Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணேடிய தொழிற்கட்சிப் பாரளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஆர்வளருமான திரு. பொப் ரே அவர்களை கொழும்பு விமான நிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பிய சிங்களப் பயங்கரவாதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணேடிய தொழிற்கட்சிப் பாரளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஆர்வளருமான திரு. பொப் ரே அவர்களை கொழும்பு விமான நிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பிய சிங்களப் பயங்கரவாதம்.

கணடா டொரொன்டோ பகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவரும், தமிழர்களுக்கெதிரான சிங்களப் பயங்கரவாத இன அழிப்புப் போரை கடுமையாக விமர்சித்து வருபவருமான கணேடியத் தொழிற்கட்சி உறுப்பினர் திரு பொப் ரே அவர்களை கொழும்பு விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதும் இன்னொரு விமானத்திலேற்றி திருப்பியனுப்பியிருக்கிறது சிங்களப் பயங்கரவாதம். சிங்களப் பயங்கரவாதத்தால் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட சுமார் 25,000 தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு பாராளுமன்றுக்கு உள்ளேயும், வெளியிலும் குரல் எழுப்பி வந்த இவரின் கொழும்பு விஜயமானது சிங்கள அரசின் படுகொலைகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என்று புலத்திலுள்ள சிங்கள வெறியர் கூட்டம் தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், தம்மால் அனுமதியளிக்கப்பட்ட இவரின் பயணத்தை தானாகவே சிங்களப் பயங்கரவாதம் ரத்துச் செய்து இவரைத் திருப்பியனுப்பியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க.....

Bob Rae denied entry to Sri Lanka - report

[TamilNet, Wednesday, 10 June 2009, 09:20 GMT]

Sri Lanka Wednesday denied entry to Bob Rae, a prominent Canadian politician outspoken in his criticism of Colombo’s military campaign and then Chair of the Forum of Federations, the constitutional NGO advising the Norwegian peace process during 2002 and 2003. Sri Lanka’s Immigration Commissioner P. B. Abeykoon said “intelligence reports” meant Mr. Rae should not to be admitted and was therefore detained when he arrived at Colombo airport and put on a leaving flight.

Former Ontario Premier Bob Rae"We got some intelligence reports on this gentleman and the instructions were not to allow him into the country, so he is detained at the airport and he will be deported by the next available flight," Mr. Abeykoon told Reuters.

Sri Lanka's intelligence services deemed Mr. Rae's visit "not suitable" and former Ontario premier was forced to leave on another flight, AP said.

Mr. Rae said he was stopped on Tuesday night when he reached the immigration counter in the company of two Canadian High Commission officials.

"The government of Sri Lanka knew my views, and granted me a visa," he said in an emailed statement. "I have flown a very long way only to be told the door is firmly shut."

In April, Mr. Rae had called on Canada to be more outspoken in its criticism of Sri Lanka's recent offensive against the Tamil Tigers that left 20,000 Tamil civilians dead.

“The world can't just sit back and let this death and destruction happen,” he said in April as Sri Lankan artillery continued to kill and wound hundreds of Tamil civilians every day.

“This is a humanitarian disaster and must be met with a concerted response.”

Mr. Rae said in April Canada should be working with a group of like-minded countries to press for a complete ceasefire and a return to full-scale negotiations on the constitutional future of the country.

According to his office, his recommendations included that the LTTE had to abandon terrorism and that the government of Sri Lanka had to accept the need for a political response to the crisis rather than a simple military one.

Mr. Rae has advised and worked on federalism and constitutional matters in Sri Lanka, Sudan and Iraq.

  • கருத்துக்கள உறவுகள்

இது நடக்க முன்னர் பொப் ரேயை உள்ள விடக் கூடாது என்று சொல்லி கனேடிய சிங்களவன் ஒருத்தன் பாலித கோகனவுக்கு எழுதின மின்னஞ்சல் ஒன்றை இங்க யாரோ இணைச்சிருந்திச்சினம். அது இப்ப எனக்கு வேணுமே..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிறிலங்காவிற்கு எதிராக வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வரும் தீவிரப் புலிப் பிரச்சாரம்,சிறிலங்கா ராணுவத்துடனான புலிகளின் தோல்வியை அடுத்து இரட்டிப்பாகியுள்ளதென்பதை சிறிலங்கா உணர்ந்துகொள்ள வேண்டும். இதில் முக்கியமாக தெரிந்தது என்னவெனில் புலிகளைக் காப்பாற்றும் நோக்கில் உலகெங்கும் உள்ள தலை நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள். கனடாவில் அவர்கள் இன்னும் தெருக்களில் நிற்கிறார்கள்! கனடாவிலுள்ள புலி ஆதரவாளர்கள் கனேடிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது கொலைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதுடன், இனக்கொலைக்கெதிரான விசாரணைகளை உடனேயே ஆரம்பிக்குமாறும் கோருகிறார்கள்."இடம்பெயர்க்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற சேவைகள் வழங்கப்படுவதில்லை என்றும், முகாம்களிலுள்ள பெண்கள் சிறிலங்கா ராணுவத்தால் கற்பழிக்கப்படுகிறார்கள், தாம் செய்த இனவழிப்பின் தடயங்கள் எங்கே வெளியில் தெரிந்துவிடுமோ என்கிற அச்சத்தில் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளே அனுமதிக்கிறார்களில்லை. புலிகள் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்காமல் பார்த்திருப்பார்கள்" என்று பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் திருப்பத் திரும்ப புலிகளுக்கு ஆதரவான கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.இந்தப்பாரளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் போராட்டங்கள், வணக்க நிகழ்வுகள், நிதி சேர்ப்பு நிகழ்வுகள் என்பவற்றில் தொடர்ந்தும் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல், ஊடகங்களிலும் சிறிலங்காவிற்கெதிரான குற்றச்சாட்டுக்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இந்தப் பிண்ணணியில்த்தான் இங்கே எல்லாம் நடைபெறுகின்றன.இந்த வாரம் , ஜூன், 2, 2009 அன்று திரு.ரொப் ரே என்பவர் பாராளுமன்றத்தில் பேசும்போது இலங்கை தொடர்பான விசாரனை ஒன்றிற்கு அழைப்பு விடுத்ததுடன், கொல்லப்பட்டோ அல்லது காணாமல்ப் போகச் செயப்பட்டதாகவோ கருதப்படும் 20,000 தமிழர்பற்றியும் கேள்வி எழுப்பினார். இவரைத் தொடர்ந்து, கடந்த 3, ஜூன் 2009 அன்று பேசிய திரு.கரிகியானிஸ் என்பவர் தனது புலி ஆதரவாளர்களால் உந்தப்பட்டு உடனடி ப் பாராளுமன்ற விவாதம் ஒன்றிற்கும் அழைப்பு விடுத்தார்.

திரு.பொப் அவர்களும் திரு.கரிகியானிஸ் அவர்களும் கனேடிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களிருவரும் புலிகளின் அனுதாபிகளான தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழும் பாரிய டொரொன்டோ நகர வாக்குத் தொகுதியைச் சேர்ந்தவர்களென்பதும், பிரபாகரனின் படத்தையும் புலிகளின் கொடியையும் ஏந்திக்கொண்டு டொரொன்டோ, ஒட்டாவா வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திரு. ரே அவர்கள் கனேடியப் பாராளுமன்றத்தில் வெளிவிவகார துறையின் விமர்சகர் என்பதும், அவர் தனது இலங்கை விஜயத்தின்போது சேகரிக்கும் தகவல்கள் கனேடிய அரசை பெரும் சங்கடத்துக்குள் மாட்டிவிடும் என்பதும், இதனால் சிறிலங்கா - கனடாவிற்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் கடந்த 4/02/2009 அன்றைய அவசரகால பாராளுமன்ற விவாதத்திலும் பேசியவர்கள். திரு.கரிகியானிஸ் அவர்களின் அன்றைய பேச்சின் கன்சாட் வடிவம் கீழே தரப்படுகிறது, " சபாநாயகர் அவர்களே! கடந்த வாரம் நான் எனது சட்ட வல்லுனர்களுடன் ஒரு வட்ட மேசை கூட்ம் நடத்தியிருந்தேன்.அவர்கள் சில அவசர நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்கள், அவை, சிறிலங்கா ராணுவத்தால் வட இலங்கையில் நடத்தப்பட்ட அப்பாவித் தமிழர்க்கெதிரான படுகொலைகளைகளையும், இனவழிப்புப் போரையும் உடனடியாகக் கண்டிப்பது..........................சிறிலங்க

ா தனது செயல்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் பொதுநலவாய அமைப்பிலிருந்து தூக்கியெறியப்படும் என்று எப்போது கனேடிய அர்சு எழுந்து சொல்லப்போகிறது?"

இந்தப் பிண்ணணியில், திரு.பொப் ரே அவர்களை சிறிலங்காவிற்கான விஜயம் ஒன்றினை ஜூன் 10 - 12 காலப்பகுதியில் மேற்கொள்ளுமாறு கனடாவிற்கான சிறிலங்கா தூதுவர் அழைப்பு விடுத்ததோடு அவருக்கு கபினட் அந்தஸ்த்திலான வரவேற்பையும், உபசரிப்பையும் வழங்க வேண்டுமென்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அலுவலக்கத்தின் அதிகாரிகளின் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது உண்மையிலேயே எனக்கு வியப்பை அளிக்கிறது. அவர் ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த வெளிவிவகார விமர்சகர் மட்டுமேயொழிய கபினெட் உறுப்பினர் கிடையாது. திரு.கரிகியானிஸ் கூட ஒரு அதிரடி விஜயத்தை மேற்கொள்ளக் கூடும். தற்போதைய கனேடிய அரசு புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையை திரு.கரிகியானிஸ் அவர்களும் அவரது கட்சியும் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளதோடு, கனேடிய அரசையும் இதற்காக கடுமையாக விமர்சித்தும் வந்துள்ளனர். ஒட்டாவாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் இவர்களின் பயணத்துக்கான அனுமதியைத் தரும் பட்சத்தில், இவர்கள் தமது உண்மையைத் தேடும் பயணத்தின்போது இலங்கைக்கு எதிரான மிகக் கடுமையான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பார்களென்பதும், அத்துடன் அங்கே நடக்கும் இனரீதியான பாரபட்ச நடவடிக்கைகள் தொடர்பாக விசாரனைகளுக்கான பிரச்சாரத்தை இங்கே ஊடகங்களிலும் முடுக்கி விடுவார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம். இது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தான விடயமாகும். திரு கிரிகியானிஸ் அவர்களின் விஜயத்துக்கான அனுமதியை நாமே வழங்குவதென்பது என்னைப்பொறுத்தவரையில் மிகவும் முட்டாள்த்தனமான முடிவாகும். ஏனென்றால், அவர் முன்னரும் பலமுறை சிறிலங்காவிற்கு சென்றுவந்துள்ளதோடு ஒவ்வொருமுறையும் எமக்கெதிரான கடுமையான புலிகளின் பாணியிலான பிரச்சாரத்தை இங்கே முடுக்கிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

திரு ரே அவர்கள் கொழும்பிற்கு 10 ஆம் தேதி வரவுள்ளார். அவரின் பயணத்தை இன்னொரு நாளிற்குப் பின்போடுமாறு கேட்பதற்கு எமக்கு இன்னும் காலமிருக்கிறது. இலங்கையிலிருந்து வரவிருந்த பலரின் பயணங்களைக் குறிப்பாக கபினெட் உறுப்பினர்களின்(திரு.சம்பிக்

க ரனவக்க அவர்களுக்கு மொன்ட்ரியாலில் நடைபெறவிருந்த மாநாடு ஒன்றிறிகு அழைப்பு விடுக்கப்பட்டுப் பின்னர் தாமதப்படுத்தி வீசா வழங்கப்பட்ட நிகழ்வொன்றுதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது) பயணங்களைக்கூட பிற்போடுமாறு கனடா கோரியிருந்ததை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் இந்த உண்மைகளை உங்கள் முன் சமர்ப்பிப்பதோடு, இங்கு எமது தூதுவராலயத்தில் பணிபுரியும் அறிவில்லாத அதிகாரிகளினதும், கொழும்பிலுள்ள எமது வெளிவிவகார அமைச்சில் பணிபுரியும் சில தனியாட்களினதும் மடைத்தனமான நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்துமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு காலத்தில் அரசியல் முதிர்ச்சி பெற்ற மனிதர்களை வெளி நாடுகளில் நாம் தூதுவர்களாக வைத்திருந்தோம். அவர்கள் அங்கே உள்ள அரசியல் நிலவரம் மற்றும் அந்நாட்டுத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உன்னிப்பாக அவதானித்து வந்ததோடு எமது நாட்டையும் அவ்வப்போது காப்பற்றியும் வந்தனர். நியூ யோக்கில் உள்ள எமது உயர்ஸ்த்தானிகராலயத்தின் ஆசியுடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட திரு.அலன் ரொக் என்பவர் கூட திருவாளர்கள். பொப் ரே மற்றும் கரிகியானிஸ் என்பவரின் கட்சியைச் சேர்ந்தவர்தான். இலங்கையின் வெளிவிவகாரத் தொடர்பாடலின் படுதோல்விக்கு இவ்வாறான பொறுப்பற்ற கவனயீனமான நடவடிக்கைகள்தான் காரனம் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். நடந்தபின் நடவடிக்கை எடுப்பதைவிட நடக்கு முன்பே நடவடிக்கை எடுப்பதற்கு நாம் எப்போதுதான் படிக்கப்போகிறோம்? உறுதியானதும், பொறுப்பானதுமான சிறிலங்காவின் தூதுவராலயங்களின் நடவடிக்கைகள் எனும் கனவை அடைவதற்கு நாம் இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

இரா டி சில்வா,

லண்டன், ஒன்டாரியோ, கனடா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ரகுநாதன்..!

அவர் தற்போது விமானத்தில் இருந்து பேட்டி அளித்துள்ளதாகவும் அதில் அவர் வியாழக்கிழமை ( நாளை ) கனடாவை வந்தடைவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் என்னையே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால் அப்பாவி மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்று கற்பனை செய்ய முடியாதுள்ளது என்றும் தான் கனடா வந்தடைந்ததும் மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

Edited by Eelamagal

அவர் மேலும் கூறுகையில் என்iiயே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால் அப்பாவி மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்று கற்பனை செய்ய முடியாதுள்ளது என்றும் தான் கனடா வந்தடைந்ததும் மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

தவளை தன் வாயால் கெடும் சிங்களவன் அவன்ட மோட்டு புத்தியாலயே கெடுவான்

சிங்களவர்களிற்கு இப்போ திமிர் கூடிப்போய்விட்டது. அசட்டுத் துணிச்சல். எல்லோரையும் எடுத்தெறியலாம் என்ற வீராப்பு..... தமிழனின் வீரத்திற்கு அடங்கிப் போய் இருந்தவன்.... இப்போ உலகையே தூக்கி எறியலாம் என்ற துணிவிற்கு வந்துள்ளார்கள்....

அத்துடன் ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகையில் வெளிவந்த செய்தியையும் இங்கே இணைத்துள்ளேன்.

http://www.thestar.com/news/canada/article/648432

சிங்களவர்களிற்கு இப்போ திமிர் கூடிப்போய்விட்டது. அசட்டுத் துணிச்சல். எல்லோரையும் எடுத்தெறியலாம் என்ற வீராப்பு..... தமிழனின் வீரத்திற்கு அடங்கிப் போய் இருந்தவன்.... இப்போ உலகையே தூக்கி எறியலாம் என்ற துணிவிற்கு வந்துள்ளார்கள்....

அத்துடன் ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகையில் வெளிவந்த செய்தியையும் இங்கே இணைத்துள்ளேன்.

http://www.thestar.com/news/canada/article/648432

எல்லா வடக்கத்தைகளும் இந்தியாவுக்காக இலங்கையின் சீண்டலல ஜரோப்பா பொருத்து கொள்வதாக மலையாளத்தான் சொலி வைத்து இருக்கான் ஆனால் உண்மை இலங்கக சீனாவின் சிறகுக்குள் அதனால் தான் சீனா வோடு இலங்கைக்காக மோத இஅவர்கல் இன்னும் தயயர் இல்லை போக வடக்கதையான்களள வெள்ளைக் காரன் கூட நம்புவது இல்லை.

எனக்கே இந்த நிலைமை என்றால்; ஒரு சாதரண குடி மகனுக்கு என்ன நடக்கும்?

பேச்சுவார்த்தைகளுக்கு அஞ்சியே தன்னை இலங்கை அரசாங்கம் நாடு கடத்தியதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் றே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயம் தொடர்பில் அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயத்திடம் ஏற்கனவே அனுமதி பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இராஜதந்திரி ஒருவரை நாடு கடத்தியமை வெட்கப்பட வேண்டிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனேடிய பாராளுமன்றப் பிரதிநிதியாகிய தனக்கு இவ்வாறான ஓர் நிலையென்றால் சாதாரண பொதுமக்களுக்கு இலங்கையில் எவ்வாறான ஓர் மரியாதை கிடைக்கும் என்பதனை யூகிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயம் குறித்து ஏற்கனவே அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொப் றே தெரிவித்துள்ளார்.

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் அடிப்படையில் தமக்கு வீஸா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், சுமார் 12 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், விடுதலைப் புலி உறுப்பினர்கள் என பலருடனும் தாம் சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தம்மை ஓர் விடுதலைப் புலி ஆதரவாளராக சித்திரித்துள்ளமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.nerudal.com/

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.