Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுத விற்பனையின் மையமாக ஆசியா!--சோழ.கரிகாலன்

Featured Replies

மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் இன அரசியல் இராணுவப் பிணக்குகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் மேற்கத்தேய மற்றும் வல்லரசு நாடுகள் உண்மையில் அங்கு அந்த முரண்பாடுகள் ஆயுதப்போராக

மாற்றமடைவதையே விரும்புவார்கள். ஏனெனில் அந்த நாடுகளின் பிணக்குகளும், துயரங்களும், உயிரிழப்புகளும் மேற்கத்தேய நாடுகளின் வருமானத்தைப் பெரிய அளவில்

உயர்த்தும்.இங்கு வீழும் ஒவ்வொரு உயிரும் அவர்கள் பணப் பையை நிரப்பவே உதவும். ஏனெனில் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் ஆயுதங்கள் இவர்களின் உபயமே. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தைப்பொருட்களில் ஆயுதங்களே பெருமளவில் இடம்வகிக்கின்றன. இவர்களது சந்தைப்பொருட்கள் விற்பனையாகவேண்டுமாயின், இவர்கள் உற்பத்தி பெருகவேண்டுமாயின் உலகின் ஆயுதப் பயன்பாடு அதிகரிக்கவேண்டும். ஆயுதப் பயன்பாடு அதிகரிப்பதாயின் எங்காவது போர் நிகழவேண்டும், அல்லது போர்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

பல்லாயிரக்கணக்கில் ஈழத் தமிழர்களின் உயிர்களைப் பலிகொண்ட எறிகணைகளும், குண்டுகளும் இப்படியான சில நாடுகளின் பொருளாதாரம் மேம்பட உதவியிருக்கும். மண்ணோடு மண்ணான ஒவ்வொரு ஈழத் தமிழனும் வேறொரு வல்லரசின் கருவூலத்தை நிரப்பியிருப்பான். உலகின் ஆயுத விற்பனையானது கடந்த ஐந்து வருடங்களில் 20 வீதத்திற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. இந்த ஆயுத உற்பத்தியின் பயன்பாட்டுக் களம் மத்திய கிழக்கிலும், ஆசிய நாடுகளிலுமே உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களே இந்த ஆயுத சந்தையில் முதன்மை வாடிக்கையாளர்கள். இப் புள்ளி விபரம் Stockholm நகரின் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சிக் கற்கைப் பிரிவினரால் (SIPRI) வெளியிடப்பட்டது.

அமெரிக்காவே ஆயுத உலகின் சக்கரவர்த்தியாக உள்ளது. மொத்த உலக ஆயுத விற்பனையில் அமெரிக்கா மட்டும் 31 வீதமான பங்கை வைத்துள்ளது. இதில் மூன்றிலொரு பங்கு மத்தியகிழக்கு நோக்கியே செல்கின்றது. மதவாத அரசான பாகிஸ்தானின் இராணுவத் தேவைகளில் 40 சதவீதமான ஆயுதங்கள் அமெரிக்காவாலேயே வழங்கப்படுகின்றது. பாகிஸ்தானின் மரபுவழி இராணுவம் அமெரிக்காவாலேயே பலமூட்டப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் ஐந்து ஆயுத விற்பனையாளர்களாக முறையே அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளது. இவர்களின் பெரும் வாடிக்கையாளர்களாக சீனாவும் தொடர்ந்து இந்தியாவும் உள்ளன. ஆனால் சீனா தனது ஆயுத இறக்குமதியைக் குறைத்து தங்களது சொந்த ஆயுத உற்பத்தியைப் பெருக்கியுள்ளது

இவர்களது விற்பனையில் சவுதிக்கான ஆயுத விற்பனை 38 வீதத்தால் அதிகரித்துள்ளது. சவுதியரேபியா 200 அமெரிக்கப் போர் விமானங்களையும், 5000 கணினி வழிகாட்டிக் குண்டுகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. பிரித்தானியாவின் பெரிய வாடிக்கையாளர்களாக அமெரிக்காவும், இந்தியாவும் உள்ளன. இவைகள் பிரித்தானியாவிடம் 66 Hawk (கதுவி விமானம்) 100 பயிற்சி விமானங்களையும், 20 ஜக்குவார் போர் விமானங்களையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. அத்தோடு 72 Eurofighter Typhoon போர் விமானங்களை வாங்க சவுதியரேபியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது.

அரச கணக்கீடுகளின்படி அமெரிக்க WhiteHall இராணுவத் திணைக்களம் சிறீலங்காவிற்கு 1.4 மில்லியன் பவுண்சிற்கான ஆயுதங்களைக் குறிப்பாக தொலைத் தொடர்பு சாதனங்கள் உட்பட வழங்கும் ஏற்றுமதி அனுமதியை வழங்கியுள்ளது. பிரித்தானியா 2007ம் ஆண்டிற்கு மட்டும் 1 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான ஆயுதங்களை சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது.

"உலகின் பிணக்குகளை நாடுகளின் கூட்டு முயற்சியால் தீர்த்து வைத்தல் என்ற போர்வையில் இவர்களது இராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டு விற்பனை செய்வது அந்தப் பிணக்குகளை மேலும் மோசமடையச் செய்யும் என SIPRI இராணுவப் பரிமாற்றப் பிரிவின் தலைவர் Paul Holtom தெரிவித்துள்ளார்.

90களில் அமெரிக்கா ஆயுத விற்பனையில் கோலோச்சியது. 3ம் உலக நாடுகளையும், வறிய நாடுகளையும் அது தன் வலையமைப்புக்குள் வைத்திருந்தது. தனது ஆயுத விற்பனையை 19.4 பில்லியன்களாக அதிகரித்தது. 90களில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் அதியுச்ச ஆயுதக் கொள்வனவில் இந்தியாவே முதன்மைவகித்தது. இது 2. பில்லியன் டொலர்களுக்கான ஆயுதக்கொள்வனவு ஒப்பந்தத்தைச் செய்திருந்தது. வறிய நாடுகளை நோக்கிய ஆயுத விற்பனையை அமெரிக்கா ஊக்குவித்தது. இதன்மூலம் ஆயுதச் சக்கரவர்த்தியாக தன்னை முடிசூடிக்கொண்டது. இது 9.5 பில்லியன் டொலர்களுக்கான சந்தையை தன்னகத்தே கொண்டது. இது பிரித்தானியாவிலும் பார்க்க இரு மடங்கும், ரஷ்யா, பிரான்ஸ் என்பவற்றைவிட நான்கு மடங்குமாகும். இந்தியாவின் 2.5 பில்லியன் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எகிப்து 2.4 பில்லியன்களுக்கும், சவுதியரேபியா 1.9 பில்லியனுக்கும் ஒப்பந்தம் செய்தன. சவுதி 1989ல் இருந்து 1997 வரையான காலத்தில் மட்டும் 47 பில்லியன் டொலர்களுக்கான ஆயுதக்கொள்வனவை அமெரிக்காவுடன் செய்தது.

இது அமெரிக்க ஆயுத நிறுவனங்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது. இதன் மூலம் வளரும் நாடுகளில் ஆயுதக் கொள்வனவில் சவுதி முதலிடம் வகித்தது. இதையடுத்து தாய்வானும், எகித்தும் இடம்பிடித்தன. 1989-1992 காலப்பகுதியில் ஆயுதவிற்பனை நாடுகள் உலகம் முழுவதும் 188 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்திருந்தன. இதில் 70 சதவீதமான ஆயுதங்கள் வளர்ச்சியடையும் நாடுகள் நோக்கியே சென்றது. 1993-1996 வரையான காலத்தில் 136 பில்லியன் ஆயுதவிற்பனை நடந்தது. இந்த ஆயதவிற்பனைப் போட்டியில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளே குறிவைக்கப்பட்டன. வறிய நாடுகளும் தங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் ஆயுதக்கொள்வனவை நோக்கியே செலுத்தின.

நேட்டோ நாடுகளின் விரிவாக்கத்தை ஆயுதமுகவர்கள் நன்கே பயன்படுத்தினர். ஆசிய, மத்தியகிழக்கு இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பழைய இராணுவக் கட்டமைப்பை மாற்றி நவீன இராணுவமாக்க விருப்பம் கொள்ள வைத்து, தங்கள் வியாபாரத்தைப் பெருக்கினர். லத்தீன் அமெரிக்க நாடுகள் மீதான 19 வருட ஆயுத விற்பனைத் தடையை பில்கிளின்டன் காலத்தில் நீக்கியத்தில் இருந்து அமெரிக்க ஆயுத மற்றும் வான்வெளி உபகரணங்களின் உற்பத்தியாளர்கள் மாபெரும் வெற்றியடைந்தனர்.

ஆயுத விற்பனைக்கு எதிரான அமைப்பு தன் அறிக்கையில் சிலி நாட்டிற்கான 24 ஜெற் போர்விமானங்களை விற்கும் போட்டியில் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனமான Lockheat Martin & Mcdonnell Dougls ஈடுபடுவது இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் இராணுவ ஆதிக்கமுள்ள நாடுகளை உருவாக்கவே உதவும் எனத் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தம் 500 மில்லியன் டொலர் பெறுமதியானது.

அமெரிக்க நிறுவனங்களின் மேலாதிக்கத்தினைத் தொடர்ந்து 1990 களில் ரஷ்யா இரண்டாவது நிலையை அடைந்தது. இருப்பினும் ரஷ்யாவின் விற்பனையின் பின்னர் அவர்களால் அதற்குரிய உதிரிப்பாகங்களையும், பேணுதல் சேவைகளையும் வழங்கமுடியுமா என்ற சந்தேகம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இருந்தது. ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளரான ஈரான் பொருளாதார நெருக்கடியால் ஆயுதக் கொள்வனவைக் குறைத்துக்கொண்டது. ஆனால் சீனா தொடர்ந்தும் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்தது. 1994ல் பிரான்ஸ் ஆயுத விற்பனையின் முதலிடத்தைத் தட்டிக்கொண்டது. 1996ல் மீண்டும் அமெரிக்கா தன் மேலாதிக்கத்தை மீளப் பெற்றுக்கொண்டது. இதில் தனது முக்கிய முதல் 10 வாடிக்கையாளர்களாக முறையே இந்தியா, எகிப்து, சவுதி, தென்கொரியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு ஒன்றியம், கட்டார், பெரு, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகியன இடம்பெற்றன.

சீனா ஆயுதச் செலவீனத்தில் 2009ம் ஆண்டின் அறிக்கையின்படி இரண்டாவதிடத்தை எட்டியுள்ளது. சீனா தனது உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாட்டு இறக்குமதியையும் இணைத்து தனது இராணுவத்தை நவீன போரியலுக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பப் போரை எதிர்கொள்ளும் வகையில் நவீனப்படுத்துகின்றது. அமெரிக்காவும் தனது இராணுவத் தேவைக்கான செலவீனத்தைப் பெரியளவில் அதிகரித்துள்ளது. இது தனது செலவீனத்தை 9.7 வீதத்தால் அதிகரித்து 607 பில்லியன் டொலர்களாக ஆக்கியுள்ளது. இது உலக மொத்த இராணுவச் செலவீனமான 1.46 ட்ரில்லியன் டொலர்களின் தொகையில் 42 விகிதமாகும். பிரான்சும் செலவீனத்தை அதிகரித்து பிரித்தானியாவைப் பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. ரஷ்யா ஏழாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளது.

அமைதிக்கான கல்லூரியின் ஆய்வாளர் றீழிது Perlo - Freeman தெரிவிக்கையில் சீனா முன்பு இராணுவச் செலவீனங்களிற்காக சிறு தொகையையே செலவிட்டது. ஆனால் இன்று உலகின் இரண்டாவது இராணுவச் செலவீன நாடாக சீனா மாறியுள்ளது. ஆயினும் இது இரண்டாவது பலமான இராணுவமல்ல. வேறு பல நாடுகள் இந்த விளையாட்டில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. சீனா இதன்மூலம் தன் பிராந்தியத்தில் தன் பலத்தை நிரூபிக்க முயல்கின்றது. இப்படியான நாடுகளின் பலப் பரீட்சைகள் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

தமிழர் போராட்டத்தை நசுக்கத் துணைபோன இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளே அமெரிக்காவின் பிரதான இராணுவ சந்தைகளாக உள்ளன. ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பிராந்தியத்தில் தாராளமாகவே கடைவிரிக்கின்றன. இவர்கள் வியாபாரம் பெருகப் பெருக உலகம் போர்க்களமாக மாறும். வறிய நாடுகளினதும், வளர்ச்சியடையும் நாடுகளினதும் முரண்பாடுகளை ஊதிப்பெருக்கி இராணுவ முரண்பாடுகளாகவும், யுத்தங்களாகவும் மாற்றவே இவர்கள் விரும்புகிறார்கள்.எனவே ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தனது ஆசியப் பிராந்திய ஆயுத வாடிக்கையாளர்களை மீறி எங்கள் போராட்டத்திற்கு இவர்கள் சமாதானம் கொண்டுவருவார்கள் என்று நம்புவது உலகப் பொருளாதார நலன்களைப் புரிந்துகொண்டால் எவ்வளவு தவறு என்று புரியும்.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.