Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

First Published : 21 Sep 2009 11:59:00 PM IST

Last Updated :

கொழும்பு, செப். 20: தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டுவரும் கொதிப்புகளைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் மூலம் சில குறிப்புகளை அளித்திருந்தார்.

நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் தமிழர்கள் கெüரவமாக அவரவர் ஊர்களில் சென்று குடியேறவும் தொழில்களில் ஈடுபடவும் இலங்கை அரசு அனுமதிக்காவிட்டால் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்று அதில் உணர்த்தப்பட்டிருந்தது. இதைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங் உடனே இலங்கை அரசை எச்சரிக்கும் பணியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனிடம் ஒப்படைத்தார். அவரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கே கடிதம் எழுதி, தமிழர்களின் அவல நிலை நீடிப்பது நல்லதல்ல என்று உரிய வகையில் எச்சரித்தார்.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபட்சவைச் சந்தித்த இந்தியத் தூதர் அலோக் பிரசாத், தமிழர்களை அவரவர் ஊர்களில் உடனே குடியமர்த்த வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை நேரில் அளித்திருந்தார்.

இத் தகவல்களை இலங்கையின் ""தி சண்டே டைம்ஸ்'' என்ற நாளேடு தெரிவிக்கிறது. இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவதும், மறு வாழ்வு அளிப்பதும் இலங்கையின் உள் விவகாரம் என்று விட்டுவிட இந்தியா தயாராக இல்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்களும் அரசும் தரும் அழுத்தத்துக்கு இந்திய அரசும் அதன் மூலம் இலங்கை அரசும் கட்டுப்பட்டவையே என்பதையும் இப்பத்திரிகைச் செய்தி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

உடனடி நடவடிக்கை: தயாநிதி மாறன் அளித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் இந்தியாவின் உணர்வுகளை அப்படியே தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன் விளைவாக கொழும்பில் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.

அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர் என்று தெரிகிறது.

ஐ.நா. அதிகாரி ஆய்வு: மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் அகதி முகாம்களில் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் லின் பாஸ்கோ கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழர்கள் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் மிகவும் புண்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினார்.

தமிழர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணங்களாக இலங்கை அரசு கூறிய தகவல்களை அவர் ஒப்புக்கொண்டதைப் போலத் தெரியவில்லை. எனவே வரும் ஜனவரிக்குள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்ணி வெடிகளை அகற்றாமல் தமிழர்களை அவரவர் பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியாது என்ற வாதத்தை தமிழர்கள்பால் இலங்கை அரசுக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாகவே கொண்டாலும், முகாம்களில் இருப்பவர்கள் வெளியே வேலைக்குச் செல்வதற்குக்கூட அனுமதி மறுப்பது சரியா என்று லின் பாஸ்கோ கேட்டார். இனி அதிக அளவில் மக்கள் வெளியே சென்றுவர பாஸ்களைத் தருவதாக இலங்கை அரசின் சார்பில் அப்போது உறுதி கூறப்பட்டது.

வீடுகளுக்குப் போகவில்லை? ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த முகாம்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் அரசு அறிவித்தபடி அவரவர் வீடுகளுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

வவுனியா முகாம்களிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி 2,000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண முகாமிலிருந்து 568 தமிழ் அகதிகள் செப்டம்பர் 11-ம் தேதி அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கோ தடுத்து காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகமே கூறுகிறது.

முகாம்களிலிருந்து நாங்கள் அனுப்பிவிட்டோம், மாவட்ட அதிகாரிகள்தான் தமிழர்களைத் தடுத்து நிறுத்திவைத்துள்ளனர் என்று முகாம் அதிகாரிகள் பழியை அவர்கள் மீது போடுகின்றனர்.

உறவினருடன் வசிக்க மனு: முகாம்களில் இருப்பவர்கள் விரும்பினால் வீடுகளில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் போய்ச் சேர்ந்து வாழலாம் என்று கூறப்பட்டது. அதற்காக மனுக்களும் தரப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி மனுச் செய்ய விரும்பியவர்களுக்கு மனுக்கள் கூட தரப்படவில்லை. மனுக்கள் கிடைத்து விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதற்காக அவர்கள் அகதிகள் முகாம் அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் கூட ஈடுபட்டனர்.

உண்மை இப்படி இருக்க, ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோவிடம் அதிபர் மகிந்த ராஜபட்ச பேசும்போது, உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்று கூசாமல் கூறியிருக்கிறார்.

தினமணி

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர்

சிவப்பு மையடிக்க மறந்திட்டார் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் என்ன இங்க பெயின்ற் அடிகிற வேலைக்கோ வந்தீர் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு நாட்டு விடயத்தில் இவர்கள் இனி எப்படித் தலையிடப்போகின்றார்கள்? இனிமேல் தமிழனுக்கு உணவுப்பொட்டலம் மேலிருந்து விழுமோ? தனக்கு வேண்டாவிட்டால் தலையிட முடியாது. தனக்கு விரும்பினால் தலையிட முடியும். மீண்டும் இந்தியாவின் தன்னலப் பிராந்திய பாதுகாப்புக் கோட்பாட்டுக்குக்கீழ் தமிழர்களைக் கால்பந்தாக்கத் தமிழர்கள் இடமளிக்கக்கூடாது. இந்தியாவின் பாசாங்குக்குள் விழாது, சீனாவை அங்கு குடியிருத்துங்கள். அழிந்த தமிழனம் மீண்டும் தளைக்க வழிகோலும். கெட்ட இந்நியாவை சிதறடிக்கத்தமிழினம் பாடுபடவேண்டும். இந்தியாவைச் சிதறடிக்க சர்வதேசம் தனது பங்கில் பாதிக்குமேல் சென்றுவிட்டது. காலத்தை இந்தியாவே நெருங்க வைத்துவிட்டது. தமிழீத்திற:க இன்னும் கனதூரம் இருந்தாலும் இதற்குக் கனதூரம் இல்லை. இதுவே தமிழீத்திற்கான பாதைக்கு முதல்கல். இது மிகவும் பனிப்போராகவே இருக்கின்றது. இந்தியாவைச் சிதறடிப்பதன் காரணமாகவே சர்வதேசமும் தமிழர் பிரச்சனையில் இதுவரை பாராமுகமாக இருந்தது இன்னமும் வெளிச்சத்திற்கு வரவில்லை. (வலியைத் தந்தவனுக்கு அவ்வலியைத் திருப்பிக்கொடு) மீதிக்கு இலங்கைத் தமிழர்கள் தான் பாடுபடவேண்டும். அதற்கு அப்புறம் வெற்றி நமதே.

ஏ9 க்கு மேற்கு பக்கம் பாடசாலைகள் மருத்துவமனைகளை சீரமைத்து மீள்குடியேற்றத்திற்கான ஒழுங்குகளை அரசாங்கம் செய்துவருகின்றது. மக்கள் மீள செல்லும் போது அவைகள் சிங்கின் வெருட்டலாலும் கருணாநிதியின் முயற்சியாலும் நடந்ததாக தமிழ்நாட்டுச் சனங்களை பேக்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் போலுள்ளது. அவங்கட நாட்டு மீனவர்களை இலங்கைப் படைகள் கொடுமைப்படுத்துவதற்கு ஒரு எச்சரிக்கை விட முடியவில்லை வன்னி அகதிகளுக்காக எச்சரிக்கை??

ஆடு நனையுது எண்டு இந்திய ஓநாய்கள் அழுகுதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களை குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டுவரும் கொதிப்புகளைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் மூலம் சில குறிப்புகளை அளித்திருந்தார்.

நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் தமிழர்கள் கெüரவமாக அவரவர் ஊர்களில் சென்று குடியேறவும் தொழில்களில் ஈடுபடவும் இலங்கை அரசு அனுமதிக்காவிட்டால் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்று அதில் உணர்த்தப்பட்டிருந்தது.

இதைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங் உடனே இலங்கை அரசை எச்சரிக்கும் பணியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனிடம் ஒப்படைத்தார். அவரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கே கடிதம் எழுதி, தமிழர்களின் அவல நிலை நீடிப்பது நல்லதல்ல என்று உரிய வகையில் எச்சரித்தார்.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபட்சவைச் சந்தித்த இந்தியத் தூதர் அலோக் பிரசாத், தமிழர்களை அவரவர் ஊர்களில் உடனே குடியமர்த்த வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை நேரில் அளித்திருந்தார். இத் தகவல்களை இலங்கையின் “”தி சண்டே டைம்ஸ்” என்ற நாளேடு தெரிவிக்கிறது.

இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவதும், மறு வாழ்வு அளிப்பதும் இலங்கையின் உள் விவகாரம் என்று விட்டுவிட இந்தியா தயாராக இல்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்களும் அரசும் தரும் அழுத்தத்துக்கு இந்திய அரசும் அதன் மூலம் இலங்கை அரசும் கட்டுப்பட்டவையே என்பதையும் இப்பத்திரிகைச் செய்தி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

உடனடி நடவடிக்கை:

தயாநிதி மாறன் அளித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் இந்தியாவின் உணர்வுகளை அப்படியே தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன் விளைவாக கொழும்பில் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர். அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர் என்று தெரிகிறது.

ஐ.நா. அதிகாரி ஆய்வு:

மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் அகதி முகாம்களில் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் லின் பாஸ்கோ கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழர்கள் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் மிகவும் புண்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினார்.

தமிழர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணங்களாக இலங்கை அரசு கூறிய தகவல்களை அவர் ஒப்புக்கொண்டதைப் போலத் தெரியவில்லை. எனவே வரும் ஜனவரிக்குள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்ணி வெடிகளை அகற்றாமல் தமிழர்களை அவரவர் பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியாது என்ற வாதத்தை தமிழர்கள்பால் இலங்கை அரசுக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாகவே கொண்டாலும், முகாம்களில் இருப்பவர்கள் வெளியே வேலைக்குச் செல்வதற்குக்கூட அனுமதி மறுப்பது சரியா என்று லின் பாஸ்கோ கேட்டார். இனி அதிக அளவில் மக்கள் வெளியே சென்றுவர பாஸ்களைத் தருவதாக இலங்கை அரசின் சார்பில் அப்போது உறுதி கூறப்பட்டது.

வீடுகளுக்குப் போகவில்லை?

ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த முகாம்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் அரசு அறிவித்தபடி அவரவர் வீடுகளுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. வவுனியா முகாம்களிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி 2,000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண முகாமிலிருந்து 568 தமிழ் அகதிகள் செப்டம்பர் 11-ம் தேதி அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கோ தடுத்து காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகமே கூறுகிறது. முகாம்களிலிருந்து நாங்கள் அனுப்பிவிட்டோம், மாவட்ட அதிகாரிகள்தான் தமிழர்களைத் தடுத்து நிறுத்திவைத்துள்ளனர் என்று முகாம் அதிகாரிகள் பழியை அவர்கள் மீது போடுகின்றனர்.

உறவினருடன் வசிக்க மனு:

முகாம்களில் இருப்பவர்கள் விரும்பினால் வீடுகளில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் போய்ச் சேர்ந்து வாழலாம் என்று கூறப்பட்டது. அதற்காக மனுக்களும் தரப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி மனுச் செய்ய விரும்பியவர்களுக்கு மனுக்கள் கூட தரப்படவில்லை. மனுக்கள் கிடைத்து விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதற்காக அவர்கள் அகதிகள் முகாம் அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் கூட ஈடுபட்டனர். உண்மை இப்படி இருக்க, ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோவிடம் அதிபர் மகிந்த ராஜபட்ச பேசும்போது, உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்று கூசாமல் கூறியிருக்கிறார்.

http://www.meenagam.org/?p=10980

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் குஸும்பு என்று சொல்லுறது ஆக்கும்

வவுனியா வதை முகாமில் இருந்து உன்கட உறவுகளை வெளியிலை எடுப்பது என்றால் உன்களிடம் சொந்த வீடு இருக்க வேண்டும்...எனது நண்பன் சொன்னவர்...

வவுனியாவில எத்தனை பேர் சொ. வீடு வைத்திருக்கினம்

எல்லாம் விதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களை விடுங்கோ..... தமிழ் இனமே அடைக்கப்பட்டிருக்கு.... ஆனால் ஒரு கிழட்டு நரி தமிழாராச்சி மாநாடு நடத்த போகுதாம்....... அது சரி இவ்வளவு நடந்த இந்த மண்ணிலேயே.. ஆலய விழாக்கள், களியாட்டங்கள் கோலாகலமாக நடக்கும் போது... அவங்களை நோவானேன்... இவற்றை எவ்வாறு நிறுத்துவது ???

Edited by வீரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.