்ன கொடுமைடா சாமி?

தமிழ்தங்கை அக்கா!

ஒருவர் தனது எண்பது வயதில் எவ்வளவை செய்ய முடியும்? அவர் ஜெயலலிதாதான் தனது எதிரான கட்சியின் தலைவி என்பதையாவது இன்னமும் மறக்காமல் வைத்திருக்கிறாரே அதுவே பெரிய விடயம். அப்பு பாவம் நல்ல பெயரோடு போவதற்கு எவ்ளவோ சாத்தியங்கள் இருந்தன. தள்ளாத வயதிலும் வந்த பதவி ஆசையால் இப்படி உண்மை முகத்தோடு சாகப்போகின்றது அது தான் நல்லது. வன்னி மக்கள் சும்மா சாகவில்லை எத்தனையோ மனிதர்களை யார் யார் எப்படி பட்டவர்கள் என்பதை அடுத்த சந்ததிக்கு எடுத்து காட்டிவிட்டுத்தான் சாகிறார்கள். ஒரு பழமொழி கூடி உண்டு

"வெற்றியில் கற்பது சொற்பம். தோல்வியில் கற்பது அதிகம்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒன்று புரியவில்லை. சோனியா வும் "கருணா" நிதியும் இன்னும் மக்கள் முட்டாள்களாகவே இருக்கிறார்கள் என்று நினைத்து விட்டர்களா??. அட பாழய் போன அரசியல் வாதிகளே! இந்த தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும், போர் நிறுத்தம் வந்து விட்டது என்று பிதற்றிக்க் கொண்டிருக்கிறீகளே?. பல நாஅள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். உங்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆப்பு மிகப்பெரியதாகவே இருக்கும்.

ஏனுங்கோ இந்த கருநாய்நிதிக்கு எப்படி தெரிந்தது சோனியா சொக்கத்தங்கம் என்று உரசிபார்த்தவரோ? அம்மணி கவரிங் என்பது தேர்தல் முடிவுக்கு பிறகுதான் தெரியும்

இன்னும் 3 நாளில் தெரித்துவிடும் தமிழக மக்கள் முட்டாளா இல்லையா என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கருநாயின் கோ ****ம் கிழியாமல் பொத்திக் கொள்ளச் சொல்லுங்கோ யாராவது (மன்னிக்கவும் மோகன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.