Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழியில் இருந்து உருவானதே மலையாளம்

Featured Replies

மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், பேச்சு வழக்கிலிருந்த பழந்திராவிடம் என்ற ஒருமொழியிலிருந்து பிரிந்து பல மொழிகளாக இன்று நிலவி வரும் மொழிகளையே திராவிட மொழிகள் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் இன்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. (சிவசாமி வி 1973) என்பதை அறிய முடிகின்றது.

இவற்றுள் வட இந்தியத் திராவிட மொழி யாகப் பலுஸ்தானத்திலுள்ள பிராஹால் மொழி விளங்குகின்றது. மத்திய இந்தியாவில், திராவிட மொழிகளாக, பர்ஜி, கட்பி, குய் குவி கொண்ட பென்கோ, கோய, டோர்ரி, கொண்டிருக்க மல்டா ஆகியவை விளங்குகின்றன.

தென்னகத் திராவிட மொழிகளை இலக்கிய வளமுள்ள திராவிடமொழிகள், இலக்கிய வளமற்ற திராவிட மொழிகள் எனப் பிரிக்கலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், முதல் வகுப்பில் அடங்குகின்றன. இரண்டாவது வகுப்பில், தோட, கோத, படக, குடகு, துளு, சவர, கொலமி, நயினி, போன்ற மொழிகள் அடங்குகின்றன. (பண்டைய தமிழகம், பக். 141 கலாநிதி சி.க. சிற்றம்பலம் 1991)

கி.மு 2500 ஆம் ஆண்டளவில் இந்தியா விலும், இலங்கையிலும் பேச்சு மொழியாக நிலவி வந்த பழந்திராவிடம் என்ற மூலத் திராவிட மொழியிலிருந்தே மேற்குறிப்பிடப்பட் டுள்ள திராவிட மொழிகள் அனைத்தும் தோன்றின. இதனை ஆய்வுகள் உணர்த்தும்.

கிமு. 2500 ஆம் ஆண்டளவில் இந்தியா முழுவதிலும்,, இலங்கையிலும் பண்டைத்திரா விடம் பழந்திராவிடம் என்ற மொழியே பேச்சு மொழியாக இருந்து வந்தது. கி.மு 2000 ஆம் ஆண்டளவில்ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்த காலத்தில் (துரை ஜெகநாதன் 1982) வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழியானது இடத்துக்கிடம் வேறுபட்டிருந்த போதும், ஒரே மொழியாகவே விளங்கி வந்தது.

அவ்வேளையிலேயே வட மேற்கு கணவாய் வழியாக ஆரியர் வந்து சிந்து நதிக்கரையில் குடியேறி, அங்கு வாழ்ந்து வந்த திராவிடரோடு (திராவிடக் குலங்கள்) கலந்தனர். (இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு பக்.கில்பர்ட் சிலேட்டர் தமிழில் கா. அப்பாத்துரை 1963) இக்காலத்தில் (கி.மு 2000 1500) அங்கு பேசப் பட்டு வந்த (வட இந்தியாவில்) பழந்திராவிட மொழியானது பல வகை மாறுதல் பெற்றது.

வட மொழி, திராவிட (பழந்) மொழி கலப்பின் பயனாக பிராகிருதம், பாளி முதலிய மொழி களும், வட இந்தியத் திராவிட மொழியான பிரா ஹுய் மொழியும் தோன்றின. இந்நிலையிலும், வட இந்தியாவின் சில இடங்களில் பழந்திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன.

இம் மொழிகளைப் பேசி வந்த திராவிட மக்கள் குடியேறிய ஆரியர்களுடன் கலக்காது தனித்து ஒவ்வொரு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.

இக் காரணங்களால் அம்மொழிகள் திராவிட மொழிகளாகவே அந்தந்த இடங்களில் நிலை கொண்டன. கோலமி, பார்ஜி, நாய்கி, கோந்தி, கூ. குவி. கோண்டா, மால்டா, ஒரோவன் முதலிய மொழிகள் இன்றும் திராவிட மொழியி னத்தைச் சார்ந்தவைகளாக இருப்பதற்குக் காரணம் அதுவேயாகும் (தமிழிலக்கிய வரலாறு பக்.1. டாக்டர் மு.வ).

தென் திராவிட மொழிகளின்

தோற்றம்

சிந்து வெளி நாகரிக காலத்தில் குறிப்பாக கிமு. 2000 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதிலும் பேச்சு மொழியாக நிலவி வந்த பழந்திராவிடம் என்ற மூலத்திராவிட மொழியானது வட இந்தியாவில், வட மொழி, திராவிட மொழி கலப்பின் காரணமாக பிராகிருதம், பாளி ஆகிய மொழிகள் தோன்றி செல்வாக்குப் பெற்றதைத் தொடர்ந்து தென்னிந்தியா அளவில் குறுகி விட்டது.

பல்துறை சார்ந்த ஆய்வுகள் மூலமாக நோக்குமிடத்து இந்தியா முழுவதிலும் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழியானது கி.மு 17 ஆம் நூற்றாண்டளவில் தென்னிந்தியா அளவில் குறுகி விட்டது என்பதை அறிய முடிகின்றது.

கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே பழந்திராவிடம் என்ற ஆதித் திராவிடத்திலிருந்து தென் திராவிட மொழிக்குடும்பம் பிரிந்து விட்டது என கமில் சுவல பில் குறிப்பிடுகின்றார். (கூடச்ணடிணச்தூச்ஞ்ச்ட் ஙீ.கு. 1970) கிமு பதினைந்தாம் நூற்றாண்டளவில், தென்னிந்தி யாவில் (விந்தியம் தொடங்கி) நிலவியிருந்த மூலத்திராவிட மொழி பல்வேறு இடங்களில் பலவாறாக பேசப்பட்டு வந்தது. (இந்தியப் பண்பாடும் தமிழரும். பக். 51).

இவ்வாறு அக்காலத்தில் பல்வேறு இடங் களிலும் பலவாறாக பேசப்பட்டு வந்த பழந்தி ராவிட (ஆதித்திராவிடம்) மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டிருந்த மக்களின் வாழ்க் கையில் ஏற்றத் தாழ்வுகள் பல பிற்காலத்தில் நிகழ்ந்தன.

இக்காரணங்களால் விளைந்த பரிணாமத்தால் தான் இன்று நாம் முக்கியமானவையெனக் கருதும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகியனவும் துளுவமும் குடகு மொழி யும் தோன்றின. (மலையாள இலக்கிய வரலாறு, பக் ,5)

இதனை மேலும் விளக்கமாகக் குறிப்பிடு மிடத்து, அக்காலத்தில் ஒரு பகுதியில், வாழ்ந்தி ருந்த மக்கள் பேசிய திராவிட மொழிக்கும், மற் றொரு பகுதியில் வாழ்ந்து வந்த திராவிட மக்கள் பேசிய மொழிக்குமிடையில் வளர்ந்து வந்த வேற்றுமை மற்றும் ஆட்சி வேறுபாடு, மலை ஆறுகளின் எல்லை வரையறை ஆகியன பழந்திராவிட மொழியிலிருந்து, பிற்காலத்தில் திராவிட மொழிகள் தோன்றக் காரணிகளாக அமைந்தன. (தமிழ், இலக்கிய வரலாறு பக். 2 டாக்டர் மு.வ) எனலாம்.

இந்த வகையில் பழந்திராவிடத்திலிருந்த (தென் திராவிடம்) முதலில் துளிர்ந்த திராவிட மொழி தமிழாகும். (மூலத்தமிழ்) இம் மொழியானது. தென் திராவிடத்திலிருந்து குறைந்தது கிமு 1000 ஆம் ஆண்டளவில் அதா வது பெருங்கற்காலப் பண்பாட்டின் தோற்றக் காலத்திலேயே பிரிந்து விட்டது எனக் கொள்ளல் பொருத்தமானதாகும்.(பண்டைய தமிழகம் 141).

இம் மூலத்தமிழ் மொழியானது கிமு ஐந்தாம் நூற்றாண்டளவில் இலக்கியம் படைக்கும் நிலையினை (செழுமை) ப் பெற்றிருந்ததை இலக் கியத் தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன.

கி.மு. ஐந்தாம் நான்காம் நூற்றாண்டுக ளிலிருந்து தமிழ் நாட்டில், தமிழ் மொழிக்கு எழுத்தாக, தமிழ்ப் பிராமி, அல்லது தமிழி (வரிவடிவம்) வழக்கத்திலி ருந்திருக்கின்றது. (கி.மு. 4 ம் நூ கிபி. 3 ஆம் நூ வரை) தொல் காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங் கள். தமிழ் (திராவிடி) என்ற தமிழ் பிராமியில் உருவான வைகளாகும். (கல்லெ ழுத்துக்கலை பக், 120, 121 நடன காசி நாதன்89).

அசோகர் காலத்துக்கு முந்திய காலத்திலிருந்து வழக்கத்திலிருந்து தமிழ் அல்லது திராவிடி என்ற தமிழ்ப் பிராமி, கல்வெட்டுக்கள், குறிப் பாகத் தமிழகம் பாண்டிய நாட்டிலும் (மதுரை) இலங் கையில் பெருங் கற்காலப் பண்பாடு நில வியிருந்த மையங்களிலும் காணக் கிடைக்கின் றன.திருப்பதி மலைக்கு வடக்கே, கிருஷ்ணா கோதாவரி, நதிக்கரைகளில் வாழ்ந்து வந்த மக்கள் பேசி வந்த பழந்திராவிடமானது நாளடைவில் திரிபுபெற்று இம்மொழியை விட்டு விலகி வேறொரு மொழியாக வளர்ந்து வந்தது.

""மூலத் தெலுங்கு'' என்று குறிப்பிடப்படும் இம்மொழியே பிற்காலத்தில் நன்னயப்பட்டர் முதலான வட மொழி அறிஞர்களின் கைகளில் அகப்பட்டு வட சொற்கள் கலந்து தெலுங்கானது.

இதேபோன்று மைசூர் பகுதியில் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழியின் திரிபுகளி லொன்றே பிற்காலத்தில் மேலும் திரிந்து உருமாறி, (மூலக்கன்னடம்) இருந்த காலத்தில், கேசவா முதலிய அறிஞர்கள், எழுத்து முறையும், இலக்கணமும், இலக்கியமும் தந்து வாழ்வு நல்கியதைத் தொடர்ந்து கன்னடம் என்ற பெயருடன் தனிமொழியானது.

பழந்திராவிடத்திலிருந்து (தென்) மூலத் தெலுங்கு, மூலக் கன்னடம், ஆகியன கிமு. ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் கிமு. ஆறாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் தோன்றியிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்தாகும் (கலா நிதி சி.க. சிற்றம்பலம்1991)

சேர நாட்டில் இன்று பேசப்பட்டு வரும் திராவிட மொழிகளிலொன்றான மலையாளம், பண்டைக்காலத்தில் தூய தமிழ் மொழியாக மிளிர்ந்து வந்தது. மிகவும் பிற்பட்ட காலத்தி லேயே திரிந்து மலையாளமாக மாறியது.

மலையாளத்தை தமிழோடு ஒத்து கிளை மொழி என்று கொள்வதை விட தமிழின் (மிகத் திரிந்த) கிளைமொழி என்று கொள்வதே பொருத் தமாகும் (மலையாள இலக்கிய வரலாறு பக்7).

பண்டைக்காலம் தொடக்கம் சேரநாட்டில் (கேரளம்) பேச்சு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், இலக்கிய மொழியாகவும், தமிழே இருந்து வந்தது. சிலப்பதிகாரம், பதிற்றுப் பத்து என்னும் நூல்களும், புறநானூற்றில் சில பாடல்களும், (சங்க இலக்கியங்கள்) சேர நாட்டுத் தமிழாகும்,(மொழி வரலாறு, பக், 349) கி.பி. ஏழு எட்டு, ஒன்பதாம், நூற்றாண்டுகளில் வாழ்ந்து, பக்திப் பாடல்கள் பாடிய, ஆழ்வார், நாயன்மார்களில் சேரமான பெருமாள் நாயனாரும், குலகேசர ஆழ்வாரும், கேரள நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

கி.பி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தமிழ் இலக்கண நூலாகிய புறப் பொருள் வெண் பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார் சேரநாட்டைச் சேர்ந்தவர். (தமிழ் இலக்கிய வரலாறு பக் 3 மு.வ) சேரநாட்டில் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரையும், எழுதப் பெற்ற சாசனங்கள் யாவும், தமிழிலேயே எழுதப் பெற்று வந்துள் ளன. இவ்வாறு ஸ்மித் என்ற வெளிநாட்டு அறி ஞர் குறிப்பிடுகின்றார். (பண்டைத்தமிழர் வரலாறு பக்.26,27).

இவ்வாறு பழங்காலத்திலிருந்து கேரள நாட்டில் நிலவி வந்த தூய தமிழே வட மொழியாளரின் தாக்கத்தால் (வட மொழி செல்வாக்கு) மிக, மிகத் திரிபுற்று கலப்பு மொழி யான மலையாளமாக மாறியது. அப்போதும் தூய தமிழ் வழக்குகள் காப்பாற்றப்பட்டுள்ளன. (இலக்கிய ஆய்வு, பக் 212 )

மலையாளம் தமிழிலிருந்து தோன்றியது என்ற உண்மை, கிழக்கு திசையை அது உணர்த்த அது ஆளும் சொல்லினாலேயே விளங்கப் பெறும் அச்சொல் கிழக்கு ஆகும். இவ்வாறு டாக்டர் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம் பக், 37 தமிழில் புலவர் தா. கோவிந்தன், எம்.ஏ.க.இரத்தினம் எம்.ஏ. 1992) குறிப்பிடு கின்றார்.மலையாளத்தில், ஐம்பது வீதம் தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவ்வாறு, முத்தமிழ் காவலர், கி.ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் குறிப்பிடு கின்றார்.

சுருங்கக் கூறுமிடத்து பழந்திராவிடத்திலிருந்து பெருங்கற்கலாசார தொடக்க காலத்தில் பிரிந்த ஆதித் தமிழிலிருந்துதான் பழந்தமிழும் அதனுடன் தொடர்புடைய மலையாளம், போன்ற கிளைமொழிகளும் துளிர்த்தன எனலாம்.

Thanks: Veerakesari

இதே கருத்தை "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் கூறியதை, கடந்த சில மாதங்களுக்கு முன் "TTN"ல் பார்த்தேன். அதில் அவர் திராவிட மொழிகளாகிய மலையாளம், தெலுங்கு, கன்னடம் எவ்வாறு தமிழிழிருந்து எவ்வாறு வடமொழியான சமஸ்கிருதக் கலப்புடன் திரிபடைந்து உருவாகின என்பதை தெளிவாக விளக்கியிருந்தார்.

.... என்னுடன் இரு மலையாளிகள், எனது பழைய வேலைத்தளத்தில் வேலை செய்தார்கள். அவர்களிடன், ஒருநாள் இக்கருத்தை நான் கூறியபோது, இக்கருத்தை ஏற்க மறுத்து, என்னை கேலி செய்து, தங்களது இன/மொழி வரலாற்றில் இப்படியான செய்தியைக் கேள்விப்பட்டதில்லை என்று கூறினார்கள். ....

நாளை, இன்று தமிழ்நாடு என்று கூறும் பகுதியில் தமிழ்/ஆங்கில கலப்புடன் "தமிங்கிலம்" என்ற மொழி, இனம் தோன்ற கனகாலம் காத்திருக்கத் தேவையில்லை!!!!!!!!!!!!!

ஆனாலும் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளின் எழுத்துக்கள் சிங்கள மொழியை ஒத்திருப்பதை பார்க்கும் போது சிங்கள மொழியின் மூலமான பாளி மொழியின் தாக்கமும் இருந்திருக்கலாம் என நம்புகின்றேன். இது எனது ஊகம் மட்டுமே!!

:roll: :?: :roll: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடநாட்டு வைணவ நம்பூதிரிகளின் வேலையால் மலையாள எழுத்துகள் மாற்றப்பட்டன. கேரள மலைவாசி பழங்குடிகள் காலம் காலமாக வெளியுலக தொடர்பு இன்மாயால் இன்று பழைய தமிழ் கலந்த மொழியை பேசுகின்றனர்.சேர கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்ளைக்காணலாம்.ஆந்திர

  • தொடங்கியவர்

tamil3qe.gif

வடநாட்டு வைணவ நம்பூதிரிகளின் வேலையால் மலையாள எழுத்துகள் மாற்றப்பட்டன. கேரள மலைவாசி பழங்குடிகள் காலம் காலமாக வெளியுலக தொடர்பு இன்மாயால் இன்று பழைய தமிழ் கலந்த மொழியை பேசுகின்றனர்.சேர கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்ளைக்காணலாம்.ஆந்திர

தகவல்களுக்கு நன்றி அஜீவன்.

kanada5fy.gif

Kanada

telugu5xa.gif

Telugu

Kanada,Telugu இரண்டு மொழி எழுத்துக்களும் ஒரே மாதிரியே உள்ளதே? :?: :!:

  • தொடங்கியவர்

Kanada,Telugu இரண்டு மொழி எழுத்துக்களும் ஒரே மாதிரியே உள்ளதே? :?: :!:

பார்வைக்கு அப்படி.................

ஆனால் அதன் உச்சரிப்புகள் வேறு...............

உதாரணத்துக்கு

யப்பானிய

மற்றும்

சீன எழுத்துக்கள் கூட ஒரே மாதிரியாக இருக்கிறது.

ஆனால்?......................

http://www.omniglot.com/writing/kannada.htm

http://www.omniglot.com/writing/telugu.htm

  • 7 months later...

6 மாதத்துக்கு முன்பு வந்த இந்த விடயத்தலைப்பினை இப்பொழுது தான் எனக்கு வாசிக்க முடிந்தது.மலையாள மொழி, சிங்கள மொழி பற்றி பல தகவல்கள் அறியக்கூடியதாக உள்ளது. தகவல் தந்த அஜிவன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல தகவல்

தமிழில் இருந்து தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு மொழிகள் உருவானதாக மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்....

¯Ä¸¢ý «Æ¸¡É ¦Àñ¸û ºò¾¢ÂÁ¡ö ÐÙô¦Àñ¸û¾¡ý ±É ºò¾¢Âõ ¦ºö¾¡ý ±ý ¿ñÀý §¿üÚ Óý ¾¢É þÃÅ¢ø, «Åý ¸¡¾Ä¢Ôõ ´Õ ÐÙô¦Àñ¾¡ý. «¾É¡ø¾¡ý þôÀÊ ¦º¡ø¸¢È¡Â¡ ±ýÚ §¸ð§¼ý. "§À¡¼¡ §À¡ö À¡÷òÐÅ¢ðÎ Å¡" À¢ÈÌ ¦º¡øÅ¡ö ³ŠÅ÷¡áö ¦ÂøÄ¡õ ±ýÉ «ÆÌ ±ýÈ¡ý. ³ŠÅ÷¡Ţý ¾¡ö¦Á¡Æ¢ Àñ¨¼Â¾Á¢Æ¢ý §Å÷¸û 90% Å¢Øì¸¡Î ¦¸¡ñ¼ ÐÙ¾¡ý. ¬Š¾¢§ÃĢ¡Ţý ¦¾¡øÌÊ¸Ç¡É ¬·ô¦Ã¡ùƒ¢ÂýŠ §ÀÍÅÐõ ¾Á¢Æ¢ý ¬¾¢ì¸¢¨Ç¦Á¡Æ¢¦ÂýÚ ´Õ ¦ºö¾¢

உங்கள் நண்பர் கூறியது உண்மை தான்.... நானும் என்னைவிட மூத்த ஒரு துளுப்பெண்ணிடம் ஒரு காலத்தில் காதல்வசப் பட்டிருந்தேன்...

உங்கள் நண்பர் கூறியது உண்மை தான்.... நானும் என்னைவிட மூத்த ஒரு துளுப்பெண்ணிடம் ஒரு காலத்தில் காதல்வசப் பட்டிருந்தேன்...

உண்மை எல்லாம் வெளி வருகுது போல கிடக்கு.. ம்ம் வரட்டும்... :D:lol::lol:

ஏன் மோனயள்.. அழகான பெண்களை தொலைத்துப்போட்டு மும்பாயிலை யிருந்து இறக்கி ஏற்றி பார்த்து கொண்டிருக்கிறியள்...மொழி வாரியாக மாநிலம் பிரியும் பொழுது உந்த துளு பேசும் மக்களை தங்களை தமிழ் நாட்டுடன் சேர்க்குபடி எவ்வளவு கெஞ்சினார்கள்...அப்போதைய தமிழ் நாட்டு தலமை கண்டு கொள்ளலை...அவங்களை அப்ப சேர்ந்திருந்தால் காவேரி உற்பத்தியாகிற இடத்துக்கே உரிமை வந்திருக்கும்...

sinnakuddy எழுதப்பட்டது: வியாழன் பங்குனி 23, 2006 10:29 am Post subject:

--------------------------------------------------------------------------------

ஏன் மோனயள்.. அழகான பெண்களை தொலைத்துப்போட்டு மும்பாயிலை யிருந்து இறக்கி ஏற்றி பார்த்து கொண்டிருக்கிறியள்...மொழி வாரியாக மாநிலம் பிரியும் பொழுது உந்த துளு பேசும் மக்களை தங்களை தமிழ் நாட்டுடன் சேர்க்குபடி எவ்வளவு கெஞ்சினார்கள்...அப்போதைய தமிழ் நாட்டு தலமை கண்டு கொள்ளலை...அவங்களை அப்ப சேர்ந்திருந்தால் காவேரி உற்பத்தியாகிற இடத்துக்கே உரிமை வந்திருக்கும்...

±øÄ¡õ ¿¢ÈÁ¡¨Â¾¡ý ! :wink: :wink:

º¢ýÉìÌÊ ¦º¡øÅÐõ ¯ñ¨Á¾¡ý.«ô§À¡Ð ¬ðº¢Â¢ø §ÀáÂì¸ðº¢§Â þÕó¾¾É¡ø «õÁì¸ÙìÌ Åïºõ þ¨Æì¸ôÀð¼Ð ±ýÀÐ ¯ñ¨Á.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.