Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாக்குக் கணிப்பு: தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு 28 இடங்கள்

Featured Replies

First Published : 14 May 2009 01:43:49 AM IST

Last Updated : 14 May 2009 03:09:32 AM IST

புது தில்லி, மே 13: தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏறக்குறைய சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன.

இருப்பினும் எந்த ஓர் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை.

மக்களவைக்கு 5வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் வாக்குக் கணிப்பை வெளியிட்டன.

டைம்ஸ் நவ்: காங்கிரஸ்-154, பாஜக 142, இடதுசாரிகள்-38, இதர கட்சிகள்-209.

சிஎன்என்-ஐபிஎன்: காங்கிரஸ் 145-160, பாஜக 135-150, 3-வது அணி 110-130, இதர கட்சிகள் 70-100.

ஸ்டார் நியூஸ்: காங்கிரஸ்-199, பாஜக 196, 3-வது அணி 100, இதர கட்சிகள்-36.

ஹெட்லைன்ஸ் டுடே: காங்கிரஸ்-191, பாஜக 180, இடதுசாரிகள்-38, இதர கட்சிகள்-134.

இண்டியா டிவி: காங்கிரஸ்-195, பாஜக 194, 3-வது அணி-108, இதர கட்சிகள்-46.

நியூஸ் எக்ஸ்: காங்கிரஸ்-199, பாஜக 191, 3-வது அணி-104, இதர கட்சிகள்-48.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சில மாநிலங்களுக்கான வாக்குக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 29ஐ கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. லாலு-பாஸ்வான் கூட்டணிக்கு 6-ம், காங்கிரஸுக்கும் 3 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக 23, அதன் கூட்டணிக் கட்சிகள் 5, திமுக 7, காங்கிரஸ் 4.

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாகக் தொடங்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவியின் கட்சிக்கு 4 இடங்களும், காங்கிரஸுக்கு 15-ம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மற்றும் தெலுங்கு தேச கூட்டணிக்கு 20 தொகுதிகள்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 6.

அசாமில் பாஜக கூட்டணிக்கு 7, காங்கிரஸுக்கு 5.

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் பாஜகவுக்கு 19, காங்கிரஸுக்கு 7.

ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு 13, பாஜகவுக்கு 10, சுயேச்சைகள் 2.

கேரளத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 15, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 5.

கர்நாடகத்தில் பாஜகவுக்கு 16, காங்கிரஸுக்கு 9, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 3.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் 11, பாஜக 13, சிவசேனை 12.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணிக்கு 17, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 24.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 27, சமாஜவாதி கட்சிக்கு 23, பாஜக 14, காங்கிரஸ் 13.

நன்றி : தினமணி.

நாசமாய் போன காங்கிரசுக்கு 4 இடங்கள் கிடைத்துள்ளதே? தமிழகத்திலிருந்து நிரந்தரமாக துடைத்தெறியப்பட வேண்டும்.

ஜானா

நாசமாய் போன காங்கிரசுக்கு 4 இடங்கள் கிடைத்துள்ளதே? தமிழகத்திலிருந்து நிரந்தரமாக துடைத்தெறியப்பட வேண்டும்.

ஜானா

தமிழகத்தில் இன்னமும் உணற்சியற்ற மந்தைகள் கூட்டம் உள்ளது.

நாசமாய் போன காங்கிரசுக்கு 4 இடங்கள் கிடைத்துள்ளதே? தமிழகத்திலிருந்து நிரந்தரமாக துடைத்தெறியப்பட வேண்டும்.

ஜானா

தமிழகத்தில் இன்னமும் உணற்சியற்ற மந்தைகள் கூட்டம் உள்ளது.

இவை Exit Polls மட்டுமே. தேர்தல் முடிவுகள் அல்ல!

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணிக்கு 32+ ஆசனங்கள் கிடைக்கக் கூடும்!!!

Edited by vettri-vel

Chennai/Puducherry, May 13 (IANS)

The polling percentage in Tamil Nadu is around 68 percent. There is a distinct increase in voting percentage in the state as compared to 61 percent logged in the 2004 elections,” the state’s chief electoral officer Naresh Gupta told reporters here

Asked about the malfunctioning of the electronic voting machines (EVM) at various places, he said: “Many of the machines were brought from other places and are old. One hundred machines that malfunctioned were rectified and 93 were replaced.

“Two EVMs in Chennai showed up the ‘rising sun’ symbol of DMK when a voter pressed the button against ‘two leaves’ - the AIADMK symbol. The machines were replaced,” he added :lol:

In Puducherry, P.T. Rudra Goud, joint chief electoral officer, told IANS: “We expect the final poll tally will be anything between 75-80 percent.”

He said the polling was smooth.

In the 2004 general elections Puducherry recorded 75.99 percent polling.

- - - IANS -----

Edited by vettri-vel

16 ம் திகதி வாக்குகள் எண்ணப்படும். முடிவுகள் 16 இரவு 17 காலைக்குள் தெரியும்... ஆட்சி அமைப்பது யார்? காங்கிரஸா? அல்லது பா.ஜ.காவா? யார் வந்தாலும் எமக்கான நல்லஒ தீர்ப்புக்கு சம்மதம் தரப் போவதில்லை. காங்கிரஸின் நிலை ஏற்கனவே தெரிந்ததுதான்.

பா.ஜ.க வின் தமிழக தலைவர் தேர்தலுக்காக 100 நாளில் தீர்வு காண்போம் என்று கூறினார். அத்வானி இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையால்த்தான் இந்த நிலை என்கிறார். ஏற்கனவே அவர்களும் 5 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது பலாலி முகாமை புலிகள் முற்றுகையிட்டபோது சிறீலங்காவுக்கு இசைவாகவே நடந்தார்கள் என்பதும் நினைவுகூறத்தக்கது.

ஜெயலலிதாவின் தமிழீழத்தின் மீதான திடீர் பாசம் அப்பட்டமான தேர்தல் நாடகம்.

தேர்தல் முடிவு வருமுன்பே ராகுல் அ.தி.மு.க ஆதரவு தந்தால் வரவேற்போம் என்றதும், ஜெயலலிதா தன்னிடம் பல கட்சிகள் ஆதரவு கேட்டுக் கொண்டிருப்பதாக நேற்றைக்கே அறிக்கை விட்டதும் சிந்தனைக்குரியவை. காங்கிரஸ் ஆட்சியமைத்து அதில் சேர்ந்தால் தமிழக அமைச்சரைவை கலைக்கப்படும். ஜெயாவின் கை்த்தடிகளில் சிலர் மத்திய அமைச்வர்களாவர் ...ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பதை விட தமிழக முதலமைச்சராவதும்...மத்தியில் தன்னாதிக்கம் நிலைபெறவேண்டுமென்பதுமே ஜெயாவின் தீர்க்மான திட்டம். அதற்கு கருணாநிதியால் காணாமல் விடப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரச்சினையை சரியான நேரத்தில் கையிலெடுத்து தான் சிறந் நடிகைதான் என்பதை நீரூபித்திருக்கிறார்.. தேர்தல் பரப்புரைகளில் எங்காவது ஓரிடத்திலேனும் எங்கள் தேசியத் தலைவரைப் பற்றி ஒருவார்த்தை கூட சொல்லாதது புலிகளை அவர் அங்கீகரிக்கவில்லை..இன்னும் சோ வின் வழிகாட்டலில்தான் இருக்கிறார் என்பதும் --பாஜக ஆட்சியமைத்தால் ஜெயா ஆதரவு தருவார் என்று சோ விடுத்த அறிக்கையை மறுக்காததில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழம் அமைப்பேன் என நகைச்சுவையாளனும் சொல்லமாட்டான்.. ஆனால் ஜெயா சொல்கிறார். எந்த அதிகார பீடம் இவர்கையில் இருக்கிறது..உள்ளது 40 தொகுதிகள் அவற்றை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் பங்கிடப்போகின்றன. ஒருபேச்சுக்கு ஜெயாவின் கூட்டணிக்கே 40 தொகுதிகளும் கிடைத்தாலும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஜெயாவுக்கும் தமிழீழப் பரச்சினையில் ஒத்த கருத்தில்லை. காங்கிரஸ் ..பாஜக தவிர மத்தியில் ஆள ஆசைகொண்டு வருகின்றவர்களுக்கு யார் பிரதமர் யார் நிதியமைச்சர் என அமைச்சுப்போட்டிகளும் கனவுகளும். மருத்துவர் இராமதாசை ப்பற்றி சொல்லவேண்டியதே இல்லை .தேர்தல் முடிவு வந்தவுடன் ஆளப்போகும் கட்சியில் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் போதுமென தாவுவார்.

பாவம் வை கோதான்.

தண்ணீருக்குள் அமிழ்கின்றவனுக்கு கைகொடுப்பவன் தெய்வமாகத்தான் தெரியும் . அந்த நிலையில் எம்மை பயன் படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.. இதை சரிவர புரிந்து கொள்ளாமல் புகலிட நாடுகளின் அமைப்புகள் பல அவரை வாழ்த்தியதையும் ..அவர் கூற்றை வரவேற்றதையும் தனது பரப்புரையில் பயன் படுத்தியிருக்கிறார்..

பயனை அறுவடை செய்தபின் நான் முயற்சித்தேன் ..அதிகாரபீடம் மறுக்கிறது. இன்னும் முயற்சிப்பேன் என அறிக்கைகள் வரலாம். கருணாநிதியின் இன்றைய நிலைக்கு அவர் வர நாளாகாது.

தமிழகத்தின் அனைத்து வாக்குபொறுக்கிகளும் தமிழரென்ற உணர்விருந்தால் முடிந்தால் எமக்காக செய்யக் கூடியது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை நீக்க ஒத்த குரல் கொடுப்பது மட்டுமே..

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு ஜெயலலிதாவின் பழைய அரசியல் நடவடிக்கைகளை வைத்துபார்க்கும் போது ........,

தற்போதைய ஈழப்பாசம் புரியும் என நினைக்கின்றேன் .

ஜெயலலிதாவின் ஆதரவுடன் மத்திய அரசு அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ......... அவவின் முதல் கோரிக்கையே கருணாநிதியின் அரசை கலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

அப்படி நடந்து , சட்டசபை தேர்தல் வந்தால் ஈழப்பிரச்சினையை ஐயா கையில் எடுப்பார் .

நாம் எல்லாம் தமிழக அரசியலில் எடுப்பார் கை பிள்ளைகள் என்பதனை மறக்காமலிருப்பது நல்லது .

எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும் . அழுதும் அவள் தான் பிள்ளை பெற வேண்டும் .

எங்களுக்கு சோதனை குழாய் பிள்ளை வேண்டாம் .

பிள்ளை பெறும் போது ....... உபத்திரவம் செய்யாமல் இருந்தால் காணும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.