Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணப்போர்-1

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே,

திடமான எண்ணம், திடமான நம்பிக்கை சார்ந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இங்கு நான் எழுதும் கருத்துக்கள் 100% நான் உண்மை/முடியும் என்று தீவிரமாக நம்பும் கருத்துக்கள். இவைகள் உபதேசமுமில்லை. நான் பெரிய எழுத்தாளனுமில்லை. எல்லாம் தெரிந்தவனுமில்லை.

நான் குறிப்பிடப்போகும் தனி மனிதர்கள் அல்லது இயக்கம் எந்த வித சுயநல நோக்கும் அற்றவர்கள். உலகம் முழுவதும் அன்புடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்று எந்த விதமான் விளம்பரங்களும் இல்லாமல் வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கின்ற மகான்கள்/மனிதர்கள்.

அவர்கள் நானறிந்த வரையில் புடம் போட்ட தங்கங்கள். தங்கள் வாழ்வையே உலக சமாதானத்திற்காகவும் மக்களின் சக வாழ்விற்காகவும் அர்ப்பணித்தாலும், அதனால் எவ்விதமான பிரதிபலனும் எதிர்பார்க்காதவர்கள். இவற்றைஎல்லாம் நான் செய்கிறேன் என்ற கர்வம் சிறிதும் இல்லாதவர்கள்.

"பொன்னால் பிரயோசனம் பொன் படைத்தார்க்குண்டு,

பொன் படைத்தோரால் பிரயோசனம் பொன்னுக்கங்கேதுண்டு"

என்னும் பட்டினத்தாரின் வாக்கிற்கு நடைமுறை உதாரணமாய் திகழ்பவர்கள். எங்களிடம் வந்தால் எல்லாவற்றையும் சரி செய்துவிடுகிறோம், அதற்கு இவ்வளவு செலவாகும் என்று வியாபாரம் பேசாதவர்கள். தங்களிடன் வருபவர்களின் அறிவு பெருக்கத்தையே, ஒழுக்கத்தையே தங்களின் காணிக்கையாக கருதுபவர்கள்.

தங்கத்தின் தரத்தை தட்டான் உரசிப் பார்த்து தெரிந்து கொள்வதை போன்று வாய்ப்பு கிடைத்தால் நீங்களே கூட தெரிந்து கொள்ளலாம்.

ஆரிய, திராவிட குழப்பங்கள் எதுவும் வேண்டாம். அவ்வினங்கள் சம்பந்தப்படும் நிகழ்ச்சிகள் அல்லது வரலாற்றை சொல்லும்போது அந்நிகழ்வின் உட்கருத்தை மட்டுமே கவனிக்க வேண்டும். எந்த மதத்தையும் உயர்வாகவோ, தாழ்வாகவோ குறிப்பிடும் எண்ணமும் இல்லை (யாழ் களத்தில் குறிப்பிட்ட மதத்தை தீவிரமாக தாக்கும் சில கருத்துக்களை படிக்க நேர்ந்ததுண்டு)

ஆயுத போராட்டத்திற்கு ஒய்வு கொடுத்து அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எம்மின தோழர்கள் அறிவித்துள்ள நிலையிலும், புலம் பெயர் உறவுகள் கவன ஈர்ப்பு நிகழ்வுகளை தீவிரத்துடன் நடத்தி வரும் நிலையிலும் என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு உரம் சேர்க்கும் என்று நான் திடமாக நம்பியதன் விளைவே இந்த கருத்துக்கள்.

எண்ணம் - சொல் - செயல்.

நம்முடைய செயல்கள் எல்லாவற்றுக்கும் மூலம் எண்ணம்தான். எண்ணம் சொல்லாகி, செயலாகிறது. சில நேரங்களில் எண்ணம் நேரடியாக செயலாவதும் உண்டு.

எண்ணங்கள் அதன் தீவிரத்திற்கேற்ப பலன் தந்தே தீரும். வலிமையான எண்ணங்கள் உடனடியாகவும் வேண்டிய அளவிலும் பலன் தரும். தீவிரம் இல்லாத எண்ணங்கள் கோடிக்கணக்கான மக்களால் எண்ணப்படும்போது தீவிரமாக எண்ணப்படும் சிலரின் எண்ணங்களை முறியடித்துவிடுவதும் உண்டு. தனி ஒரு மனிதனின் தீவிரமான எண்ணம் பிரபஞ்சத்தையே உலுக்கும் சக்தி கொண்டதாகவும் இருப்பதுண்டு.

கதைகளிலும் காவியங்களிலும் நாம் கேள்விப்பட்டிருக்கும் முனிவர்களின் சாபம் என்பது இதுதான்.

என் படிப்பு, என் பிள்ளை, என் குடும்பம், என் சொத்து.... என்பது போன்ற ஆயிரக்கணக்கான எண்ணங்களுடன் நம் இன விடுதலை குறித்து ஒரு நாளைக்கு சுமார் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் நாம் கவலையோடு என்னும் தீவிரமில்லாத எண்ணங்கள் நினைத்த பலன் தராமல் போவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

அப்படியானால் நாம் கமண்டலமும், காவியும் உடுத்தி உடனே காட்டுக்கு சென்று எம்மின விடுதலை குறித்து தவம் இயற்ற வேண்டுமா? தேவையில்லை. நாம் நம் அன்றாட கடமைகளை செய்து கொண்டே, ஒரு நாளைக்கு சுமார் பதினைந்து நிமிடம் முதல் முப்பது நிமிடம் வரை மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்துவிட்டு, தியானத்தின் முடிவில் நம் இன விடுதலைக்காக உருக்கமாக வேண்டுகோள் வைக்கலாம்.

"இறைவா, அல்லல்படும் எம்மினத்திற்கென்று ஒரு தனி சுதந்திர நாடு வெகு விரைவில் எம் தலைவன் தலைமையில் அமைந்து எம் மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும்"

தன்னலத்திற்காக எண்ணப்படும் எண்ணங்களை விட பொது நலத்திற்காக எண்ணப்படும் எண்ணங்கள் மிக மிக விரைவில் பலன் கொடுக்கும்.

"நாடிய நாட்டம் நல்லதாயிருந்தால், கால தாமதத்தோடு துன்பம் மிகுதியாய் இருப்பினும் நினைத்ததிற்கும் மேலான பலன் தந்தே தீரும்"

என்பது பரஞ்சோதி மகான் அவர்களின் வாக்கு. (இவரை பற்றி பிறகு விரிவாக கூறுகிறேன்).

சரி, தியானம் செய்து அதன் முடிவில்தான் கூற வேண்டுமா? சாதாரணமாக கண்ணை மூடி உட்கார்ந்து சொன்னால் போதாத என்று நீங்கள் எண்ணலாம். காற்றை ஒரு கொள்கலனில் அழுத்தத்துடன் அடைத்து பாறையையே பிளக்கிறோம். அதே காற்று சாதாரணமாக நம் மீது வீசும்போது நம்மை ஒன்றும் செய்வதில்லை.

தியானத்தின் பின் நாம் செலுத்தும் எண்ணங்களுக்கும், தியானம் செய்யாமல் நாம் செலுத்தும் எண்ணங்களுக்கும் இதுதான் வித்தியாசம்.

உணவு உண்ணும் முன், முதல் கவளம் கையில் எடுத்து கண்களை மூடி " இந்த உணவு என் பசியை போக்குவது போன்று, தாயகத்தில் முகாம்களில் வதைபடும் எம்மின மக்களுக்கும் இந்த இந்த உணவு மூன்று வேளையும் கிடைத்து, அவர்களின் துன்பங்களும் நீங்கி சந்தோஷமாக வாழ வேண்டும்" என்று மனதார, உருக்கமாக பிரார்த்தனை செய்து பிறகு உண்ணுங்கள்

தியானம் செய்யும் முறையை எங்கு கற்றுக்கொள்ளலாம்?

உலகின் எல்லா நாடுகளிலுமே நிறைய இடங்களில் சொல்லி தருகிறார்கள். ஆனாலும், தகுதியான ஒரு குருவாக தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில்,

"நான் ஒரு சமயம் காட்டு வழியே நடந்து போய்கொண்டிருக்கும்போது, ஒரு தவளையின் தீனமான குரலை கேட்டேன். என்னவென்று பார்த்தபோது ஒரு தண்ணீர் பாம்பு ஒரு பெரிய தவளையை கவ்விகொண்டிருந்தது. தண்ணீர் பாம்பால் தவளையை விழுங்கவும் முடியவில்லை, அதை விடவும் மனமில்லை. இதே தவளை ஒரு நல்ல பாம்பிடம் சிக்கியிருந்தால், ஒரே கொத்தில் தவளையின் உயிர் போயிருக்கும். பாம்பின் பசியும் தீர்ந்திருக்கும். இதே போல்தான் தகுதியான குரு கிடைக்காத சீடனின் நிலையும்"

என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதாக படித்தேன்.

நான் பரிந்துரைப்பது, ஈரோடு நகரில் உள்ள "பரஞ்சோதி ஞான ஒளி யக்ன பீடம்"

என்னும் அமைப்பை நடத்தி வரும் என் குரு ஞான ஒளி சுவாமிகளை.

தொன்னூறுகளில், என் குருவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இலங்கை பிரச்சினை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது, "நான் ஒரு முறை இலங்கை சென்றபோது அங்கிருந்த ஒரு முடி திருத்தகம் சென்றிருந்தேன். அவர் ஒரு தமிழர். 'நீங்கள் தமிழா? வெளியில் போய் தமிழ் பேசிவிடாதீர்கள். சிங்களர்கள் அடிப்பார்கள்.' என்று தன்னிடம் கூறியதாக சொல்லி, 'தமிழர்கள் ஆயுதம் எடுத்ததில் தவறே இல்லை. சிங்களர்களின் கொடுமை தாங்காமல் தான் தமிழர்கள் ஆயுதம் எடுத்தார்கள்.' என்று கூறினார் . 'உலக சமாதான ஆலயம்' என்று சத்சங்க அமைப்பை நடத்தி வரும் ஒரு குருவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவருகிறது என்றால் அங்கே தமிழ் மக்கள் படும் இன்னல்களை எங்களால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிந்தது.

erode@paranjothi.org என்னும் இணைய முகவரியில் தொடர்பு கொண்டால், நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள உங்களுக்கு தியானம் கற்றுகொடுக்கும் தகுதியுள்ள அவரின் சீடர்களை பற்றி அறிய வரலாம்.

UNIVERSAL PEACE SANCTUARY ALIAS

Paranjothi Gnanaoli Peedam Arakkattalai

15,Karikalan Street, Karungalpalayam, Erode - 638 003

TamilNadu, INDIA.

Tel: 0424 - 224690, email: erode@paranjothi.org

http://www.paranjothi.org/1.htm

என்னும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மறுபடியும் மறுபடியும் சொல்லுகிறேன். இது ஒரு விளம்பரத்திற்காகவோ, வியாபார உத்தியாகவோ சொல்லப்பட்டதில்லை. தாய் மண்ணில் எம்மின மக்கள் படும் வதைகளை நினைத்து கடும் துன்பத்தில் உழலும் எம் மக்களுக்கான எண்ணபோருக்கான ஒரு வழியாகவே இதை நான் எழுதுகிறேன்.

களத்தில் ஆயுதமேந்தி நின்ற எம்மின தோழர்களின் வேகமும் விவேகமும் வைராக்யமும் கொண்டு இதில் ஈடுபடுங்கள். முடிந்தால் பத்து பேர் வரை கொண்ட குழுவாக கூட்டு தியானத்தில் ஈடுபடுங்கள். வாரத்திற்கு ஒரு முறையேனும் கூட்டுதியானம் செய்யுங்கள். கூடுமானவரை எண்ணங்களை சிதறவிடாமல் கவனமாக மனதை ஒன்றுபடுத்தி எம்மின விடுதலைக்காக வேண்டுங்கள்.

உண்மையில் இதுவும் ஒரு கடினமான பணிதான். நீண்ட நேரம் குளிரில்,வெய்யிலில் நிற்க முடியாதவர்கள், உடல் பலகீனமானவர்கள் கவன ஈர்ப்பு நிகழ்வுகளிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட முடியாது. அவர்கள் இதில் முழு ஈட்பாட்டோடு செயல்படலாம். முக்கியமாக, இதில் ஈடுபடுவோருக்கு உடல்நலன் நன்றாக இருக்கும்.

மேற்கண்ட முகவரியில் இயங்கி வரும் சபையினர் அளிப்பது குண்டலினி தியானம் என்பது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், நெற்றியின் மத்தியில் நம் கவனத்தை வைத்து தியானித்து நாம் என்னும் எண்ணங்கள் அளவற்ற சக்தி பொருந்தியதாக இருக்கும்.

இதற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. இருபத்தொரு வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகை, மது பழக்கம் கூடாது. புகை பழக்கம் நெற்றியின் நரம்புகளை பாதிக்கும். தியானம் பழக ஆரம்பிக்கும்போதே இந்த பழக்கங்கள் இருந்தால், எளிதில் மனம் ஒன்றுபடாது.

(இன்னும் கொஞ்சம் எழுதுவேன்)

கர்த்தராலேயே உண்மையான விடுதலையை தர முடியும். தினமும் அனைவரும் அவரை நோக்கி ஜெபியுங்கள். ஜெபிப்பதற்கான வழிமுறைகள், அதைச் சொல்லிக் கொடுப்பவர்களின் முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் பின்பு தரப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.