Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனங்கள் மீள முடியாத சகதியில் விடப்பட்டிருக்கிறார்கள்: தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

0

போர் முடிந்து விட்டது. இலங்கை அரசாங்கம் போரில் மிகப்பெரியதும் வரலாற்றில் பெற்றிருக்காததுமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து வௌ;வேறு விதமாக வெற்றிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் பெரிய தலையிடியாக கருதப்பட்ட பயங்கரவாதம் ஒழிக்கப்ட்டிருக்கிறது என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஈழத்தமிழர்களால் பெருங்கனவுடன் தொடங்கப்பட்ட சனங்கள் எல்லாவற்றையும் நம்பி அதற்காக கூலிகளை வழங்கியும் பலிகளை வழங்கியும் அவர்களிடம் பெருந்துயரம் மிஞ்சயிருக்கிறது. எஞ்சிய பேராளிகள் சரணடைந்து விட்டார்கள். பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு பல நூற்றுக்கனக்கான பேராளிகள் கொல்லப்பட்டு பல்லாயிரம் இராணுவம் கொல்லப்பட்டு விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தோற்கடித்திருக்கிறது.

ஆனால் முள்ளி வாய்க்காலில் வலைஞர் மடத்தில் அனுபவித்த துயரங்கள் இன்னும் சனங்;களை தொடருகிறது. மருத்துவமனைகளில் சனங்கள் நிரம்பி வழிகின்றனர். முகாம்களில் கைதிகளின் நிலையில் சொற்களால் வருணிக்க முடியாத அகதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்களை சுகந்திரமாக சென்று பார்வையிடவோ உரையாடவோ முடியாத நிலை காணப்படுகிறது. அவர்கள் வெளியில் வந்து பேச வேண்டும். அவர்கள் அப்படி பேசுகிறபோது எல்லா உன்மைகளும் யதார்த்தங்களும் வெளியில் வரும். ஆனால் முற்றிலும் உரிமைகள் மறுக்கப்பட்டு தனிமைப்படுத்தி அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மருத்துவம், உணவு, தரிப்பிடம் என்பன மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. குறுகிய இடத்தில் காடுகளை வெட்டி குடியமர்த்தப்பட்டிருக்கிறா�

�்கள். செட்டிக்குளத்தில் உள்ள முகாம்கங்கள் வெம்மையில் மிகுந்திருக்கின்றன. கஞ்சியும் கடலையுமாக சிலவேளை அதுவுமில்லாமல் ஒரு நாளுக்கான உணவு மாலை மூன்று மணிக்குத்தான் வருவதாக அறிய முடிகிறது. மரணங்கள் தொடர்ந்து நிகழ்கிறது. போராளிகள் இனங்காணப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளால் கட்டாயமாக சேர்க்கப்பட்ட வயது குறைந்த சிறுவர்கள்கூட புனர்வாழ்வு முகாமிற்கு ஏற்றப்படுகிறார்கள். அவர்கள் அங்கு கொடுமையாக நடத்தப்படுவதை எல்லோருமே அறிந்துதானிருக்கிறாம்.

ஒன்றையும் எடுத்து வரவில்லை என்றுதான் அவர்கள் எல்லோருமே கூறுகிறார்கள். அந்தச் சொற்கள் வாழ்வினதும் பான்பாட்டினதும் பேரழிவைத்தான் உணர்த்துகின்றன. ஒவ்வொரு இடப்பெயர்விலும் அவர்கள் ஏதோ ஒன்றை விட்டு வந்து இழந்து கொண்டிருந்திருக்கிறார்கள். வன்னியில் நடந்த வாழ்க்கையில் நிறைய தனித்துவமான பண்புகள் இருக்கின்றன. தனித்துவமான பொருட்களை வன்னி மக்கள் பாவித்திருக்கிறர்கள். அந்தப் பொருட்களை கடும் உழைப்பில் வாங்கியிருக்கிறார்கள். கடைசியில் அவர்கள் எல்லாவற்றையும் இழந்துதான் வெளியில் எடுக்கப்பட்டார்கள். அணிந்திருந்த ஆடைகளையும் அவைகளையும் களைந்து கொண்டு கள்வர்களைப்போலவும் அடிமைகளைப்போவும் வெளியில் இழுத்தெடுக்கப்பட்டார்கள்.

வன்னி முற்றிலும் மாற்றப்பட இருக்கிறது. அதன் பண்பாடுகள் அடையாளங்கள் அமைப்புகள் என்பன குறித்து மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. நீண்ட காலத்திற்குப்பிறகே மக்கள் குடியமர்த்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது. சில முக்கிய இடங்களில் இப்போதைக்கு குடியேற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாதிருக்கி;;ன்றன. கிளிநொச்சி நகரத்தை சேர்ந்த மக்கள் முறிகண்டி போன்ற இடங்களில் காடுகளை வெட்டி முகாம்களில் குடியமர்த்தப்பட இருக்கிறர்கள். வன்னியை பாதுகாப்பதற்கு 50ஆயிரம் படைகளை புதிதாக படையில் சேர்ப்பதற்கு அரசாங்கம் அறிவிப்பு விட்டிருக்கிறது. தமிழர் தாயகம் இன்னும், முற்றிலும் இராணுவ மயமாக்கத்திற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

;

இந்த அகதிகள் அனுபவித்து வருகிற துன்பங்கள் உலகத்தின் அதிகாரத்தையும் அதன் கூட்டுக்களையும் மீண்டும் நமக்கு காண்பிக்கின்றன. அய்நா என்ற மனிதாபிமானத்துக்குரியதும் அகதிகளுக்குரியதுமானக காட்டுகிற அமைப்புகளும் மற்றும் சனங்களுக்கு எதிரான அமைப்புக்களதும் கருணையில்லாத நடவடிக்கைகள் அம்பலமாகியிருக்கின்றன. உன்மையில் சனங்களுக்கென்று எதுவுமில்லை என்றே படுகிறது. ஈழத்தமிழர்களின் பேராட்டம் தலைமைகளின் போராட்டமாகவும் அதற்கான உள் முரண்பாடுகளிலும் குலைந்து விட்டது. மீள முடியாத சகதி ஒன்றினுள் பயங்கரமான இருள் ஒன்றினுள் சனங்களை தள்ளி விட்டிருக்கிறது எங்கள் கனவு. இழக்க முடியாத எல்லாவற்றையும் இழந்து பேரிழப்புகளை எதிர்கொண்டு எஞ்சியிருக்கிற உயிரை மீள முடியாத கிடங்கில் கொட்டியிருக்கிறது நடந்து முடிந்த போர்.

00

சனங்களை துண்டாடுவதிலும் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்குள் போட்டு கொண்டு செல்லுவதுமாக நிலமை நீடிக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஏ-9வீதியை வைத்து சனங்கள் ஏமற்றப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகிற உதயன் என்ற நாளிதழில் 14.06.2009 அன்று ‘இழவு காத்த கிளியைப்போல ஏ-9வீதிக்காய் காத்திருந்த யாழ் குடாநாட்டு மக்களும் வர்த்தகர்களும்’ என்ற கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருந்தது. பூநகரியை இராணுவம் கைப்பற்றியவுடன் யாழ் நகரமெங்கும் சிங்கக்கொடிகள் பறந்து கொண்டிருந்தன. ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் எங்கும் ‘மக்களின் மனிதாபிமானத் தேவைக்காக ஏ-32வீதியை திறந்து தந்த படையினருக்கும் ஜனாதிபதிக்கும் நன்றிகள்’ என்று யாழ் குடா நாட்டு மக்கள், யாழ் குடா நாட்டு வர்த்தகர்கள், ஓட்டோ சங்கம்’ வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக ஒட்டப்பட்டிருந்தது.

சிங்கக்கொடிகள் கடைகளிலும் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வாகனங்களிலும் பறக்க விடுவது கட்டாயமானதாக இராணுவம் விதித்திருந்தது. மக்கள் திரட்டப்பட்டு வீதிகளில் பேரணியாக சென்று நன்றிகளையும் தெரிவிக்க வைக்கப்பட்டார்கள். தமிழ் மக்களின் தோல்வியாகவும் மீள முடியாத சூழல் ஒன்றினுள் நாம் கொண்டு செல்லப்படுவதையும் அவை உணர்த்தியிருந்தன. வன்னியில் சொந்த சனங்கள் சாகிறபோது அதன் கீழ் வீழுகிற தெருக்களுக்காகவும் நகரத்தற்காகவும் வெற்றிக் கொண்டாட்டங்களில் மக்கள் திரட்டுவிக்கப்படுகிறார்கள்., வெற்றி கொண்டாட நிர்பந்திக்கப்படுகிறார்கள். இலங்கை அராசங்கப் படைகள் தமிழர்களையே தமிழர்களுக்கு எதிராக கையாளுகின்றனர். குறிப்பாக இந் ஆர்பாட்டங்களிலும் கொண்டாட்டங்களிலும் அதுவே நிகழ்ந்தது. மிகச் சங்கடங்களால் யாழ் நகரம் நிரம்பியிருந்தது.

இப்பொழுது ஏ-9 வீதியைத் திறப்பது பற்றிய கோரிக்கையை விட யாழ்ப்பாண வீதிகளில் சுகந்திரமாக செல்லுவதற்கு அனுமதி தேவைப்படுகிறது. ‘கொன்வே’ எனப்படுகிற இராணுவ வாகன அணி நகர்வுக்காக சனங்கள் வீதியை பலிகொடுத்து விட்டிருக்கிறார்கள். ‘கொன்வே’ புலிகளின் தோற்கடிப்பின் பிறகும் நடக்கிறது. அடிக்கடி போடப்படுகிற ‘கொன்வே’யினால் சனங்கள் ஒழுங்கைகளுக்குள் தரித்து நிற்கின்றனர். பேருந்துகள் உள் ஒழுங்கைகளுக்குள் அலைந்து திரிந்து வீதியின் வாசலில் நிற்கின்றன. ஒரு மணித்தியாலத்தில் முடிகிற பயணத்திற்காக ஒரு நாளையே பலியிட வேண்டியிருக்கிறது. பலியடைந்த தெருக்கள் இன்னும் மீளுவதாயில்லை. அவைகள் விசில் சத்தங்களால் அதிர்ந்து கொண்டேயிருக்கிறது.

000

வன்னியில் பேருமிழப்பை மக்கள் அடைந்து விட்டனர். வன்னிச் சனங்கள் கடைசி வரையிருந்து. இலங்கை அரசு போரை திணித்து தமிழ் மக்களை அலைத்து பயங்கரமான இன அழிவு முடிவில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. இங்கு இனச் சுத்திகரிப்புத்தான் நடந்து கொண்டிருக்கிறது. இலஙகை அரசு தனது நோக்கங்களை தந்திரமாக கையாண்டு எல்லாவற்றையும் வென்று கொண்டிருக்கிறது. பேரினவாத்தின் புத்திக்கும் இலக்கிற்கும் நாம்மையே பலியாக்கி தமிழ் மக்களை கொண்டு சென்று விடக்கூடாத இடத்தில் விட்டிருக்கிறது. அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்ட தமிழ் அரசியல் வாதிகள் தற்போது அரசாங்கத்தினால் ஒதுக்கப்படடுக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபைத்தேர்தல் இந்த பிளவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறத�

�. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, ஜனநாயக அணி குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா ஆனந்த சங்கரி முதலியோரை சுகந்திரக் கட்சியில் இணைந்து போட்டியிட வெண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்pறது. குறித்த கட்சிகளும் வேட்பாளர்களும் இதனை நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். சில கட்சிகளின் பெயரில் உள்ள ஈழம் என்ற சொல்லை அகற்றும்படியும் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கட்சிகள் தமிழ் மக்களுக்கு ஆக்க பூர்வமாக எதனையும் செய்யப் போவதில்லை. மாறாக துயரங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறத�

�. வரலாற்றில் அப்படித்ததான் அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம்.

ஆனால் தமிழ் கட்சிகள் இவை என்ற வகையில் இவைகளின் அடையாளங்களையும் முனைப்புக்களையும் கலைத்துவிடவும் அழித்துவிடவும் அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. அரசாங்கம் மற்றும் இந்தக் கட்சிகள் கருதுகிற ஜனநாயகத்தில் குறித்த கட்சிகள் கலந்து செயற்படுவதை அரசாங்கம் தவிர்க்க பார்க்கிறது. மன்மோகன்சிங்குடனும், யசூசிஅக்காசியுடனும், பான்கீமுனுடனும் மகிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்தி புகைப்படங்களில் காண்பிக்கப்பட்ட இந்த தமிழ் மக்களுக்கான ஜனநாயகத் தலைவர்கள் மெல்ல மெல்ல அகற்றப்படுகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜனநாயகமும் அதன் தலைமைகளும் மக்களை காலம் காலமாக பெரும் துன்பத்திற்குள் தள்ளி வந்திருக்கிறது.

போராட்டம் ஜனநாயகம் என்ற எல்லாமே மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியன அல்ல. இந்த அரசுகளை கலைத்து அதிகாரங்களை கலைப்பதன் மூலமே மக்கள் நிம்மதியாக வாழுகிற உலகத்தை ஏற்படுத்த முடியும்., அதிகாரத்தனமான அரசியல் பொருளாதார சுறண்டல் தனமான அடிமை கொள்ளுகிற மனோபாவம் கொண்ட தலைவர்களை தவிர்த்து புதிய சிந்தனையும் போக்கும் சனங்கள் குறித்த அக்கறை கொண்ட தலைவர்களும் நமக்கு தேவைப்படுகிறார்கள். உலகமெங்கும் நடக்கிற எல்லாமே சனங்களுக்கு எதிராகவே நடக்கிறது., உலகம் அப்படித்தான் கட்டமைக்கப்டுகிறது.

0000

தமிழக இதழ்கள் எல்லாம் ஈழத்துப் பிரச்சினைகளை முன்னிருத்தி ஈழத்து சிறப்பிதழ்கள் என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் தமிழக மக்களைளோ இந்திய மக்களைளோ அவை எந்த மன மாற்றத்திற்கும் உள்ளாக இடமில்லை. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதனால் எங்களுக்கு எந்த நன்மையும் நிகழப்போவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற மற்றும் ஈழத்து-இலங்கை இதழ்கள் வேறு ஒரு உலகத்து கதைகளை பேசியபடியிருக்கின்றன. அவை தங்களுக்கு அச்சுறுத்துல்கள் ஏற்படலாம் என அப்படி வருகிற நெருக்கடியை நாம் உணருவோம். காலம் குறித்த பதிவுகளின்றி இந்த இதழ்கள் ஈழத்தில் வெளி வந்து கொண்டிருப்பது காலத்தை இருட்டடிப்பு செய்கிற நடவடிக்கைகளுக்கு சாதகமாயிருக்கிறது.

இந்த நடவடிக்கைகளுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையிலும் கல்வி தொழில் ஊடகம் என்ற எல்லாவற்றையும் iகாளுகிறது இலங்கை அரசு. காலனிய மனிநிலை பாதிப்பை எப்படியும் அறியாத வகையில் மனங்களை உடுருவிக் கொண்டிருக்கிறது. அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறது. மீள நிமிர்த்தக்கூடிய வாழ்வு பற்றி யாரிடமும் தரிசனம் இல்லை. சொற்களற்ற உணர்வற்ற எதுவுமற்ற வாழ்வையும் காலத்தையும் வழங்கி தமிழ் மக்களை இருட்டு வழியில் நடப்பித்து அழிந்து போகிற முடிவுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது அரசு. எதற்கும் அடிப்படையற்று எந்த முனைப்புகளுக்கும் வழியற்று கையறு நிலையில் இருக்கிறோம்.

சூனியமான அரசியல் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிற ஈழ மக்களும் கொடுஞ் சிறைகளில் அகப்பட்டிருக்கிற வன்னி அகதிகளும் நம்பிக்கை கொள்ளவும் வாழ்வை தொடங்கவும் ஒன்றுமற்று நிற்கிறார்கள். மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துக்கொள்ளுகிற போரிற்கு ‘மனிதாபிமானப் படை நடவடிக்கை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. சனங்களை கையகப்படுத்தி அவர்களின் குரல்களை வெளித் தெரியாமல் அடக்கி தனிமை ஒன்றில் வைத்துக்கொண்டிருக்கிறது இலங்கை அரசாங்கம். கேட்பதற்கு யாருமற்று அவர்கள் கிடக்கிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை நம்பிக்கை தரக்கூடிய ஜனநாகத்தை அவர்கள் காணுவதற்கும் அதனால் உரிமைகளையும் வாழ்வையும் வென்றெடுப்பதற்கும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. மீள முடியாத சகதி ஒன்றினுள் எமது சனங்கள் விடப்பட்டிருக்கிறார்கள் என்பதை குறித்து நாம் எல்லோரும் இணைந்து சிந்திக்கவும் செயல்படவும் வேண்டியிருக்கிறது.

நன்றி: உயிர்மை ஆகஸ்ட் 2009

Edited by தீபம்

குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

manmohan-singhகொழும்பு, செப். 20: தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டுவரும் கொதிப்புகளைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் மூலம் சில குறிப்புகளை அளித்திருந்தார்.

நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் தமிழர்கள் கெற்ரவமாக அவரவர் ஊர்களில் சென்று குடியேறவும் தொழில்களில் ஈடுபடவும் இலங்கை அரசு அனுமதிக்காவிட்டால் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்று அதில் உணர்த்தப்பட்டிருந்தது. இதைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங் உடனே இலங்கை அரசை எச்சரிக்கும் பணியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனிடம் ஒப்படைத்தார். அவரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கே கடிதம் எழுதி, தமிழர்களின் அவல நிலை நீடிப்பது நல்லதல்ல என்று உரிய வகையில் எச்சரித்தார்.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபட்சவைச் சந்தித்த இந்தியத் தூதர் அலோக் பிரசாத், தமிழர்களை அவரவர் ஊர்களில் உடனே குடியமர்த்த வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை நேரில் அளித்திருந்தார்.

இத் தகவல்களை இலங்கையின் ""தி சண்டே டைம்ஸ்'' என்ற நாளேடு தெரிவிக்கிறது. இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவதும், மறு வாழ்வு அளிப்பதும் இலங்கையின் உள் விவகாரம் என்று விட்டுவிட இந்தியா தயாராக இல்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்களும் அரசும் தரும் அழுத்தத்துக்கு இந்திய அரசும் அதன் மூலம் இலங்கை அரசும் கட்டுப்பட்டவையே என்பதையும் இப்பத்திரிகைச் செய்தி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

உடனடி நடவடிக்கை: தயாநிதி மாறன் அளித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் இந்தியாவின் உணர்வுகளை அப்படியே தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன் விளைவாக கொழும்பில் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.

அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர் என்று தெரிகிறது.

ஐ.நா. அதிகாரி ஆய்வு: மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் அகதி முகாம்களில் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் லின் பாஸ்கோ கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழர்கள் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் மிகவும் புண்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினார்.

தமிழர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணங்களாக இலங்கை அரசு கூறிய தகவல்களை அவர் ஒப்புக்கொண்டதைப் போலத் தெரியவில்லை. எனவே வரும் ஜனவரிக்குள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்ணி வெடிகளை அகற்றாமல் தமிழர்களை அவரவர் பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியாது என்ற வாதத்தை தமிழர்கள்பால் இலங்கை அரசுக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாகவே கொண்டாலும், முகாம்களில் இருப்பவர்கள் வெளியே வேலைக்குச் செல்வதற்குக்கூட அனுமதி மறுப்பது சரியா என்று லின் பாஸ்கோ கேட்டார். இனி அதிக அளவில் மக்கள் வெளியே சென்றுவர பாஸ்களைத் தருவதாக இலங்கை அரசின் சார்பில் அப்போது உறுதி கூறப்பட்டது.

வீடுகளுக்குப் போகவில்லை? ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த முகாம்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் அரசு அறிவித்தபடி அவரவர் வீடுகளுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

வவுனியா முகாம்களிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி 2,000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண முகாமிலிருந்து 568 தமிழ் அகதிகள் செப்டம்பர் 11-ம் தேதி அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கோ தடுத்து காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகமே கூறுகிறது.

முகாம்களிலிருந்து நாங்கள் அனுப்பிவிட்டோம், மாவட்ட அதிகாரிகள்தான் தமிழர்களைத் தடுத்து நிறுத்திவைத்துள்ளனர் என்று முகாம் அதிகாரிகள் பழியை அவர்கள் மீது போடுகின்றனர்.

உறவினருடன் வசிக்க மனு: முகாம்களில் இருப்பவர்கள் விரும்பினால் வீடுகளில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் போய்ச் சேர்ந்து வாழலாம் என்று கூறப்பட்டது. அதற்காக மனுக்களும் தரப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி மனுச் செய்ய விரும்பியவர்களுக்கு மனுக்கள் கூட தரப்படவில்லை. மனுக்கள் கிடைத்து விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதற்காக அவர்கள் அகதிகள் முகாம் அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் கூட ஈடுபட்டனர்.

உண்மை இப்படி இருக்க, ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோவிடம் அதிபர் மகிந்த ராஜபட்ச பேசும்போது, உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்று கூசாமல் கூறியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.