Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இந்திய அமெரிக்க மேலாதிக்கப் போட்டியை மறைக்கச் சீனப் பூச்சாண்டி--மோகன்

Featured Replies

மே மாத முற்பகுதியில் "London Times" ஏட்டிலும், அதன் இணையத்தளத்திலும் இலங்கையின் போர் முயற்சிகட்கு உறுதுணையாக நிற்பதும் உலக நாடுகள் அனைத்தையும் விடப் பெருமளவில் பொருளாதார உதவி வழங்கி வருவது சீனா தான் என்று வலியுறுத்தும்

ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. வழமையாக முற்போக்கான ஏகாதிபத்திய விரோதத் தகவல் எதையுமே தமிழாக்குவதில் தமிழ் ஊடகவியலாளர்கட்கு அக்கறையில்லை. உலக நிகழ்வுகள்

பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் ஏதாவது இந்திய இணையத்தளத்திலிருந்தாவது அப்படியே எடுத்தாளப்பட்டு உரிய நன்றி கூறல் இல்லாமல் "நன்றி - இணையம்" என்ற சொற்களுடன் வெளிவருகின்றன. மேற்கூறிய கட்டுரை 10-05-2009 ஞாயிறு தினக்குரலில் மிகக் கவனமாகத் தமிழாக்கப் பட்டுள்ளது. இவ்வாறான அக்கறை பிற விடயங்களிலும் இனிமேற் கொண்டு காட்டப்படும் என்று எதிர்பார்ப்போமாக.

மேற்படி கட்டுரை கட்டுரையாளரான ஜெரமி பேஜின் சொந்தச் சரக்கல்ல. லண்டன் டைம்ஸ் ஒரு இடதுசாரி விரோத ஏடு. சீனாவும் ரஷ்யாவும், சோஷலிஸத்திலிருந்து விலகிய பின்பும் அவற்றைப் பற்றிய குரோதம் பாராட்டுகிற கட்டுரைகள் தொடர்ந்தும் அதில் வருவதற்கான காரணம் அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய உலக மேலாதிக்கத்திற்கு அவை சவாலாக இருப்பது தான்.

ஜெரமி பேஜ் என்றுமே முற்போக்கான பத்திரிகையாளராக அறியப்பட்டவரல்ல. மேற்கூறிய கட்டுரைக்கான தகவல்கள் ஒட்டு மொத்தமாக பி. ராமன் எனப்படும் முன்னாள் றோ உளவு நிறுவன ஆணையாளரின் மூலம் பெறப்பட்டவை என்று கட்டுரை மூலம் தெரிய வருகிறது. இந்திய-சீன உறவைச் சீர்குலைக்கும் விதமாகச் சீனாவைப் பற்றிய செய்தித் திரிபை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிற 'ஆய்வு நிறுவனங்கள்" மூன்றிலாவது ராமன் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.

அவற்றுக்கான இணையத் தளங்கள் உள்ளன. அவை வழங்கிய தகவல்களைப் பயன்படுத்தியே காலஞ் சென்ற டி.பி. சிவராம் உட்பட்ட தமிழ்த் தேசியவாதிகள் தங்களுடைய "ஆய்வுகளை" வழங்கினர். அவற்றின் ஆதாரத்தின் மீது அமைந்த அரட்டைகளும் அரை உண்மைகளும் மறுபடியும் மறுபடியும் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு உண்மைகளாக முன்வைக்கப் படுகின்றன.

தமிழிற் சீனா பற்றிய விமர்சனம் முன்வைக்கப்படும் போது பொதுவாகவும் ரஷ்யா பற்றியவை முன்வைக்கப்படும் போது இடையிடையிலும் அவை சோஷலிச நாடுகள், கம்யூனிஸ்ற் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதற்கு அழுத்தந் தெரிவிக்கப்படுவது வழமையாகி விட்டது. அதன் நோக்கம் விளங்கிக் கொள்ளக் கடினமானதல்ல.

எவ்வாறு திரிபுவாதிகளதும் சமசமாஜிகளதும் தவறுகளைக் காட்டி நேர்மையான இடதுசாரிகளை எல்லாம் களங்கப்படுத்தி வந்துள்ளார்களோ அவ்வாறே முதலாளியம் வேரூன்றி விட்ட சீனாவையும் முற்றாகவே முதலாளிய நாடாகி அல்லற்பட்டு அதிலிருந்து மீளப் பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அந்தரித்து நிற்கும் ரஷ்யாவையும் காட்டி, அவற்றின் குறைபாடான நடத்தையைச் சோஷலிச நாடுகளது நடத்தையாக அடையாளங் காட்டுவது விஷமத்தனமன்றி வேறல்ல.

அதே வேளை சீனாவும் முன்னாள் சோவியத் யூனியனும் சோஷலிஸத்திலிருந்து விலகியதை முன்னிட்டு அவற்றுடன் கண்மூடித்தனமான பகைமை பாராட்டுகிற இடதுசாரிகள் உள்ளனர். சீன-சோவியத் முரண்பாடு இருந்து வந்த காலத்தில் ஒரு தரப்பை ஆதரித்து மற்றதை விமர்சித்தவர்களுட் சிலர் அக் காலத்தில் இருந்தவாறே தமது பழைய பகைமைகளைப் பேணி வருகின்றனர். இத்தகையோர் சீனாவையோ ரஷ்யாவையோ யார் குற்றஞ் சாட்டினாலும் அதற்கான காரண காரியங்களை ஆராயாமல் அவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதையுங் காணலாம்.

நாம் உலகத்தை எந்த நிலைப்பாட்டிலிருந்து நோக்குகிறோம் என்பதைச் சார்ந்தே உலக நிகழ்வுகள் பற்றிய நமது மதிப்பீடுகள் அமைகின்றன. நமது நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் உண்மைகளை மூடி மறைக்கவும் புனைவுகளை உண்மையென்று பரப்புரை செய்யவும் நாம் முற்படுவோம் என்றால், முடிவில் நாம் நம்மையே ஏய்த்துக் கொண்டோராவோம்.

தமிழ்த் தேசியவாதிகள் சிலர் இலங்கைத் தமிழரின் பிரதான எதிரி சீனாவே என்று காட்டுவதற்காக ராமன் போன்றோரது தகவல்களையும் ஏகாதிபத்தியவாதிகளதும் இந்திய மேலாதிக்கவாதிகளதும் புனைவுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இப் போக்கு அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.

எனினும், அனைத்தினதும் சாராம்சம் பின்வருமாறு எனலாம்.

1. சீனா இந்தியாவுக்கு எதிரான மேலாதிக்கப் போட்டியில் இறங்கியுள்ளது.

2. சீனா இந்தியாவிற்கெதிரான கடல் முற்றுகை ஒன்றுக்கு ஆயத்தப்படுத்துகிறது.

3. சீனா இலங்கைக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கித் தமிழ் இன ஒழிப்பை மும்முரமாக ஆதரிக்கிறது.

4. சீனா இலங்கையின் சரிந்து விழும் பொருளாதாரத்தை நிலை நிறுத்த உதவி அதன் மூலம் இலங்கை மீது பூரண ஆதிக்கஞ் செலுத்த முயலுகிறது.

5. மேற்கூறிய காரணங்களாலேயே இந்தியா இலங்கை அரசாங்கத்தின் பேரினவாதப் போருக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.

மேற்கூறிய அடிப்படையிலேயே இந்தியா தனது அண்டை நாடுகளின் அமைதியைக் குலைக்கும் விதமாகக் கடந்த நாற்பதாண்டுகட்கும் மேலாக நடந்து கொண்டமையையும் சிலர் நியாயப்படுத்துகின்றனர்.

சீனா இதுவரை எந்த நாட்டின் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தவில்லை. சீனா சோஷலிச நாடாக இருந்த போது வகுக்கப்பட்ட அயற் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இனி மாறலாம் என்பது வேறு விடயம். சாத்தியப் பாடுகளை எல்லாம் சமகால உண்மைகளாகக் கருதுவது அறிவுடைமை அல்ல.

தன்னுடைய கடற் பகுதியிலேயே எல்லைத் தகராறுகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடாகத் தொடருகிறது. இதுவரை தனது எல்லைப்புற நாடுகள் எதன் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தாத ஒரு நாடாகச் சீனா இருந்து வந்துள்ளது. எனவே இந்து சமுத்திரத் தென்னாசிய வலயத்தில் மேலாதிக்கப் போட்டி என்று சில இந்திய மேலாதிக்கவாதிகள் அலறுவது திருடனே எல்லாரையும் முந்திக் கொண்டு "திருடன்! திருடன்!!" என்று கூவுவது போன்றதே.

ஆபிரிக்கக் கரையோராம் முதலாக மியான்மார் வரையிலான பகுதிகளில் உள்ள நாடுகளில் சீனா துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவி வந்துள்ளது. அதற்கு நோக்கங்கள் உள்ளன. அதை வெறுமனே சீன மேலாதிக்கமென்று மொட்டையாக முடிவு காணாமற், சாத்தியமான காரணங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்வது அறிவுடைமையாகும்.

சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் முதலாகப் பல மூலவளங்களை இறக்குமதி செய்கிற தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் சீனாவைச் சூழப் பல இடங்களிலும் வலுப்பட்டு வருகின்றன. அண்மையிற் கூடச் சீனக் கடற் பகுதியில் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து சீனக் கடற் படையாற் தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் பட்டது. எனினும் அமெரிக்கா பிற நாடுகளின் கடற் பிரதேசங்களை மதிப்பதாக இல்லை.

இந்தியாவை அமெரிக்காவுக்குக் கீழ்ப்பட்ட ஒரு பிராந்திய மேலாதிக்க வல்லரசாக்குகிற முயற்சிக்கு இந்திய ஆட்சியாளர்கள் மிகவும் உடந்தையாகவே நடந்து வந்துள்ளனர். இந்தியா-இஸ்ரேல்-ஈரான் என்ற அடிப்படையில் அமெரிக்கா திட்டமிட்டு வந்துள்ள ஆசிய இராணுவக் கூட்டணிக்கு ஈரான் மட்டுமே இதுவரை தடையாக இருந்து வந்துள்ளது. இப் பின்னணியில், ஏதாவது காரணங் காட்டிச், சீனாவின் கடல் வணிகம் தடைகட்கு உட்படலாம. அத் தடை இந்து சமுத்திரத்தின் எப்பகுதியிலும் நிகழலாம். அவ்வாறான நிகழ்வுகள் சென்ற நூற்றாண்டின் போர்கட்குக் காரணமாய் இருந்துள்ளன. அவ்வாறான ஒரு சூழ்நிலையை மட்டுமன்றி அமெரிக்கா சீனாவுக்கு வேண்டிய கடல் வழிப் பாதைகளிற் தடைகளை விதிக்கக் கூடிய பல்வேறு சாத்தியப்பாடுகளைச் சீனா புறக்கணிக்க இயலாது.

சீனாவின் ஒரு பகுதியான தாய்வான் 1949 முதல் இன்னமும் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ளது. திபெத்தில் அமெரிக்கா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கிறது. வடமேற்கில் மத அடிப்படையிற் தேசியவாதிகளைத் தூண்டி விடுகிறது. இவற்றையெல்லாம் கணிப்பிற் கொள்ளுகிற போது, சீனா தன் பாதுகாப்புப் பற்றி எச்சரிக்கையின்றி இருக்க இயலாது என்றே விளங்கும்.

இதுவரை சீனா தனது பொருளாதாரச் செல்வாக்கை வலுப் படுத்துவதிலேயே முக்கிய கவனங்காட்டி வந்துள்ளது. அத்துடன் இந்து சமுத்திரம் பிராந்தியத்தில் அமெரிக்கா கடல்வழிப் பாதை எதையும் மறிக்க முற்பட்டாற் தனது கப்பல்கட்குத் துறைமுகங்களும் மற்றும் கடல்வழிகளும் பண்டங்களைக் கொண்டு செல்லத் தரை வழிகளும் தேவை என்கிற அடிப்படையிலேயே சீனா இப் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளிற் துறைமுகங்களை விருத்தி செய்ய உதவுவதன் மூலம் தனது கப்பல்கட்கான துறைமுக வசதிகட்கு ஒரு உத்தரவாதத்தைப் பெற முயலுகிறது. இவற்றில் எந்தத் துறைமுகந் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நாட்டை வற்புறுத்துகிற விதமான உடன்படிக்கை எதுவும் இல்லாததோடு சீனக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தப் படுவதற்கான எந்தவிதமான சாடையுமே இல்லை.

சீனா இலங்கைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுக விருத்திக்கு வழங்குகிற கடனும் அதை நிர்மாணிக்கும் பணியும் முற்றிலும் வணிக அடிப்படையிலானவை. அந்தக் கடன் தொகை அங்கீகரிக்கப்பட்ட ஆண்டை வைத்து, இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளில் சீனா யப்பானையும் மீறி விட்டது என்று ஜெரமி பேஜ் எழுதியிருந்தார். அவருடைய செய்தித் திரிப்புகளை மறுத்துச் சீன வெளி அலுவல் அமைச்சு கடும் மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும் ராமன், பேஜ் போன்றோர் பரப்புகிற வதந்திகள் போய்ச் சேரவிருக்கும் பல இடங்களிற் சீனாவின் மறுப்புப் பற்றியோ உண்மை நிலைமைகள் பற்றியோ அக்கறை இல்லை.

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்காகப் பலவேறு நிதி வழங்கல்களை மேற்குலகு நிறுத்துவதாகக் கூறிச் சில நிதி வழங்கல் வசதிகளை இடைநிறுத்தினாலும் யப்பான் தொடர்ந்தும் நிதி வழங்கி வந்துள்ளது. இது அமெரிக்க ஆசியுடன் நடக்கிறதா, அல்லது அமெரிக்காவை மீறி நடக்கிறதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

சீனா இலங்கையின் பொருளாதார விருத்திக்கு உதவுவது பற்றிப் பேசுவோர் இலங்கையிற் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளுகிற முயற்சிகள் பற்றிப் பேசுவதில்லை. சம்பூரில் இந்தியா நிறுவவுள்ள அனல் மின் நிலையம், மோதல்கள் வலுப்பெற்று இலங்கை ராணும் சம்பூரைப் பிடித்தவுடனேயே அங்கீகரிக்கப் பட்டது. அத்துடன் அப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் இந்தியா எண்ணெய் அகழ்வுக்கு உடன்படிக்கை செய்ததை எதிர்க்காமல் சீனாவுடனான உடன்படிக்கைகளை எதிர்ப்போரது நோக்கங்கள் கவனத்துக்கு உரியன.

இலங்கையில் ராணுவ மேலாதிக்கத்திற்கான போட்டி அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலானதாகவ

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சீனாவையோ இந்தியாவையோ அமெரிக்காவையோ ஐரோப்பாவையோ நம்புவதையும் நம்பாமலிருப்பதையும்விட நம்மை யாராவது கணக்கிலெடுக்கிறார்களா? என்பதே முக்கியம். நாம் நம்பித்தானென்ன நம்பாமல் விட்டுத்தானென்ன?

வங்காள விரிகுடாப் பிரதேசத்தில் ஓர் தமிழ்த் தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு இனங்காணப்பட்டாலன்றி நம்மை யாரும் கணக்கெடுக்கப் போவதில்லை. இந்தியாவைத் தவிர தமிழ்த் தேசியத்துக்குத் துணைபோகக்கூடிய எந்த சக்தியும் இருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைத் தவிர தமிழ்த் தேசியத்துக்குத் துணைபோகக்கூடிய எந்த சக்தியும் இருக்கமுடியாது.

:icon_mrgreen: கன நாளுக்குப் பிறகு வாய் விட்டுச் சிரிக்க முடிந்தது இன்னும் இப்படிக் "கேனையர்" கள் இருக்கிறார்களே என நினைத்த போது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியம் என்பதைத் தனித்தமிழ் ஈழம் அல்லது தனித்தமிழ் நாடு என்று தவறாகப் புரிந்து கொண்டதால் வந்த வினை இது. தமிழன் என்னும் இனத்துவ அடையாளத்தை இந்தியாதான் இன்றுவரை கட்டிக்காத்து வளர்த்து வருகிறது. ஆகக் குறைந்தது ஒரு மானிலத்தையும் ஒரு யூனியன் பிரதேசத்தையும் சுயமாக ஆளவிட்டு முழு இந்திய தேசியத்தினதும் பிரிக்க முடியாத அங்கமாக தமிழ்த் தேசியத்தை இந்தியாதான் கட்டிக்காத்து வருகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாது எடுத்த எடுப்பில் கேனைத்தனமான கருத்தாகச் சித்தரிக்க முயல்வதில் அர்த்தமில்லை.

தமிழ்த் தேசியம் சரியாக இனங்காணப்பட்டாலன்றி இந்த மாபெரும் உலகில் இத்துனூண்டு தமிழீழ தேசியத்தை யாரும் கணக்கிலெடுக்கப் போவதில்லை. தமிழீழ தேசியம் தன்னை உலகில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் தமிழ்த்தேசியம் வளர்த்தெடுக்கப்படவேண்டும். இந்தியா என்னும் பெருவிருட்சத்தின் ஓர் வலுமிக்க கிளையான தமிழ்த் தேசியம் தெற்காசியப் பிராந்தியத்தில் எந்த அளவுக்கு உறுதியுடன் வளர்த்தெடுக்கப்படுகின்றதோ அந்த அளவுக்குத் தமிழீழதேசியமும் வளர வாய்ப்புண்டு.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியம் என்பதைத் தனித்தமிழ் ஈழம் அல்லது தனித்தமிழ் நாடு என்று தவறாகப் புரிந்து கொண்டதால் வந்த வினை இது. தமிழன் என்னும் இனத்துவ அடையாளத்தை இந்தியாதான் இன்றுவரை கட்டிக்காத்து வளர்த்து வருகிறது. ஆகக் குறைந்தது ஒரு மானிலத்தையும் ஒரு யூனியன் பிரதேசத்தையும் சுயமாக ஆளவிட்டு முழு இந்திய தேசியத்தினதும் பிரிக்க முடியாத அங்கமாக தமிழ்த் தேசியத்தை இந்தியாதான் கட்டிக்காத்து வருகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாது எடுத்த எடுப்பில் கேனைத்தனமான கருத்தாகச் சித்தரிக்க முயல்வதில் அர்த்தமில்லை.

தமிழ்த் தேசியம் சரியாக இனங்காணப்பட்டாலன்றி இந்த மாபெரும் உலகில் இத்துனூண்டு தமிழீழ தேசியத்தை யாரும் கணக்கிலெடுக்கப் போவதில்லை. தமிழீழ தேசியம் தன்னை உலகில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் தமிழ்த்தேசியம் வளர்த்தெடுக்கப்படவேண்டும். இந்தியா என்னும் பெருவிருட்சத்தின் ஓர் வலுமிக்க கிளையான தமிழ்த் தேசியம் தெற்காசியப் பிராந்தியத்தில் எந்த அளவுக்கு உறுதியுடன் வளர்த்தெடுக்கப்படுகின்றதோ அந்த அளவுக்குத் தமிழீழதேசியமும் வளர வாய்ப்புண்டு.

கருத்துக்கள் திரிபுபட்டிருக்கின்றன. தமிழ் தேசியம் என்பதை இல்லாது செய்ததே இந்தியாதான்;. பதவியும் சுகமும் அரசியல் தலைவர்களின் கையில் கொடுத்துவிட்டு தேசியம் துண்ணடாடபட்டுள்ளது என்பதை நீங்கள் மறுக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துக் களப்பிரிவு முகப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் திரு மருதங்கேணிக்குரிய பதிலாக இதனை எழுதுகிறேன்.

பதவியையும் சுகத்தையும் சுயநலமிக்க அரசியல் தலைமைகளிடம் குறைவின்றி அள்ளி அள்ளிக் கொடுத்தது இந்தியாவா தமிழினமா என்பதைத் தாங்கள் சிந்திக்கத் தவறியிருக்கிறீர்கள். இந்திய தேசியத்துக்குள் இருந்தபடியே திராவிட நாட்டுக் கோரிக்கையென்னும் ஒரு செல்லாத தத்துவத்தை முன்வைத்து திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்தவர்கள் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டார்கள். தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்தும் மத்தியிலே கூட்டாட்சி மாநில சுயாட்சி என்னும் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு மீண்டும் மக்கள் ஆணை பலதடவைகளில் பெறப்பட்டது. அந்தக் கோரிக்கையும் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகத் தமிழ்த் தேசியத்தின் சுவாச மூச்சு சுயநலமிக்க அரசியல் தலைமைகளால் பிடித்து நிறுத்தப்பட்டுள்ளது. பிரிவினை வாதமென்ன்னும் கொடிய குற்றச்சாட்டுத் தனது தேசியத்தை நிலைநாட்டாத்துடிக்கும் தமிழினத்தின்மீது சுமத்தப்பட்டுள்ளது. இதுவே இன்றுள் பிரச்சனை.

பிரிந்து செல்லும் உரிமை கொண்ட சோவியத் ஒன்றியத்திலிருந்த கூட்டுத்தேசியங்களின்மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் அக்காலத்தில் சுமத்தப்படவில்லை. அவற்றுள் பல பெரஸ்ரோய்க்காவின் பின்னர் சோவியத் அரசின் அனுமதியுடன் பிரிந்து போய்விட்டன.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை வரவில்லை அதற்குக் காரணம் தமிழ்த் தேசியம் சரிவர நிர்மாணிக்கப் படாததேயாகும். ஆகத் தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுத்துத் தெற்காசியப் பிராந்தியத்தில் நிலைப்படுத்தப் போதிய ஜனநாயக வழிமுறைகளிருந்தும் சர்வதேச ரீதியில் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தமிழினத்தின் அணுகு முறைகளால் தமிழ்த் தேசியமும், தமிழீழ தேசியமும் இன்று தேடுவாரற்றுப் போய்விட்டதேயன்றி இந்தியா இதற்குக் காரணமல்ல.

இந்தியா பிரிவினை வாதமென்னும் கடும்போக்கற்ற மென்மையான சுயதேசிய வாதத்திற்கு ஒருபோதும் குறுக்கே நிற்கவில்லை. தெற்காசியப் பிராந்தியத்தின் ஒற்றுமை சிதையாத சுயதேசிய வாதத்தை எந்த இனம் முன்வைத்தாலும் அதனை இந்தியக் கூட்டமைப்பினால் தடுத்து நிறுத்த முடியாது. அதற்குத் துணைபோகவும் இந்தியா முன்வரும் அப்படித்தான் எங்களுக்கு உதவ அது முன்பு முன்வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.