Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கொரு நாடு கேடா:??? : கவிதை : நிழலி

Featured Replies

எமக்கொரு நாடு கேடா....

வெறுப்பு உமிழும் காலம்

மீது வாழ்வு சூழ் கொள்கின்றது

ஒரு கண்ணை மறு கண்

பிடுங்குது

தான் பார்க்கா காட்சிதனை

நீ பார்த்தல் ஆகாது

என ஆவேசம் கொள்ளுது

எதிரியின் தணல் எடுத்து

மறுகண்ணை

சுடுது

இது எம் சாபம்

யுகங்கள் தோறும்

நாம் இப்படி தான்

இருந்தோம்

ஒரே காட்சியை

ஒவ்வொருவரும்

வர்ணம் பூசி பார்த்தோம்

என் வர்ணம்

பார்க்காத கண்னை

வீதியின் முடிவில்

குச்சொழுங்கையில்

குடி வைத்தோம்

எம் கண்ணை நாமே

குருடாக்குவோம்

எம் கைகளில்

நாமே விலங்கிடுவோம்

வரலாற்றின் நீண்ட பக்கம்

எங்கும் எம்

தோல்வியை நாமே

எழுதிக் கொள்வோம்

எம் முதுகெலும்பில்

எதிரியின் மாட்டுச் சாணத்தை

அப்பியது நாம்

எம் குடிசைகளில்

கண் வைத்து

சகோதரிகளின்

அம்மணத்தை விற்றதும்

நாம்

ஈற்றில் எம் ஊரை

விற்றுக் கொடுத்ததும்

நாம்

இது எம் சாபம்

யுகங்கள் தோறும்

நாம் இப்படி தான்

இருந்தோம்

எமக்கொரு நாடு கேடா

உலகத்தின் எச்சில்

எம் முகத்தில்..

எதிரியின் மலம்

எம் உணவில்..

இருட்டில் உலவும்

காட்டேரியுடனும் உறவு கொள்வோம்

எம் இனத்தை சாகடிக்க

என் எதிரியின்

மூத்திரம் எனக்கு

தாகம் தீர்க்கும்

அவன் என் பங்கு

கேட்கும் தம்பியை

கொன்றால்...

சிறையுடைக்க வந்தவர்களையே

சிறை கட்ட ஆணையிட்டோம்

எம் சிறகாய் தம்மை ஆக்கியவர்களை

ஈட்டி முனையில் கொளுவி

எதிரிக்கு காட்டிக் கொடுத்தோம்

எமக்கொரு நாடு கேடா

என் இனம் பற்றி

கனவு வரும் ஒவ்வொரு

வேளயிலும்

என் படுக்கை முழுதும்

பூரான்கள் ஊர்ந்தன

என் ஊர் பற்றிய

நினைவுகளில்

மின்சார கம்புகளில்

பிணங்கள் தொங்கின

(மண்டை பிளந்து இருந்தது)

என் அண்ணனும்

அவனின் காதலியும்

ஒருவரை ஒருவர்

சுட்டுக் கொன்றனர்

சாக முன் இறுதி

கணத்தில்

"நீ துரோகி என " கூக்குரல் இட்டனர்

முன்னொரு நாள்

இருவரும் யாருமற்ற

ஓரிரவில்

விடுதலைக்கு போயிருந்தனர்

இது எம் சாபம்

யுகங்கள் தோறும்

நாம் இப்படி தான்

இருந்தோம்

எதிரியின் முலையறுபட்ட

குவேனி கிழவியா

எமக்கு

இப்படி ஒரு செய்வினை

செய்தது

ஒவ்வொரு தடவையும்

எம் கண்ணை நாம்

குத்தும் போது

துட்டகை முனி

சிரித்துக் கொண்டான்

தன் கணக்கு சரியென

எமக்கொரு நாடு கேடா

வரலாறு தோறும்

எம் தோல்வியை

ஊரும் சரக்கு அட்டையென

எழுதிச் செல்வோம்

:

நிழலி

Sep 06, 2009

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது

வேதனை தரும் உண்மை அததான்

சுட்டபின் நெருப்பு

பட்டபின் துடிப்பு

தோல்வியின் வெதும்பல்

நாளை

இதுவே படிக்கல்

தவறுகள் வருவது வழமை

அதற்காய்.. வாழ்க்கை மலசலகூடத்தினுள்

வாழப்படவேணும் என்று இல்லைத்தானே?

நான் அண்மையில யாழில ஈழத்தின் குழந்தை என்பவரிண்ட கையெழுத்தை வாசிச்சு இருந்தன். அதில எழுதப்பட்டு இருந்தது "நாங்கள் செய்கின்ற தவறுகளுக்கு அனுபவம் என்று பெயர் வைக்கின்றோம்"... இப்படி..

தனியே, எங்களை மட்டும் பார்க்காது இனி வருகின்ற சந்ததிகள் பற்றியும் யோசிக்கலாமே..?

தற்செயலாய்... போராட்டம் வெற்றிபெற்று தமிழீழம் கிடைச்சு இருந்தாலு இப்படி சொல்லி இருப்பமா? அந்தநேரத்தில செய்யப்பட்ட தவறுகள் எல்லாத்தையும் மன்னிச்சு இருப்பம் இல்லையா?

இனி கொஞ்சம் பொசிட்டீவாய் சிந்திக்கிறது நல்லதோ என்று சொல்லத்தோன்றுது.

  • தொடங்கியவர்

பதிலுக்கு நன்றி மாப்பு

தற்செயலாய்... போராட்டம் வெற்றிபெற்று தமிழீழம் கிடைச்சு இருந்தாலு இப்படி சொல்லி இருப்பமா? அந்தநேரத்தில செய்யப்பட்ட தவறுகள் எல்லாத்தையும் மன்னிச்சு இருப்பம் இல்லையா?

அப்படி கிடைத்திருந்தால்....அது தமிழனின் வெற்றியாக இருந்திருக்காது.....அந்த வெற்றி தமிழனின் பலவீனங்களில் இருந்து தப்பி பிறந்த, பிரதேசவாதமோ, சாதி பிறழ்வோ பார்க்க தெரியாத, எம் இனத்தை தமிழர்கள் என்று மட்டுமே பார்க்க தெரிந்த பாவி பிரபாகரனின் வெற்றியாக இருந்திருக்கும். இன்றைய தோல்வி..அத்தகைய பெருந்தலைவனின் ஆளுமைகளை மேவிய எம் பலவீனத்தினதும். ஒற்றுமையின்மையினதும் பெறுபேறு...இதில் Positive ஆக சிந்திக்க எனக்கு எதுவும் கிடைக்கவில்லை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குவிந்திருந்த வைகோற் பட்டடைகள் மீது நாமே கொள்ளி வைத்தோம். ஒவ்வொரு கவியல்களும் எரியும் போதும் நாமும் இணைந்து தான் வேலைக்கு போனோம். கலியான வீடு, சடங்கு, நடனம் என்று எத்தனையோ செய்தோம். இன்னும்....

யார் யார் மீதோ எல்லாம் பழியைப் போட்டு நாம் தப்பிக்க நினைக்கின்றோம் சமூகத்தின் மீதும்... இளைஞர்கள் மீது.... அமைப்புக்கள் மீது... பொறுப்பாளர்கள் மீது... இன்னும் இன்னோரென்னா சம்பவங்கள் மீது நாம் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டோம்.

ஏன் எனில்... நாம் இதற்க்கு காரண கர்த்தாக்கள் இல்லை என்பதை பறை சாற்ற! தவறுகள் இல்லை என்று சொல்லவி;ல்லை ஆனால் தோல்வி முகத்தை நீங்கள் கடந்த சில மாதங்களாக காட்டும் வேகம்... விதம் இரண்டுமே ஆபாத்தானது அபத்தமானது.

தோல்வி என்பது தவிர்க முடியாது என்ற கட்டத்தில் அதை எதிர்கொள்ள வேண்டும். அதை எதிர்கொள்ள முடியாதவர்கள்... ஒதுங்கி கொள்ள வேண்டும்.,.

இங்கு யாரையும் போராட்ட களத்திலிருந்து ஒதுங்க சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை எனினும் இன்னமும் ஈழக்கனவை நெஞ்சில் சுமந்த படி இருக்கும் எத்தனையோ ஆயிரம் மாவீரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஒரு தமிழனாய் நம்பிக்கை இல்லாது மற்றவர்களையும் குழுப்பத்தில் ஆழ்த்தி அவநம்பிக்கையை தரும் கவிதைகள், ஆக்கங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் என்பவற்றை தவிர்ப்பது நல்லது என்று சொல்கின்றேன்.

நமக்கு ஒரு நாடு வேண்டும். அது தாயகத்தமிழர்களை பொறுத்தது அல்ல தமிழர்களைப் பொறுத்தது. ஒட்டுமொத்த தமிழர்களை பொறுத்தது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தைகளை இப்படி அற்புதமாகக் கோர்க்கும் இந்த கவிதை மிக ஆழமாய் நெஞ்குள் புகுந்து அறுக்கிறது.

நாங்களைப் பற்றிய நல்ல கவிதை. நிழலி இது உங்களின் ஆளுமைமிக்க வார்த்தைகள்.

Edited by four four bravo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி

உங்கள் கவிதைகலை நான் விரும்பிப் படிப்பதுண்டு ஆனால் சமீபகாலமாக மிக உங்கள் வரிகளில் ஏமாற்றம், தோல்வி என்பனவற்றின் வெளிப்பாடுகளே மிக அதிகமாகக் காண்கிறேன்....

நாங்கள் அடைந்தது இறுதித் தோல்வியென எப்படி முடிவெடுத்தீர்கள்? சிலபேருடன் ஆரம்பித்த போராட்டம் முப்படைகளுடன் பல்லாயிரம் போராளிகலைப் பலிகொடுத்து பல்லாயிரம் போராளிகளுடன் இருந்து ஒட்டுமொத்த உலகத்துடனேயே போராடியதை எப்படி மறந்தீர்கள் போராட்டம் தொடங்கிய காலகட்டத்திலிருந்து இன்றுவரை எவ்வளவு துரோகம், எவ்வளவு காட்டிக்கொடுப்புக்கள் என்பவற்றை சந்தித்தே வளர்ந்து வந்திருந்தது என்பதை ஏன் நினைவுகொள்ளத் தவறிவிட்டீர்கள்.

ஒவ்வொருவரிடமும் உண்மையான விடுதலையுணர்வு இருக்குமிடத்து அதை நோக்கிய பாதையில் செல்வதைவிடுத்து நாங்கள் அதுசெய்தோம் இது செய்தோம் என்று மற்றவர்களைக் குறைகூறி குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி எங்கள் தவறுகளை சுலபமாக மறைத்து விடுதலையுணர்வுள்ள மக்களின் மனங்களையும் குழப்புவதைவிடுத்து மனச்சாட்சிகளைத் தொட்டுப்பார்த்து நாங்கள் நாட்டுக்கு என்ன செய்தோம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று எங்களையே நாம் கேட்டு முதலில் முகாமில் மடிந்துகொண்டிருக்கும் நம் உறவுகளை விடுவிக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்... அல்லது விடுதலையுணர்வை சிதறடிக்கும் எந்தச் செயற்பாட்டிலும் இறங்காமல் எதுவுமே செய்யாமல் அமைதியாக இருப்போம்.... இதுவே நாம் நாட்டுக்குச் செய்யும் சிறந்த பணியாகும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து கடந்த 3 மாதத்தில் முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்க புலம்பெயர்ந்த ஈழச்சமூகம் செய்த அரசியல் நகர்வுகள் என்ற என்பதை யாரேனும் சொல்லமுடியுமா..? அல்லது முகாம் மக்களை விடுவிக்க இனி செய்ய இருக்கிற தெளிவான அரசியல் திட்டத்தினை சொல்லமுடியுமா..? சும்மா முகாம் மக்களை விடுவிக்க ஒற்றுமையுடன் செயற்படுவோம் செயற்படுவோம் என்றால் ஆச்சா... ? ஒரு புலி எதிர்ப்பாளன்.. கடந்த 6 மாசத்துக்கு முதல்.. நான் ஊர்வலம் போனபோது நீ புலிகளை காப்பாற்றத்தான் போகிறாய் என்றான். நான் போடா விசரா.. என்றேன். போன மக்கள் எல்லோருக்குமே சனங்களும் முக்கியமாயிருந்தார்கள். ஆனால் இப்ப....?

அவன் திரும்ப சொல்கிறான்.. "சனங்களுக்காக போயிருந்தால்.. இப்போ எங்கே போயின ஊர்வலமும் உண்ணாவிரதமும் என்று... "

எதிரிகளின் கைகளில் பொல்லைக் கொடுத்தது யார்..?

  • தொடங்கியவர்

பதில் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

காவியன், பறவைகள் மற்றும் மின்னஞ்சலில் இதே போன்ற கேள்வியை கேட்டவர்களுக்கு,

நீங்கள் சொல்வது போல் அண்மைக் கால என் கவிதைகளில் வெறுப்பும் விரக்தியும் அதிகமாக நிற்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். இந்த உணர்வு மே மாதம் 19 களில் ஏற்பட்ட நிகழ்வுகளாலோ அல்லது முள்ளிவாய்க்கால் முடிவாலோ வந்தது அல்ல. அதற்கு பின்னர் ஏற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களால் தான். மிக உன்னத இலட்சியக் கனவை வரித்துக் கொண்டு உயரிய தியாயங்களை செய்து நாம் வளர்த்த எம் போராட்டம் இன்று அடியோடு வீழ்ச்சியுற்றுப் போனது எமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையால் தான். நாம் இன்று முன்னரை விட இன்று மிகவும் மோசமாக பிளவுற்று இருக்கின்றோம். ஒரு தலைவனின் கீழ் ஓரளவிற்கேனும் அணி திரண்டு இருந்த நாம் திக்குதிசை இன்றி குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். எதிரி ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைமைத்துவத்தினை மட்டும் தான்இராணுவ ரீதியில் அழித்தான்...ஆனால் அதனை, அந்த இயக்கத்தை முற்றாக இனி இயங்கவே முடியாத வகையில் இல்லாதொழிக்கும் செயல்பாடுகளில் இன்று ஈடுபடுவது தமிழ்ர்களாகிய நாம் தான்.

இனி பரந்துபட்ட வீரியமுள்ள போராட்டம் நடைபெறவேண்டும் எனில், அதற்கான முன் பணியாக எம்முள் ஐக்கியம் அவசியம். எமக்குள் இருக்கும் பிறழ்வுகளையும், பிளவுகளையும் நேர்படுத்தாமல், எந்த போராட்டமும் சாத்தியமில்லை. இன்னும் நூறு பிரபாகரன் வந்தாலும் எம் முடிவு இன்றைய முடிவை விட மிக மோசமானதாகத் தானிருக்கும். சகிப்புத் தன்மையும், முரண்பட்ட கொள்கையுடையவர்களையும் அரவணைத்து போகும் அரசியல் நெகிழ்வும், விமர்சனங்களை தாங்கும் பக்குவமும், தன்னை மீள் விமர்சனம் செய்யும் பரந்த அறிவும் எம் சமூகத்தில் உருவாக வேண்டும். இவை அறவே இல்லாமல் இருக்கும் எம் சமூகத்தினுள் உருவாகக்கூடிய அனைத்து பேரியக்கங்களும், படு மோசமான தோவியையே சந்திக்கும்.

நான் குறிப்பாக இந்த கவிதையை எழுதியதற்கு முழுக் காரணமும் எம்மை உள்ளே பார்க்க முற்படுவதால் தான். எதிரி எம்மை சிதைக்க கையாண்ட / கையாளுகின்ற மிக உயரிய ஆயுதம் எம் ஒற்றுமையின்மைதான். அவனுக்கு அதனை பயன்படுத்தும் வாய்ப்புகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே போகின்றோம். நிலமை அப்படி இருக்கையில், வெறும் கனவில் கவிதை வார்க்க முடியாது. இது போராட்டம் தோல்வியினால் ஏற்பட்ட விரக்தியில் வந்ததல்ல. அதன் பின் ஏற்பட்டு வரும் மிக மோசமான பிளவுகளை பார்த்து ஏற்பட்ட ரணங்களில் வரும் கவிதைகள். தோல்வி முகத்தை காட்டும் கவிதை அல்ல இவை, மாறாக இந்த தோல்வியினை நிரந்தரமாக்க பாடுபடும் எம் பிளவுகளின் வலிகளில் இருந்து வரும் வார்த்தைகள். எம் சமூகத்தினுள் இருக்கும் இந்த நிலையை ஏற்றுக் கொள்ளாமல், இப்படியான கவிதை வந்துவிட்டவுடன் எம் போராட்ட உணர்வு மழுங்கடிக்கப் படுகின்றது எனச் சொல்வதே ஒரு வகை எம்மை நாமே ஏமாற்றும் செயல்தான். எம் சமூக பிளவுகளின் யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், எம் சமூக சிதைவை நேர்படுத்தாமல், கோடிக் கணக்கான எழுச்சி தரும் கவிதைகளையும், பாடல்களையும் பாடிக்கொண்டிருந்தால், அதனால் உந்தப்பட்டு கூர்மையைடையும் விடுதலை உணர்வும் கூட தன்னளவில் குறைபாடுகளையும், தோற்பதற்கான அனைத்து காரணிகளையும் கொண்டுதான் முனைப்படையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து கடந்த 3 மாதத்தில் முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்க புலம்பெயர்ந்த ஈழச்சமூகம் செய்த அரசியல் நகர்வுகள் என்ற என்பதை யாரேனும் சொல்லமுடியுமா..? அல்லது முகாம் மக்களை விடுவிக்க இனி செய்ய இருக்கிற தெளிவான அரசியல் திட்டத்தினை சொல்லமுடியுமா..? சும்மா முகாம் மக்களை விடுவிக்க ஒற்றுமையுடன் செயற்படுவோம் செயற்படுவோம் என்றால் ஆச்சா... ? ஒரு புலி எதிர்ப்பாளன்.. கடந்த 6 மாசத்துக்கு முதல்.. நான் ஊர்வலம் போனபோது நீ புலிகளை காப்பாற்றத்தான் போகிறாய் என்றான். நான் போடா விசரா.. என்றேன். போன மக்கள் எல்லோருக்குமே சனங்களும் முக்கியமாயிருந்தார்கள். ஆனால் இப்ப....?

அவன் திரும்ப சொல்கிறான்.. "சனங்களுக்காக போயிருந்தால்.. இப்போ எங்கே போயின ஊர்வலமும் உண்ணாவிரதமும் என்று... "

எதிரிகளின் கைகளில் பொல்லைக் கொடுத்தது யார்..?

புலிகள் இராணுவரீதியாக அழிக்கப்படும் வரை புலிகள் புலம்பெயர்ந்தோருக்கு பல அமைப்புக்களினூடாக விடுத்த வேண்டுகோள் வீதியில் இறங்குங்கள்.. வீதியில் இறங்குங்கள்... மக்களைக் காக்க உங்களால் ஆனதைச் செய்யுங்கள் என்று.... அதன் படியே பல அமைப்புக்களின் ஒழுங்கு படுத்தப்பட்ட போராட்டம் தன்னிச்சையான போராட்டம் என பல போராட்டங்களில் பெருமளவு மக்கள் மக்கள் வீதியிலே இறங்கினார்கள் ஆனால் உலக நாடுகளின் சதி எங்களுக்கெதிராகவே அமைந்தது...அது எங்களின் துரதிஸ்டம்....

ஆனால் புலிகளின் கட்டமைப்புக்கள் சிதைந்து அவர்கள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டதும் அது எல்லா மக்களையும் எப்படிப் மனதளவில் பாதித்தது என்பதை நன் சொல்லவேண்டியதில்லை.... அத்துடன் நீ இதைச் செய் என்று சொல்ல ஒருவருமே இல்லாத நிலையில் புலம்பெயர்சமூகம் விடப்பட்டது உண்மை... அத்துடன் புலிகளின் அடுத்த தலைவரென்று அறிவிக்கப்பட்ட கே. பி கைது போன்ற சில சம்பவங்கள் மேலும் மக்களைக் குழப்பமடைய வைத்துக்கொண்டிருப்பதே எல்லாம் ஒரு தேக்க நிலையிலிருக்கக் காரணம்...

புலம்பெயர்தேசத்திலே ஒழுங்குபடுத்தப்பட்ட ஒவ்வோர் போராட்டத்துக்கும் ஏற்படும் செலவு, அதற்குரிய அனுமதி பெறுவது, செய்த போராட்டங்களுக்கு உடனடிப் பலன் கிடைக்காமை, எங்களுக்கு ஓர் தலமையிருந்து அதன் அந்தத் தலமையின் அறிவுறுத்தல்களின் பேரில் இயங்குவது போன்ற பல சிக்கல்களில் மாட்டுப்பட்டு தவித்துக்கொண்டிருக்கும் புலம்பெயர் தேசத்தின் செயற்பாடுகள் ஆமை வேகத்திலேயே இருக்க எங்களுக்கெதிரான பலவிதமான செயற்பாடுகளில் இலங்கையரசு அசுரவேகத்தில் செயற்பட்டுக்கொண்டிருப்பதே உண்மை...

இந்தச் சதியை உடைக்கத் தான் எங்களின் ஒற்றுமை தேவையென்றேன்... தனி மனிதர்களாய் நாங்கள் சிலபேர் சேர்ந்து ஒரு போராட்டத்தை புலத்திலே நிகழ்த்தமுடியாது அதற்கு மேற்குறிப்பிட்ட சிக்கல் பலவுண்டு... திடீரென மக்கள் எல்லாரும் வீதியிலிறங்கி போராடும் மன நிலையிலும் இல்லை.. எனவே நீங்களிருக்கும் நாடுகளின் தமிழர் அமைப்புக்களை கேழுங்கள் ஏன் மக்களை விடுவிக்கும் காத்திரமான செயற்பாடுகள் ஏதும் எடுக்கப்படவில்லையென்று அவர்களின் பதில் சாதகமாக அமையாவிடத்து நீங்கள் அவர்களின் செயற்பாடுகளை மக்களுக்கு அறிவித்து அவர்களைத் தூக்கியெறியுங்கள் முடிந்தால் அந்தப் பொறுப்பை நீங்களெடுத்து செய்யுங்கள்...

கட்டமைப்புக்கள் சிதைந்திருக்கும் ஓர் சமூகம் அதைக் கட்டியெழுப்புவது எங்கள் ஒவ்வோருவரினதும் கடமையென்பதை மறக்கவேண்டாம்.....

உலகத்திலே மிக சுலபமான இரண்டு விடயங்கள் அறிவுரை சொல்வதும் கேள்விகள் கேட்பதும்... கஸ்ரமான விடயம் ஒரு பொறுப்பையெடுத்துச் சரியாகச் செய்வது....

அத்துடன் நீங்கள் பொராட்டத்துக்குப் போகும் போது எதிர்த்த உங்கள் நண்பனையே உங்கள் பக்கத்துக்கு மாற்றி எங்கள் இனம்படும் துன்பத்தை விளக்கி அவரையும் போராட்டத்துக்கு அழைத்துச் செல்லப் பாருங்கள் அல்லது அவர் சொல் கேட்டு நீங்களும் போவதை நிறுத்திவிட்டால் நீங்கள் கேட்ட கேள்விகலுக்கு பதில் தேட வேண்டிய பொருப்பை உங்களிடமே விடுகிறேன்....

காவியன்...

Edited by காவியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.