Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவுடன் த.தே.கூ. 2 மணி நேரம் பேச்சு: மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்து

Featured Replies

வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தமது மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுள்ளது.

மகிந்தவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு நீடித்த அதேவேளையில், படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் உடனடியாக மீள்குடியேற்றம் சாத்தியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரித்துவிட்டார்.

இதற்குப் பதிலாக முகாம்களில் உள்ளவர்கள் தமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் இல்லங்களில் சென்று வசிப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மகிந்த, அது தொடர்பாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 5:00 மணியளில் தொடங்கிய பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று கலந்துகொண்டது.

பேச்சுவார்ததைகள் முடிவடைந்த பின்னர் அது தொடர்பாக இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்:

"சிறிலங்கா அரச தலைவருடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது. இதில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம் முக்கியமாகக் குறிப்பிட்டோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.

இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் வேலைத்திட்டம் ஒன்றில் மீள்குடியேற்றுவதாக அரசு தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையில் அதில் 10 வீதமானவர்களைக் கூட அரசு மீள்குயேற்றவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அதனால் இந்த மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என நாம் இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக கேட்டுக்கொண்டோம்.

அவர்கள் கண்ணிவெடிகளை அந்தப் பகுதியில் இருந்து அகற்றவேண்டிய தேவை இருப்பதாக நீண்ட ஒரு விளக்கத்தைத் தந்தார்கள். ஆனால், கண்ணிவெடிகள் குறைவாக உள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், அதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ளவர்களை முதலில் குடியேற்றக் கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.

இதனைவிட வவுனியாவில் உள்ள முகாம்களில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம். இங்குள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வசிப்பதற்கு விரும்பினால் அவர்கள் அங்கு செல்வதற்கு அரசு அனுமதிப்பது அவசியம் எனவும் நாம் தெரிவித்தோம்" என சம்பந்தன் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மகிந்த, இவ்வாறான அறிவித்தல் ஒன்றை தாம் ஏற்கனவே வெளியிட்டிருப்பதாகவும் மேலும் அது தொடர்பாக பகிரங்கமாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார். இதன்படி முகாமில் உள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு விரும்பினால் அதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மகிந்த சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வவுனியா முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பதிலளிப்பதாக மகிந்த வாக்குறுதியளித்திருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

08/09/2009, 11:31

மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இரு மணி நேரம் பேச்சு! சந்திப்பு திருப்த்தி என கூட்டமைப்பு தெரிவிப்பு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் இச்சந்திப்பு அரச அதிபர் மாளிகையான அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது இரு மணிநேரம் நீடித்துள்ளது.

சந்திப்பின்போது,

வடக்கில் யுத்த முன்னெடுப்புகளால் இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியமர்த்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச கண்ணிவெடிகள் அகற்குவதில் தாமதம் ஏற்படுவதால் மீள்குடியமர்த்துவது தற்போது சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்து போது, இவ்வாறான நடைமுறையை தற்போது சிறீலங்கா அரசாங்கம் செய்துவருவதால் இதனை நாம் வெளிப்படையாக அறிவிக்கின்றோம் என மகிந்த கூறியுள்ளார்.

pathivu

துரோகிகள்!!!

83இலேயே இவர்களை முற்றாக அழித்திருக்க வேண்டும்!!!!! விட்டதின் பலன் இப்போ???? 48ல் இருந்து 83 வரை இவர்களுக்கு தமிழ் மக்கள் சந்தர்ப்பம் கொடுத்தாச்சு!!!! 35 வருடங்களாக இவர்கள் ஒன்றையும் கிழிக்க வில்லை!!! அதனால்தான் தலைவரின் சிந்தனையே உருவானது!!!!! இவர்களை ஒதுங்கச் சொல்லி டக்கிலசையும், கருணாவையும் அமர்த்தலாம்!!!

நான் சொவது சரிதானே?????? பின்பு கேட்கக்கூடாது, 83ல் இருந்து இன்றுவரை விபுக்களுக்கு சந்தர்ப்பம் மட்டுமல்ல ... உயிர், உடமை, ... அனைத்தையும் கொடுத்து ஒன்றையும் காணவில்லை, அழிவையும், அவலத்தையும் மட்டுமே சந்தித்தோம் என்று???

துரோகிகள்!!!!! யார்????? வரலாறு சொல்லும்!!!!

Asian Tribune: Did you point out anything? Regarding the toilet facilities? We hear there is only one toilet for every 200 persons there in the camps?

N. Srikantha, M.P: The Government knows this. There was no need for us to specially point out. We discussed this issue and several other related issues. Let us remember one thing. IDP camps are not homes. These are temporary arrangements. As long IDPs live in the camps, they will have some difficulty, some hardship. The government is trying to mitigate the hardships. Our worry is once the rainy season comes, the IDPs will have more problems. We voiced our concerns to the President and his advisors. Frankly, it is not a problem of the government alone. We must raise above politics and interact with the government for the good of the IDPs.

Asian Tribune: If you stance is Sri Lankan government is your government then you have to talk to the government.

N. Srikantha, M.P: Yes. This is what we are doing. When you talk of one country, then you have only one government

Asian Tribune: Do you say “Sri Lanka government is our government?”

N. Srikantha, M.P: Any government, you may not like that government but that is your government, our government....

எப்பிடியிருக்கு! எங்கடை அரசாங்கம் சிறீ லங்கா அரசாங்கம் என்று ததேகூ அடிச்சினம் பாருங்கோ ஒரு பல்டி!

இதுக்கு பிறகு என்ன இருக்கு! டக்கிளஸ், கருணா, மாத்தையா, பிள்ளையான் இப்ப ததேகூ...

யார் துரோகிகள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சந்தேகம் @@டக்கிளஸ், கருணா, மாத்தையா, பிள்ளையான்@@இந்த குரங்குகள்தான் துரோகிகள் :lol::lol::lol:

துரோகிகள்!!!

83இலேயே இவர்களை முற்றாக அழித்திருக்க வேண்டும்!!!!! விட்டதின் பலன் இப்போ???? 48ல் இருந்து 83 வரை இவர்களுக்கு தமிழ் மக்கள் சந்தர்ப்பம் கொடுத்தாச்சு!!!! 35 வருடங்களாக இவர்கள் ஒன்றையும் கிழிக்க வில்லை!!! அதனால்தான் தலைவரின் சிந்தனையே உருவானது!!!!! இவர்களை ஒதுங்கச் சொல்லி டக்கிலசையும், கருணாவையும் அமர்த்தலாம்!!!

நான் சொவது சரிதானே?????? பின்பு கேட்கக்கூடாது, 83ல் இருந்து இன்றுவரை விபுக்களுக்கு சந்தர்ப்பம் மட்டுமல்ல ... உயிர், உடமை, ... அனைத்தையும் கொடுத்து ஒன்றையும் காணவில்லை, அழிவையும், அவலத்தையும் மட்டுமே சந்தித்தோம் என்று???

துரோகிகள்!!!!! யார்????? வரலாறு சொல்லும்!!!!

அந்த குரங்குகள் என்ன செய்து விடும்? குரங்குகளிடம் கொடுப்பதை விட இருப்பவரிடமே இருக்கட்டும். ஒதுங்கச்சொல்லுபவர்கள் பக்கம்தான் மக்கள் இருக்கினம் என்று உண்மமயை ஒத்துக்கொண்டதுக்கு நன்றி :(:lol::lol:

Edited by சித்தன்

யாருக்கு தலை வணங்கக்கூடாது என்று ஆயுதம் தூக்கினோமோ, அவனிடமே பிச்சை கேட்க வைத்து விட்டார்கள் ........

மன்னிக்கவும் ..... வைத்து விட்டோம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு தலை வணங்கக்கூடாது என்று ஆயுதம் தூக்கினோமோ, அவனிடமே பிச்சை கேட்க வைத்து விட்டார்கள் ........

மன்னிக்கவும் ..... வைத்து விட்டோம்!

உண்மைதான்

தோல்வியில் எமது பங்கை முதலில் உணர்வோம்

நேற்று சந்திப்பு, இன்று ......

Daily mirror breaking news.....

The government has decided to release the displaced families having relatives who are willing to accommodate them, Minister of Resettlement and Disaster Relief Services Minister Rishad Bathiudeen said today.

The Minister said that the Grama Seva Niladharis, the Divisional Secretaries and the Police should confirm the identities of such persons willing get their loved ones released from the relief villages and camps. He said that the consent of the IDPs to live with their relatives should be there for the government to let them out. (KB)

நாளை புலம் பெயர் தமிழர்கள் அரசியல் அநாதைகள்! இனியும் நமது சிந்தனையை மாற்றாது போனால் நிச்சயம் அரசியல் அநாதைகளாகி புலம்பெயர் மண்ணிலேயே மரித்து விடுவோம்!

முகாம்களில் உள்ளவர்களை அவர்களது வாழ்விடங்களில் குடியமர்த்தும்படி உலகம் முழுவதும் கேட்டும் அதற்குச் செவிசாய்க்காத சிங்களவர் தமிழ் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதும் எப்படி இறங்கி வந்தார்கள் என்பதை வைத்துக் கற்பனைகளை வளர்க்க வேண்டாம்.

ஏற்கனவே இணங்கப்பட்ட GSP + வரிச்சலுகையையும் IMF கடனையும் மீழ் பரிசோதனை செய்யப் போகிறார்கள். தமிழ் கூட்டமைப்பினரைச் சாட்டாக வைத்து மகிந்தா காய் நகர்த்துகிறார் எனத் தோன்றுகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்து போது, இவ்வாறான நடைமுறையை தற்போது சிறீலங்கா அரசாங்கம் செய்துவருவதால் இதனை நாம் வெளிப்படையாக அறிவிக்கின்றோம் என மகிந்த கூறியுள்ளார்.

வேதனை!! மக்கள், தாம் பிறந்து, வளர்ந்து உழைப்பைக் கொட்டிய தம் வீடு, வளவுகளில் மீள குடியேற முடியாமல்/விடாமல் அகதிகளாகவும், ஏதிலிகளாகவும் பிறரை நம்பியே வாழ்கையை ஓட்ட செய்யப்படும் சதி!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு பிறகு என்ன இருக்கு! டக்கிளஸ், கருணா, மாத்தையா, பிள்ளையான் இப்ப ததேகூ...

யார் துரோகிகள்?

அடேயப்பா!!! இதே Bond007 2006 இல் தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்! எனும் தலைப்ப்பில் துரோகிகளைப் பற்றி ஒரு அலசல் அலசியிருக்கிறார் பாருங்கள்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=9966&hl=

அதில் சில வரிகள்:

மாத்தையா யார் என்று நமக்க தெரியும். இந்தய அரசுடன் நமது தலைவர கெலை செய்ய சதியும் நமக்கு தெரியும். மாத்தையா அன்று வென்றிருந்தால் நமது தேசியம் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். மாத்தையா இவ்வாறு துரோகம் இழைக்கையில் அவருடன் இருந்த அனைவரும் விசாரிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. தேசியத்தின் மீது பற்று வைத்திருந்த அனைவரும் தாம் மாத்தையாவுடன் இருந்தாலும் தேசிய விடுதலைக்கோ அல்லது அதன் தலைமைக்கோ ஒரு போதும் துரோகம் இளைக்கவில்லை என நிருபித்தார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் இயக்தில் உள்வாங்கப்பட்டார்கள். எந்த ஒரு அமைப்பில் உள்ளவர்களும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகையில் தாம் குற்றம் அற்றவர் என்பதை நீருபிக்க சந்தர்பம் கொடுக்கப்படும். ஆனால் குற்றம் சுமத்தப்பட்டதும் ஓடி ஓளிபவர்களை எப்படி அழைப்பது?

எப்படியெல்லாம் பல்டி அடிக்கிறாங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.